Monday, December 30, 2013

தமிழர்களும் , முஸ்லிம்களும் இணைந்து போராடும் தருணம் இது!

Commented on :  http://tinyurl.com/lh5vqpn
Lankamuslim.org

தமிழர்களும் , முஸ்லிம்களும் இணைந்து போராடும் தருணம் இது!

அப்பட்டமான உண்மைகள் பலவற்றை அள்ளி வீசியிருப்பது குறித்துப் பாராட்டாமல் இருக்க முடியாது. அத்தனையும் உண்மை மட்டுமல்ல, இதற்கு மேலும் உள்ளது.

நாசுவன் (நாவிதன்) குப்பையைக் கிளறினால் மயிரைத் தவிர எதுவும் இருக்காது எ்ன்ற நிலையே இலங்கை முஸ்லிம்கள் அரசியல்வாதிகள்எனத் தம்மைக் கூறிக் கொள்ளும் அரசியல்வியாபாரம் செய்வோர் பற்றிய விமர்சனம்.

இந்த அரசியல்வாதிகள், நக்குண்டார் நாவிழந்தார் நிலையில், கழுவ முடியாத கறைபடிந்த அங்கங்களைக் கொண்டவர்கள், இவர்கள் துதி பாடியேனும், தம் கதியைத் தக்க வைத்துக்கொள்ளாது எதிர்ப்புக் காட்டினால், தமது கோவைகள் அடியில் இருந்து இழுக்கப்பட்டு, தாங்கள் குப்பைகளைவிடக் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம் எனற் அச்ச நிலையே தவிர இல்லை.

ஆதலால், பட்ட மரம் தளிர்த்துப் பால் வடியும் என எதிர்பார்த்திருப்பதை ஒத்ததே, முஸலிம் அரசியல்வாதிகளால், முஸ்லி்மகளுக்கு விமோசனம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது! அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அறிக்கைகளை விடுவதையாவது தவிர்ப்பார்களாயின் அதுவே முஸ்லிம்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும்.

ஆதலால், அனைத்து இனங்களிலுமுள்ள புத்திஜீவிகள், ஆர்வலர்கள், சமூக நலன் நாடுவோர் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமாச் சிந்தித்து, செயற்படுவதே நன்மை பயப்பது. பாதிக்கப்ட்டோர் அனைவரும், சிங்களவர் பெளத்தர் உட்பட, கிறிஸ்தவர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் காக்கும் முயற்சியில் ஈடுபடுதல் இன்றியமையாதது.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அது அரசியலவாதிகளின் தலைமையில் எ்னபதில் ஏற்கனவே கற்ற பாடங்கள் இரண்டு முறை சிந்திக்க வைக்கின்றது. இது போன்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் அங்கும் வரமாட்டார்கள் எனபதற்கும், இதுவரை வரவில்லை என்பதற்கும் உத்தரவாதமில்லை.

மேலும், எதிர்பார்க்கப்படும் தமிழ் – முஸ்லிம் இணைவு பெரும்பான்மைச் சமூகத்தவர் மத்தியில் விஷவிதையாகத் தூவப்பட்டு பிரச்சினையை சிக்கலாக்கிவிடும்.

சிறுபான்மையினர் பிரச்சினைகள் நியாயமானவை தீர்க்கப்பட வேண்டியவை என சிங்கள சமூகத்தைஉணர வைக்கும் நிலையை ஏற்படுத்துவது, சிரமமாயினும் அதுவே நிரந்தரமான, நியாயமான, கௌரவமான தீர்வை எட்ட வைக்க உதவுவது.

சிங்கள பெரும்பான்மையினரிடம் இருந்து “சிறுபான்மையர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்“ என்ற குரல் காட்டமாக ஒலிக்க வேண்டும்! அதுவே வெற்றிப் பாதையில் அனைவரையும் செலுத்தும். இந்நாடும் சுபிட்சப் பாதையில் பயணிக்கும்.

Saturday, December 28, 2013

சர்வதேச வாக்கு வங்கியை இழந்த நாடாக …. இலங்கை மிகவும் பாரதூரமான சிரமங்களை எதிர்நோக்க வாய்ப்புள்ளது

Commented by nizamhm1944 on:   http://tinyurl.com/o7vugcs

Lankamuslim.org

சர்வதேச வாக்கு வங்கியை இழந்த நாடாக …. இலங்கை மிகவும் பாரதூரமான சிரமங்களை எதிர்நோக்க வாய்ப்புள்ளது

நாம் செய்வது சரியாயின் எந்த நாடுகளின் உதவியும் தேவைப்படாது. உண்மையில் இவ்வாறான பிரச்சினை ஒன்றே ஏற்பட்டிருக்காது.

போர்க்கால மனித உரிமை மீறல் என்ற பொறிக்குள் இலங்கை தள்ளிவிடப்படுவதற்கு, அரசின் போர்க்கால அணுகுமுறையும் சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. ஆனால், போருக்குப் பின்னான ஒவ்வொரு நடவடிக்கையும், புலிகளைத் தோற்கடித்த மமதையை வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தமையே முக்கிய காரணியாகக் கொள்ளலாம்.  

போரைப் பொறுத்து, போர்நிறுத்தம் பற்றிப் பல நாடுகள் கூச்சலிட்டுக் கொண்டிருந்தாலும். மறைமுகமாக உதவுவதிலும் அவை அக்கறை கொண்டிருந்தன.  போர் நிறுத்தம் வாயளவில் பேசப்பட்ட ஒன்றாயினும் மனதளவில் அதற்கு பெரும் வலு இருக்கவில்லை. அத்தோடு பயங்கரவாதிகள் என 28 பெரிய நாடுகளால் முத்திரை குத்தப்பட்ட புலிகளுக்கு எதிரான தாக்குதல் என்பதனால், அது விடயத்தில எவரும் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை என்பதும் அது உள்நாட்டுப் பிரச்சினை என்பதுமே!

அதே தந்திரோபாயம், போர்க்கால குற்றங்கள் என்று குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட பின்னர் செல்லுபடியாகாது என்பதைத் தெரிந்திருக்க வேண்டும். மனித உரிமை மீறல் என்ற குற்றத்தை அணுக வேண்டிய முறைப்படி அணுகாது, குறைக் குடங்களையும், தரமற்றோரையும் கொண்டு அரசு கருத்து வெளிப்பாடுகளைச் செய்து கொண்டிருந்தமை, போர்க் காலக் குற்றங்கள் இருப்பதான கருத்தையே வெளிப்படுத்தினவே தவிர, பிரச்சினையைத் தவிர்க்கவில்லை.

உள்நாட்டில் பிரச்சினைகளைக் கட்டுப்படுத்த பயன்படுத்திய அதே தந்திரோபாயத்தை, வெளிநாட்டு உயர்மட்டங்களுக்கும் பயன்படுத்த முனைந்ததும், ராஜரீக பாரம்பரியங்களை விடுத்து, வேறு வழிகளைக் கையாள முனைந்ததும், அபிவிருத்தி என்ற மாயையை ஏற்படுத்தி தமக்கு மேல் ஏற்படுத்தப்பட்ட பழியை மழுங்கச் செய்வதற்கும் எடுத்த அனைத்து முயற்சிகளும். அரசுக்கு எதிரான பண்புகளை ஏற்படுத்தி, சாட்டப்பட்ட குற்றங்களில் உண்மை உண்டு என்று எண்ணும் நிலையை ஊக்குவித்தன. 

மேலும், மதத்தலைவர்களையும், வேறு அமைப்புக்களையும் சர்வதேசங்களுக்கு அனுப்பி அந்நாட்டவர்களை இலங்கைக்கு ஆதரவளிக்கும்படி கோரியதும், அரசுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வலுப்பெறவைத்த நடவடிக்கைகளே! அவை வேண்டுமானால் தற்காலிக வெற்றியைத் தந்திருக்கலாமே தவிர, நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்தி விட்டிருக்கவில்லை, ஏற்படுத்திவிடப் போவதுமில்லை. 

அதே வேளை இங்கு மதங்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிடப்பட்ட காடைத்தனத்தை அரசு தடுத்து நிறுத்துவதைவிடுத்து. கண்டுங்காணா முறையில் நடந்ததும். போலிஸாரே அவற்றுக்கு அனுகூலமாக நடந்துகொண்டதும். அரசும். அரச தலைவர்களும், ஏன் முஸ்லிம் தலைவர்களும்கூட நடந்த மதவிரோ நடவடிக்கைகளை மறைப்பதிலும், நியாயப்படுதியதிலும், சப்பை கொட்டியதிலும், பின்ணணிகள் இருப்பதாக அரசு கூறிக் கொண்டிருந்ததிலும், உலகுக்கு இந்நாடு, போர்க்காலத்தில் எப்படி எல்லாம் நடந்திருக்கும் என்பதையும், இதன் பின்னர் எவ்வாறான போக்கைக் கைக்கொள்ளும் என்பதிலெல்லாம் கருத்தேற்றங்கள் ஏற்படுத்தியே இருக்கும். 

ஆதாரபூர்வமாக கண்ணொளிகளாக வெளியான பல மதவிரோத நடவடிக்கைகளை, பாதிப்புக்குள்ளான அரசியல் தலைவர்களையும், வேறு பிரபலங்களையும் வைத்து அரசைக் காப்பாற்றும் விதத்தில் அறிக்கைகள் விடப்பட்டமைகூட, நடந்தவற்றை உண்மைப்படுத்துவனவாகவே மாறும் என்பதை அரசு அறிய முடியாமற் போனதேனோ! 

அதற்கு மேலும், திடுதிப்பென உருவாக்கப்பட்ட நிவிநெகும. அதன் தொடர்பில் நடந்த விடயங்கள், 18ஆவது அரசியல் யாப்பு திருத்தம் போன்றவைகூட அரசின் போக்கை பாதகமான நிலையிலேயே உலகுக்கு அறிமுகம் செய்திருந்தன என்பதே யதார்த்தம்.

13பிளஸ் என்றது போய், 13ஆவதே இல்லாமல் ஆக்குவதற்கான முன்னெடுப்புக்கள், அரசுக்கு ஏற்படுத்தப்பட்ட கறைகளே தவிர இல்லை! 

இனிமேல், அரசுக்கு எதிரான போர்க்காலக் குற்றங்களை சரியான அணுகு முறையைப் பாவித்து அதிலிருந்து விடுபடுவது ஒன்றே அரசுக்கு உள்ள ஓரே வழி! அன்றேல் இந்நாடே பாரதூரான விளைவுகளை சந்திக்க வேண்டி வரும். 

தயவு செய்து பெரியாரை விட்டு விடுங்கள் சீமான்களே!!

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/n78e6k6

Tamil Circle

தயவு செய்து பெரியாரை விட்டு விடுங்கள் சீமான்களே!!

பாவம் தமிழக மக்கள், இலங்கைத் தமிழ் மக்களின் பெயரை வைத்தே பிழைப்பு நடத்தும் ஈனர்களை இனம் கண்டு கொள்ள முடியாது,அவர்களுக்கு ஆதரவு கொடுக்கிறார்களே என நினைக்கும் போது, பாவம் என்பதைத் தவிர வேறு தெரியவில்லை.

அண்மையில் ஒரு கார்ட்டூன் பார்த்தேன். அதில் (தமிழ் நாட்டைக் குறிப்பதற்காக) தெற்கில் உள்ள தமிழர்கள பாதையில் மலம் கழிக்கிறார்கள் என்றும், முதலில் அவர்களுக்கு மலசலகூடம் கட்டிக் கொடுக்கும் வேலையைப் பார்க்கவும் என இலங்கை  ஜனாதிபதி கூறியதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தமிழகத்தில் சிலர் அரசியல் விபச்சாரம் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு  இலங்கைத் தமிழ் மக்கள் பற்றிப் பேசும் யோக்கியதையைக் கொடுத்தவர்கள் யார்!  இலங்கையில் கிழக்கு மாகாண மக்கள் அரசை ஆதரித்து,  ஆடசியை அரசிடம் கொடுத்துள்ளது.

இலங்கையின் வடக்கில் தமிழ் கூடடணி ஒன்று ஆட்சி பீடமேறியுள்ளது.  அதன் தலைமையை மிகச் சிறந்த, நேர்மையான, நீதித்துறை சார்ந்த ஒருவர் அலங்ரித்துக் கொண்டிருக்கின்றார்.

ஆறில் ஐந்து பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்தும் அவ‌ரோ, அவர்  சார்ந்த கட்சியோ தமிழ் ஈழம் பற்றிப் பேசுவது கூட இல்லை. அது அவர்களது கொள்கையுமல்ல. அப்படி இருக்கும் நிலையில், சீ.....மான்கள்  போன்ற கழிவுகள் அழையா விருந்தாளிகளாக, அடுத்த நாட்டுக்குள் மூக்கை நுழைத்து, ஏன் தொங்கப் போட்டுக் கொண்டு அலைகின்றன! இதனைத் தட்டிக் கேட்க வேண்டியது, தமிழக மக்களே! 

Thursday, December 26, 2013

இந்த நாட்டில் நாம் எதை அனுபவ ரீதியாக உணர்கின்றோம்? எப்படி அன்றாடம் வாழுகின்றோம்?

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/opew579

Lankamuslim.org

இந்த நாட்டில் நாம் எதை அனுபவ ரீதியாக உணர்கின்றோம்? எப்படி அன்றாடம் வாழுகின்றோம்?

ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. எல்லோருக்கும் ஏமாற்றமே கிடைத்திருக்கின்றது. குற்றச் செயல்கள்நடைபெறும் பாங்கையும், அதன் எதிர் விளைவுகளையும், உண்மையாக ஆழ்நது சிந்தித்துப் பார்க்கின், எல்லாம் திட்மிட்டமிட்டவாறே நடைபெற்று வருவதும், அதற்காக, நமது கைவிரல்களே, நமது கண்களைக் குத்திக் குருடாக்கப்படுவதிலும் இருந்து தெரியவரும். ( நமது கைவிரல்கள் என்பது முஸ்லிம் அரசியல்வாதிகளே)

இங்கு குற்றச் செயல்களைத் தடுக்க வேண்டியவர்கள், குற்றவாளிகளுக்குப் பாதுகாப்புக் கொடுத்துக் கொண்டிருக்கும் நிலைமை காணப்படும் போது, அனைவரும் தமது நிலையை அஞ்சி வாளாவிருக்கின்றனர். வழமையாக நடப்பதால் குற்றச் செயல்கள் பற்றி யாரும் பெரிதக அலட்டிக் கொள்வதில்லை என்பதைவிடப் பெரிய காரணம். மேற்கண்ட பயமே!

குற்றவாளிகள் இனங்காணப்பட்டமையே அந்தப் பயத்தை உருவாக்கி அனைவரையும் மௌனிகளாக்கி விட்டுள்ளது எ்னபதும் இந்நிலை, புலிகள் யுகத்திற்கு நாடு மீண்டுள்ளதை வெளிப்படுத்தி நிற்கின்றது என்பதையும் கட்டியங் கூறுகின்றது.

கருததுக் கணிப்பொன்றில், இந்நாடு ஊழல் கூடிய நாடு என்ற வரிசையில் மிகத்துரித நடைபோடுவது, அனைத்தையும் எடைபோடப் போதுமானது.

இந்நாட்டின் யாப்பின் சில ஷரத்துக்கள் பொல்லாதவர்களின் கைகளினால் சொல்லாக் காசாக்கப்பட்டுக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றது.

Saturday, December 21, 2013

‘ஜனாதிபதியின் அழைப்பை ஒருபோதும் நாங்கள் நிராகரிக்க மாட்டோம்’ ஆனால் …

Commented by nizam1944 on: http://tinyurl.com/mrvdbpj

Lankamuslim.org

‘ஜனாதிபதியின் அழைப்பை ஒருபோதும் நாங்கள் நிராகரிக்க மாட்டோம்’ ஆனால் …


சுதந்திரத்தின் பின்னர், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட, சிறுபான்மையர், மொழி என்ற ரீதியிலமைந்த, தமிழர் பிரச்சினை, பல்வேறு யுக்திகளின் மூலம், மதரீதியிலும், பிராந்திய ரீதியிலும், குறுகிய நோக்கிலும், பிரித்தாளும் கொள்கை, தந்திரோபாயங்கள் போன்றவைகளுடன் அரசியல் மயப்படுத்தப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு, நசுக்க முனைந்ததன் பின்விளைவே, படிப்படியாக ஆயுதப் போராட்டம் என்ற அவலத்துக்கு வழி வகுத்தது.

அதன் பின்னர் கூட பட்டறிவும் வேலை செய்யவில்லை என்பது எதனைக் காட்டுகின்றது! யுத்தம் வெல்லப்படும் வரை, 13 பிளஸ் என்று பகிரங்கப்படுத்தப்பட்டு. பின்னர், பதின்மூன்றே இல்லாமலாக்கும் நிலைமை ஏற்படுத்தப்படும் போது, கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கைக்கும், கடைசி ஆணி அடிக்கப்பட்டது. அதன் பின்னரான நிகழ்வுகள் எழுதத் தேவையற்ற உலகறிந்தவை!

இந்நிலையில், பேச்சுவார்த்தை, தீர்வு என்பதெல்லாம் எட்டாக் கனியே தவிர இல்லை. உடன்பாடுகள், தீர்வுகள் – உண்மை, நல்லிணக்கம், புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, நம்பிக்கை, மனிதாபிமானம், நாட்டுநலன் போன்ற பல்வேறு விடயங்களை உள்ளடக்கியதாகக் காணும் நிலையிலேயே, சாத்தியப்படுமே தவிர, பேச்சொன்று செயலொன்று என்ற ரீதியில் அமைய முடியாது.

தற்போதைய நிலை படிக்கிறது தேவாரம், இ‌டிக்கிறது கோயில் என்ற நிலையில் உள்ளதாகவே நடப்புகள் தெரிவித்துக் கொண்டு இருக்கின்றன.

உண்மையாகக் கூறுவதாயின், சிறுபான்மையினர் பிரச்சினை தீர்வுக்கு இன்றைய நிலையில் யாருடைய உதவியும் தேவை இல்லை, மனிதாபிமானத்துடன், சிறுபான்மையினரும், இந்நாட்டின் பிரஜைகளே, அவர்களும் அவர்களது சுயமரியாதையுட்ன வாழ வேண்டியவர்களே என்ற மனப்பக்கும் மட்டும் இருந்தால், சில தினங்களிலேயே தற்போதுள்ள அரசியல் பலத்தில் மிகச்சிறந்த தீர்வொன்றை செய்து முடிக்கலாம்.

அதற்குரிய அத்தனை தகுதிகளும், தற்போதைய இந்நாட்டின் தலைவருக்கு இருக்கின்றது. அவரால் முடியும். தேவையானது – செய்ய வேண்டும் என்ற உந்தலே! அப்படி அந்தக் கைங்கரியத்தைச் செய்வாராயின் அவர் இவ்வுலகு அழியும் வரை புகழுடன், சாதனையாளராக, உலகத் தலைவர் வரிசையில் வைத்து எண்ணப்படுவார். உலகத் தலைவர் ஒருவரை மீண்டும் வழங்கிய ஒரு பெருமையையும் இந்நாடு பெற்றுக் கொள்ளும்.

சா/த பரீட்சையில் இஸ்லாமிய சட்டம் குறித்த கேள்விக்கு முஸ்லிம்கள் விசனம்!

Commented on BERU News on: http://tinyurl.com/kp2v8ka

 சா/த பரீட்சையில் இஸ்லாமிய சட்டம் குறித்த கேள்விக்கு முஸ்லிம்கள் விசனம்!


“இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு பாதகமான மூலாதாரங்களை குறிப்பிடுக?” இது வினா என்றால், ஏற்கனவே இதற்கான விடை இருக்க வேண்டும்.  அந்த விடை,  இஸ்லாமிய சட்டத்தில் காணப்பட்டதாகக் கருதப்பட்ட இரு பாதகமான மூலாதாரங்களையும் வெளிபப்டுத்தி, ஆய்வுக்கு, விசாரணைக்கு உட்படுத்தி, குர்ஆனிய அடிப்படையில் நிரூபிக்கப்பட்டு, ஏற்கப்பட்ட ஒன்றாக இருந்திருக்க வேண்டும்.  அப்படி ஏதும் உளதா என்பதைப் பொறுப்பான அமைச்சர் வெளியிட வேண்டும். முடியாவிடில், 

இந்த வினாவை,  பரீட்சை வினாத்தாளில் உள்வாங்கியவர்கள் உட்பட சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் அழைக்க்பட்டு, இவ்விடையை அதாவது, விடையாகக் கருதப்படும் தகவலான, ”இஸ்லாமிய சட்டத்தின் இரண்டு பாதகமான மூலாதாரங்கள்” எங்கிருந்து பெறப்பட்டதென நிரூபிக்கும்படி பணிக்கப்படல் வேண்டும். 


தவறும் பட்சத்தில்,  சம்பந்தப்பட்ட அனைவரும், பரீட்சை திணைக்கள வேலைகளில், கல்விசார் நடவடிக்கைகளில் இருந்து அப்புறப்படுத்தப்படுவதுடன், கடுமையான தண்டனைக்கும் உள்ளாக்கப்படல் வேண்டும்.  


இதன் பின்னர், இது போன்ற வினாக்களை எழுப்பு முன்னர், அதன் தகைமைகளை சம்பந்தப்பட்ட உரிமைபெற்ற மதநிறுவனங்களில் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். 


Thursday, December 12, 2013

இலங்கை முஸ்லிம்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்: SLTJ

Commented by nizamhm1933 on http://tinyurl.com/q2oyk74

Lankamuslim.org


இலங்கை முஸ்லிம்களுக்கு ஓர் அவசர வேண்டுகோள்: SLTJ

புலிகளால் 1990 கடைப்பகுதியில் பலவந்தமாக, கொலை அச்சுறுத்தலுடன், உடமைகளை அபகரித்துக் கொண்டு, விரட்டியடித்து இனச் சு்த்திகரிப்பை மேற்கொண்டமை உலயேயறிந்த, உலகில் முதன் முதல் நடைபெற்ற கொடுமை. அதற்கே இது வரை தீர்வு இல்லாத போது, தீர்வு பற்றிச் சிந்திக்கவே முற்படாத போது, மறக்கப்பட்ட காரணியாகி, மடமாற்றத்துககு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், காணாமற் போனவ்ர்க்ள பற்றி்க கூறி என்ன பயனைப் பெற்றுக் கொள்ளப் போகின்றனர் முஸ்லிம்கள்!

இந்நாட்டில் முஸ்லிம்கள் இனி வாழ முடியுமா என்ற  பரிதவிப்பில் செய்வதறியாது திகில் பூண்டில் மிதித்தவர்களாக இருக்கும் தருணத்தில், தமது பழைய துன்பங்களைப் பற்றி முறைப்பட்டுக் கொண்டிருக்க முடியுமா!

ஏற்கனவே கட்டவிழ்த்து விடப்பட்ட காடையர்களால் நடத்தி முடிக்கப்பட்ட அராஜகங்களை நியாயப்படுத்தும் வேலையும், அப்படி எதுவுமே  நடக்கவில்லை அத்தனையும் அப்பட்டமான பொய்ப்பிரச்சாரங்கள் எனக் கூறிக் கொண்டிருக்கும் முஸ்லிம் மந்திரிகள் உள்ள இந்நாட்டில்,  காணாமல் போனவர்களைக் கண்டுபிடிப்பதற்காக எடுக்கும் முயற்சி விழலுக்கிறைத்த நீரே  !

சில புதுமுகங்களால்,  தாய்மார்கள்தம் உறவினர்களைக் காணவில்லை எனச் செய்யப்பட்ட ஆர்ப்பாட்டங்கள்,  ஆதாரமற்றவை எனக் கூறும் அளவிற்கு நிலைமை கீழிறங்கி இருக்கும் போது, இது போன்ற ஆணைக்குழு விவகாரங்கள் வெறும் கண் துடைப்பாகவே இருக்கப்  போகின்றது.  முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும் அவர்களது இனங்களே துரோகிகளாக இருக்கும் நிலையில் நீதியை எதிர்பார்ப்பது மலடி பிள்ளை பெற்ற கதையாகத்தான் இருக்கப் போகின்றது!

Wednesday, December 11, 2013

இன ஜக்கியத்தை சீர்குலைக்கும் ஒரு செயலாக நானாட்டான் பிரதேச செயலகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்

Commented by nizamhm1944 on: :http://tinyurl.com/lugdao2
பிரச்சினைகளுக்குத் தீர்வு வன்செயல் அல்ல, அது தோற்றுப் போன சித்தாந்தம் என்பதைக் கவனத்தில் நிறுத்தியவனாக இதனைப் பதிவிடுகிறேன்.
அனைத்துப் பிரச்சினைகளுக்கும் பல் வேறு நியாயப்படுத்தல்கள் இருக்கும். அவைகளைச் சம்பந்தப்பட்டவர்கள் நடுநிலையில் நின்று, ஆராய்ந்து, உணர்ந்து, மகக்ள் நலன்களை, இனஐக்கியத்தைக் கருத்திலிருத்தி முடிவுகளை மேற்கொள்ள வேண்டும்.
சில வேளைகளில் விட்டுக் கொடுக்கும் பண்பு கூட வேண்டப்படுவதாக இருக்கும். அவ்விட்டுக் கொடுப்பு நன்மை பயக்குமாயின், அதனைச் செய்வதை மனிதகுல மேம்பாட்டுக்காகச் செய்வதில் யாருக்கும் நஷடம் ஏற்பட்டு விடப் போவதில்லை.
ஒரு விடயத்தை அணுகுமுன், மனிதம் ஒன்றைத் தவிர,அங்கு அரசியலோ, மத உணர்வுகளோ முன்னிலைப்படுத்தப்படக் கூடாது. பாதிக்கப்பட்டவர்கள் என்பது கூட, நீதி பெற்றுக் கொள்வதற்கான தகுதியாகிவிட முடியாது. தீர்வு காணும் முன் கடந்த கால பின்னணிகள் நுணுக்கமாக ஆராயப்படல் வேண்டும். ஒருவரின் உரிமை, இன்னொருவரின் உரிமைக்கு எவ்வகையிலும் பங்கம் ஏற்படுத்திடக் கூடாது. ஒருவருக்கு செய்யப்படும் நியாயம், இன்னொருவருக்கு அநியாயமாகிவிடக் கூடாது. பிரச்சினைகள் இன்று இருக்கும்.நாளை மறைந்துவிடும். பிரச்சினைக் காலத்தில் நியாயமற்று ஏற்படுத்தபப்ட்ட வடுக்கள் மறைவதில்லை. அதுவே தீராப்பகையாக அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.
பசியால் துடிப்பவனை வீ்ட்டிற்கு அழைத்துச் சென்று உண்டியும் கொடுத்து,, உறஙகவும் இடம் கொடுக்கும் மனநிலை படைத்தவர்கள் மன்னார் மக்கள். அபயம் என வந்து விட்டால், சற்றேனும் பின்னிற்காது வந்தவனை வாழவைக்கும் பண்பு கொண்ட அம்மக்கள் மத்தியில், இன்று இருந்து நாளை போகும் எவரும், பிரிவினைவாதக் கருத்துக்களை ஏற்படுததி மன்னார் மக்க்ளின் ‌ஐக்கியத்தைப் புரிந்துணர்வை அற்றுப் போகும் முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று சம்பந்த்ப்பட்ட அனைத்து சாராரையும் அன்பாகவும் பணிவாகவும். இறைவன் பெயரால் வே்ணடுகிறேன்.
மனிதத் தீர்ப்புகள் முழுமை பெற்றவை அல்ல. மாற்றப்படக் கூடியவை. இராணுவச் சட்டங்கள் போன்று சிவில் சட்டங்களை அணுக முடியாது. நாம் இன்று கொடுத்த தீர்பபு, சில வருடங்களில் , மாதங்களில், ஏன் நாட்களில்கூட பிழை என்பதை நாமே உணர்வதாக இருக்கும். அப்போது பாதிக்ப்பட்டவர்களுக்கு பரிகாரம் காண முடியாது போய் விடும். சரி செய்யா விட்டாலும் பரவாயில்லை. பிழை நடந்து விடாது பேணும் மனப்பான்மையை முதலில் வளர்த்துக் கொள்ள வேண்டும். ஒரு பிரச்சினை நீதியை நிலை நிறுத்த வேண்டிய சந்தர்ப்பத்தைக் கொண்டிருக்குமாயின், கடிமனங் கொண்டோரின் இழிசெயல்கள், நீதியை வழ்ங்குவத்ற்குத் தடைக் கற்கலாகிவிடக் கூடாது.
இக்ககுருத்துக்களில் வெளிப்பட்டுள்ளவை யாருக்கும். ஆதரவாகவோ, எதிராகவோ, விமர்சனமாகவோ கூறப்பட்டவைகள் அல்ல.
எதில் தீர்க்கமான ஞானமில்லையோ, அதனைப் பின்பற்ற வேணடாம் என்ற இறைகோட்பாட்டை மதித்து அதன்படி எழுதப்பட்டதே! முழுமையாக மன்னார் மக்களின் இன ஒற்றுமை தவிர வேறு மறைமுக எண்ணங்கள் எதுவுமில்லை.

Thursday, December 5, 2013

ஆதாரத்தோடு நிரூபித்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன்!: ஜனாதிபதி

Commented by nizamhm1944: http://tinyurl.com/q4hjc5y

Lankamuslim.org

ஆதாரத்தோடு நிரூபித்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன்!: ஜனாதிபதி


கடந்த இரு வருடங்களாக நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவாகிக் கொண்டு இருக்கும் நிலையில், உலகத் தலைவர்கள் உட்பட அனைவரதும் கவனத்தை ஈர்த்து, மனித உரிமை ஆணையாளரால்கூட ஐநா வில் பேசப்பட்ட பின்னர், ஜனாதிபதி முஸ்லிம் இராஜ தந்திரிகள் மத்தியில் ஆற்றிய உரை, அந்த இராஜ தந்திரிகளின் உள்ளத்தில்  எவ்வாறான கருத்தை ஏற்படுத்தி இருக்குமோ! 

ஆனால், இந்நாட்டில் வாழும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், மற்றும், நடுநிலையாளர்கள், அவதானிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாரிய அவநம்பிக்கையை, அச்சத்தை, விரக்தியை ஏற்படுத்தியுள்ளமை ஆரோக்கியமானதல்ல! 

குறிப்பாக பொதுபலசேனாவின் பேச்சுக்களையும். ஊடக அறிக்கைகளையும் வாசிப்போர் இங்கு நடப்பது என்ன என்று இலகுவாக அறிந்து கொள்வர். நாட்டின் சட்ட நடைமுறை என்பது, ஜனாதிபதியிடம் நிரூபித்து நீதி பெறுவதாக இருந்தால், இந்நாட்டின் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி, மதவிரோத நடவடிக்கைகளை முன்வைத்த போது, ஜனாதிபதியால் அவர்களுக்கு, இதன் பின்னர் இதுபோன்ற மதவிரோத நடவடிக்கைகள் இடம் பெற்றால், அப்படியானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்கத் தேவையில்லை.   

எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுக்கள் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டு, அவர்களது பேச்சுக்கள் நாட்டில் பிரச்சினையைத் தூண்டுவதாகக் கூறி அவர்கள் மேல் விசாரனை நடத்தப்படவும், வழக்குகள் பதிவாக்கவும் செய்யும் நடவடிக்கைகள் இந்நாட்டில் இன்றும் இருக்கின்றன. 

இது போன்ற பகிரங்கமாக நடைபெறும், யாப்பு மீறல்கள் கூட, தனி மனிதரால், ஸ்தாபன ரீதியில் நிரூபிக்கப்படுவதில்லை.  மேலும், குற்றச் செயல்களைக் கண்காணிப்பதும்,விசாரணைக்கு உட்படுத்தி, ஆதாரங்களுடன், நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பதும், நிரூபிப்பதும் கூட, பொலிஸாரினது கடமையே! அவர்கள், இந்த விடயத்தில், தமது கடமைச் செய்யவில்லை என்பது, மக்களால், பொலிஸார் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டு. 

1983 ஜூலையில் தெற்கில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்ப்ட்ட அராஜகத்தின் போது, அதனைக் கட்டுப்படுத்த பொலீஸ் படையும் தவறியதுடன், பொறுப்புள்ள அரசும், மெளனித்ததுடன்,  நாட்டின் அதிபரே, பகிரங்கமாக, ஆத்திரம அடைந்த சிங்கள மக்கள் செய்கின்றார்கள் என அப்பாவிச் சிங்களவர் மேல் பழியைப் போட்டதன் பின்னணியால் உருவானதே, அகில உலகிலும் சிங்களவருககும், பௌத்தத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட அபகீர்த்தியும். மேலும், அதனால் தொடர்ந்த முப்பதாண்டுக் கொடூரங்களும், அழிவுகளும், உயிரிழப்புகளும், மறக்க முடியாதவை.  இன்னும், இற்றைவரை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் சர்வதேசத் தலையீடுகளும்,  குற்றச்சாட்டுக்களும். ஐநாவில் முன்மொழியப்படுகின்ற தீர்மானங்களும். தொடர் நடவடிக்கைகளும் கூட, அன்றைய நாட்டின் அதிபரின் உரையின் எதிர்விளைவே!

Tuesday, December 3, 2013

ரியூஷன்கள், மாதிரி வினாத்தாள்கள் கருத்தரங்குகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

Commented by nizamhm1944 on: http://tinyurl.com/omzn2qy

BERU News

         ரியூஷன்கள், மாதிரி வினாத்தாள்கள் கருத்தரங்குகளுக்கு                                           நள்ளிரவு முதல் தடை!


// கடந்த வருடம் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு முன்னதாக தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் பரீட்சையில் வந்த அதே கேள்விகளை மாதிரி வினாத்தாளாக அச்சிட்டு வழங்கியிருந்தமை தொடர்பில் எழுந்த சர்ச்சையையடுத்தே பரீட்சைகள் திணைக்களமும் கல்வியமைச்சும் இணைந்து இத்தீர்மானத்தினை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது //

இவ்விடயம் பரீட்சைத் திணைக்களத்தின் கையாலாகாத் தனத்தை வெளிப்படுத்துகின்றது.  பரீட்சைத் திணைக்களத்துள்  மிக மிக அந்தரங்கமாகத் தயாரிக்கப்படும், வினாத்தள்கள் எப்படி வெளியாகின்றன என்பதைக் கண்டுபிடிப்பதையும், அதனைச் சீர்செய்வதையும் விடுத்து எடுக்கப்படும் எவ்வித நடவஎக்கையும், பரீட்சை வினாக்கள் வெளியாவதைத் தடுத்துவிடப் போவதில்லை என்பதை அறியாதிருந்தால், நம் நிலை பற்றிச் சிந்திக்கவே வேண்டியுள்ளது.  

உண்மையில், டியூஷன் வகுப்புகளும், மாணாக்கர் நலன் என்ற அடிப்படையில் தொடர்ந்து கொண்டிருக்கும் அனைத்துச் செயற்பாடுகளும், பாடசாலைக் கல்வியின் நிலையை வெளிப்படுத்துவன.  பாடசாலைக் கல்வி சீராக மாணவருக்குக் கொடுக்கப்படுமாக இருந்தால் காளாண்களாகப் பெருகியிருக்கும், டியூஷன் வகுப்புகள் தோன்றியிரா! 

தனியார் கல்வி நிலையங்களில் கற்கும் மாணவர்களுக்காக டியூஷன் வகுப்புகள் தோன்றியிருப்பதாக தெரியவில்லை என்பது, நிலைமையை சீர்தூக்கிப் பார்த்து அறிந்து கொள்ளவும், மாற்று நடவடிககைகள் எடுத்து, பாடசாலைக் கல்வியை மேம்படுத்தவும், அதன் மூலம் படிப்படியாக டியூஷன் தொல்லையையும், பெற்றார், மாணாக்கர் டியூஷன் மோக மனநிலையையும் தீர்க்க, மாற்றக் கூடியதாகவிருக்கும். 

இது மட்டுமல்ல, விடைத்தாள் திருத்தும் நிலையங்களில் நடைபெறும் குழறுபடிகளையும், களைவதற்கான மாற்று வழிகனளக் கண்டறிய வேண்டும்.  

உத்தியோகங்கள் வழங்கப்படு முன்னர், சான்றிதழ்களைப் பார்த்து, நியமனங்கள் செய்யாது, அறிவை அளந்து தகுதியானவர்களைத் தெரிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்படல் வேண்டும்.  இன்றேல், தராதரப்பத்திரங்களைப் படிக்காமலே பெற்றுக் கொள்ளும் குறுக்கு வழிகளை மாணாக்கரும், பெற்றாரும் தேடிக் கொண்டிருக்கும் அவல நிலைகளை மாற்றியமைத்துவிட முடியாது. 

இதன் மூலம் நடைபெறும் அவலங்களில் இருந்து நாட்டை விடுவிக்கலாம் !

வணக்க ஸ்தலங்கள் இடிக்கப்படுவதை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

Commented by nizamhm1944 on: http://tinyurl.com/nccdegq

Lankamuslim.org

வணக்க ஸ்தலங்கள் இடிக்கப்படுவதை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

புததர் சிலை இல்லாத இராணுவ முகாம்களே இந்நாட்டில்  இருக்காது என்பது உண்மையே! எங்கெல்லாம் முகாம்கள் ஏற்படுத்தப்படுகின்றனவோ அங்கெல்லாம் மதவழிபாட்டுத்தலங்களும் உருவாகிவிடுவதைத் தவிர்க்கவும் முடியாது எனக் ககூறலாம். இந்திய அமைதி காக்கும் படை இங்கு இருந்த காலத்தில் அவர்ககும் தமது வழிபாட்டிடங்களை அமைத்தே இருந்தார்க்ள். இது மனிதன் வாழுமிடங்களில் அவை தோன்றுவது நியாயமானதே என்பதை வலியுறுத்துகின்றது. தற்போது அழிக்கப்படும் கணிதம் விடைதராதது.

பாதுகாப்பு வலயங்களாக இருந்த பகுதிகள்ில் காண்ப்படும் மதவழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுவதாகக் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதே! தற்போது அவை இடிக்கப்படுவதில் இருந்து, யுத்தம் நடைபெற்ற காலங்களில் கூட அவை அங்கு  இருந்திருக்கின்றன என்பது தெரிய வருகின்றது. மேலும், பெளத்தர்க்ள் பெரும்பாலோர் இந்துக் கடவுளரை வழிபடுபவர்களே!

அப்போது அவை இருக்க முடியுமானால், தற்போது என்ன காரணத்துக்காக அழிக்கப்படுகின்றன என்பதை, சாதாரண நிகழ்வாக ஒதுக்கிட முடியாதது. அத்தோடு, பொதும்க்கள் செறிந்து வாழும் தெற்கிலும்கூட  மதவழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படும், அகற்றப்படும் அதே வேளை, புதிதுபுதிதாக காரியாலய முற்றங்களிலும்.பொதுச் சந்திகளிலும்,  சுற்றுவட்டங்களிலும், இன்னபிற இடங்களிலும் புத்த சிலைகள் நட்டப்படுகின்றன என்பது, மக்கள் மத்தியில் மட்டுமல்ல, சமூக  ஆர்வலர்கள், அமைதி விரும்புவோர், மதவிரோத சிந்தனையற்ற சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மத்தியிலும், வெளிநாடுகளிலும் கூட பலத்த சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இது நல்ல சகுனமாகத் தெரியவில்லை.  இறைசாபத்தைக்கூட வருவிப்பது.  யாப்பையும் கேலிப்பொருளாக மாற்றியுள்ளது.

Thursday, November 28, 2013

World's Fastest Back Bend Walk -- Guinness World Records 2014



Its amazing!

நீதிமன்றம் உத்தரவிட்டால் மாத்திரம் மீள் தேர்தல் !

Commented on  : http://tinyurl.com/o8w32ye

Lankamuslim.org

நீதிமன்றம் உத்தரவிட்டால் மாத்திரம் மீள் தேர்தல் !

அண்மைக் காலமாக தேரர்கள் சிலரின் அடாவடித்தனம் அத்துமீறியுள்ளமைக்கான காரணம், சட்டம் தூங்கிக் கொண்டு இருப்பதனாலா என்ற நியாயமான கேள்வி மக்களிடையே எழுந்து கொண்டிருக்கின்றது.  இது ஓர் அராஜக நாடு, சட்டமும் ஒழுங்கும் நிலவாத காட்டுமிராண்டிகள் காலநிலை கொண்ட நாடு என்ற பட்டியலில் இடம் பெற்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

தேர்தல்களின் தலைவிதி தற்போது வெளியாகியுள்ள நிலையில் நாட்டின் களநிலவரம் உள்ளங்கை செல்லிக்கனி அல்ல வெள்ளிடைமலை ஆகியுள்ளது.

நடந்த தேர்தல் முறையீனங்கள் பற்றிய செய்திகள், கருத்துப்பதிவுகளை ப் பார்க்கும் போது, கண்டெடுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் முஸ்லிம்களுடையது என்பதும், அவை புத்தளம் நகர்ப் பகுதிக்கு உரியது என்பதும். 40 சதவீத முஸ்லிம்களைக் கொண்ட புத்தளத்தில் ஒரேயொரு முஸலிம் வேட்பாளரே தேர்வாகியுள்ளார் என்பதும், அவர்களால் ஆளும் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும், முஸ்லிம் காங்கிரஸக்கும் வாக்களிக்கப்பட்டவை என்பதைப் பார்க்கும் போது, கண்டைடுக்கப்பட்ட வாக்குச் சீட்’டுக்கள் தேர்தல் அதிகாரிகளின் கவனயீனம் காரணமாக ஏற்பட்டதல்ல, திட்டமிட்ட ஒரு இனத்திற்கு எதிராக நடத்திமுடிக்கப்பட்ட மோசடி என்பதை சிறு பிள்ளைகூட அறிந்து கொள்ளும்.

இதுவும் அடிப்படை மனழத உரிமை மீறலே! சமவுரிமை என்ற பண்பு, ஒரு சமூகத்தால் அனுபிக்கப்படும் அதே நேரத்தில் இன்னொரு சமூகம் சார்ந்தவர்களுக்குத் திட்டமிடப்பட்டு, மறைமுகமாக மறுக்கப்பட்டுளள தன்மையைக் கொண்டுள்ளது. இது யார் குற்றம் என்பது கண்டுபிடிக்கப்பட வேண்டியுள்ளது. ஆயினும் குற்றமிழைக்கப்பட்டுள்ளது, அநீதி அரங்கேறி உள்ளது என்பவை நிரூபணமாகியுள்ள ஆதாரங்களுடன் கூடிய, விசாரணை வேண்டப்படாத, மறுதலிக்கப்பட முடியாத உணமையே!!  The fraud it self is SELF EXPLANATORY

ஆதலின், சம்பந்தப்பட்டவர்கள், இது விடயத்தில் சரியான பதில் நடவடிக்கை எடுப்பதன் மூலம், யாப்பின் மானத்தைக் காப்ப‌துடன், யாப்பில் அளிக்கப்பட்ட சுதந்திரத்தை, அந்த பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூகம் ஏனைய சமூகங்களைப் போன்று அனுபவிக்க வகை செய்ய வேண்டும்.   இன்றேல், அடுத்த பங்குனியில் நடைபெறவுள்ள மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு நிகழ்வில், இந்த மனித உரிமை மீறல் பிரச்சினையும் குறிப்பிடக்கூ‌டிய அளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அரசு புரிந்து கொள்ள வேண்டும்!

வெளிவராமல் தூங்கிக் கொண்டிருக்கும் தேர்தல் ஒழுங்கீனங்கள் இன்னும் எத்தனையோ! உள்ளுர், வெளியூர் தேர்தல் கண்காணிப்பாளர்கள் இது பற்றி என்ன கூறப் போகின்றார்களா! இவ்வாறான அநியாயங்கள் அவர்கள் கண்காணிப்பிற்கு அப்பாற்பட்டனவா!

வாககுச் சீட்டும் எண்ணும் நிலையத்தில் இது நடைபெற்றிருந்தால், அந்நிலையத்திற்குப் பொறுப்பான உயரதகாரி, தனது (ஜேர்னலில்) நடப்புக் குறிப்பில் எவ்வாறு தன்னால் பெறப்பட்ட வாக்குகள்  அனைத்தும் எண்ணப்பட்டது என்பதையும், அவைகள் பாதுகாப்பாக முத்திரையிடப்பட்ட நிலையில் திருப்பிக் கையளிக்கப்படுகின்றன அல்லது பாதுகாப்பில் வைஎன்க்கப்படுகின்றனஎன்பதைபதையும் பதிந்திருப்பார்! ஆக, அந்த நடப்புக்குறிப்பு உண்மைகளுக்குப் புறம்பானது என்பதை, கண்டெடுக்கப்பட்ட வாக்குச் சீட்டுக்கள் நிரூபிக்கவில்லையா! கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையா என்பதை தேர்தல் ஆணையாளர் அறிந்து கொள்ள வேணடும்!  

Tuesday, November 19, 2013

பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் பெரும் தவறிழைக்கிறார்!

Commented by nizamhm1944 on:  BERU NEWS -   http://tinyurl.com/m3td86j

பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் பெரும் தவறிழைக்கிறார்!

// கடந்த கால துன்பகரமான நிகழ்வுகளை நாம் ஏன் மீண்டும் நினைத்து துன்பப்பட வேண்டும். //

மேற்கண்டஉஙகள் கூற்று, தமது குழந்தைகள் தொலைக்கப்பட்டதை, தேடக்கூடாது, தேடித் தரும்படி கேட்கக் கூடாது என்பதா இல்லையா என்றதை, முரளி தனது தாயிடம் ‌கேட்டுத் தெரிந்து கொண்டு இதனை எழுதி இருக்கலாம்.

அந்த தாய்மாரின்அவலத்தைக் கொச்சைப்டுத்துவதும். அது அடிப்படை மனி உரிமை அல்லவெனக் கூற முயல்வதும். உஙகள் தரத்தை வெளிப்படுத்தி நிற்பது தெரியவில்லையா!

//  அன்று யாழ்ப்பாணத்தில் அவர் சந்தித்த 20 முதல் 30 தாய்மார் தங்கள் உறவுக்காரர்களின் படங்களை காட்டி பிரதம மந்திரியிடம் அழுது புலம்பியதால் இருக்கலாம். பிரிட்டிஷ் பிரதம மந்திரி தனக்கு யாராவது தெரிவிக்கும் ஆதாரமற்ற கருத்துக்களை நம்பியதனால் தான் இத்தகைய அறிக்கையை இலங்கைக்கு எதிராக வெளியிட்டிருக்கலாம் என்று தெரிவித்தார். //

தங்கள் கருத்து, அன்றைய தாய்மாரின் ஒப்பாரி பொய் என்பது போல காட்டுகின்றது.  அவர்களின் கூப்பாடு ஆதாரமற்றது எனக் கூறுவீர்களாயின்,

அதனைத் தாங்கள் பல் வேறு வகையில் நிரூபிக்கலாம். நிரூபிக்க வேண்டும்!

அதனைச் செய்தால் மட்டுமே தாங்கள் “மனிதத்தின் விரோதி“ என்ற நிலையில் இருந்து விடுபடலாம்.  

பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் பெரும் தவறிழைக்கிறார்!

Commented by nizamhm1944 on:  BERU NEWS -   http://tinyurl.com/m3td86j

பிரிட்டிஷ் பிரதமர் கெமரூன் பெரும் தவறிழைக்கிறார்!

// கடந்த கால துன்பகரமான நிகழ்வுகளை நாம் ஏன் மீண்டும் நினைத்து துன்பப்பட வேண்டும். //

மேற்கண்டஉஙகள் கூற்று, தமது குழந்தைகள் தொலைக்கப்பட்டதை, தேடக்கூடாது, தேடித் தரும்படி கேட்கக் கூடாது என்பதா இல்லையா என்றதை, முரளி தனது தாயிடம் ‌கேட்டுத் தெரிந்து கொண்டு இதனை எழுதி இருக்கலாம்.

அந்த தாய்மாரின்அவலத்தைக் கொச்சைப்டுத்துவதும். அது அடிப்படை மனித  உரிமை அல்லவெனக் கூற முயல்வதும். உஙகள் தரத்தை வெளிப்படுத்தி நிற்பது தெரியவில்லையா!

//  அன்று யாழ்ப்பாணத்தில் அவர் சந்தித்த 20 முதல் 30 தாய்மார் தங்கள் உறவுக்காரர்களின் படங்களை காட்டி பிரதம மந்திரியிடம் அழுது புலம்பியதால் இருக்கலாம். பிரிட்டிஷ் பிரதம மந்திரி தனக்கு யாராவது தெரிவிக்கும் ஆதாரமற்ற கருத்துக்களை நம்பியதனால் தான் இத்தகைய அறிக்கையை இலங்கைக்கு எதிராக வெளியிட்டிருக்கலாம் என்று தெரிவித்தார். //

தங்கள் கருத்து, அன்றைய தாய்மாரின் ஒப்பாரி பொய் என்பது போல காட்டுகின்றது.  அவர்களின் கூப்பாடு ஆதாரமற்றது எனக் கூறுவீர்களாயின்,

அதனைத் தாங்கள் பல் வேறு வகையில் நிரூபிக்கலாம். நிரூபிக்க வேண்டும்!

அதனைச் செய்தால் மட்டுமே தாங்கள் “மனிதத்தின் விரோதி“ என்ற நிலையில் இருந்து விடுபடலாம்.  

தரம் 01 அனுமதிக்கு நன்கொடை பெற்றால் கடும் தண்டனை; வடமாகாண கல்வி அமைச்சு

Commented on  தரம் 01 அனுமதிக்கு நன்கொடை பெற்றால் கடும் தண்டனை; வடமாகாண கல்வி அமைச்சு  Voice of Mannar -  http://tinyurl.com/omd9eqo

இதனைத் தடுத்து நிறுத்துவதாயின், பல் வேறு நடிவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.  அதிற் பிரதானமானதாக் கொள்ளக் கூடியது, பாடசாலை அபிவிருத்திச் சபை ( SCHOOL DEVELOPMENT SOCIETY) யின் நிதிக்கட்டுப்பாடு,

வருட ஆரம்பத்திலும், மாணவர் அனுமதி நடை பெறும் காலங்களிலும் வந்து குவியும் பணம், எப்படி வந்தது என்பதைக் கண்டறியவே தேவையில்லை.

அடுத்தது, பெற்றாரின் ஒத்துழைப்பு மிக முக்கியமானது. எப்படியாவது நல்ல பாடசாலைகளில் தமது பிள்ளைகளைச் சேர்க்க வேண்டும் என்ற உந்துதலில், அவர்களே களவாக இலஞ்சம் கொடுக்கத் தொடங்கி விடுகின்றனர்.

தடுப்பதாயின், மிக இலகுவாகச் செய்ய வேண்டியவை.

மாணாக்கர் வதியும் இடங்களிலுள்ள பாடசாலைகளிலேயே அனுமதி  வழங்க வேண்டும்.

குறித்த பாடசாலை்யில் இடமில்லாத நிலை ஏற்படின், அதற்கடுத்ததாகவுள்ள பாடசாலைகளில் அனுமதி வழங்கல்.

பெற்றார் தொழில் செய்யும் இடங்களிலுள்ள பாடசாலைகளில் அனுமதி பெறல்.

புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தி எய்துவோருக்கு அந்தந்த மாவட்டங்களிலேயே சிறந்த பாடசாலைகளில் அனுமதி வழஙகல்.  மாவட்டத்தில் ஒரு பாடசாலையாவது, மிகச் சிறந்த தரத்தை கொண்டதாக அமைவது உறுதி செய்யப்படல்.

இவற்றுக்குப் புறநடையாகவுள்ள சந்தர்ப்பங்களின் போது அனுமதிகள் வழங்க விஷேட திட்டங்கள் உருவாக்கப்படலாம்.

மேலாகப் பாடசாலைகளின் தரத்தை மேம்படுத்தும் கட்டமைப்புக்களுடன், ஆசிரியர்களின், பொருளாதார மேம்பாட்டையும கருத்திலிருத்த வேண்டும்.

சிறந்த பெறுபேறுகளை மாணவர் அடைவதற்குக் காரணமான பாட ஆசிரியர்களை, வலய மட்டத்திலாவது தெரிவு  செய்து, சிறந்த ஊக்குவிப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.  ஆசிரிய தரத்திலேயே சிறப்பான மேலதிகக் கொடுப்பனவுத் திட்டத்தை அறிமுகம் செய்ய வேண்டும்.

சிறந்த ஆசிரியர்களுக்கான வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலா போன்றவை,  அவர்களின் குடுமபங்களுடன் உள்நாட்டு, வெளிநாட்டுச் சுற்றுலா வசதிகள் செய்யப்படல் வேண்டும்.

ரயில் பயணச் சீட்டுக்களைப் பாவியாதோருக்கு, அவற்றுக்குரிய கொடுப்பனவுகள் வழங்கப்படல் வேண்டும.

அவர்களுக்கு உரிய லீவுகளைப் பெற்றுக் கொள்ளாதவர்களுக்கு வ‌ிஷேட கொடுப்பனவுகள் அறிமுகம் செய்யப்படல் வேண்டும்.

அவர்தம் தரத்தை மேம்படுத்துவதற்கான இலகு கடன் வசதிகள் மூலம், வீடு, வாகனம் போன்ற இன்னோரன்னவை பெற்றுக் கொள்ள உதவி, அவர்களின் சமூக அந்தஸ்தை உயர்த்த வேண்டும்.

மற்றும் வைத்திய வசதிகள் போன்றவை

புலமைப் பரிசிற் பரீட்சைக்குக்கூட நல்ல புள்ளிகளைப் பாடசாலை மட்ட்த்தில் பெறுபவர்களை மட்டுமே அனுமதித்தல். இதனால்,  திணைக்களத்திற்கு ஏற்படும் செலவு குறைக்கப்படும். அப்பணத்தை பாடசாலை அபிவிருத்திகளுக்குப் பயன்படுத்தலாம். அத்தோடு, இது பாடசாலையின் கல்வித் தரத்தை அிறிந்து கொளளும் ஒரு சாதனமாகவும். பயன்படும்.  ஆசிரியர்களும் பொதுவாகக் கல்வித் தரத்த‌ை மேம்படுத்தும் மனநிலை உருவாகும்.  புலமைப் பரிசிலுக்காக மாணவர்களை ஆயத்தப்படும் அவல நிலை மாறும்.

இவ்வகையான மாற்றங்கள் ஏற்படுமாயின், 90 வீதத்திற்கும் அதிகமான பெற்றார் கல்விக்காக நல்ல பாடசாலை ‌தேடுவது,  அதனை வழங்க இலஞ்சம் பெறப்படுவதும் நீங்கும்.














Thursday, November 14, 2013

ஜக்கிய தேசிய கட்சியிடம் வாங்கிகட்டிய பொது பலசேனா

Commented by nizamhm1944 : http://tinyurl.com/qfxv2o2

Lankamuslim.org

ஜக்கிய தேசிய கட்சியிடம் வாங்கிகட்டிய பொது பலசேனா  


தாம் ஆமதுருவல்லவா, நாங்கள் பொய் சொல்லக் கூடாதல்லவா! உண்மையைத்தானே பேச வேண்டும் என்ற கலகொட தேரரின் பேச்சு ஒன்றே போதும் அவரை அளவிட !  

ஆனால், முன்னொருபோது, பகிரங்க மேடையில், முஸ்லிம்களின் புனித குர்ஆனில், இஸ்லாமல்லாதவர்களுக்கு உணவு கொடுக்கும்போது அதில் மூன்று முறை துப்பி எச்சில் படுத்திவிட்டே கொடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளதாகவும், அதன்படியே முஸலிம் ஹோட்டல்களில் உணவவில் எச்சில் துக்கிய பின்னரே பரிமாறப்படுவதாகவும், கூறியதை அவர் நிரூபிக்க வேண்டும்.  மேலும் பள்ளிவாசல்கள் ஆயுதக் கிடங்குகளாகவும், பங்கர்களாகவும் உள்ளன என்பதையும் அவர் நிரூபிக்க வேண்டும்.

அ ப்படி அவர் நிரூபிக்கத் தவறினால், புத்த தர்மத்தை மீறிய பொய்யர் எனப் பெயர்சூட்டப்பட்டு, அவரே தனது காவியுடையைக் களைய வேண்டும். அதுவே, அவர் தனது சமயத்திற்குச் செய்யும் மிகச் சிறந்த மதிப்பு, பாதுகாப்பு ஆகு்ம். 

பொய்யரும், மது போதையில் வாகனமோட்டி, விபத்தை ஏற்படுத்திய குற்றத்திற்காக, நீதிமன்றினால் தண்டிக்கப்பட்டு, குற்றப் பணமும் கட்டிய இந்த குற்றவாளி,  காவியுடை தரித்து, தான்தான் புத்த மதத்தைக் காப்பாற்றப் புறப்பட்டவன் எனக் கூறுவது புத்தர்களுக்கே களங்கத்தையும், அவமானத்தையும், அபகீர்த்தியையும் ஏற்படுத்துவமதாகும்.  

அவரை அரசும் சுதந்திரமாக இவற்றைச் செய்வதற்கு இடங் கொடுப்பது, புத்த தர்மத்துக்கும், இந்நாட்டின் பாரம்பரியத்துக்கும் கேடு விளைவிப்பதாகும்.  வரலற்றில் கறையை ஏற்படுத்திய குற்றமுமாகும்.  

நாட்டில் முஸ்லிம்களுக்கு நிம்மதி இல்லை – மங்கள

Commented by nizamhm1944 : http://tinyurl.com/nb3fqz4

Lankamuslim.org

நாட்டில் முஸ்லிம்களுக்கு நிம்மதி இல்லை – மங்கள


நிம்மதியி்ல்லாத சூழலை, வேண்டுமாயின் முகங் கொடுக்கலாம்.  ஆனால், அரச உயர்மட்டங்களின் மறைமுக ஆதரவுகளுடன் முன்னெடுக்கப்படுவதாக நம்பப்படும், மதவிரோதச் செயற்பாடுகளைத்தான் நினைத்துப் பார்க்கவும் முடியவில்லை.

இது பயங்கரவாதத்தைத் தாண்‌டிய பாதக நிலை. இவ்வகை அச்சுறுத்தலுடன் வாழ்வதென்பதுவே முஸ்லிம்களைத் தமது இருப்பு சம்பந்தமாக மீளாய்வு செயதுகொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்துக்குள் தள்ளியுள்ளது.

முஸ்லிம்கள்  பொறுமை காப்பது என்பதை அவர்களின் இயலாமையாக அரசு கருதுமானால், அது அரசு செய்யும் மிகப் பெரிய முடடாள்தனம் மட்டுமல்ல,  சும்மா கிடக்கும் சங்கை ஊதிக்கெடுக்கும் நிலையை ஒத்ததாகிவிடும்.  அத்தோடு தேசிய நலனைப் புறந்தள்ளியதுமாகும்.

முஸ்லிம்களது பொறுமை, பெரும்பான்மை புத்த சிங்கள மக்கள் இவற்றுக்கு உடந்தையல்ல, அதனால் தமது எதிர்ப்புகள் எந்த வகையிலும் பௌத்த சிங்கள மக்களை மனம் வருந்தச் செய்திடக் கூடாது என்ற  காரணத்திற்காகவும், தேசிய நலனைக் கொண்டதுமான உயர்வான நோக்கத்தை அடியொற்றியதாகவும், தமது மார்க்க நெறிமுறைகளைத் தழுவியதாகவுமே இருக்கின்றது என்ற உண்மையை அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.  

Wednesday, November 13, 2013

Mannar

http://www.youtube.com/v/2HnC-MaBz3s?autohide=1&version=3&autoplay=1&attribution_tag=9WO-y_i1m2fhPXlVz-Tihg&feature=share&showinfo=1&autohide=1

இம்மாதிரியான செயற்பாடுகள் தீர்க்கதரிசனமற்றவை.  இவற்றால், நடந்து முடிந்த அனர்த்தங்கள் தங்களால் செய்து முடிக்கப்பட்டவை என்பதைத் தாங்களே நிரூபித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதைத் தவிர எந்த நன்மையையும் அரசு அடையப் போவதில்லை.  வந்தவர்களின் வேலையை இலகுபடுத்தி விட்டார்கள் !

இதற்கு உறுதுணையாயிருந்த அனைவரும், இந்த நாட்டிற்கு சர்வதேச ரீதியில் ஏற்படுத்தப்பட்டுக்கொண்‌டிருக்கும் கேவலங்களுக்கும், அவமானங்களுக்கும் பொறுப்பாளர்கள் என்பதை வரலற்றில் பதிவாக்கி உள்ளனர்.

மண்டூகங்கள் ! நுணலும் தன் வாயாலே கெடும் என்பது இதுதானோ!

Monday, November 11, 2013

பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை!

Commented by nizamhm on :  http://tinyurl.com/poqpgxg

BERU News

பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை!

 //  மூன்று தசாப்த காலமாக எமது நாட்டை பீடித்திருந்த பயங்கரவாம் எமது இளைஞர் சமூகத்திற்கு மிகப் பெறும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. பயங்கரவாதிகளால் பலவந்தமாக படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஒரு சிறுவர் போராளியை அல்லது ஒரு இளைஞரை எடுத்துக்கொள்ளுங்கள் அந்த சிறுவர்களும் இளைஞர்களும் தங்களது சுந்தர இளைஞர் பருவத்தையும் குழந்தைப் பருவத்தையும் இழந்துவிட்டனர். இந்த நீண்டகாலப் பகுதியில் எமது இளைஞர்கள் மிகப் பெரும்பாலான பெறுமதியான சந்தர்ப்பங்களை இழந்துவிட்டனர். //

மாண்புமிகு ஜனாதிபதி மிகச் சிறந்த கருத்துக்களைக் கூறியுள்ளார். அவரது சிந்தனைகளும் நன்றாகவே தொழிற்படுகின்றன.   யுத்தத்துள் நுழைக்கப்பட்ட சிறுவர்களின் வாழ்வை, பொன்னான இளமைக் காலத்தை சீரழிந்துள்ளனர். அவர்கள் பல் வேறு சந்தர்ப்பங்களை, நலன்களை, பருவத்தில் அனுபவிக்க வேண்டியவற்றை இழந்துள்ளமை, அவர்களின் கவனத்தை ஈர்த்தது.

அது போன்று, அல்லது அதைவிட மோசமாக, காரணமற்று வடக்கில் இருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட அந்த அப்பாவி முஸ்லிம் சிறுவர்களும், அத்தனை வரப்பிரசாதங்களை மட்டுமல்ல, சாதாரணமாக சிறுவர்கள் அநுபவிக்க வேண்டிய ஆகக் குறைந்தவற்றை, கல்வி, சந்தோஷம், சுதந்திரம் உட்பட எல்லாம் இழந்து அகதிகள் என்ற அவமானத்துடன், ஒதுக்கப்பட்டவர்களாக, ஓரங்கட்டவர்களாக, வறுமை, பிணிகளின் வாழ்விடங்களாக மாறி, அடிப்படை மனித உரிமை என்றால் என்னவென்றறியாத நிலையில் அவமே கழித்துள்ளனர்.

என்ன சாபக்கேடோ தெரியவில்லை, அல்லல் உறற அச்சிறுவர்களின் பரிதாப நிலை மட்டும்  மாண்பு மிகு ஜனாதிபதி அவர்களின் கண்ணில் கூட படாமலும், கருத்தை ஈர்க்காமலும் உள்ளது என்று அச்சிறுவர்கள் கேட்பது போன்று எனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

இதற்கு என்ன பதிலை மாண்பு மிகு ஜனாதிபதி கூறப் போகின்றாரோ! பொறுத்திருந்து பார்ப்போம்.

தேரரின் இனவாதத்தை சிங்கள ஊடகங்களிலும் அம்பலப்படுத்துவேன்: பிரபா கணேசன்

Commented by nizamhm1944 on :  http://tinyurl.com/mc26z53

Lankamuslim.org
One World One Ummah

தேரரின் இனவாதத்தை சிங்கள ஊடகங்களிலும் அம்பலப்படுத்துவேன்:   பிரபா கணேசன்


கோயில் ஒன்று உடைக்கப்படாமல்  இருப்பதற்கு, அன்றி வேறோரிடம்  பெறுவதற்கு அப்பகுதி தேரரிடம் இருந்து அனுமதி பெற வேண்டும் என்ற தர்க்கம் புதுமையாக இருக்கின்றது. ஆனால் நாட்டில் சட்டமும், ஒழுங்கும் நிலவவில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரே தேரரிடம் போய் சமரசமாக பிரச்சினையைத் தீர்த்து வைக்கலாம் என நினைத்தது, ஓர் நல்லெண்ணமாக இருக்கலாம். ஆனால், அதுவே ஒரு பிழையான, மனித சுதந்திரத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் செயல் என்பதை மறந்தமை ஏனோ!

பிழையான வழிகாட்டல்களே ஆட்சியாளரினால் கூட ஏற்படுததப்படுகின்றது. இதற்கு முன்னர், முஸ்லிம்களின் பள்ளி உடைப்புகளின் போதும், ஹலால் சான்றிதழ் விவகாரத்தின் போதும் அரசால், அன்றி நீதித் துறையினரால் தீர்த்து வைக்கபட வேண்டிய விடயம் புத்த தேரர்களிடம் உத்தரவு பெறுமளவிற்கு தடுமாற்றத்தையும், தடமாற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலை நாட்டில் சிறுபான்மையினரின் வாழ்வுக்கு சில தேரர்களின் ஆசி பெற வேண்டும் என்ற அபாக்ய, ஆபத்தான நிலையைத் தோற்றுவித்துள்ளது.

தேரர்கள்தான் சிறுபான்மையினரின் இருப்பு, வணக்க வழிபாடுகள், வணக்க ஸ்தலம், உணவு பற்றி எல்லாம் முடிவு எடுப்பதாயின், இந்நாட்டிற்கு ஏன் ஜனாதிபதி,  பாராளுமன்றம், அமைச்சரவை, திணைக்களங்கள், பொலிஸார், நீதிமன்றங்கள், மேலாக யாப்பு போன்றவை ! 

Sunday, November 10, 2013

Second To None Nutrition

முஸ்லிம்களின் இன அடையாளத்தை இல்லாதொழிக்க முயற்சி: ஹசன் அலி

Commented by nizamhm1944 on :  http://tinyurl.com/lchh8l4

Lankamuslim.org
One World One Ummah

முஸ்லிம்களின் இன அடையாளத்தை இல்லாதொழிக்க முயற்சி: ஹசன் அலி

உரிமைகள் உணர்வுபூர்வமான பேச்சுவார்த்தைகளாலும், உளப்பூர்வமான விட்டுக் கொடு்ப்புக்களோடும், பரஸ்பர புரிந்துணர்வோடும் பெறப்பட வேண்டும். அதுவே நிலையானதாகவும், விருப்பத்தோடும், மனநிறைவோடும். திருப்தியுடனும், எரிச்சலையும், வெறுப்புணர்வுகளையும் ஏற்படுத்தாது தரப்படுவதாக  இருக்கும்.

அல்லாமல் ‌மேலே கூறப்பட்டவாறு ‌பெறப்படுபவை நிலைக்கவோ, நீண்ட காலம் செயற்படுத்தப்படும் நடவடிக்கையாகவோ அமையப்  போவதுமில்லை. மேலும், இந்நிலை, எதிர்காலத்தில் பேரின மக்களை வேறுவிதமான முடிவுகளை எடுக்கவும். சிறுபான்மையினரின் உதவி, ஆட்சி ஒன்றை அமைப்பதற்குத் தேவையற்றது என்ற நிலைமையை உருவாக்கும் போது எதிர்காலம் இருண்டுவிடும்.

உரிமைகள் என்பது உணர வைக்கப்பட்டு, அவை அனைவரும் அனுபவிக்க வேண்டியதே என்ற சிந்தனையை உருவாக்கும் விதத்தில் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் வகுத்துக் கொள்ள வேணடும். பேரம் பேசும் அரசியலுக்கு குரோதத்தை ஏற்படுத்துவதும். நீண்ட கால்த்தில் நிரந்தர எதிரியை ஏற்படுத்திக் கொள்வதாகவுமே இருக்கும்.

முஸ்லிம்கள் தற்போது அனுபவித்து வரும் தொல்லைகள் ஏற்படக் காரணமானவற்றில் பிரதானமான ஒன்றாக முகா வின் பேரம் பேசுதலும் ஒன்று என்பதைச் சொல்லி வைக்கிககிறேன். 

Saturday, November 9, 2013

பொது நலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டை நோக்கி ஒரு பார்வை!

Commented by nizamhm1944 on :  http://tinyurl.com/nv85d8c

BERU NEWS

பொது நலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டை நோக்கி ஒரு பார்வை!


// ஒரு காலத்தில், கொழும்பைப் போல சிங்கப்பூரையும் மாற்றியமைக்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு எழில் கொஞ்சும் நாடாக விளங்கிய எமது நாட்டை, மூன்று தசாப்த காலமாக ஆட்கொண்டிருந்த அந்தக் கொடிய நாசகார யுத்தமானது சின்னாபின்னமாக்கி, நிம்மதி என்றால் என்ன என்று கேட்கக்கூடியளவு மக்கள் கதிகலங்கிப்போய் இருந்தார்கள்  //

மேற்கண்ட பந்தியில் மிகச் சிறந்த உண்மை ஒன்று பரிணமித்து நிற்கின்றது. அது ஒரு எச்சரிக்கை, அச்சமூட்டல் என்றும் கூறலாம்.  சிங்கப்பூர் கொழும்பை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு அக்கால கட்டத்தில் அவ்வளவு சிறந்த தரத்திலேயே இந்நாடு இருந்துள்ளது.  

அதன் பின்னர் இங்கு நடைபெற்ற ஒடுக்கு முறைகளும், அடக்கு முறைகளும், அடாவடித்தனங்களும், பிரஜைகளுள்  ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுமே,  இந்நாடு 30 வருட கொடூர யுத்தமொன்றுக்குள் இவ்வழகுத் திருநதாட்டை நுழைய வைத்து அலங்கோலத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதைக் கட்டுரையாளர் ஏற்பாராயின்,  அபிவிருத்திக்கு முன்னர் செய்யப்பட வேண்டிய மற்றொரு முக்கிய பிரச்சினை தீர்த்து வைக்கப்படல் வேண்டும் என்பதை வெளிப்படுத்தியிரு்ப்பார்.

அதே பிரச்சினை தீ்ர்க்ப்படாமலே மேலும், பரந்து விரிந்து எங்கும் தனது தீச்சுவாலை என்ற நாக்கால் மற்றைய இனங்களையும் நக்கி, நசுக்கி அழிக்கும் வகையில், கட்டுப்படுத்துவாரோ, மட்டுப்படுத்துவாரோ இன்றி, தட்டிக்கொடுக்கும், தடவிக் கொடுக்கும் நிலையுடன் பரவிக் கொண்டிருக்கின்றது. 

முப்பது ஆண்டு கோரத்துக்குக் காரணம் கண்டறியப்பட்டும், தீர்த்து வைக்கப்படாமல் செய்யப்படும் அனைத்தும் தடப்புரள்கை, அல்லது குதிரைக்கு முன்னால் வண்டியைப் பூட்டிய நிலையே ! அன்றி தந்திரோபாய மடைமாற்றலே !அதனால் எதன் காரணமாக முன்னைய அழிவுகள் ஏற்பட்டனவோ அக்காரணம் களையாமல் செய்யப்படும் அபிவிருத்திகள் அழிவுகளை எதிர் நோக்கியவையாகவே இருக்கும்.  

இதுவே, எந்த சிங்கப்பூர் பிரதமர் இந்நாடை முன்மாதிரியாகக் கொள்ள நினைத்தாரோ, அவரே இன்று சிங்கப்பூர் பிரதமராக இல்லாத நிலையிலும், அவரது மகனின் ஆட்சி நடைபெறும் இக்காலத்தில், இல்ங்கையின் போக்கு பற்றி அதிபரைப் பற்றிக் கடுமையான விமர்சனம் ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.  

ஆதலின் பிரச்சினைகளை ஓரங்கட்டிவிட்டுச் செயற்படுத்தப்படும் எதுவாயினும் அது நாட்டு நலனைக் கொண்டது என்று எவராலும் கூறமுடியாது.  விரயம் என்ற நிலையை எட்டிவிட நேரமெடுக்காது!

Sunday, November 3, 2013

20 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தலைமை வகிக்கப் போகின்ற ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்!

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/jvpjofv

Beru News

20 பில்லியனுக்கும் மேற்பட்ட மக்களுக்கு தலைமை வகிக்கப் போகின்ற ஜனாதிபதிக்கு வாழ்த்துக்கள்!

//  இலங்கையில் இம்மாநாடு நடைபெறுவதன் மூலம் தப்பான அபிப்பிராயங்கொண்டுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களுக்கு இலங்கையின் சரியான களநிலவரங்களை கண்டறியக்கூடிய சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுப்பதுடன் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பற்றியும் இலங்கை பற்றியும் தப்பிப்பிராயங்கொண்ட தலைவர்களின் எண்ணங்களை மாற்றுவதற்கான களமாகவும் இம்மாநாடு அமையும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.//

இந்நாட்டைப் பற்றியும், அதன் தலைவரைப் பற்றியும் தப்பான அபிப்பிராயம் கொண்டிருப்பதனை மாற்றும் கைங்கரியங்களை அரச செய்ய வேண்டும்.  அது அபிவிருத்திகள் மட்டுமல்ல. 

யுத்தம் முடிந்தது என்னவோ உண்மைதான்! அதனை யாரும் மறுப்பதற்கில்லை. அதனால் ஏற்பட்டுள்ள கறையும் இன்னும் தீர்ந்தபாடில்லை.  இந்நிலையில், அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழ்கின்றார்கள் எனக் கூறுவது இங்குள்ள பிரச்சினைகளை இருட்டடிப்புச் செய்வதே! 

1990இல் புலிகளால் வடக்கிலிருந்து விரட்டி அடிக்கப்பட்ட அந்த அப்பாவி முஸ்லிம்க்ள் நிலை தேய்முகத்திலேயே இருக்கின்றது!

ஆயுதப் போராட்டம் எதனால் தொடங்கியதோ, அந்தப் பிரச்சினை இன்னும் தீர்வைப் பெற்றுக் கொள்ளவில்லை. மாறாக, மேலும், இறுக்கமாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது ! 

அபிவிருத்தி என்ற பெயரில் இனச்சுத்திகரிப்பு ஓர் புறம். புனித பிரதேசம் என்ற பெயரில் மாற்றுமத வணக்கஸ்தலங்கள் உடைக்கப்படுகின்றது 

மேலும், தெற்கில் சிறுபான்மையினருக்கு தமது மதக் கடமைகளைச் செய்வதற்கும், பள்ளிவாசல், தேவாலயம், கோயில்களை வைத்திருப்பதற்குக் கூட இப்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

Saturday, November 2, 2013

சிங்களப் பெண்களின் அதிகரித்த கருக்கலைப்பால் பௌத்தம் முற்றாக இல்லாதொழிந்து போகும்!

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/p6krp3q

BERU News


சிங்களப் பெண்களின் அதிகரித்த கருக்கலைப்பால் பௌத்தம் முற்றாக இல்லாதொழிந்து போகும்!


கருக்கலைப்பிற்கான காரணங்கள் பல. அவற்றில் முறையற்ற தொடர்புகளால் ஏற்பட்ட கரு‌வை அவமானத்திற்கு அஞ்சிக் கலைத்தல், பாலியல் பலாத்காரத்தால் உருவான கருவைக் கலைத்தல். சிறுவர்களின் தவறான நடத்தைகளால், அறியாமையால் உருவான கருவைக் கலைத்தல், விப்ச்சாரத் தொழிலால் ஏற்பட்ட கருவைக் கலைத்தல், எச் ஐவி போன்ற நோயுள்ளவர்கள் கருவில் உருவாகும் குழந்தையின் நலம் கருதிக் கலைத்தல்,  குறைபாடானான கரு உருவாகியிருந்ததை ஸ்கேன் செய்வதன் மூலம் கண்டறிந்து அக்கருவைக் கலைத்தல், வறுமை காரணமாகக் குழந்தைகள் போதுமென்ற நிலையில் கலைத்தல்,  திட்டமிட்ட குடும்ப வாழ்க்கை என்ற அரசின்  அறிவுறுத்தல்களுக் கமைய கருவைக் கலைத்ல்,அந்தஸ்தைப் பேணுவதற்காகக் கருவைக் கலைத்தல், தமது ஆடம்பர சமூக வாழ்வுக்குக் குழந்தைகள் பிறப்பு தடையாகவிருப்பதாக நினைந்து கலைத்தல். தாய்மாரின் நலன் கருதிக் கருவைக்  கலைத்தல் என்று பலவாறான காரணங்களுடன் கருக்கலைப்பு நடைபெறுகிறது.   இதற்காக பல வைத்தியர்கள் சட்டத்திற்கு முரணான வகையில் கருக் கலைப்பிறகு உதவி வருவதும் ஒரு புதிய செய்தியல்ல. 

எத்தனை   குழந்தைகள் பிறக்க வேண்டுமோ அத்தனை குழந்தைகள் பிறந்தே தீரும். அதனைத் தடுத்திட எவரலும் முடியாது. அது போன்றே, அழிய வேண்டியவையும் அழிந்தே தீரும். இது இறை நியதி. இதனை மாற்றி அமைக்க எவராலும் முடியாது மட்டுமல்ல. அதனை மாற்ற முனைபவர்கள் இறை சிந்தனையோ, பயபக்தியோ அற்ற புல்லுருவிகள்.  இப்புல்லுருவிகள் தாம் இன்று சமூகத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன.  

சிங்கள சமூகம் அழிந்து விடும் என ஆரூடம் கூறுபவர் இந்த நாட்டின் பௌத்தர்களின் மதிப்புக்களைப் பெற்ற, தகுதி படைத்த, தம்மத்தை அனுஷ்டிக்கும், மகா சங்க நாயக்க தேரர்கள் அல்ல, மாறாக, நீதிமன்றால் குற்றவாளி எனக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுத் தண்டப்பணம் கட்டிவர் என்பதே இந்த தேரரின் கருத்தை அறிந்து கொள்ள உதவும்.  

மேலும், அண்மையில், பல மகா நாயக்க தேரர் இருப்பது பிழை எனவும், அத்தனையையும் ஒன்றாக்கி ஒரு தலைமையை உருவாக்க வேண்டும் என்ற தனது முட்டாள்தனமான கருத்தை தலதாவின் முன் நின்று கூச்சலிட்டவர்தான் இந்த தறிகெட்ட தேரர்.  அவரைத் தறிகெட்ட எனக் கூறுவதற்கான காரணம் பல இருப்பினும், மகா நாயக்க தேரர்கள் பற்றிய கருத்தை தெருவில் நின்று கூறியதையே முதன்மைக் காரணமாகக் கொள்ளலாம். அடுத்து அவர் பொய்யர், இட்டுக் கட்டும் இழிசிந்தனையாளர். புத்த பெருமான் கூறியபடி, மற்ற மதத்தை நிந்நிப்பவர்கள் தமது மதத்தையே நிந்திக்கின்றனர் என்ற கோட்பாட்டின்படி, புத்த தர்மத்தை நிந்திப்பவர்.  

புத்த பகவான் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்று, அவர்களது வாழ்விற்கு வகை செய்துவிட்டே அன்று துறவறம் பூண்டார், தேரர்கள் திருமணம் செய்யாததன் காரணமாகவே பௌத்த இனம் குறைந்து வருகிறது. அவர்களும் தாங்கள் மணமுடிக்க வேண்டும் என்ற ஒரு கருத்தை நாளை தெருவில் நின்று முன்வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தோடு, இன்று ‌ஐந்து,   ஆறு வயதுச் சிறுவர்கள்கூட துறவிற்குள் உள்வாங்கப்படுகின்றமையும் பௌத்தர்களின் பிறப்பு விகிதம் குறைந்ததற்கான காரணங்களே எனக் கூறினும் ஆச்சரியப்படத் தேவையில்லை! 

Wednesday, October 30, 2013

அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதில் நம் நாட்டில் புரட்சியொன்று ஏற்பட்டுள்ளது!

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/kh9hgun

Beru News

அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதில் நம் நாட்டில் புரட்சியொன்று ஏற்பட்டுள்ளது!


// மக்களை பயங்கரவாத பிடியில் இருந்து விடுவித்து அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை பெற்றுக் கொடுத்துள்ளது.//

மக்களைப் பயங்கரவாதப் பிடியில் இருந்து விடுவித்ததை மக்கள் நன்றியுடன் எப்போதும் நினைவு கூருகின்றார்கள். அது பலம் வாய்ந்த ஜேஆர், பிரேமதாஸ, சந்திரிகா முதலியோராலேயே செய்ய முடியாமற் போன் ஒன்று ! ஏன் அண்டை நாடான இந்தியாவின் அமைதி காக்கும் படை கூட அந்தப் புலிகளிடம் மண்ணைக் கவ்விச் சென்றது.

ஒன்றைக் கூறாமல் இருக்க முடியவில்லை.  உண்மையில் பயங்கரவாதப் பிடியில் இருந்த மக்கள் வடக்கு மக்கள்தான். ஆனால் அவர்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள் எனக் கூறுவதை மட்டும் ஏற்க முடியாதுள்ளதாகவே மக்கள் கருதுகின்றனர்.  உண்மையும் அதுவே! போர் முடிந்தது என்பதனால், புலிகள் அழி்நததனால் மக்கள் மத்தியில் நிம்மதி வந்துவிட்டது என நினைப்பது பிழையான கணிப்பீடே! சமன்பாடே !!

எதற்காக மக்கள் இத்தனை தொல்லைகளுக்கும் முகங் கொடுக்க வேண்டி வந்ததோ அது களையப்படல் வேண்டும். அதன் பின்னரே மக்கள் மத்தியில் நிம்மதி ஏற்படும் சூழல் உருவாகும்.

வடக்கு முஸ்லிம்களின் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை. வெறும் அறிக்கைகள் மட்டும் எதனையும் அவர்களுக்கு நல்வாழ்வைக் கொடுத்து விடாது. அவர்களது இழப்புகள் அனைத்தும் சீர் செய்யப்படல் மிக மிக முக்கியம்.  அதுவே மனிதாபிமானதும், நீதியானதும், நியாயமானதும், வேண்டப்படுவதும் கூட !

புலிகளால் வெறுங்கையோடு விரட்டி அடிக்கப்பட்டவர்களை, அரசும் வெறுங்கையோடு மீள் குடியறே்றம் செய்து விடலாம் என நினைத்தால், அது புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் எவ்வித வித்தியாசத்தையும் காட்டப் போவதில்லை. 

Tuesday, October 29, 2013

‘தம்புள்ள அம்மன் கோயில் முற்றாக நிர்மூலம்’

Commented by nizamhm1944 on : http://tinyurl.com/l5lmtfj

Lankamuslim.org


‘தம்புள்ள அம்மன் கோயில் முற்றாக நிர்மூலம்’



புனித பூமி என்ற வார்த்தை விவஸ்தை அற்றுப் போய்விட்டது.  எவரும் ஒரு இடத்தைப் புனித பூமி என்று கூறுவதன் மூலம் அது புனித பூமி ஆகிவிடப் போவதி்ல்லை!

கோயிலை இடித்து ஒரு புனித பூமியா! கோமாளித்தனமாக இருக்கிறது! புனித ‌பூமியில் கோவில்  இருக்கக் கூடாதா! இந்துக்கோவிலுக்குப் போய் கும்பிடாத பௌத்தர்கள் எத்தனை பேர் இந்நாட்டில் உள்ளனர் என விரல் விட்டு எண்ணிவிடலாம்.  இது அராஜகம் தவிர்த்து இல்லை.  

புனித பூமியில்தான் புத்த பெருமான் இருக்க வேண்டும் என்றால்,  புனிதமற்ற தெருக்களிலும், திண்ணைகளிலும், முற்றங்களிலும் புத்த பெருமான் சிலைகள் எப்படி வைக்கப்படுகின்றன !

Saturday, October 26, 2013

கீழை இளையவன் பக்கம்: ஆங்கிலம் கற்றுக் கொள்ள அழகிய வழி முறைகள் - கட்டுரை...

கீழை இளையவன் பக்கம்: ஆங்கிலம் கற்றுக் கொள்ள அழகிய வழி முறைகள் - கட்டுரை...: மனிதன் கல் கொண்டு தீ உருவாக்கிய காலம் முதல் IPHONE 5S யில் வந்து நிற்கும் இந்த காலம் வரை தொடர்ந்து மனித நாகரீக வளர்ச்சிக்கு அடிப்படையாய்  ...

Thursday, October 24, 2013

நல்லாட்சியை ஏற்படுத்த தேசிய அரசியலிலும் பங்கெடுப்போம்: நஜா

Commented by nizamhm1944 on :  http://tinyurl.com/n97m5yy

Lankamuslim.org

நல்லாட்சியை ஏற்படுத்த தேசிய அரசியலிலும் பங்கெடுப்போம்: நஜா

1990இல் வடக்கு முஸ்லிம்கள் காரணமின்றி புலிகளால் வெளியேற்றப்பட்டமை, புலிகள் செய்த பாரி பிழை (BLUNDER) என புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும், அது தமது பிழைதான் என்பதை புலிகளின் தலைவர் பிரபாகரனும், தமது இயக்கம் முழுப்பலத்துடன் இருந்த காலத்தில் எவருடைய அழுத்தமும் இன்றி, அப்பிழையின் தாக்கத்தையும், தமது பின்னடைவின் காரணத்தையும், அதாவது, முஸ்லிம்களற்று வடக்கு கிழக்குக்கு ஒரு தீர்வு ஏற்பட்டுவிட முடியாது என்ற யதார்த்தத்தை நன்குணர்ந்து, முதலும் கடைசியுமாக அவர்களால் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலில் இருந்த காலத்தில் நடத்தப்பட்ட சர்வதேச ஊடக மாநாட்டில் ஏற்றுக் கொண்டமை சர்வதேச ரீதியாக பதிவாக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் பதிவே! தமது அடைவுக்கு தேவையாயிருந்த சர்வதேசத்தின் பங்களிப்பு கிடைக்கத் தடையாகவிருந்த மறைமுக உண்மை. 

மேற்கண்ட உண்மையை எவரது மறுப்பும் இல்லாதாக்ககிவிடப் போவதில்லை.  இதனை மறுப்பவர்கள், புலிகளையும் மறுப்பவர்களே ! மட்டுமல்ல தமிழர்களுக்கு விமோசனம் பெற்றுக் கொடுக்க முடியாதவர்களே! முஸ்லிம்களின் பங்களிப்பற்ற ஒரு தீர்வு சிறுபான்மையினருக்கு என்றும் கிடைக்கப் போவதில்லை. அது குதிரைக் கொம்பே ! இந்நிலை இரு இனங்களுக்கும் பாதிப்பையே தரும்.

புலிகளின் போராட்டத்துக்கு முழுமையான சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதில் முட்டுக்கட்டையாக இருந்தது, தமிழ் பேசும் சிறுபான்மையினராக வடக்கில் பாரம்பரியமாக வாழ்ந்தவர்களை ஆயுத முனையில் வெளியேற்றி இன அழிப்பைச் செய்தமையே.  மட்டுமல்ல சிறுபான்மையினருக்கான புலிகளின் உரிமைப் போராட்டத்த‌ை  மலினப்படுத்தியதுடன், நலிவடையவும் செய்திருந்தது அச்செய்கை. அதுவே அவர்களாலேயே அதனை ஓர் Great Blunder of the Tigers என்ற விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது. 

Wednesday, October 23, 2013

பிரச்சினைகளை சமரசமாக தீர்த்து வைக்க வேண்டும். காரணமின்றி பிரச்சினைகள் ஏற்படாது

Commented by nizamhm1944 on :   http://tinyurl.com/qazgtu3

Lankamuslim.org

பிரச்சினைகளை சமரசமாக தீர்த்து வைக்க வேண்டும். காரணமின்றி பிரச்சினைகள் ஏற்படாது


முஸ்லிம்களுக்கு எதிரா நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் மதவிரோத நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதை முதலில் செய்வதுவதுதான், பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண வேண்டும்  என்ற நல்லெண்ணம் கொண்டோரின் முதற்கட்ட செயற்பாடாக இருக்கும். 

அதன் பின்னரே அடுத்த கட்டமாக ஏன் இவ்வாறான அராஜகங்கள் நடைபெறுகின்றன என்பதைக் கண்டறிந்து, அப்படி பிரச்சினைகள் ஏதுமிருந்தால் அவற்றைப் பேசித் தீர்க்க வேண்டும். 

அதைவிடுத்து தடியெடுத்தவன் எல்லாம் தண்டல் காரணாகி சட்டத்தைத் தனது கையில் எடுத்து, யாப்பைக் காலால் மிதித்துக் காட்டுமிராண்டித் தனமாக அடுத்வர் மீது தாக்குதலை நடத்துவதும், அதையே நியாயப்படுத்துவதாக, அப்படி நடப்பதற்குக் காரணங்கள் இருக்கும் அதனால்தான் இவ்வாறான மிலேச்சத்தனமான காரியங்கள் நடக்கின்றன, எல்லா நாடுகளிலும் இவ்வாறு நடக்கின்றன என்றெல்லாம் கூறி நியாயப்படுத்துவதும், சட்டமும் ஒழுங்கும் நிலவுவதாகக் கூறும் ஒரு நாட்டில் நடைபெறுவதா?  

பொறுப்புள்ள தலைவர்களாக இருந்தால் அவர்களிடமிருந்து இவ்வாறான ஊக்குவிக்கும் கருத்துக்கள் வெளிவராது ! இவை அழிவின் தொடக்கமாகவே மக்கள் கருதுகின்றனர்.

2014 நிதியாண்டுக்கு ரூ. 154,252 கோடி ஒதுக்கீடு

Commented by nizamhm1944 on http://tinyurl.com/llqbj2w

Lankamuslim.org

2014 நிதியாண்டுக்கு ரூ. 154,252 கோடி ஒதுக்கீடு


ரூபா 154 ஆயிரத்துக்கும் அதிகமான கோடிகள் அடுத்த ஆண்டு பாதுகாப்புக்காகச் செலவிட ஒதுக்கப்பட்டுள்ளது.  இது ஏறத்தாழ நாளொன்றிற்கு 422 கோடிக்கு மேல். 

உண்மையில், எந்த நாடும் இந்த நாட்டைப் பிடித்துவிடப் போகின்றது என்ற நிலையிலோ, வல்லரசாக வேண்டும் எ்னற நிலையிலோ இந்நாடு இருக்கவில்லை.  இந்நாட்டின் சிறுபான்மையினர் பிரச்சினை மனிதாபிமானமாகத் தீர்த்து வைக்கத் தவறியதாலும், அவர்களது உரிமைப் போராட்டத்தை அடக்கி, ஒடுக்கி அழித்து விடலாமென நினைத்ததாலும் உருவானதே  தமிழர்களின் ஆயுதப் போராட்டம். அதனைத் தொடர்ந்த பயங்கரவாதமும், உயிரழப்புக்களும். 

அதன் காரணமாகவே பாதுகாப்புக்காக் இவ்வளவு பெருஞ்சுமை மக்கள் மீது சுமத்தப்படுகின்றது. இதில் கோடிகளை கொள்ளை கொள்ளும் கேடிகளும் இலாபமடைகின்றனர். ஆனால் மக்கள் தினந்தினம் வெந்து வேகுகின்றனர், வாழ்ககையை ஓட்டிக் கொள்ள முடியாமல்.   

தமிழர்களின் பிரச்சினை தாராள மனங் கொண்டு தீர்க்கப்பட்டு விட்டால் இப்பணம் அப்படியே மிச்சமாகிவிடும். இதனால் மீதப்படுத்தப்படும் 150, 000 கோடி ரூபாய்களை, இருபத்தைந்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதாயின், ஒரு மாவட்டத்திற்கு ஆறாயிரம் கோடி ரூபாய்கள் சென்றடையும். ஒரு வருடத்திலேயே இந்நாட்டை சொர்க்க பூமியாக மாற்றிவிடலாம். 

வேண்டியதெல்லாம் நல்லெண்ணமும், தமிழரும் இந்நாட்டவர்களே, அவர்களுக்கும் சரிசமாமாக வாழும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே! 

பல பீடங்களில் மஹாநாயக்க தேரர்கள் இருப்பது தற்போதைய காலகட்டத்திற்கு பொருத்தமற்றது: BBS

Commented by nizamhm1944 on  http://tinyurl.com/m2j9ta9

Lankamuslim.org

பல பீடங்களில் மஹாநாயக்க தேரர்கள் இருப்பது தற்போதைய காலகட்டத்திற்கு பொருத்தமற்றது: BBS


// அல்லாஹ்வுக்கு  அர்ப்பனிக்கப்பட்ட உணவு வகைகளை மற்ற மதத்தினருக்கு  சாப்பிட முடியாது. //

இந்த தேரர் ஒரு ”ஞான சூன்யம்” . தனக்குத் தெரியாத விடயங்களை, பிழையாக விளங்கி வைத்திருப்பவற்றை, தனது காவியுடைக்குள் இருந்து மக்கள்மயப்படுத்துகின்றார்.  அதனால், அப்பாவிச் சிங்கள - முஸ்லிம் மக்கள் மத்தியில் பிரச்சினைகளைத் தோற்றுவித்து, நாட்டின் அமைதியை, சமாதானத்தை அழிக்கும் வேலைகளைச்  செய்கிறார்.

பொய் சொல்லக் கூடாது என்ற பௌத் தர்மக் கோட்பர்டை மீறுகிறார். முன்னொரு போது, முஸ்லிம் கடைகளில் முஸ்லிம் அல்லாதவர்களு்க்கு விற்கப்படும் உணவுப் பண்டங்களில், மூன்று முறை எசசிலைத் துப்பிவிட்டுக் கொடுக்க  வேண்டும் என்று புனித குர்ஆனில் கூறியிருப்பதாகப் பகிரங்கமாகத் தெரிவித்திருந்தார். அதனை நிரூபிக்குமாறு விடுக்கப்பட்ட சவாலை அவரால் நிறைவேற்ற முடியாத பொய்யனாக ஆகிவிட்டார். இவரை இன்னும் மக்கள் பொறுமையாக அங்கீகரிப்பது பௌத்த தர்மத்துக்கே கேடு விளைவிப்பதாகும்.

ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, ஆளைக் கடிப்பது போன்று, ஒவ்வொரு மதமாக தாக்கிவிட்டு, தற்போது அவர் தாம் பின்பற்றும் புத்த தர்மத்தையே தாக்க முனைந்து விட்டார். 

Tuesday, October 15, 2013

இதய சுத்தியுடன் செயற்பட்டால் இல்லையென்று எதுவுமில்லை-ஜனாதிபதி

Commented by nizamhm1944 on      http://tinyurl.com/q6boeqp

Beru News

இதய சுத்தியுடன் செயற்பட்டால் இல்லையென்று எதுவுமில்லை-ஜனாதிபதி


மாகாண சபைகள் மத்திய அரசுடன் ஒத்துழைக்காமல் போகும் சந்தர்ப்பங்கள், அம்மாகாணத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தடையாக அமைந்துவிடக் கூடாது என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அது அரசின் தார்மீகக் கடமை.

அரசியல் காரணங்கள் எதுவும், எவ்விதத்திலும் நாட்டின் எப்பகுதி மக்களையும் பாதிப்பதாக அமைந்து விடக் கூடாது. மக்களது வரிப்பணத்திலேயே அரசு இயங்குகின்றது. அச்சீரிய பணியை நிறைவேற்றுவதற்காக அரசிடம் மக்கள் பொறுப்பைக் கையளித்துள்ளனர். அப்பொறுப்பு நம்பிக்கையின் மத்தியில் அளிக்கப்பட்டுள்ள அமானிதம்.

Thursday, October 10, 2013

Shocking news of Zakir Naik questioned in Sri Lanka & he fails to prove ...



It is Dr. Zakir Naik\s duty to reveal the 25 verses in the Holy Quran which rejects Wasela, which he told that the Quran contains the verses.

If not he becomes a liar and get Allah's curse and punishment.  Or he should withdraw what he said on this. Also ask pardon from Almighty Allah.

Tuesday, October 8, 2013

குண்டுச் சட்டிக்குள் ஓடும் குதிரைகள்!

Commented by nizamhm1944 on  http://tinyurl.com/ns4kg2r

Lankamuslim.org

குண்டுச் சட்டிக்குள் ஓடும் குதிரைகள்!


தமிழில் ஒரு அழகான பழமொழியுண்டு, அது இந்த முஸ்லிம் அரசியல் விபச்சாரிகளுக்கு நன்றாகவே பொருந்தும்  ”நக்குகின்ற நாய் செக்கிலும் நக்கும், சிவலிங்கத்திலும் நக்கும்’ ஆக இவர்கள் தொழி்ல் நக்கிப் பிழைப்பது என்பதை தாங்களே வெளிப்படுத்தி வருகின்றார்கள். தேங்காய் நெய் வாசம் வந்தால் போதும் அங்கெல்லாம் தமது நக்கும் தொழிலைச் செய்வோம் என வரிந்து கட்டி வாழ்க்கையை நடத்துகின்றார்கள். 

இன்னொரு அழகான சம்பவம் கூறுவது இவர்களது செயலை நன்கு படம் பிடித்துக் காட்டுவது. தமிழர்களில் கூலிக்கு மாரடிக்கும் பழக்கம் உள்ளது. அதாவது மரண வீட்டில் கூலி பெற்றுக் கொண்டு மார்பில் அடித்துக் கதறுவது.  ஒரு செத்த வீட்டிற்கு கூலிக்கு மாரடிக்கும் இருவர் சென்றுள்ளனர்.  அந்த வீட்டில் பந்தலில் நன்கு முற்றிய பாகற்காய்கள் கிடந்ததை வந்தவளில் ஒருத்தி அவதானித்து, ’பந்தலிலே பாகற்காய், பந்தலிலே பாகற் காய்’ என்று ஒப்பாரியின் நடுவே கூற, மற்றவளும் நான் என்ன காணவில்லை என நினைக்கிறாயா என்ற தோரணையில், ’போகைக்க பாத்துக்கலாம், போகைக்க பாத்துக்கலாம்” என்ற கூற, கணவனைப் பறிகொடுத்த அந்த வீட்டுக்காரி, நான் ஒன்றும் சும்மா இருக்கவில்லை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்பதைக் காட்ட, ”அது விதைக்கலலோ விட்டிருக்கு, விதைக்கல்லோ விடடிருக்கு” எ்னறாளாம்.  இதுதான் முஸ்லிம்களின் பிரச்சினையில் நடக்கும் மாரடிப்புகளில் நடப்பது.

இது முஸ்லிம் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவே தாம் அரசியல் பிரவேசம் செய்ததாகவும், பெற்றுக் கொடுத்துக் கொண்டு இருப்பதாகவும், இனியும் பெற்றுக் கொடுப்போம் என வீராவேசம் பேசும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலை.

உண்மையில் அக்கரைப்பற்றில் அந்த விழாவில் நடந்த அந்த அசிங்கமான பாராட்டு நிகழ்வைப் பார்த்தபோது எத்தனை முஸ்லிம்கள் இரத்தம் கொதிப்படைந்திருப்பார்களோ!  கொதிப்படையாதிருந்தால் அது ஆச்சரியமே ! 

ஆங்கிலத்தில், இன்னொரு சிறந்த கருத்து கூறப்படுகின்றது. " Benefitting out of others distress" மற்றவனுடைய துன்ப துயரத்தை சந்தைப்படுத்தி, அதிலும் இலாபம் சம்பாதிப்பது.  

இதுதான் தற்போதை முஸ்லிம் அரசியலில் நடைபெறும் மிகச் சிறந்த வருவாய் தரும் தொழிலாகக் கருதப்படுகின்றது.  உண்மையில் உலகில் நடைபெறும் குற்றச் செயல்களில் மிக மோசமான குற்றச் செயல் இதுவே! இதற்கான கேள்வி அதிகமாக உள்ளதால், இதனைச் செய்வதற்கு முன்வர சிலரே இருப்பதால், அவர்களுக்கு கிராக்கி அதிகம், அதனால் வருவாயின் அளவும் எதிர்பார்ப்பதைவிடக் கூடவே கிடைக்கின்றது.   

Monday, October 7, 2013

முற்றாக முஸ்லிம்களை மறந்து விட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்!

Commented by nizamhm1944 on:    http://tinyurl.com/paxxlma

Voice of Mannar

முற்றாக முஸ்லிம்களை மறந்து விட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்!

முதலமைச்சரின் அறிக்கை எழுந்தமானமாக முஸ்லிம்கள் புறக்கணிக்கப் பட்டது போன்று தோற்றினாலும், என்னைப் பொறுத்து அது உண்மையை மட்டுமே சுமந்து கொண்டுள்ளது என்றுதான் கருதுகிறேன்.  

காரணம், புலிகள் வடக்கு முஸ்லிம்களை விரட்டி அடித்திருந்தாலும், தமிழர்கள் அதற்கு ஆதரவானவர்கள் அல்லர் என்பது அனைத்து முஸ்லிம்களும் அறிந்த உண்மை. விசேடமாக வடக்கைப் பொறுத்து முஸ்லிம்களும் தமிழர்களும் மிகவும் சிறப்பான உறவையே பேணி வந்தவர்கள் என்பது, நான் அந்த நாட்டவன் என்ற முறையிலும், தமிழர்களோடும், சமூக சேவைகளோடும் தொடர்புபட்டிருநத காலங்களில் என்னால் அறிய முடிந்தவை.  ‌

மேலும், தமிழர் முஸ்லிம்களுக்கு இடையே எப்போதும் மோதல்கள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கவில்லை.  தேர்தல் காலங்களில் கூட தமிழரை ஆதரித்த முஸ்லிம்களும், முஸ்லிம்களை ஆதரித்த தமிழரும் இருந்திருக் கிறார்கள். அக்காலங்களில் இட்ம் பெற்ற சிறு சச்சரவுகள் கூட தமிழருக் குள்ளும், முஸ்லிம்களுக்குள்ளும் இடம் பெற்றனவே தவிர, தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே இடம் பெற்றவை எனக் குறிப்பிடுமளவுக்கு நடந்ததில்லை.  

ஆதலால், விக்னேஸ்வரன் அவர்கள், ”என்னுடைய இன்றைய செயற்பாடு இரு இன பொது மக்களையும் ஒன்றுபடுத்த உறுதுணையாக அமைவதாக!” எனக் கூறியிருப்பது, தெளிவாக பிரிந்து நிற்கும் தமிழரையும் சிங்களவரையும் குறிப்பிடுவதோடு, இணைந்து வாழும் தமிழரும், தமிழைத் தம் மொழியாகக் கொண்ட முஸ்லிம்களும்   ( அவர்கள் மொழிவாரியாக தமிழர்கள் என்ற வரைவுக்குள் அடக்கப்படக் கூடியவர்கள்,) பிரச்சினை இன்றி வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்பதையும், எங்களுக்குள் பிரிவினை இல்லை என்பதையும் பூடகமாகவே வெளிப்படுத்தியதாக இருக்கலாம்.   

அப்படியில்லாது, கட்டுரையில் கூறியிருப்பதுதான் அவர்கள் நிலை என்றால், நிச்சயமாக அவர்களது பயணம் வெற்றி அளிக்கப் போவதில்லை என்பதே உண்மை ! முஸ்லிம்களைப் புறந்தள்ளிய எவ்வித போராட்டங்களும், சிறுபான்மைப் போராட்டம் என்ற வரைவுள் அடங்கா.  முஸ்லிம்கள் என்றொரு இனம் இல்லை என நினைப்பார்களாயின்,  மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் அடிக்கடி , ”சிறுபான்மை“ எ்னறு எவரும் இல்லை எனக் கூறி வருவதை ஏற்பதாகவே இருக்கும். 

மேலும், இலங்கையில், தமிழரும் சிங்களவரும்தான் இரு இனங்கள் என்ற ரீதியில், அவர் சிந்திருக்க முடியாது. காரணம், முஸ்லிம்கள் என்றொரு இனம் இருக்கின்றது என்பதை அறிந்திருந்தனால்தான், அவர்கள் முஸ்லிம்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக்கூடச் செய்தும்,  முஸ்லிம் ஒருவருக்கு போனஸ் ஆசனம் ஒன்றையும் வழங்கி இருக்கின்றார்கள்.  

அடிக்கடி அரசியல்வாதிகள் தெற்கில் மூவினங்களின் ஒற்றுமை பற்றிக் கூறுவது வெறும் பித்தலாட்டமே தவிர இல்லை. உண்மையில் மூவினங்களுக்கும் இடையில் ஒற்றுமை நிலவியே வருகின்றது. அதனை பெரும்பான்மை கிராமங்களில்கூட சிங்ளவரும், தமிழரும், முஸ்லிம்களும் சேர்ந்து வாழ்ந்தேு வருகின்றனர்.  

அரசியல்வாதிகளும், மதவாதக் குழுக்களும்தான் உண்மையில் மக்களைக் கூறு போட்டு தம் வாழ்க்கையை ஓட்டுகின்றனர். 

புலிகளின் வீழ்ச்சிக்குரிய காரணங்களில் பிரதானமான ஒன்று, சிறுபான்மை இனத்தவருக்காகப் போராடுவதாகக் கூறி, இன்னொரு சிறுபான்மை இனத்தை வெளியேற்றிய முட்டாள்தனமே என்பதை அவர்களும் உணர்நதிருந்தார்கள் என்பதை அவர்களின் பின்னாட்களின் செயற்பாடுகள் உணர்த்தும்.  அதனால், அந்த இமாலயப் பிழையை நன்கு தெரிந்த தற்போதைய தமிழ் அரசியல் வாதிகள், மீண்டும் செய்து தமக்கே வினையை விதைக்க மு‌ற்பட மாட்டார்கள் என்று திடமாகக் கூறலாம். 

அதனை, ”தூரநோக்கு எமது தனித்துவத்தை வலியுறுத்துவதாக அமைந்துள்ளது. அதனை அடைய நாம் எமது கடந்த காலப் போராட்டங்கள், அரசியல் அணுகுமுறைகள், அனுபவங்கள் யாவற்றிலிருந்தும் பாடங்களைக் கற்றே முன்னேற வேண்டி உள்ளது.” என்ற வரிகளின் மூலம் அறியலாம். 

Friday, October 4, 2013

Daily Interesting Facts !

Did You Know? “Amygdala” is the part of the human brain that controls fear. If you remove it, you would lose any sense of fear.

Posted: 03 Oct 2013 05:02 PM PDT

 


Did You Know? When looking at stars, you’re possibly looking into the past. Many of the stars we see at night have already died.

Posted: 02 Oct 2013 05:02 PM PDT


Wednesday, October 2, 2013

முஸ்லிம்கள் சார்பாக மனோ கணேசனிடம் மண்ணிப்புக் கேட்கின்றோம்: SLTJ

Commented by nizamhm1944 on http://tinyurl.com/mbolv29

Lankamuslim.org

முஸ்லிம்கள் சார்பாக மனோ கணேசனிடம் மண்ணிப்புக் கேட்கின்றோம்: SLTJ

இவர்கள் அல்லாஹ்வால் வழிகெடுக்கப்ட்டவர்கள். இன்னும் சில முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கின்றனர். அவர்கள தமது  அமைச்சர் பதவிக்காக முஸ்லிம்களைக் காட்டிக் கொடுப்பதில் நான் முந்தி, நீ முந்தி எனச் செயல்பட்டு ஆட்சியாளரிடம் நல்ல பெயர் பெற்றுக் கொள்ளப் பாடுபடுபவர்கள்.  

முஸ்லிம்களு்க்கு இந்நாட்டில் நடப்பது பொய்ப் பிரசாரம் என நாக்கூசாமல், அல்லாஹ்வின் அச்சமின்றி, மறுமைப் பயமுமின்றிப் பகிரங்கமாகக் கூறுகின்றனர்.  இன்னும் சிலர், முஸ்லிம் பள்ளிகள் உடைக்கப்படுகின்றன என்ற கூற்றை நம்ப வேண்டாம் என மேடைகளில் கூறும் பொழுது கைகட்டி, வாய்பொத்தி அதனை ஆமோதிக்கின்றனர்.  இன்னும் சிலர், பள்ளிவாசல் உடைக்கப்பட்டதை எதிர்த்தால், நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் எல்லாம் உடைக்கப்பட்டு விடும். அதனால் அந்நிலையில் இருந்து முஸ்லிம்களைக் காக்கவே மெளனமாக பிரச்சினை யைப் பெரிதுபடுத்தாமல் விடுகிறோம் என கப்சா விட்டு நம்மை முட்டாள்களாக்கப் பார்க்கிறார்கள்.  

இதுதான் இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பிரகிருதிகள் செய்து கொண்டிருப்பது.  சரி அதுதான் போகட்டும் எனப் பார்த்தால், முஸ்லிம் களுக்காகப் பாராளுமன்றிலும், ஊடகங்களின் மேடைகளிலும் குரல் கொடுக்கும், சிங்கள, தமிழ் சகோதரர்களையும் சாடுகிறார்கள்.  உண்மையை வெளிப்படுத்தத் தடையாயுள்ளார்கள். 

வெளிநாட்டு முஸ்லிம் இராஜதந்திரிகளன் வருகையின் போது அவர்களைச் சந்தித்து, இந்நாட்டில் முஸ்லிம்கள் சகல சௌபாக்கியங்களுடனும் சுதந்திரமாக, எவ்வித அச்சமுமின்றி வாழ்கின்றார்கள் எனக் கூறி வைக்கிறார்கள். இங்கு முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக் கப்பட்டதாகக் கூறுப்படுவனவற்றுள் எவ்வித உண்மையுமில்லை என நிலைமையைத் தலைகீழாக மாற்றி விடுகிறார்கள். துரோகிகள்.

இங்கு முஸ்லிம்களுக்கு நடக்கும் பிரச்சினை, ஐநா மனித உரிமைக்கான ஆணையாளரால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது ஓர் இறை செயல் என்‌றே கூற வேண்டியுள்ளது. எவருடைய பங்களிப்புமின்றி தானாக நடைபெற்றது.  இந்த சுயநல, நக்கி வாழும் முஸ்லிம் அரசியல்வாதி களால் மேற்கண்ட நவின் அம்மையாரின் குற்றச்சாட்டுக்கூட பொயயாகிவிடும் நிலையே தோன்றியுள்ளது.  

முஸ்லிம மக்கள் இந்த தறுதலைகளுக்கு எதிராக பகிரங்கமாக ஆர்பாட்டங்களை நடத்தி இவர்களின் தோலை உரித்து, உண்மை உருவை உலகுக்குக் காட்ட வேண்டும். 

அத்தோடு இவர்களின் தீங்குகளிலிருந்து முஸ்லிம்களைக் காப்பாற்றுமாறு வல்ல நாயன் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்திப் பிரார்த்திக்க வேண்டும். இவை காலத்தின் கட்டாயம். தவற விடுவோமாயின் பின்னர் வருந்த வேண்டி வரும்.

Friday, September 27, 2013

சம்சுதீன் காசிமியின் அறியாமை



உமக்கு புதிதாக ஒரு வேதத்தையும் தரவில்லை. உமக்கு முன்னிருந்த நபிமார்களுக்கு எதனைக்கொடுத்தோமோ, அவற்றை மெய்ப்படுத்துவதற் காகவும், சாட்சியம் கூறுவதற்காகவும், பாதுகாப்பதற்காகவுமே இதனை நம் இறக்கி உள்ளோம் என்ற கருத்துக்களை வெளிப்படுத்தும் சில வசனங்கள் குர்ஆனில் காணப்படுகின்றன.

ஆதலால், முன்னைய வேதங்களை அறிந்திருந்த கிறிஸ்தவர்கள் வரை நபிகளார் ஸல் அவர்கள் பற்றிக் கூறப்பட் டிருந்ததை அறிந்திருக்கின்றனர். அதற்கு உதாரணமாக, நாயகம் ஸல் அவர்களுக்கு முதன்முதல் ஹிறா குகையில் ஜிப்ரீல் அலை அவர்கள் மூலமாக வஹீ இறங்கிய போது, குழப்பமடைந்த எம்பெருமானார்,தன அருமை மனைவி அன்னை கதீஜா நாயகி அவர்களிடம் கூறியதும், அதன் விளக்கத்தைப் பெற அவர்கள் நாடியது தனது உறவினரும், கிறிஸ்தவ பாதிரியானவருமான வரக்க பின் நௌபல் என்பவரையே என்பதும், அவர்தான் நபிகளார், நபித்துவமும், தூதுத்துவமும் கொடுக்கப்பட்டுள்ளார்கள் என்ற உண்‌மையையும், அங்கு வருகை தந்தது வானவர்கோன் ஜிப்ரீல் என்பதையும், அவர் அறிவித்தது புனித குர்ஆன் என்பதையும் வெளிப்படுத்தினார். இது எல்லோராலும் ஏற்கப்பட்ட வரலாறு.

இதிலிருந்து, அந்நாளில் முகம்மது என்ற பெயரில் இறுதி நபி ஒருவ‌ர் வரவுள்ளார் என்பதை அரேபியாவில் வாழ்ந்த அறிஞர்கள் அறிந்திருந்தார்கள் என்பது வெளிப்படை! காஸிம் அவர்களின் மறுப்புரை இதனடிப்படையில் செல்லுபடியாகாது என்பது உறுதியாகின்றது.

seeman angry and worst speech



தமிழகத்தில் ஆறு கோடி தமிழர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள், அந்த நாட்டை முதலில் விடுதலை செய்யலாமே!, அதன் பின்னர், இலங்கைத தமிழர்களின் விடுதலை பற்றிப் பேசலாமே அல்லது அவர்களை நீங்கள் உங்கள் தாயகத்தைச் சேர்ந்தவர்கள் என ஏற்றால்  விடுதலை பெற்ற  உங்கள் நாட்டுக்கு அழைத்துக் கொள்ளலாமே!

அத்தோடு இலங்கைத் தமிழர்கள் உங்கள் கருத்தை ஏற்றுள்ளார்களா! அல்லது நீங்கள் கேட்கும் தனிநாடு, விடுதலை என்பதையாவது அவர்கள கே்ட்டுள்ளார்களா! நீங்கள் ஏன் அழையா விருந்தாளியாக அடுத்த நாட்டுப் பிரச்சினையில் மூக்கை நுழைக்கிறீர்கள்! 

Wednesday, September 25, 2013

தமிழ் அழிந்து கொண்டிருக்கும் பொறுப்பைத் தமிழரே ஏற்க வேண்டும்

                 தமிழ் அழிந்து கொண்டிருக்கும் பொறுப்பைத்                         தமிழரே ஏற்க வேண்டும்


மொழிக்கு சட்டரீதியான அந்தஸ்துக்கள் கொடுப்பதனால் அதனைப் பாதுகாக்கலாம் என யாராவது எண்ணுவாரேயாகில் அவர்கள் நிஜவுலகில் வாழாமல் கற்பனையுலகில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்கள் என்று துணிந்து கூறலாம். வருடமொரு முறை தமிழாராய்ச்சி மாநாடுகள் என்ற பெயரில் விழாக்கள் நடத்தப்படுவதால் தமிழ் வளர்கின்றது என நினைப்பதும் முன்னையதைப் போன்றதே. ஆவணங்களாக் கப்படுபவை ஓர் காலத்தில் தடயங்களாக, சுவடுகளாக, ஆதாரங்களாக, மொழி என்ற ஒன்று இருந்ததாக நிரூபிக்க உதவுவதாக இருக்கலாம். தவிர மொழி வாழ்வதற்கு அது எவ்வகையிலும் உதவிடப் போவதில்லை. 

மொழி என்பது பேச்சை முழுமுதலாகக் கொண்டது. மனிதன் தோன்றிய காலத்திலேயே, எழுத்துருப் பெறும் முன்னரே மொழிகள் தோன்றிவிட்டன. ஆரம்பத்தில் இறைவன் ஆதம் என்ற முதல் மனிதனுக்கு பொருட்களின் பெயரைக் கற்றுக் கொடுத்தாகத் தெரிகிறது. இதிலிருந்து, மனித படைப்பின் ஆரம்பத்திலிருந்தே மொழிகள் இருந்தமை தெளிவாகின்றது. அடுத்தவருக்கு அதன் வெளிப்பாடு ஆரம்பத்தில் சைகை மூலமாக சென்றடைந்து இருந்திருக்கும். இவை சைகை மொழியாக வளர்ந்திருக்கும். இன்றும் சைகை மொழிகள் உலகெங்கும் காணப்படுவது இதனை மெய்ப்பிக்கும். இக்காலத்தில் செவிப்புலன் அற்றோருக்காக இவை பாவிக்கப்படுகின்றன. 

உணவு தேடும் உந்துதலால் இடம் பெயரல் தொடங்கியவுடன்,  தொடர் பாடலுக்கு, பாவனையில் இருந்த, ஒலிவடிவ மொழியும்,  சைகை மொழியும் பயன் தந்திருக்காது. அச்சந்தர்ப்பத்தில் வேறு மாற்று வழிகள் காண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்க வேண்டும். அந்த அறிவின் உதவியுடன் அப்பொருட்களைச் சித்திர வடிவமாக மனிதன் மாற்றித் தன் கருத்தை வெளியிட்டிருப்பான். அது விளங்கிக் கொள்வதில் கஷ்டத்தையும், கால விரயத்தையும் ஏற்படுத்தி இருந்துள்ள தோடு, எல்லோராலும் பின்பற்ற முடியாததாகவும் இருந்திருக்கலாம். பின்னர்  தூரத் தொடர்பாடல்களுக்காக உருவாக் கப்பட்ட வழக்கில் இருந்த  மொழிகளுக்கான குறியீடுகள் எழுத்துருவைப் பெற்றிருக்க வேண்டும். அவ்;வெழுத்துக்களுக்கு ஒலியுருவும் கொடுக்கப்பட்டிருத்தல் வேண்டும். அந்த ஒலியுரு இறைவன் கற்றுக் கொடுத்ததாகவே இருந்திருக்க வேண்டும். அதன்  தொடர்ச்சியாகக் காலப் போக்கில் அவற்றில் மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டு தற்போதைய எழுத்துரு நிலையை மொழிகள் அடைந்திருக்க வேண்டும். அதன் பின்னர் பொதுமையில் இருந்து இலக்கணங்கள் உருவாகி யிருக்கும். இது ஓர் சிந்தனையே தவிர முடிபல்ல. 

மேற்கண்ட உண்மைகள், மொழி என்பது பேச்சு வழக்கைக் கொண்டு தீர்மானிக்கப்படுவதை விளக்குகின்றன. எழுத்துரு விலான பேச்சற்ற மொழிகள் சித்திரம் என்ற வரையறையுள் அடக்க மாகிவிடும். எழுத்துருவற்ற எந்த மொழியானாலும் கூட, அது பேச்சு வழக்கில் இருக்குமாயின் அது வாழும் மொழியாகிவிடும். Zarathushti Dari  என்ற பாரசீகத்தில் பேசப்படும் மொழி அது போன்றதே.   ஒரு மொழி உயிருள்ள மொழியாகக் கருதப்படுவது பேச்சு வழக்கில் அது இருப்பதால் மட்டுமே. இறந்த பாஷைகள் (dead languages) என சமஸ்கிருதம், பாளி போன்றவைகள் கூறப்படுவதற்குக் காரணம் அவை பேச்சு வழக்கில் இல்லாததே. அப்பாஷைகளில் இன்னும் எழுத்துருவிலான ஏடுகள் உள. இந்து சமய நூல்கள் சமஸ்கிருதத் திலும்,  புத்த காவியங்கள் பாளி மொழியிலும் காணப்படுகின்றன.  கோவில்களிலும், பாஞ்சாலைகளிலும் அவர்களது வேத மந்திரங்கள் அவ்வப் பாஷைகளிலேயே நடைபெற்றாலும் அவை இறந்த மொழிகளாகவே கருதப்படுகின்றன. இதற்குக் காரணம் அம்மொழிகள் பேச்சு வழக்கில் இல்லாமற் போனமையே என்பதை மேற்கண்ட தகவல்கள் நிரூபிக்கின்றன. 

தற்போதைய நிலையில், அரச ரீதியாகத் தமிழுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட்டதாக தமிழ் நாட்டில் எல்லோரும் பெருமையாகப் பேசிக் கொள்கின்றனர். இவ்வாறான பெருமைகளோ, அல்லது சட்ட ரீதியாக மத்திய அரசில் இருந்து கிடைத்த செம்மொழி, இன்னபிற அந்தஸ்துக்களோ ஒரு மொழியை உயிருடன் வைத்திருக்கப் போதா. அம்மொழி  உயிருடன் இருப்பதாகக் கருதப்படுவதற்குக் காவியங்கள், புராணங்கள், இதிகாசங் கள், இலக்கியங் கள் இருப்பது உதவப் போவதில்லை. அவை எல்லாம் முற்காலத்தில் இருந்து அழிந்து போன மொழிகள் கல்வெட்டுக் களிலும் இன்னபிறவற்றிலும் இருந்து, அம்மொழிகள் இருந்ததாக ஆராய்ச்சிகள் மூலம் வெளிப்படுத்த உதவுவதற்குப் பாவிக்கப் படுவதைப் போன்று இருக்குமே தவிர, வாழும் மொழியாகத் தமிழை வைத்திருக்க உதவப் போவதில்லை. ஆக வாழும் மொழியாக இருக்க வேண்டுமாயின்,  அம்மொழி பேச்சு வழக்கில் உருமாறா நிலையில் இருக்க வேண்டும். தமிழ் என்ற போர்வையில் ஓர் புதிய மொழியின் உருவாக்கம் தானாகவே நடந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. பேஜாராப் போச்சு, கசுமாளம், மச்சோ, பிகுரு, அல்பம் போன்றவை என்ன பாஷை என்பது தெரிகிறதா!

உலகில் இன்றும் பல்வேறு மொழிகள் வழக்கில்; உள. அவை அத்தேச மக்களால் பேசப்படு கின்றன. அவர்கள் பேசும் மொழியை வைத்தே அந்நாடுகள் இனங்காணப்படுகின்றன. உதாரணமாக, ருஷ்ய மொழி பேசும் நாடு ருஷ்யா,  சீன மொழி சீனா, தாய் மொழி தாய்லாந்து, பிரெஞ்சு மொழி பிரான்ஸ், ஜெர்மன் மொழி ஜெர்மனி, ஜப்பானிய மொழி ஜப்பான், அரபு மொழி அரேபியா, மலே மொழி மலேசியா, நோர்வே மொழி நோர்வே, ஸ்பானிய மொழி ஸ்பெய்ன், பார்ஸி பாரசீகம், அரபு மொழி அரேபியா  என வழங்கப்படுவதால் அறியலாம். 

இந்தியாவுக்குள் எனப் பார்க்கினும், தென் மாநில நாடான கேரள மொழி பேசும் பகுதி கேரளா எனவும், மற்றைய மாநிலங் களான மராட்டி, குஜராத்தி, தெலுங்கு,  போன்ற மொழிகள் பேசப்படும் ஊர்கள் அந்தந்த மொழியைக் கொண்டே அழைக்கப் படுவதையும் காணக் கிடக்கின்றது. தமிழகம் என ஒரு நாடு இருக்கவில்லை என்பதால், தமிழ் மொழிக்கென்று ஒரு நாடு இருந்திருக்கவில்லை என்றே கருத இடமுண்டு. சில வருடங்களுக்கு முன்னர், இதனை உணர்ந்ததாலோ என்னவோ இந்தியாவின் தென் மாநிலங்களில் ஒன்றான மதராஸைத் தலைப்பட்டினமாகக் கொண்ட பகுதிக்கு 1969 இல் தமிழ்நாடு எனப் பெயர் சூட்டினர். ஆதியிலேயே அவ்வாறான நிலை காணப் படாமைக்குக் காரணம் என்னவென்று தெரியவில்லை. சில வேளை அக்காலங்களில் ஆட்சியில் இருந்த தமிழ் மன்னர்கள் தமிழை வளர்க்கப் பாடுபட்ட அதே வேளை தமது பெயர்களை முன்வைத்தே சேர, சோழ, பாண்டிய என்றவாறாக நாட்டை அறிமுகம் செய்துள்ளமை காரணமாக இருக்கலாம். அப்படியாயின் அவை பதவி, அதிகாரம் போன்றவைகளின் ஆதிக்க மேம்பாடாகக் கருதிக் கொள்ளக் கூடியதாயுள்ளது. எப்படியோ உலகில் தமிழைப் பெயராகக் கொண்ட ஒரு பிரதேசம், தற்போதாவது இந்தியாவின் தென் மாநிலத்தில் இருப்பது சற்று ஆறுதலாகவும், சந்தோஷம் தருவதாகவும் உள்ளது. 

கட்டுரையின் தலைப்பிற்கு வந்தால்,முன் பந்தியின் பிற்பகுதியில் கூறிய ஆறுதலும் சந்தோஷமும் நீடித்து நிலைக்கக் கூடிய அறிகுறிகள் தென்படவில்லை. அதற்கான மூல காரணம், தமிழ் மக்களின் தற்போதைய மனநிலை. அதாவது, உலகில் தமது பாஷையைப் பேசுவதற்குக் கூச்சப்படும் ஓர் இனம் உண்டாயின் அது தமிழ் இனமே என்பதை வருத்தத் துடன் கூறிவைக்க விரும்புகிறேன். ஏனெனில் ஆங்கிலம் பேசுவதையே நாகரிகமாகவும், பேசுபவர்களையே உயர்ந்த சமூகமாகவும் தமிழர் கற்பனையில் வாழ்கின்றனர். அத்தோடு விட்டால் பரவாயில்லை. தமிழ் பேசுவோர் ஏதோ தரங் குறைந்தவர்கள் போலவும், கல்வி அறிவற்ற, நாகரிகமற்ற பிரகிருதிகள் போலவும் தமிழர்களாலேயே பார்க்கப்படு கின்றனர். ஆங்கிலம் தெரியாதவர்கள்கூட ஆங்கிலத்தில் சில சொற்களையாவது சேர்த்துப் பேச எத்தனிக்கிறார்கள். தங்களைத் தமது குழந்தைகள் டடி, மம்மி என்று அழைப்பதை விரும்பாத தமிழர் இருந்தால் அது மிக அரிதான நிகழ்வாகவே இருக்கும். தங்கள் குழந்தைகளைக் கூட, பெயர் சொல்லி அழைப்பதற்குப் பதிலாக பேபி, பபா, சூட்டி, நோனா என்றே அழைக்கின்றார்கள். இவை அந்நிய ஆங்கிலேய ஆட்சியின் அடிமைத் தனத்தின் எச்ச சொச்சங்களா என்றால் அதுவும் இல்லை. எச்ச சொச்சங்கள் என்பது இல்லாமல் அழிந்து போகும் வழியில் இருப்பது. ஆனால் இந்நிலையோ இங்கு ஏறுமுகமாகவே உள்ளது. 

அக்காலத்தில் இருந்து இக்காலம் வரையான தமிழ்க் கவிஞர், புலவர் எனப்படுவோர், தமிழ் பற்றி வெறும் புழுகு மூட்டை களை அவிழ்த்து விடும் பாணியில், கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய முது தமிழ் எனவும், சிவன் தந்த தமிழ் என்றும், கடல் குடித்த குடமுனியாலும் கரைகாண முடியாத தமிழ் எனவும், இனிய தமிழ், இன்பத் தமிழ், தேமதுரத் தமிழ் என்றும் உதவாக் கற்பனைகளை வெளிப்படுத்தி கைதட்டலைப் பெற்றுக் கொள்ள, தமது எழுத்துக்களைப் பயன்படுத்தி வந்துள்ளனரே தவிர ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. யுனெஸ்கோ நிறுவனம் உலக மொழிகளில் இனிய மொழியாக வங்காள (பெங்காலி) மொழியைத் தேர்ந்துள்ளது.  

மேலும்,. தமிழர் தமக்குத் தாமே, உலகத்தை இணைத்து பட்டங்கள் வழங்கிக் கொண்டார்கள். அகில உலக கவிச் சக்கர வர்த்தி, கவிப்பேரரசு, புரட்சித் தலைவன், புரட்சிக் கவிஞர், மக்கள் திலகம், நடிகர்;  திலகம், கப்பலோட்டிய தமிழன், சிபி சக்கரவர்த்தி, உலகப் பொது மறை, உலகத் தமிழர் தலைவன், உலக உத்தமர்,  அகில உலக தமிழர் தலைவன், அகில உலகக் கதாநாயகன், அகில உலக தமிழ்ப் பேரவை போன்றவை அவற்றிற் சில.. அண்மையில் எங்கோ ஓர் பத்திரிகை யில் ஒருவர், தேர்தல் முறையை உலகுக்குத் தந்தவர்கள், தமிழர் என எழுதியுள்ளார். அதற்கு ஆதாரமாக அவர் எங்கோ ஓர் இடத்தில் வாழ்ந்த தமிழர் அந்நாளில் லாட்டரி போன்று குலுக்கல் முறையில்; தம் தலைவர்களைத் தெரிவு செய்தமை யைக் காட்டுகிறார். குலுக்கல் மூலம் தெரிவு செய்வது எப்படி தேர்தல் முறையுள் வருமோ? குலுக்கல் முறையில் பெயர் எழுதப்பட்ட ஒரு நறுக்கொன்றைத் தேர்ந்ததைத் தேர்தல் என்கிறாரோ! இதே பாணியில்தான் தமிழ் வளர்க்கப்பட்டதே தவிர வேறல்ல.

தொழில் நுட்பமும், விஞ்ஞானமும் வளர்ந்த போது புதிய படைப்புக்கள் தோன்றின. அவைகளுக்குத் தமிழ்ச் சொற்கள் உருவாக்கப்படவில்லை. தட்டச்சு, ஒலிபெருக்கி, வானொலி, மிதிவண்டி, இரயில் வண்டி, பலகனி, கார், ரயில், பஸ், சைக்கிள், டெலிபோன் போன்றவை.  அப்படி உருவாக்கப்பட்டவை கூட மொழி வழக்கில் இல்லை. பாவனைக்கு உதவாத சொற்களாகின. உதாரணம்;. மோட்டார் இரதம், தொடரூர்ந்து, தொடர்மாடி, ஈருருளி, பேரூந்து, முண்டக்கூவல் போன்றவை. ஆங்கிலச் சொற்களைத் தமிழ்ப்படுத்த முனைந்தவர்கள் அவற்றுக்கு ஓர் புதிய இலகுவான பெயர்களை (சொற்களை) உருவாக்கி இருக்கலாமே!  அக்காலத்தில் வக்கீல், அலவாங்கு, அலுமாரி, ஆலம், கடவுள், ஆகமம் போன்ற பிற மொழிச் சொற்கள் தமிழில் உள்வாங்கப்பட்டது போலாவது செய்திருக்கலாம். 

ஆங்கிலேயரும், பிரெஞ்சுக்காரரும், ஸ்பானியரும் தமது பாiஷகளை உலகின் பெரும்பகுதிக்குக் கொண்டு சென்றுள் ளனர். கல்தோன்றி மண் தோன்றா... எனக் கூறிக்கொண்டிருக்கும் தமிழினமோ, தமிழை எங்கும் வளர்த்ததாகத் தெரிய வில்லை. அவர்கள் தாம் போன இடங்களில் வழக்கிலுள்ள பாiஷயைப் பேசுவோராகவே மாறியிருக்கின்றனர். 700 கோடி மக்களில் ஏழு கோடியினரால்கூடத் தமிழ் பேசப்படுவதில்லை என்;பதே உண்மை. இதனை அறிந்ததனால்தானோ என்னவோ பாரதியார், 'தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்' எனப் பாடிச் சென்றார். பட்டி மன்றங்களும், சங்கங்களும் வைத்து தமது பெருமைகளையும், போட்டா போட்டிகளையும் காட்டிக் கொண்டி ருந்தனர் அக்காலப் புலவர் பெருமக்களாகக் கருதப்பட்டோர். ஓரிருவரைத் தவிர, வயிறு வளர்ப்பதற்காகவே தமிழைப் பயன்படுத்தி கவிதைகள் யாத்ததாகவே தெரிகிறது. அவற்றில் அதிகமானவை அக்கால அரசரைப் புகழ்வதற்காகவே யாக்கப்பட்டவையாகத் தெரிகின்றன. 'வென்றி வளவன் விறல் வேந்தன் எம்பிரான் என்றும் முதுகுக்கிடான் கவசம்...' எனத் தொடங்கும் செய்யுள் இதனை விளக்கப் போதுமானதாகும்.   விவாத மேடைகள் கூட இவ்வகைத்தனவே. தமிழைப் புகழ்வதில், புழுகுவதில் அவர்கள் செலவழித்த சக்தியை, காலத்;;தை தமிழை வளர்க்கும் பாணியிலான வேலைத் திட்டங்களை முன்னெடுத்து இருக்கவில்லை. 

சுவாமி வேதாசலமும், சூரியநாராயண சாஸ்திரியாரும், பாலசுப்பிரமணியமும் கூட தனித் தமிழை வளர்ப்பதாகக் கூறித் தம்பெயரை முறையே மறைமலைஅடிகள்,பரிதிமாற் கலைஞன், இளமுருகன்  என மாற்றிச் சென்றார்களே தவிர மக்கள் மனதை மாற்றிட முடியாமல் போய்விட்டது. முயலவில்லையா? முடியவில்லையா? தமிழுக்கு இலக்கணம் கூட ஒரு ஆங்கிலேயரான து.மு.PழுPநு என்பவரால் எழுதப்பட்டிருந்தது இந்நிலையை மேலும் விளக்கும். 'தன'p கூட தமிழ் இல்லையே! தனி என்ற இச்சொல் சிங்களத்திலும் இதே கருத்தோடு பாவிக்கப்படுகிறது. ஆக பாளியிலும் இச்சொல் இருக்கலாம்.

ராமாயணத்தையும், மகாபாரதத்தையும் தமிழில் பாடியதனால் தமிழை வளர்ப்பதாக நினைத் தார்கள். ஆனால் அவைகளே தமிழர்தம் கதைகள் என்றவாறான மாயையை மட்டுமே ஏற்படுத்தி இருக்கின்றன. தமிழுக்கு உயிரான ஐம்பெருங் காப்பியங்கள் கூட பௌத்த, சமணர்களால் எழுதப்பட்டவையே என்பதுகூடத் தமிழர்களில் எத்தனை பேருக்குத் தெரியும்? இன்னொன்றையும் இங்கு கூறியே செல்ல வேண்டியுள்ளது. தமிழ் இந்து சமயத்தவர்களின் மொழி என்று உரிமை கொண்டாடும் வகையில் தமிழரின் செயற்பாடுகள் அமைந்திருந்தமையும், தமிழ் அழிவை நோக்கிச் சென்று கொண்டி ருக்கக் காரணமாயின. இந்தியாவில்  வாழும் 90 வீதத்துக்கும் அதிகமான இந்துக்கள் தமிழ் பேசுவோரல்லர். தமிழ் காப்பியங்கள் பெரும்பாலானவை இந்து சமய நூல்களாக இருந்தமையும், தமிழைக் கற்பதில் மற்றைய சமயம் சார்ந்தோர் பின்னிற்கும் நிலையை உருவாக்கி இருக்கலாம். பிற சமயத்தவரைத் தமிழராக உள்வாங்கும் மனோ நிலையும் இவர்களிடம் இருக்கவில்லை. தமிழ் ஒரு குறிப்பிட்ட சாராருக்கு மட்டுமே உரியது என்ற மனப்பாங்கும் காரணமாக அமைகின்றது தமிழின் தற்போதைய நிலைக்கு. 

இதனை இலங்கையின் வடக்கில் பரம்பரையாகத் தமிழ் பேசிக் கொண்டு சௌஜன்யமாக வாழ்ந்து கொண்டு இருந்த அமைதி விரும்பிய ஒட்டு மொத்த முஸ்லிம்களை, அவர்கள்தம் பிறந்தகத்தை விட்டே ஈவிரக்கமின்றி, அவர்களது சொத்துக்களை அபகரித்துக் கொண்டு தமிழருக்கு விடுதலை பெற்றுத்தருவதாகக் கூறி, போராட்டம் நடத்திக் கொண்டிருந்த புலிகள் (தமிழரான முஸ்லிம்களை ) விரட்டியடித்தது நிரூபித்துக் கொண்டிருக்கிறது. தமிழ் வருடப் பிறப்பு என சித்திரை மாதத்தில் கொண்டாடப்படுகிறது. அதனை இந்துக்கள் மட்டுமே மதத்தோடு சம்பந்தமுள்ளது போன்று கொண்டாடுகின்றனர். தமிழ் பேசும் கிறிஸ்தவர்களோ, முஸ்லிம்களோ அதனை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. அதே வேளை தை முதலாம் திகதியை சாதி, சமய  வேறுபாடின்றி உலகில் அனைவரும் கொண்டாடுகின்றனர் என்பது அம்மக்கள் புதுவருடத்தை சமயம் சார்ந்ததாகக் காட்டிக் கொள்ளாததே காரணம். 

பொருளாதார, வர்த்தக நோக்கு கொண்டதாகவே நாட்டு நடப்புகள் அமைந்திருந்ததால், தமிழகத்திலேயே கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும் ஆங்கில மொழிக்கு முன்னுரிமை கொடுத்து இயங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ்த் துறை என்பது தமிழை ஒரு பாஷையாகக் கற்பிப்பதற்காக மட்டும் பாவிக்கப்படுவதே தவிர, தமிழ் வளர்ச்சிக்காக அனைத்துத் துறைகளும் தமிழில் கற்பிக்கப்படுவதில்லை. தமிழர்களுக்கும் தமது மொழியில் இருக்கும் பற்றைவிட அதிகமாக ஆங்கிலத்தில் கற்று, அயல் நாடுகளில் வேலை செய்து பொருளாதார ரீதியில் உயர்வான இடத்தைப் பிடிக்கும் போக்கே மேலோங்கி நிற்பதால், கல்லூரிகளும், பல்கலைக் கழகங்களும்கூட தமது நிலையை ஸ்திரப்படுத்திக் கொள்ள வர்த்தக நோக்கில் மக்களின் தேவைக்கு இரைபோடுவதால், தமிழும் தானாகப் புறக்கணிப்புக்கு உள்ளாக்கப்படுகின்றது.  

சுப்பிர மணிய பாரதி கூறியபடி பிறநாட்டு நூல்கள் தமிழ் மொழியில் பெயர்க்கப்பட்டு இருந்தால், தமிழர் ஆங்கிலம் படித்துத்தான் தம் அறிவைப் பெருக்கிக் கொள்ள வேண்டும் என்ற இழிநிலை இன்று ஏற்பட்டிராது. தமிழில் அனைத்துத் துறைகளும் அறிமுகப்படுத்தப்பட்டு, அதற்கேற்ப நூல்களும் யாக்கப்பட்டு, கற்றலும் நடந்து, தொழில் வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்பட்டிருந்தால் தமிழில் கற்கும் நிலை தோன்றி இருக்கும். அதனை விட்டுத் தமிழை வளர்ப்பதாக மேடைகள் போட்டு முழங்குவதால் தமிழை அதன் அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது. தமிழை ஒரு குறுகிய வட்டத்துள் வைத்துக் கொண்டமையே இவ்விழி நிலைக்குக் காரணம். செம்மொழி அந்தஸ்து பெற்றுக் கொள்வதை விடுத்து, பல் வேறு துறை சார்ந்த சிறந்த நூல்களைத் தமிழில் மொழி மாற்றம் செய்து, அத்துறைகளில் கற்கை நெறிகளையும் வேலை வாய்ப்புக் களையும் ஏற்படுத்தி இருக்கலாம். 

தற்போது தமிழில் கடிதம் எழுதுவோர் எண்ணிக்கைகூட வெகுவாகக் குறைந்து கொண்டு போகின்றது. தமது கோரிக்கைள், பிரச்சினைகள்கூட வேற்று மொழியான ஆங்கிலத்திலேயே முன் வைக்கப்படுகின்றன. இதற்கு அரசின் தமிழ் புறக்கணிப்பும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் தமது கையெழுத்தைக் கூட ஆங்கிலத்தில் எழுதுவதே பெருமையாகக் கொள்ளப்பட்டு, அதுவே நடைமுறையிலும் உள்ளது. கையெழுத்தை ஆங்கிலத்தில் போடுமாறு யாரும் நிர்ப்பந்தித்து உள்ளார்களா? அது தமிழின் மேல் தமிழருக்கு இருக்கின்ற அக்கறையை வெளிப்படுத்துகின்றது. தமது தொழில் ஸ்தாபனங்களுக்கு எத்தனை பேர் தமிழில் பெயர் வைத்துள்ளனர், இந்நிலை எந்த நிர்ப்பந்தத்தினால் ஏற்பட்டது? 

தமிழுக்காகப் போராடிய அனைத்து இயக்கங்களும் கூடத் தமது பெயரை ஆங்கிலத்திலேயே வைத்திருக்கின்றன என்பதை அறியாதோர் யாரோ? LTTE, TELO, EPRLF, EPDP, PLOTE போன்றவை நல்ல உதாரணங்கள். தமது நாய்க்குக் கூட tiger, sheefa, browny, blacky போன்ற பெயர்களை இடுவதிலேயே பெருமை கொள்கிறார்கள்.  தங்கள் வீட்டு நாய்க்கும்,  வேலைக்கார னுக்கும்கூடEnglish தெரியும் எனத் தம் போலி உயர்வை வெளிப்படுத்துகின்றனர். வீட்டுக்கு முன்னால் நாய்கள் கவனம் என எழுதார்.Beware of dogs, please do not park, stick no billsஎனவே எழுதுவர். கோவணம் அல்லது மார்க்கச்சை, சொக்காய் என்றால் எத்தனை பேருக்கு விளங்கும்?panty, brassier, shirt, banian என்றால் சிறு குழந்தையும் அறிந்து விடும். அந்தளவு தமிழை விட்டு, நாம்- தமிழர் தூரச் சென்று கொண்டு இருக்கின்றோம். 'நாம் தமிழர்' எனக் கட்சிகள் உருவாக்கி தமிழர் எனக் கூறிக் கொள்ளும் அபாக்கிய நிலை இப்போதே தமிழகத்தில் தோன்றியுள்ளது. இதற்குப் பின்னர் 'நாம் தமிழர்' என சத்தியக் கடதாசி முடித்து மார்பில் தொங்கவிடும் நிலை தோன்றாதிருந்தால் சரியே! இந்தியாவில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான மொழிகள் தற்போது அழியும் நிலையை அடைந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

சரி அது போகட்டும், தமது ஆடைகளிலாவது தமிழ் மணங் கமழ்கின்றதா எனப் பார்க்கின் அது கூட ஆங்கில மோகத்தின் அழுத்தத்தையே பிரதிபலிக்கின்றது. தமது பெயர்களைக் கூட எத்தனையோ பேர் தற்போது ஆங்கில உச்சரிப்பாகத் தெரியும் வண்ணம் மாற்றிக் கொண்டுள்ளனர். உதாரணத்துக்கு  ஒன்று இரண்டு மட்டும். பெரிய சாமி அல்லது பெரிய தம்பி என்பதைச் சுருக்கி 'பெரி' என வைத்துக் கொண்டு உள்ளார்கள். கிரிதரன் என்பதைச் சுருக்கி Giri  'கிரி', ஹரிதரன் Hari மரியதாசன் என்பதை mari 'மரி' (செத்துப் போ) என வைத்துள்ளார்கள்.  இவர்கள் தாங்கள் தமிழர் என்று சொல்வதற்குக் கூட வெட்கப்படுகின்றார்கள் என்ற அவல நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது, தமிழர்களாலேயே என்பது இதிலிருந்து தெரிய வில்லையா? தங்கள் பிள்ளைகளுக்குக்கூட ஆங்கில் பெயர்கள், சமஸ்கிருதப் பெயர்கள். தெய்வங்களின் பெயர்களும் சமஸ்கிருதப் பெயர்கள் என்பதனால்தானோ என்னவோ ஈவேரா பெரியார் தமிழருக்கு கடவுள் இருக்கவில்லை. கடவுள் என்ற பெயரே கூட வடமொழி எனக் கூறிச் சென்றார். 

தமிழ் ஊடகங்கள் என தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் எத்தனை ஊடகங்கள் தமது பெயரையாவது தமிழில் வைத்துக் கொண்டுள்ளனர்? நேத்ரா, சக்தி, வசந்தம் இவைகள் வடமொழிச் சொல்லல்லவா! இவர்கள் சமஸ்கிருதம்தான், தமிழ் என்ற மாயையில் உள்ளனரா எனத் திகைக்க வைக்கிறது. போனால் போகட்டும் என அதனை விட்டால், அவர்களின் அத்தனை நிகழ்ச்சிகளும் ஆங்கிலத்தில்தான் எழுதப்படுகின்றன, பேசப்படுகின்றன. இதனை யாராவது தமிழ் வளர்ச்சிக் கான அறிகுறியாக அல்லது ஆரோக்கிய நிலை எனக் கூறலாமா? மேலும் இவற்றைத் தமிழ் ஊடகங்கள்; எனவாவது கூறத் துணிவார்களா? அறிவிப்பாளர், நிகழ்ச்சிகளை நடத்துவோர் பற்றிக் கேட்கவே வேண்டாம். இவர்களும் தாம் தமிழர் என்பதை மறந்து விட்டார்களோ அல்லது தமிழரெனச் சொல்லிக் கொள்ள  வெட்கப்படுபவர்களோ? அவர்களின் தமிழ் உச்சரிப்பைப் பற்றிப் பேசத் தேவையில்லை. இவர்கள் அனைவரும் வர்த்தக நோக்கம் கொண்டவர்களே. அதனாலேயே தமிழ் படாதபாடுபடுகிறது அவர்களது வாய்களில் ஆலைவாய்க் கரும்பாக! யானை கால் வாழையாக!

அச்சூடகங்கள் தமிழில் எழுதியே தீரவேண்டும் என்பதற்காக எழுதுகிறார்கள். தமிழ் பத்திரிகைகள் தமது பெயர்களை தினகரன், வீரகேசரி, தினக்குரல், தினமணி, தினத்தந்தி   என்றே வைத்துள்ளன. சிங்களவருக்கு சிங்களத்தில் உள்ள பற்றுக்கூட தமிழர்களுக்கு இல்லையே! சில சமயங்களில் இவர்களின் தமிழிலும் பிழைகள் காணப்படுவதுண்டு. உள்ளடக்கத்தின் கருத்தை திரிபுபடுத்தும் வகையில் தலையங்கங்கள் எழுதப்படுகின்றன. தமிழ்ப் பத்திரிகைகள் என்ற வகையில் தமிழ் இலத்திரனியல் ஊடகங்களில் தமிழ் புறக்கணிக்கப் படுவதையும், கொலை செய்யப்படுவதையும் இவர்கள் கண்டுங் காணாமல் இருந்து கொண்டிருக் கின்றார்கள். நமது வேலை செய்தி வெளியிடுவது தானே என்று வாளாவிருக்கின்றனரோ தெரியவில்லை. தமிழைக் காப்பது இவர்களது கடமையில்லையா? ஊடகங்கள் கூட தமிழ் என்றால் இந்து சமயம் என்ற மாயையில் அவர்களது அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன. 

இப்போதெல்லாம் ஒரு வசனம் தமிழில் பேசுவதாயின், எப்படியோ ஓரிரு தமிழ்ச் சொற்கள் அவ் வசனத்தில் இடம் பெறுகிறதே என நினைந்தே ஆறுதல் கொள்ள வேண்டியுள்ளது. அந்தளவுக்கு அவர்களுக்குத் தமிழ் சொற்கள் பஞ்சமாகி விட்டதா? அன்றேல், ஆங்கிலம் கலக்காது பேசுவது அநாகரிகம் என நினைந்துள்ளனரா? நாகரிகமற்றவர்களின் அதாவது பெரியார் கூறுவது போன்று காட்டுமராண்டிப் பாஷைதானா? என்னைப் பொறுத்தமட்டில், அவர்களுக்கு சொற் பஞ்சமும், ஆங்கிலம் கலக்காவிடில் அநாகரிகம் என நினைக்கும் தாழ்வு மனப்போக்கும் என்பேன். பரவாயில்லை அவர்கள் தாம் பாவிக்கும் ஆங்கிலச் சொற்களையாவது சரியாக உச்சரிக்கத் தெரிந்து வைத்திருக்கின்றனரா என்றால் அதுவும் அவர்கள் பாஷையில் zero ஸீரோவே. உதாரணத்துக்கு ஒரு சொல்,  எல்லோராலும் எப்போதும் பிழையாக உச்சரிக்கப்படுவது, மூன்று ஏழுகள் எனக் கூறும் ஆங்கில வார்த்தை triple ட்ரிப்ள். இதனை trible (ட்றிபிbள்) என்பது. காகம் அன்னம் போல் நடக்கப் போய் தன்னடையையும் இழந்தது என்றோர் பழமொழி (பழைய மொழி) அல்ல எனக்கு ஞாபகம் வருகிறது.

பிறந்த நாள் கொண்டாடும் வழக்கம் எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை. நாம் தமிழர் என்போர்கூட ஹெப்பி பர்த் டே happy birth day to you  என ஆங்கிலத்தில் songபாடியே, English  Cake ஐ knife ஆல் cutபண்ணுகிறார்கள்.  ஊடகங்களும் போதாக் குறைக்கு எமது தமிழ் மக்களுக்காக பிறந்த நாள் வாழ்த்துக்கள் கூறுகின்றார்கள் ஆங்கிலப் பாட்டுப் பாடி! இவர்கள்தான் இப்படியென்றால், தமிழ் கற்பிக்கும் ஆசான்கள் தமிழை அழிப்பதிற் செய்யும் சேவையோ அளப்பரியது. உச்சரிப்பென்றால் அவர்களுக்கு என்ன என்றே தெரியாது. அது என்ன விலை எனக் கேட்காதிருந்தால் சரியே! அவர்கள் எப்படி எழுதுகின் றார்களோ இறைவனுக்கே வெளிச்சம். நீங்கள் எந்த வகுப்பு ஆசிரியர் எனக் கேட்டால், ஐந்தாந்தர பொறுப்பாசிரியர் எனக் கூறார் Grade five class teacher எனவே கூறுவர். 

ஆசிரியரைக் காணும் மாணவர்கூடGood morning sir, Thank you sir, yes sir, no sir, three bags full sir எனக் கூறும்படியே புகட்டப்பட்டிருக் கின்றனர். முன்னிலைப் பாடசாலைகள் மொன்டிசூரி. அதற்கு தமிழென ஓர் பாஷை இருப்பதே தெரிவதில்லை. twinkle twinkle little star,  Ba ba blackship  தவிர உலகமே இல்லை. என் தகப்பனார் காலத்துக்கு முன்னரும் இதே rhym தான். இதனைப் படிப்ப தையே தமிழரும் பெருமையாக நினைத்துக் கொண்டுள்ளனர். அரசின் புத்தக வெளியீட்டுக் குழுவும் விட்டேனா பார் என கங்கணம் கட்;டிக் கொண்டு தமிழ்க் கொலை முயற்சியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். தரமற்றவர்களும், தரங் கெட்டவர்களும் அக்குழுவில் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கின்றனரோ என எண்ண வைக்கின்றது. தற்போதைய தமிழ் சினிமாப் பாடல்கள் தமிழைக் கொலை செய்வதற்காகவே புனையப்படுவதாகத் தெரிகின்றது. 'கொலவெரி' விளங்கு கின்றதா? கலாசாரச் சீரழிவு வேறு.  சின்னத்திரை நாடகங்கள் சிறிது பரவாயில்லை. ஆனால் வன்செயல், பிறர் மனை கவர்தல் என்ற கட்டுக்கோப்புள்ளும் சிக்காதவை மிக அரிதாகவே உள்ளன. இவற்றில் இருந்தெல்லாம் தமிழ் தப்பிப் பிழைத்து வாழும் மொழியாக நிலைக்கும் என்பது கேள்விக் குறியே! எப்படி ஐயா தமிழ் வாழும்?

Good morning, Good  evening, Good night போன்ற ஆங்கில வாழ்த்துக்களே ஏறத்தாழ அனைத்துத் தமிழர்களின் வாயிலிருந்தும் வருபவை என்பதை யாராவது மறுக்கப் போகிறார்களா? மேலும்,Hi, Bye, yeah, hello,  ok, very good, very bad, fine, nice,  super,  well done, so sorry, sir, madam, fantastic, see you, I don’t care, thank you, take care, have a nice day, wish you all the best, best of luck, I love you, god bless you, January, February… , Monday, Tuesday…, school, college, tution, results, exam, time table, slipper, shoe, brush, paste, soap, hotel, lunch, dinner, breakfast, bed, table, TV, Radio, Computer, one, two, three…, ten o’ clock,  uncle, aunty, cousin, brother, sister, master, student, teacher, principal, vaction, holiday, trip, tour, art, music, history, geography, science, maths, book, pencil, pen, eraser, ruler, bag, water bottle, uniform, tie, desk, chair, blackboard, white board, chalk, marker, exam, term, time table, holiday, vacation, tour, etc., etc.,  போன்ற எண்ணற்ற ஆங்கிலச் சொற்களும் சொற்றொடர்களுமே தமிழரின் வாழ்வில் பின்னிப் பிணைந்து நாளாந்தப் பாவனையாகி உள்ளன. அவற்றை எழுதப் புகின் அது முடிவற்றுப் போய்விடும். out of sight is out of mind என்ற ஆங்கிலப் பழமொழியை நினைவுபடுத்த விரும்புகின்றேன். பார்வையில் இல்லாதது என்பது புழக்கத்தில் இல்லாததே. அப்படியானவை மனதைவிட்டும் மறைந்துவிடும். இது பாவனையற்றுப் போய்விடும் என்பதையே வலியுறுத்தும் உண்மை. தமிழும் அது மக்களை விட்டு ஒதுங்கிவிடும். மறக்கப்பட்டு விடும். அழிவை அடைந்துவிடும், அதுவும் தமிழர்களாலே! ஒரு காலத்தில் தமிழன் என்றோர் இனமிருந்தது எனப் பாடவேண்டி வருமோ! 

Transliteration என்றொரு வழக்கு ஆங்கிலத்தில் காணப்படுகின்றது. ஒரு பாஷையை வேறோர் வரிவடிவத்தைப் பாவித்து எழுதும் முறை. மனிதன் என்பதை manithan என்பது போல். அக்காலத்தில் அரேபியர் இந்தியா, இலங்கையில் வாழ்ந்த காலத்தில், அவர்களுக்குத் தெரிந்த தமிழ்  மொழியின் ஒலி வடிவைப் பாவித்து, அரபுத் தமிழ் என்ற ஒன்றை உருவாக்கி, நிறைய அறிவு சார்ந்த புத்தகங்களை ஆக்கிச் சென்றுள்ளனர். அவர்கள் தமிழை எழுத வாசிக்கத் தெரியாத நிலையில், பேச்சு வழக்கைப் பாவித்து சிறப்பான தமிழ்ப் பாஷை ஒன்றை அரபியில் ஆக்கித் தந்து சென்றுள்ளார்கள். இன்றும் அப்படியான புத்தகங்கள் இஸ்லாமியரிடையே புழக்கத்தில் உள்ளன. அரபு எழுத்தில் இருக்கும் புத்தகங்கள் வாசிக்கும் போது கருத்துச் செறிந்த தமிழ் ஒலி வரிகளாக வெளிவரும். இவ்வாக்கம் மூலம் தமிழ் அரேபியாவுக்கும் எடுத்துச் செல்லப்பட்டது. அவர்கள் வளர்த்த அளவிலாவது நாம் செய்திருக்கிறோமா? தற்போது இந்நடைமுறை ஆங்கிலம் தெரியாத தமிழர்களாலும், தமிழில் இலத்திரணியல் சாதனங்களில் எழுதும் திறன் அற்றவர்களாலும், தமிழை ஆங்கில எழுத்துக்களால் எழுதும் நிலை தோன்றியுள்ளது. இது தமிழ் எழுத்துக்கள் வழக்கிழந்து போகும் நிலையைத் தோற்று வித்தாலும், தமிழ்ப் பேச்சு வழக்கை இல்லா தொழிக்காது என்ற வகையில் சிறிது ஆறுதல். முன்னைய காலங்களில் இங்கிலாந்து சர்வகலாசாலையில் இளமானித் தேர்வுக்குத் தமிழை ஒரு பாடமாக எடுப்பவர்கள், இதே ட்ரான்ஸ்லிற்ற ரேஷன் முறையிலேயே விடை எழுதியதாகத் தெரிகிறது. ஆனால், தற்காலத்திலோ தமிழ் பற்றிய ஆராய்ச்சி கூடத் தமிழில் செய்யப்படுவதாகத் தெரியவில்லை. ஆய்வறிக்கைகள் ஆங்கிலத்தில், வாசிக்கப்பட்டு வெளியிடப்படுகின்றன.  

இன்று உலகளாவிய ரீதியில், புலம் பெயர்ந்தோர் என்ற பெயரில், புலிகளுக்கு வக்காலத்து வாங்கிக் கொண்டு, தமிழர் உரிமை பற்றி வாய் கிழியக் கத்திக் கொண்டு திரிபவர்களது குழந்தைகள், நோர்வே, ஜெர்மன், பிரெஞ்சு, டெனிஷ், ஆங்கிலம் போன்ற மொழிகளில் கற்றுக் கொண்டும், பேசிக் கொண்டும் திரிகின்றார்கள் என்பது  பதிவாக்கப்படுகின்ற அவலம். இன்னும் சொல்லப்போனால் அவர்களின் வீடுகளில் பேசும் பாஷைகூட தமிழ் அல்ல என்பதே வெட்கத் துடன் முன் வைக்கப்படுகின்றது.தமிழ்த் தாயும் தனது தமிழ்ப் பிள்ளைகளும் தமிழில் உரையாட முடியாமல் அந்நிய பாஷை களில் உரையாடிக் கொண்டிருக்கின்றனர் என்பது புதிய விடயமுமல்ல, நமக்கு அதிர்ச்சியைத் தரவுமில்லை. காரணம் இலங்கையில் பல்லாண்டு காலமாக இருந்த, தற்போதும் இருந்து கொண்டிருக்கின்ற நடைமுறை. மேல் மட்டச் சமூகம் தமது வீட்டுப் பாஷையாக ஆங்கிலத்தைக் கொண்டு, தம் பிள்ளைகளுடன் தினமும் ஆங்கிலத்தில் உரையாடிக் கொண்டி ருப்பதே அது. முன்னவர்கள், காலச் சக்கரத்தின் பிடியில் அகப்பட்டு அங்கலாய்ப்போர். பின்னவர்கள், தமிழில் பேசுவதை அந்தஸ்து குறைவாக நினைப்போர். தமிழில் தமது பிள்ளைகளுடன் பேசுவோர்கூட பிறருக்கு முன்னால் தமது குழந்தை களுடன் ஆங்கிலத்தில் உரையாடும் பண்பை பெருமையாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர். 

தமிழர் தற்போது உலகில் பல பாகங்களில் வாழ்ந்து வருவது என்னவோ உண்மைதான். அத்தோடு அந்நாடுகளில் கணிசமான அரசியல் ஆதிக்கம் பெற்றிருப்பது கூட மறுக்க முடியாததே. பொருளாதாரத்தில்கூட அவர்கள் குறிப்பிடக் கூடிய அளவு வளர்ச்சி கண்டுள்ளதாகவும் தெரிகிறது. ஆனால், இவைகளை வைத்துக் கொண்டு தமிழ் வாழ்கின்றது எனக் கூறலாமா? இலங்கை பற்றிய பிரச்சினைகளின் போது தமிழர்கள் தமது இருப்பை அந்நாடுகளில் தக்க வைத்துக் கொள்வதற்கான ஓர் ஆயுதமாகப் பாவிப்பதற்கே தமிழுக்காக, தமிழருக்காகக் குரல் கொடுக்கிறார்களே தவிர, தமிழின் வளர்ச்சி சம்பந்தமாக அவர்கள் எவ்வித முயற்சிகளும் மேற்கொண் டிருக்கவில்லை என்பன அந்நாடுகளில் எத்தனை தமிழ்ப் பாடசாலைகள் தோன்றியுள்ளன? எத்தனை தமிழ் பத்திரிகைகள் பிரசுரமாகின்றன? எத்தனை வானொலி, தொலைக் காட்சி நிலையங்கள் தமிழை வளர்த்துக் கொண்டிருக்கின்றன? என்பதனால் பெறப்படும். அப்படியே ஒன்றிரண்டு தோன்றி இருந்தாலும் அவைகள் தமது, சுயதேவைகளை, குழு மோதல்களை, தற்காலிக இலங்கை எதிர்ப்பை வெளிப்படுத்துவதற்காக மட்டுமே இயங்குபவையாகக் காணப் படுகின்றன.  சாதாரண காலங்களில் தாமேகூட தமிழைப் பேசுவதில்லை என்பதே உண்மை. தமிழ் பேசும் சூழல் அந்நாடுகளில் இல்லாதிருப்பதே காரணம் எனக் கூறு வதையும் கண்டிருக்கிறேன். வீட்டிலும் அச்சூழல் இல்லாமற் போனது விந்தையே! அன்று புலவர்கள் வயிறு வளர்ப் பதற்காக கவிதை பாடினர். ஆனால் இன்றோ வயிறுவளர்க்க தம் பாஷையையே கைவிட்டு விட்டார்கள். 

தமிழ் தெரியாத தமிழர் எனத் தம்மைப்  பெருமையாகக் கூறிக் கொள்வோரும் வெளிநாடுகளில் இன்றும் உள்ளனர். பிஜி, மொரீஸியஸ் போன்ற நாடுகளில் வாழ்வோர். பாவம் இவர்களது முன்னோர்கள் வறுமை காரணமாக, வெள்ளைக்கார ஆட்சியில் அடிமைகளாகக் கரும்புத் தோட்டங்களில் வேலை செய்வதற்காக ஏற்றுமதி செய்யப்பட்டவர்கள். இப்போது இவர்களின் சந்ததியினரே, தாம் தமிழர் என்பதை மட்டும் அறிந்து வைத்துள்ளனர் என்பதை நினைக்கும் போது தமிழ் என்றோர் மொழி இருந்தது, நமது முன்னோர் எல்லோரும் அப்பாஷையைப் பேசியவர்கள் என இனிவரப்  போகும் சமுதாயம் கூறிக் கொண்டிருக்கும் நிலை ஏற்படுமோ என நினைக்கத் தோன்றுகிறது. இங்கும் சிங்களவர்களுடன் திருமண பந்தத்தில் ஈடுபட்டுத் தமிழை இழந்து நிற்போர் குறிப்பிடக்கூடிய அளவு இல்லாவிட்டாலும், அவர்களின் சந்ததியினர் தமிழ் தெரியாத தமிழராக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பது வெளிப்படாதிருக்கும் உண்மை.  

இன்னும் தமிழ்த் தலைவர்களின் ஆடைகள், அவர்கள் பேசும் மொழிகள், கலாசாரங்கள்,  தமிழ்க் கல்லூரிகளின் பெயர், அங்கு ஆங்கிலம் பேசாதோர் புறக்கணிக்கப்படும் நிலை, தமிழ் பாடசாலைப் புத்தகங்களில் தமிழ்க் கொலை, உணவைக் கூட தமிழர் உணவாகச் சாப்பிடுவதில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, உண்ணும் முறையில்கூட ஆங்கில நாகரிகம் போன்றவைகளினால் தமிழ் அழிக்கப்படுவதை எழுதிக் கொண்டே போகலாம். கட்டுரை வளர்ந்துவிடும் என்பதால் இறுதியாக ஒன்றைக் கூறி விடை பெறுகிறேன். இவற்றையெல்லாம் பார்க்கும் போது தமிழுக்காகப் பல்லாயிரம் உயிரைத் தமிழரும் ஏனையோரும் இந்நாட்டில் பலி கொடுத்துள்ளமை ஏன் எனத் தெரியவில்லை? இதற்கு தமிழ் தவிர்ந்த புறக் காரணிகள் காரணமாகலாம். யாருக்காவது புரிகின்றதா? அரசியல்வாதிகளாவது தமது இருப்புக்கு ஏதாவது பிரச்சினைகளை முன்வைக்க வேண்டிய நிர்ப்பந்தம்! அப்பாவி மக்களுக்கு என்னவோ? 

பின்வரும் ஆலோசனை தலைப்புக்கு பொருத்தம் இல்லாவிடினும், தமிழரின் சிறப்பு வாழ்வுக்கு உகந்ததாகக் கொள்ளக் கூடியது. இன்று இலங்கைத் தீவில் தமிழர், சிங்களவர் என்ற பிரச்சினை கொழுந்து விட்டெரிந்து, யுத்தம் முடிந்தாலும்,  அணையா நெருப்பாக நீறுபூத்துக் கொண்டு இருக்கின்றது. வெளிநாடு சென்ற தமிழர்கள் தமது  நல்வாழ்வுக்காக தமது சுற்றம், சூழலை மறந்து, தமிழையும் இழந்து, அந்நிய மொழியைத் தம்மொழியாகக் கொண்டு வாழ முடியும் என்றால், உங்கள் நாட்டில், உங்கள் சகோதரர்களாக, வாழும் சிங்களவருடன் அவர்களது மொழியைக் கற்று சீரான, சிறப்பான வாழ்க்கையை மேற்கொள்ளலாமே. 

முஸ்லிம்கள் தமது மார்க்கத்தையும், கலாசாரத்தையும் பேணிக் கொண்டு, தமிழையும் புறக்கணிக்காது, சிங்களம் பேசிக் கொண்டு சிங்களவருடன் ஒற்றுமையாக இரண்டறக் கலந்து வாழ்கிறார்களே! இலங்கை முழுவதும் தமிழ் மொழி மூலப் பாடசாலைகள் நடைபெற்றுக்கொண்டு இருப்பதற்கும் முஸ்லிம்களே காரணம் என்பதை மறுப்பவர் யாரோ? சிங்களம் பேசும் கத்தோலிக்கரும் பிரச்சினைகளற்று ஏனைய சிங்களவருடன் சேர்ந்து வாழ்வதும் அறிதற்குரியதே. அது போன்றே பர்கர் (burgers) எனப்படும் பறங்கியரும், மலே மொழி பேசும் (Malays மலாயர்களும், சீன மொழி பேசும் (Chinese) சீனர்களும் சிங்களத்தையும் ஏன் சிலர் தமிழையும்கூடப் பேசிக் கொண்டு அமைதி வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனரே அவர்களிடம் பாடம் படித்தால் என்ன? தமிழும் வாழும், தமிழரும் வாழலாமே! சிங்களவரையும் தமிழைப் பேச வைக்கலாமே! 

பேச்சு வழக்கில் உள்ள மொழி அழியாது, அது வாழும் மொழியாகும் என்ற அடிப்படையில்  சிங்களவரையும் தமிழைப் பேச வைப்பதன் மூலமும் தமிழை அழியாது காப்பாற்றலாமே! முயற்சிப்போமா! தமிழ் வாழ வேண்டுமெனின் தமிழரின் கவனத்தைப் பெற வேண்டிய ஓர் கருத்து. உங்கள் கண்களைத் திறக்க வைப்பதற்காக, 'தாய்மொழி என்பதற்கு யுனெஸ்கோ தரும் விளக்கம்' பதிவாகின்றது. ஊன்றிக் கவனிப்பின் இதனை அபாய ஒலியாகக் கொள்ள முடியும். தமிழகத்திலும், இங்கும் ஹிந்தி, சிங்கள எதிர்ப்பும், அழிப்பும் நடத்திக் கொண்டிருப்பதால் நமது தமிழ் வாழுமா? அன்றேல் வேற்றுமையில் ஒற்றுமையை வளர்த்து அவர்களையும் நமது மொழியைப் பயில, பேச வைத்து தமிழை வாழும் மொழியாக இவ்வையகத்தில் மிளிர வைக்கலாமே! அமைதி வாழ்க்கை வாழலாமே! நம்மில் ஏற்படும் சிறு மாற்றம் உலகிலேயே பெரும் மாற்றங்களை ஏற்படுத்திவிடலாம். முயலலாமா?

அ). ஒருவன் சிறுவயதில்  கற்றுக்கொண்டதும், சிந்திக்கவும், கருத்துக்களைப் பரிமாறவும் இயல்பாக ஒருவனுக்கு உதவுவதும் ஆகிய ஒன்றே தாய்மொழி  
ஆ). தன்னைப் பற்றியும், உலகைப் பற்றியும் கருத்துக்களை முதன் முதல் உருவாக்கவும், வெளியிடவும் உதவுவது தாய்மொழி.
இ). இவ்வாறாகப் பயன்படும் மொழி தாய்-தந்தையரின் மொழியாக இருக்க வேண்டும் என்ற நியதி இல்லை.
ஈ). ஒருவனின் வாழ்க்கையில் தாய்மொழிகள் மாறிக்கொண்டு போகலாம்.

அண்மையில் தமிழ் சமூகம் என்ற பெயரில் எழுதப்பட்ட அறிக்கை ஆங்கிலத்தில் எழுதப்பட்டு தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதாகக் கூறப்படுவது மேற்கண்ட கருத்தைப் பிரதிபலிப்பதாகத் தெரிகிறது.

அறிதலுக்காக சில உண்மைகள்:

UNESCO distinguishes four levels of endangerment in languages, based on intergenerational transfer: 
Vvulnerable: Most children speak the language, but it may be restricted to certain domains (e.g., home).
Ddefinitely endangered: Children no longer learn the language as mother tongue in the home.
Sseverely endangered: Language is spoken by grandparents and older generations; while the parent generation may understand it, ttthey do not speak it to children or among themselves.
Ccritically endangered: The youngest speakers are grandparents and older, and they speak the language partially and infrequently.
While there are somewhere around six or seven thousand languages on Earth today, about half of them have fewer than about 3,000 speakers. Experts predict that even in a conservative scenario, about half of today's languages will go extinct within the next fifty to one hundred years. Accordingly, the list above presents only a sample of the approximately 3,000 currently endangered languages.
The Effects of a Dominant Language
"A language is said to be dead when no one speaks it any more. It may continue to have existence in recorded form, of course--traditionally in writing, more recently as part of a sound or video archive (and it does in a sense 'live on' in this way)--but unless it has fluent speakers one would not talk of it as a 'living language.' . . . (David Crystal, Language Death. Cambridge Univ. Press, 2002)
"Every 14 days a language dies. By 2100, more than half of the more than 7,000 languages spoken on Earth--many of them not yet recorded--may disappear, taking with them a wealth of knowledge about history, culture, the natural environment, and the human brain."
(National Geographic Society, Enduring Voices Project)

"I am always sorry when any language is lost, because languages are the pedigree of nations."
(Samuel Johnson, quoted by James Boswell in The Journal of a Tour to the Hebrides, 1785)
        
       - நிஹா -