Tuesday, April 29, 2014

MDN- Muslim Daily News: விஜித தேரரை விரட்டிய பெளத்த தர்மத்தையும், எம்.பிக்...

MDN- Muslim Daily News: விஜித தேரரை விரட்டிய பெளத்த தர்மத்தையும், எம்.பிக்...: தமிழர்களையும், முஸ்லிம்களையும் தூற்றும் பொதுபலவின் பெளத்த தர்மம், மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர் வடரகெத விஜித தேரரை மஹியங்கனையில் ஓட ஓட ...

//இந்த அரசாங்கத்தின் முடிவு ஆரம்பமாகிவிட்டது. அதனால்தான் இத்தனை தறிகெட்ட தடுமாற்றங்கள் நடைபெறுகின்றன. இந்த இரு சம்பவங்களும் முடிவின் ஆரம்பத்தை அடையாளப்படுத்துகின்றன என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.//

சிறு திருத்தம். இது முடிவின் ஆரம்பமல்ல, முடிவைத் தீர்மானித்த முக்கிய காரணிகள்.

விஜித தேரரைக் கொல்ல துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு காவியுடைக் காவாலியை சட்டத்தின் முன்னிறுத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதை விடுத்து, ஜனாதிபதியிடம் முறைப்பாடு செயயச் சென்ற அந்த தேரரிடம், உங்களை ஏன் பொது பல சேனா ஓட ஓட விரட்டுகின்றது என எவ்வித பொறுப்புமற்று கேள்வியைத் தொலைபேசியூடாக விடுத்துள்ளமை நடைபெறும் அனர்த்தங்களை எடை போட உதவுகின்றது,

அந்தத் தேரர் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் பாபசே யினால் காரணமின்றி தாக்கப்படுவதற்கு எதிராக கருத்து வெளிப்படுத்துகின்றார் என்ற குற்றச் சாட்டே அவர் மீது வைக்கப்படுகின்றது. அதுதான் அந்த தேரருக்கு கிடைத்த மரியாதை.

ஆனால் காலித்தனம் செய்யும் குற்றவாளிக்கு பாதுகாப்பும், சகல சுதந்திரமும் வழங்கப்படுகின்றது. காரணம் அந்தக் கழிசடை சிறுபான்மையினரின் மதங்களைக் கொச்சைப்படுத்துவதிலும், தாக்குவதிலும், அவதூறுகளை அள்ளி வீசுவதிலும் ஈடுபட்டு வருவதே!

Sunday, April 13, 2014

Muslim Daily News: மறிச்சுகட்டி பிரச்சினையை எப்படி கையாளலாம் ?

Muslim Daily News: மறிச்சுகட்டி பிரச்சினையை எப்படி கையாளலாம் ?: கே.சி.எம்.அஸ்ஹர் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வடபுலத்தைச் சேர்ந்த 20,000 குடும்பங்களைச் சேர்ந்த 100,000 மக்கள் பலவந்தமாக வெளியேற்றப...

நாய் வேலையைக் கழுதை செய்தால் எப்படியோ, அப்படியேதான் இந்த வடபுல முஸ்லிம்களின் நிலையும் இன்று ஆக்கப்பட்டுள்ளது.

மனிதாபிமான ரீதியிலும் அரசின் கடமை என்ற ரீதியிலும்,புலிகளால் பலாத்காரமாக 1990 இல் வெளியேற்றப்பட்ட அந்த ஏதுமறிய அப்பாவி வடபுல முஸ்லிம்கள் விஷே திட்டம் ஒன்றின் கீழ், போதிய இழப்பீடுகளுடன் அரசினால் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியவர்கள் இன்று இந்நிலைக்கு ஆளாக்கப்படடிருப்பது வெறும் அரசியல் பகடைகளாக அவர்கள் ஆக்கப்பட்டதே தவிர இல்லை.

இதன் முழுப் பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும். அரசு இவர்கள் விடயத்தில் கண்டுங் காணா அன்றி மாற்றாந்தாய் மனப்பான்மையையும், தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அரசியல் இலாபங்களுக்காக இவர்களது பெயரைப் பாவிப்பதுமாக காரியங்கள் நடைபெறுகின்றன.

அரசு தனது கடமையைச்செய்திருந்தால் இன்று நாய்,பேய்கள் எல்லாம்அ இந்த முஸ்லிம்களை கிள்ளுக்கீரைகளாகப் பாவித்துதமது அற்ப ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள மாட்டார்கள்.

Saturday, April 12, 2014

Muslim Daily News: வில்பத்து விவகாரம்: அரசின் நிலைப்பாடு என்ன? BBC

Muslim Daily News: வில்பத்து விவகாரம்: அரசின் நிலைப்பாடு என்ன? BBC: BBC:இலங்கையில் முஸ்லிம் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் கட்சிகள் எல்லாம் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பதால் பிரச்சினைகளை அரசாங்க...

வடக்கு முஸ்லிம்களின் பிரச்சினை பற்றிய எந்த சிந்தனையோ, தீர்க்கும் நோக்கோ திட்டங்களோ அரசிடம் இல்லை. ஆனால் மாறான போக்கொன்றின் மூலம் முஸ்லிம்களின் பிரச்சினை தீர்க்கப்பட்டதாகக் காட்ட அரசு முனைகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Wednesday, April 9, 2014

மன்னார் மாவட்டத்தில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு பொதுபல சேனா எதிர்ப்பு

வடக்கு முஸ்லிம்களை அவர்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வந்த பிரதேசத்தில் இருந்து பயங்கரவாதப் புலிகள் 1990இல் பலவந்தமாக விரட்டி இனச் சுத்திகரிப்பொன்றை அரங்கேற்றிய போது,தடுத்து நிறுத்தி இருக்க வேண்டிய அரசு, இதுவரை அவர்கள் விடயத்தை அரசியல் இலாபங்களுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றது.

அதனால் அவர்கள் தமது இழ்ப்புகளுக்கான எவ்வித நட்ட ஈடுகளையும் எங்கிருந்தும் பெற்றுக் கொள்ளவில்லை. அவர்கள் தம் பாரம்பரிய தாயகமான வாழ்விடத்திலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு இருபத்து மூன்று வருடங்களாகியும், அப்புலிகள் தோற்கடிக்கபபட்டு ஐந்து வருடங்களாகியும், அவர்களுக்கு எவ்வித நியாயமும் கிடைக்காத நிலையில், மீள் குடியேற்றம் என்ற பெயரில் அவர்கள் வஞ்சிக்கப்பட்டுள்ளார்கள்.

போதாக்குறைக்கு அவர்கள்பொது பல சேனா போன்ற மதப் பயங்கரவாத அமைப்புக்களின் மூலம் பலத்த மன உளைச்சல்களுக்கு உட்படுத்தப்படுகின்றார்கள்.

இதனை அரச அதிகாரிகளும் பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது, அரசின மாற்றாந் தாய் மனப்பான்மையை மட்டுமல்ல வடக்கு முஸலிம்கள் விடயத்தில் அது கொண்டுள்ள கரிசனை இன்மையை தெளிவாக வெளிப்படுத்துகின்றது. ஆக, புலிகள் செய்த அதே இனச் சுத்திகரிப்பை இன்னோர் முறையில் தொடர்கின்றனர் என்றே கூற வேண்டும்.

- நிஹா -