Commented by nizamhm1944 on: http://tinyurl.com/p6krp3q
BERU News
BERU News
சிங்களப் பெண்களின் அதிகரித்த கருக்கலைப்பால் பௌத்தம் முற்றாக இல்லாதொழிந்து போகும்!
கருக்கலைப்பிற்கான காரணங்கள் பல. அவற்றில் முறையற்ற தொடர்புகளால் ஏற்பட்ட கருவை அவமானத்திற்கு அஞ்சிக் கலைத்தல், பாலியல் பலாத்காரத்தால் உருவான கருவைக் கலைத்தல். சிறுவர்களின் தவறான நடத்தைகளால், அறியாமையால் உருவான கருவைக் கலைத்தல், விப்ச்சாரத் தொழிலால் ஏற்பட்ட கருவைக் கலைத்தல், எச் ஐவி போன்ற நோயுள்ளவர்கள் கருவில் உருவாகும் குழந்தையின் நலம் கருதிக் கலைத்தல், குறைபாடானான கரு உருவாகியிருந்ததை ஸ்கேன் செய்வதன் மூலம் கண்டறிந்து அக்கருவைக் கலைத்தல், வறுமை காரணமாகக் குழந்தைகள் போதுமென்ற நிலையில் கலைத்தல், திட்டமிட்ட குடும்ப வாழ்க்கை என்ற அரசின் அறிவுறுத்தல்களுக் கமைய கருவைக் கலைத்ல்,அந்தஸ்தைப் பேணுவதற்காகக் கருவைக் கலைத்தல், தமது ஆடம்பர சமூக வாழ்வுக்குக் குழந்தைகள் பிறப்பு தடையாகவிருப்பதாக நினைந்து கலைத்தல். தாய்மாரின் நலன் கருதிக் கருவைக் கலைத்தல் என்று பலவாறான காரணங்களுடன் கருக்கலைப்பு நடைபெறுகிறது. இதற்காக பல வைத்தியர்கள் சட்டத்திற்கு முரணான வகையில் கருக் கலைப்பிறகு உதவி வருவதும் ஒரு புதிய செய்தியல்ல.
எத்தனை குழந்தைகள் பிறக்க வேண்டுமோ அத்தனை குழந்தைகள் பிறந்தே தீரும். அதனைத் தடுத்திட எவரலும் முடியாது. அது போன்றே, அழிய வேண்டியவையும் அழிந்தே தீரும். இது இறை நியதி. இதனை மாற்றி அமைக்க எவராலும் முடியாது மட்டுமல்ல. அதனை மாற்ற முனைபவர்கள் இறை சிந்தனையோ, பயபக்தியோ அற்ற புல்லுருவிகள். இப்புல்லுருவிகள் தாம் இன்று சமூகத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றன.
சிங்கள சமூகம் அழிந்து விடும் என ஆரூடம் கூறுபவர் இந்த நாட்டின் பௌத்தர்களின் மதிப்புக்களைப் பெற்ற, தகுதி படைத்த, தம்மத்தை அனுஷ்டிக்கும், மகா சங்க நாயக்க தேரர்கள் அல்ல, மாறாக, நீதிமன்றால் குற்றவாளி எனக் காணப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டுத் தண்டப்பணம் கட்டிவர் என்பதே இந்த தேரரின் கருத்தை அறிந்து கொள்ள உதவும்.
மேலும், அண்மையில், பல மகா நாயக்க தேரர் இருப்பது பிழை எனவும், அத்தனையையும் ஒன்றாக்கி ஒரு தலைமையை உருவாக்க வேண்டும் என்ற தனது முட்டாள்தனமான கருத்தை தலதாவின் முன் நின்று கூச்சலிட்டவர்தான் இந்த தறிகெட்ட தேரர். அவரைத் தறிகெட்ட எனக் கூறுவதற்கான காரணம் பல இருப்பினும், மகா நாயக்க தேரர்கள் பற்றிய கருத்தை தெருவில் நின்று கூறியதையே முதன்மைக் காரணமாகக் கொள்ளலாம். அடுத்து அவர் பொய்யர், இட்டுக் கட்டும் இழிசிந்தனையாளர். புத்த பெருமான் கூறியபடி, மற்ற மதத்தை நிந்நிப்பவர்கள் தமது மதத்தையே நிந்திக்கின்றனர் என்ற கோட்பாட்டின்படி, புத்த தர்மத்தை நிந்திப்பவர்.
புத்த பகவான் திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்று, அவர்களது வாழ்விற்கு வகை செய்துவிட்டே அன்று துறவறம் பூண்டார், தேரர்கள் திருமணம் செய்யாததன் காரணமாகவே பௌத்த இனம் குறைந்து வருகிறது. அவர்களும் தாங்கள் மணமுடிக்க வேண்டும் என்ற ஒரு கருத்தை நாளை தெருவில் நின்று முன்வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அத்தோடு, இன்று ஐந்து, ஆறு வயதுச் சிறுவர்கள்கூட துறவிற்குள் உள்வாங்கப்படுகின்றமையும் பௌத்தர்களின் பிறப்பு விகிதம் குறைந்ததற்கான காரணங்களே எனக் கூறினும் ஆச்சரியப்படத் தேவையில்லை!
No comments:
Post a Comment