Monday, March 3, 2014

Commented on Lankamuslim.org

@ http://tinyurl.com/mrgzthr

ஜெனீவா பிரேரணைக்கு ஐ. தே. க ஆட்சி கால 83 இனக்கலவரமே பிரதான காரணம்

1983இல் நடைபெற்ற அராஜகத்திற்குப் பரிகாரம் தேடினார், தொடர்ந்து வந்த ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கள அவர்கள்.
புலிகளினதும் , போராளிக் குழுக்களினதும் தோற்றததிற்கு வித்திட்டவை ஏற்கனவே பேரின அரசியல்வாதிகளால் குறுகிய நோக்கங்களை அடைவதற்காக முன்னெடுக்கப்பட்ட சிறுபான்மையினருக்கு எதிரான நடவடிக்கைகளும், அதன் உச்ச கட்டமாக ஜேஆரினால் முன்னனெடுக்கப்பட்ட 1983 கலவரமுமே!
ஆயினும், அதற்குத் தண்டனை வழங்கப்பட்டு அவர்கள் ஆட்சியிலிருந்து மக்களால் தூக்கி வீசப்பட்டு ஏறத்தாழ 20 வருடங்கள் சென்ற பிறகு அதனைக் கதைத்துக் கொண்டிருப்பதில் பயனில்லை.
தற்போதைய அரசு, புலிகளைத் தோற்கடித்து நான்கு ஆண்டுகளாகியும் உருப்படியாக இனப்பிரச்சினை தீர்வுக்கு நடவடிக்கைகள் எடுக்க முன்வரவில்லை.
மாறாக, சிறுபான்மையினரது மதஉரிமைகளைக் கூட நசுக்கும் அராஜக நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டன. எவ்வித ஓலங்களும் அரசின் காதுகளில் விழுவதாயில்லை.
போதாக்குறைக்கு அரசியலமைப்பின் 13ஆவது சட்டத்திருத்தத்திற்கு மேலாக உரிமைகள் கொடுப்பதாகக் கூறிக் கொண்டிருந்த அரசு, புலிகளின் தோல்விக்குப் பின்னர் தனது போக்கை மாற்றிக் கொண்டு, 13ஆவது திருத்தச் சட்டத்தையே இல்லாதொழிக்கும் கருமங்களில் ஈடுபடத் தொடங்கியது. இவைகளே இன்றை நாட்டின் அவல நிலைக்குக் காரணம் என்பதை இன்னும் உணராமல் அறிக்கைகள் விட்டுக் கொண்டிருப்பது அழிவை நோக்கிய பயணமே தவிர அல்ல.


முன்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் காரணமாகக் கூறிக் கொண்டிருந்தவர்கள், தற்போது அந்த பெரும்பான்மையை வைத்துக் கொண்டு, நாட்டைச் சீரழிக்கக் காரணமாயிருந்த விகிதாசாரத் தேர்தல் முறையையும், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையையும் இல்லாதொழிப்பதை விடுத்து, அதற்கு, மேலும் தீனி போடும் சட்டங்களை இயற்றிக் கொண்டிருப்பது எதனைக் காட்டுகின்றது! நாட்டு நலனைவிட சொந்த நலனே முக்கியம் எனபதையல்லவா!