Monday, November 11, 2013

பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை!

Commented by nizamhm on :  http://tinyurl.com/poqpgxg

BERU News

பொதுநலவாய இளைஞர் மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய உரை!

 //  மூன்று தசாப்த காலமாக எமது நாட்டை பீடித்திருந்த பயங்கரவாம் எமது இளைஞர் சமூகத்திற்கு மிகப் பெறும் பின்னடைவை ஏற்படுத்தியிருந்தது. பயங்கரவாதிகளால் பலவந்தமாக படையில் இணைத்துக்கொள்ளப்பட்ட ஒரு சிறுவர் போராளியை அல்லது ஒரு இளைஞரை எடுத்துக்கொள்ளுங்கள் அந்த சிறுவர்களும் இளைஞர்களும் தங்களது சுந்தர இளைஞர் பருவத்தையும் குழந்தைப் பருவத்தையும் இழந்துவிட்டனர். இந்த நீண்டகாலப் பகுதியில் எமது இளைஞர்கள் மிகப் பெரும்பாலான பெறுமதியான சந்தர்ப்பங்களை இழந்துவிட்டனர். //

மாண்புமிகு ஜனாதிபதி மிகச் சிறந்த கருத்துக்களைக் கூறியுள்ளார். அவரது சிந்தனைகளும் நன்றாகவே தொழிற்படுகின்றன.   யுத்தத்துள் நுழைக்கப்பட்ட சிறுவர்களின் வாழ்வை, பொன்னான இளமைக் காலத்தை சீரழிந்துள்ளனர். அவர்கள் பல் வேறு சந்தர்ப்பங்களை, நலன்களை, பருவத்தில் அனுபவிக்க வேண்டியவற்றை இழந்துள்ளமை, அவர்களின் கவனத்தை ஈர்த்தது.

அது போன்று, அல்லது அதைவிட மோசமாக, காரணமற்று வடக்கில் இருந்து புலிகளால் விரட்டியடிக்கப்பட்ட அந்த அப்பாவி முஸ்லிம் சிறுவர்களும், அத்தனை வரப்பிரசாதங்களை மட்டுமல்ல, சாதாரணமாக சிறுவர்கள் அநுபவிக்க வேண்டிய ஆகக் குறைந்தவற்றை, கல்வி, சந்தோஷம், சுதந்திரம் உட்பட எல்லாம் இழந்து அகதிகள் என்ற அவமானத்துடன், ஒதுக்கப்பட்டவர்களாக, ஓரங்கட்டவர்களாக, வறுமை, பிணிகளின் வாழ்விடங்களாக மாறி, அடிப்படை மனித உரிமை என்றால் என்னவென்றறியாத நிலையில் அவமே கழித்துள்ளனர்.

என்ன சாபக்கேடோ தெரியவில்லை, அல்லல் உறற அச்சிறுவர்களின் பரிதாப நிலை மட்டும்  மாண்பு மிகு ஜனாதிபதி அவர்களின் கண்ணில் கூட படாமலும், கருத்தை ஈர்க்காமலும் உள்ளது என்று அச்சிறுவர்கள் கேட்பது போன்று எனது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கின்றது.

இதற்கு என்ன பதிலை மாண்பு மிகு ஜனாதிபதி கூறப் போகின்றாரோ! பொறுத்திருந்து பார்ப்போம்.

No comments: