Sunday, April 13, 2014

Muslim Daily News: மறிச்சுகட்டி பிரச்சினையை எப்படி கையாளலாம் ?

Muslim Daily News: மறிச்சுகட்டி பிரச்சினையை எப்படி கையாளலாம் ?: கே.சி.எம்.அஸ்ஹர் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக வடபுலத்தைச் சேர்ந்த 20,000 குடும்பங்களைச் சேர்ந்த 100,000 மக்கள் பலவந்தமாக வெளியேற்றப...





நாய் வேலையைக் கழுதை செய்தால் எப்படியோ, அப்படியேதான் இந்த வடபுல முஸ்லிம்களின் நிலையும் இன்று ஆக்கப்பட்டுள்ளது.



மனிதாபிமான ரீதியிலும் அரசின் கடமை என்ற ரீதியிலும்,புலிகளால் பலாத்காரமாக 1990 இல் வெளியேற்றப்பட்ட அந்த ஏதுமறிய அப்பாவி வடபுல முஸ்லிம்கள் விஷே திட்டம் ஒன்றின் கீழ், போதிய இழப்பீடுகளுடன் அரசினால் மீள்குடியேற்றம் செய்யப்பட வேண்டியவர்கள் இன்று இந்நிலைக்கு ஆளாக்கப்படடிருப்பது வெறும் அரசியல் பகடைகளாக அவர்கள் ஆக்கப்பட்டதே தவிர இல்லை.



இதன் முழுப் பொறுப்பையும் அரசே ஏற்க வேண்டும். அரசு இவர்கள் விடயத்தில் கண்டுங் காணா அன்றி மாற்றாந்தாய் மனப்பான்மையையும், தேவைப்படும் சந்தர்ப்பங்களில் அரசியல் இலாபங்களுக்காக இவர்களது பெயரைப் பாவிப்பதுமாக காரியங்கள் நடைபெறுகின்றன.



அரசு தனது கடமையைச்செய்திருந்தால் இன்று நாய்,பேய்கள் எல்லாம்அ இந்த முஸ்லிம்களை கிள்ளுக்கீரைகளாகப் பாவித்துதமது அற்ப ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள மாட்டார்கள்.

No comments: