Wednesday, October 30, 2013

அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதில் நம் நாட்டில் புரட்சியொன்று ஏற்பட்டுள்ளது!

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/kh9hgun

Beru News

அதிவேக நெடுஞ்சாலைகளை அமைப்பதில் நம் நாட்டில் புரட்சியொன்று ஏற்பட்டுள்ளது!


// மக்களை பயங்கரவாத பிடியில் இருந்து விடுவித்து அவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை பெற்றுக் கொடுத்துள்ளது.//

மக்களைப் பயங்கரவாதப் பிடியில் இருந்து விடுவித்ததை மக்கள் நன்றியுடன் எப்போதும் நினைவு கூருகின்றார்கள். அது பலம் வாய்ந்த ஜேஆர், பிரேமதாஸ, சந்திரிகா முதலியோராலேயே செய்ய முடியாமற் போன் ஒன்று ! ஏன் அண்டை நாடான இந்தியாவின் அமைதி காக்கும் படை கூட அந்தப் புலிகளிடம் மண்ணைக் கவ்விச் சென்றது.

ஒன்றைக் கூறாமல் இருக்க முடியவில்லை.  உண்மையில் பயங்கரவாதப் பிடியில் இருந்த மக்கள் வடக்கு மக்கள்தான். ஆனால் அவர்கள் நிம்மதியாக வாழ்கின்றார்கள் எனக் கூறுவதை மட்டும் ஏற்க முடியாதுள்ளதாகவே மக்கள் கருதுகின்றனர்.  உண்மையும் அதுவே! போர் முடிந்தது என்பதனால், புலிகள் அழி்நததனால் மக்கள் மத்தியில் நிம்மதி வந்துவிட்டது என நினைப்பது பிழையான கணிப்பீடே! சமன்பாடே !!

எதற்காக மக்கள் இத்தனை தொல்லைகளுக்கும் முகங் கொடுக்க வேண்டி வந்ததோ அது களையப்படல் வேண்டும். அதன் பின்னரே மக்கள் மத்தியில் நிம்மதி ஏற்படும் சூழல் உருவாகும்.

வடக்கு முஸ்லிம்களின் நிலையில் எவ்வித மாற்றமும் இல்லை. வெறும் அறிக்கைகள் மட்டும் எதனையும் அவர்களுக்கு நல்வாழ்வைக் கொடுத்து விடாது. அவர்களது இழப்புகள் அனைத்தும் சீர் செய்யப்படல் மிக மிக முக்கியம்.  அதுவே மனிதாபிமானதும், நீதியானதும், நியாயமானதும், வேண்டப்படுவதும் கூட !

புலிகளால் வெறுங்கையோடு விரட்டி அடிக்கப்பட்டவர்களை, அரசும் வெறுங்கையோடு மீள் குடியறே்றம் செய்து விடலாம் என நினைத்தால், அது புலிகளுக்கும் அரசுக்கும் இடையில் எவ்வித வித்தியாசத்தையும் காட்டப் போவதில்லை. 

No comments: