Commented by nizamhm1944 on http://tinyurl.com/mbolv29
Lankamuslim.org
Lankamuslim.org
முஸ்லிம்கள் சார்பாக மனோ கணேசனிடம் மண்ணிப்புக் கேட்கின்றோம்: SLTJ
இவர்கள் அல்லாஹ்வால் வழிகெடுக்கப்ட்டவர்கள். இன்னும் சில முஸ்லிம் அமைச்சர்கள் இருக்கின்றனர். அவர்கள தமது அமைச்சர் பதவிக்காக முஸ்லிம்களைக் காட்டிக் கொடுப்பதில் நான் முந்தி, நீ முந்தி எனச் செயல்பட்டு ஆட்சியாளரிடம் நல்ல பெயர் பெற்றுக் கொள்ளப் பாடுபடுபவர்கள்.
முஸ்லிம்களு்க்கு இந்நாட்டில் நடப்பது பொய்ப் பிரசாரம் என நாக்கூசாமல், அல்லாஹ்வின் அச்சமின்றி, மறுமைப் பயமுமின்றிப் பகிரங்கமாகக் கூறுகின்றனர். இன்னும் சிலர், முஸ்லிம் பள்ளிகள் உடைக்கப்படுகின்றன என்ற கூற்றை நம்ப வேண்டாம் என மேடைகளில் கூறும் பொழுது கைகட்டி, வாய்பொத்தி அதனை ஆமோதிக்கின்றனர். இன்னும் சிலர், பள்ளிவாசல் உடைக்கப்பட்டதை எதிர்த்தால், நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள் எல்லாம் உடைக்கப்பட்டு விடும். அதனால் அந்நிலையில் இருந்து முஸ்லிம்களைக் காக்கவே மெளனமாக பிரச்சினை யைப் பெரிதுபடுத்தாமல் விடுகிறோம் என கப்சா விட்டு நம்மை முட்டாள்களாக்கப் பார்க்கிறார்கள்.
இதுதான் இன்றைய முஸ்லிம் அரசியல்வாதிகள் என்று தம்மை அறிமுகப்படுத்திக் கொள்ளும் பிரகிருதிகள் செய்து கொண்டிருப்பது. சரி அதுதான் போகட்டும் எனப் பார்த்தால், முஸ்லிம் களுக்காகப் பாராளுமன்றிலும், ஊடகங்களின் மேடைகளிலும் குரல் கொடுக்கும், சிங்கள, தமிழ் சகோதரர்களையும் சாடுகிறார்கள். உண்மையை வெளிப்படுத்தத் தடையாயுள்ளார்கள்.
வெளிநாட்டு முஸ்லிம் இராஜதந்திரிகளன் வருகையின் போது அவர்களைச் சந்தித்து, இந்நாட்டில் முஸ்லிம்கள் சகல சௌபாக்கியங்களுடனும் சுதந்திரமாக, எவ்வித அச்சமுமின்றி வாழ்கின்றார்கள் எனக் கூறி வைக்கிறார்கள். இங்கு முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக் கப்பட்டதாகக் கூறுப்படுவனவற்றுள் எவ்வித உண்மையுமில்லை என நிலைமையைத் தலைகீழாக மாற்றி விடுகிறார்கள். துரோகிகள்.
இங்கு முஸ்லிம்களுக்கு நடக்கும் பிரச்சினை, ஐநா மனித உரிமைக்கான ஆணையாளரால் கேள்விக்கு உட்படுத்தப்பட்டது ஓர் இறை செயல் என்றே கூற வேண்டியுள்ளது. எவருடைய பங்களிப்புமின்றி தானாக நடைபெற்றது. இந்த சுயநல, நக்கி வாழும் முஸ்லிம் அரசியல்வாதி களால் மேற்கண்ட நவின் அம்மையாரின் குற்றச்சாட்டுக்கூட பொயயாகிவிடும் நிலையே தோன்றியுள்ளது.
முஸ்லிம மக்கள் இந்த தறுதலைகளுக்கு எதிராக பகிரங்கமாக ஆர்பாட்டங்களை நடத்தி இவர்களின் தோலை உரித்து, உண்மை உருவை உலகுக்குக் காட்ட வேண்டும்.
அத்தோடு இவர்களின் தீங்குகளிலிருந்து முஸ்லிம்களைக் காப்பாற்றுமாறு வல்ல நாயன் அல்லாஹ்விடம் இரு கரம் ஏந்திப் பிரார்த்திக்க வேண்டும். இவை காலத்தின் கட்டாயம். தவற விடுவோமாயின் பின்னர் வருந்த வேண்டி வரும்.
No comments:
Post a Comment