Friday, July 25, 2014

ஷவ்வால் தலைபிறை சம்பந்தமான ஊடக அறிக்கை (ஊடக அறிக்கை இணைப்பு) - Kalpitiya Voice | (கற்பிட்டியின் குரல்)

ஷவ்வால் தலைபிறை சம்பந்தமான ஊடக அறிக்கை (ஊடக அறிக்கை இணைப்பு) - Kalpitiya Voice | (கற்பிட்டியின் குரல்)






பிறை பர்ப்போரிடம் ஒரு சந்தேகம் !



பிறையை நாம் கண்ணால் பார்க்காவிட்டால் பிறை தோன்றவில்லை என்றாகிவிடுமா! கண்ணால் காணமுடியாத காற்றை நம்ப முடியுமானால் ஏன் பிறையும் அதன் ஒழுங்கில் தவறாது வந்து கொண்டே இருக்கும் என்ற இறை வார்த்தையை நம்பக் கூடாது!



றமழான் மாதம் வந்துவிட்டால் எண்ணிவிடப்படட நாட்களில் நோன்பை நோற்கவும் என்ற இறை வசனம் புறந்தள்ளப்படலாமா!



நாயகம் ஸல அவர்கள் பிறை பர்த்துத்தான் நோன்பு நோற்றார்கள் என்று கூறினால், அவர்கள் ஒட்டகத்தைத் தமது வாகனமாகப் பாவித்ததையும் செயற்படுத்த வேண்டுமல்லவா!



பிறையை இன்று காண முடியாததால் நாளை பெருநாள் எனத் தீர்ப்பு வழங்கலாமா! அப்படியாயின் பிறை பார்த்தல் என்ற கருதுகோள் கேலியாகவில்லையா!



இன்று பிiiயைக் காணாது, நாளை பார்க்கும் போது அது இரண்டாவது பிiறாகவிருந்தால் எப்படித் தீர்ப்பு வழங்குவீர்கள்!



அமாவாசைக்குப் பின் புதுப் பிறை என்ற  உண்மையை மறுக்கப் போகின்றவர் யார! நாளை அமாவாசையாயின் அதற்கு அடுத்த நாளை அடுத்த மாதமாகக் கொள்வது அதாவது தலைப் பிறையாகக் கொள்வது  பிழையா!



ஆதலால், நாளை அமாவாசை வரப் போவதை அனைவரும் காணப் போகின்றனர். அதனைத் தொடர்ந்து ஞாயிறு மாலை பிறை தோன்றியே தீரும். நாம் காணமுடியாமற் போனால் பிறை தோன்றவில்லை என்பது கருத்தல்ல. அப்படி நினைப்போமாயின் அது இறை மறுப்பே!

Tuesday, July 22, 2014

குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் சரணடைந்தவர்களை கொல்லச் சொன்னது கோத்தாபய:-

குற்றச்சாட்டுகள் தொடர்பாக சாட்சியமளிக்க தயார் சரணடைந்தவர்களை கொல்லச் சொன்னது கோத்தாபய:-





'சரணடைந்தவர்கள் சுட்டுக்கொல்லப்பட வேண்டும்' என்ற உத்தரவை பாதுகாப்பு செயலாளர்
வழங்கி இருந்தது உண்மையானால்
, நிரூபணமானால், தண்டிக்கப்பட வேண்டியவர் அவரே தவிர, இந்த நாடும் அப்பாவி இராணுவத்தினரும்,
எதுவும் புரியாத மக்களும்
அல்லர் என்று கூறிய அந்த தேசப்பற்றுள்ள இராணுவ அதிகாரி தேசிய  விருது வழங்கப்பட்டுக் கௌரவிக்கப்பட வேண்டிய  மண்ணின் மைந்தன் எனலாம்!



Thursday, July 10, 2014

Sri Lanka News-Adaderana-Truth First - பஞ்சாயத்து தலைவரின் உத்தரவில் 10 வயது சிறுமியை பலாத்காரத்துக்கு உட்படுத்திய நபர்

Sri Lanka News-Adaderana-Truth First - பஞ்சாயத்து தலைவரின் உத்தரவில் 10 வயது சிறுமியை பலாத்காரத்துக்கு உட்படுத்திய நபர்





பஞ்சாயத்து தலைவர் போபால் பாசி ஒரு மனிதனாக இருக்க மாட்டார் போலிருக்கின்றது. 

இவருக்கு மரண தண்டனை கொடுத்து உலகுக்கு ஒரு படிப்பினையை உருவாக்க வேண்டும். 

Wednesday, July 9, 2014

Sri Lanka News-Adaderana-Truth First - பொதுபல சேனாவை பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டமை நகைப்புக்குரியது!

Sri Lanka News-Adaderana-Truth First - பொதுபல சேனாவை பயங்கரவாத அமைப்பாக பெயரிட்டமை நகைப்புக்குரியது!



ஆம், சரியாகவே சொல்லியிருக்கிறார், தாம் பகிரங்கமாகச்செய்யும் அமைப்ப என்று.  அப்படியானால் இரகசியமாகச் செய்பவர்கள்தான் பயங்கரவாதிகள்அஎன்பது இவரது கணிப்போ!



எப்படியோ தாம் கொள்ளை. கொலை, தீவைப்பு, அத்துமீறல், அவமதிப்பு, சட்டத்தை மதிக்காமை, தான்தோன்றித்தனமாக தர்பார் நடத்துவது, மத விரோத நடவடிக்கை, பள்ளிவாசல், கோவில் ‌தகர்த்தல் போன்ற அனைத்தையும் செய்வதாக, செய்வதற்கு உடந்தையாக, ஊக்குவிப்பதாக ஒத்துக் கொள்கிறாரா!