MDN- Muslim Daily News: விஜித தேரரை விரட்டிய பெளத்த தர்மத்தையும், எம்.பிக்...: தமிழர்களையும், முஸ்லிம்களையும் தூற்றும் பொதுபலவின் பெளத்த தர்மம், மஹியங்கனை பிரதேச சபை உறுப்பினர் வடரகெத விஜித தேரரை மஹியங்கனையில் ஓட ஓட ...
//இந்த அரசாங்கத்தின் முடிவு ஆரம்பமாகிவிட்டது. அதனால்தான் இத்தனை தறிகெட்ட தடுமாற்றங்கள் நடைபெறுகின்றன. இந்த இரு சம்பவங்களும் முடிவின் ஆரம்பத்தை அடையாளப்படுத்துகின்றன என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.//
சிறு திருத்தம். இது முடிவின் ஆரம்பமல்ல, முடிவைத் தீர்மானித்த முக்கிய காரணிகள்.
விஜித தேரரைக் கொல்ல துடியாய்த் துடித்துக் கொண்டிருக்கும் ஒரு காவியுடைக் காவாலியை சட்டத்தின் முன்னிறுத்தி தகுந்த நடவடிக்கை எடுப்பதை விடுத்து, ஜனாதிபதியிடம் முறைப்பாடு செயயச் சென்ற அந்த தேரரிடம், உங்களை ஏன் பொது பல சேனா ஓட ஓட விரட்டுகின்றது என எவ்வித பொறுப்புமற்று கேள்வியைத் தொலைபேசியூடாக விடுத்துள்ளமை நடைபெறும் அனர்த்தங்களை எடை போட உதவுகின்றது,
அந்தத் தேரர் சிறுபான்மையினரான முஸ்லிம்கள் பாபசே யினால் காரணமின்றி தாக்கப்படுவதற்கு எதிராக கருத்து வெளிப்படுத்துகின்றார் என்ற குற்றச் சாட்டே அவர் மீது வைக்கப்படுகின்றது. அதுதான் அந்த தேரருக்கு கிடைத்த மரியாதை.
ஆனால் காலித்தனம் செய்யும் குற்றவாளிக்கு பாதுகாப்பும், சகல சுதந்திரமும் வழங்கப்படுகின்றது. காரணம் அந்தக் கழிசடை சிறுபான்மையினரின் மதங்களைக் கொச்சைப்படுத்துவதிலும், தாக்குவதிலும், அவதூறுகளை அள்ளி வீசுவதிலும் ஈடுபட்டு வருவதே!
No comments:
Post a Comment