Commented by nizamhm1944 on : http://tinyurl.com/n97m5yy
Lankamuslim.org
நல்லாட்சியை ஏற்படுத்த தேசிய அரசியலிலும் பங்கெடுப்போம்: நஜா
Lankamuslim.org
நல்லாட்சியை ஏற்படுத்த தேசிய அரசியலிலும் பங்கெடுப்போம்: நஜா
1990இல் வடக்கு முஸ்லிம்கள் காரணமின்றி புலிகளால் வெளியேற்றப்பட்டமை, புலிகள் செய்த பாரி பிழை (BLUNDER) என புலிகளின் அரசியல் ஆலோசகர் அன்ரன் பாலசிங்கமும், அது தமது பிழைதான் என்பதை புலிகளின் தலைவர் பிரபாகரனும், தமது இயக்கம் முழுப்பலத்துடன் இருந்த காலத்தில் எவருடைய அழுத்தமும் இன்றி, அப்பிழையின் தாக்கத்தையும், தமது பின்னடைவின் காரணத்தையும், அதாவது, முஸ்லிம்களற்று வடக்கு கிழக்குக்கு ஒரு தீர்வு ஏற்பட்டுவிட முடியாது என்ற யதார்த்தத்தை நன்குணர்ந்து, முதலும் கடைசியுமாக அவர்களால் புரிந்துணர்வு ஒப்பந்தம் அமுலில் இருந்த காலத்தில் நடத்தப்பட்ட சர்வதேச ஊடக மாநாட்டில் ஏற்றுக் கொண்டமை சர்வதேச ரீதியாக பதிவாக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் பதிவே! தமது அடைவுக்கு தேவையாயிருந்த சர்வதேசத்தின் பங்களிப்பு கிடைக்கத் தடையாகவிருந்த மறைமுக உண்மை.
மேற்கண்ட உண்மையை எவரது மறுப்பும் இல்லாதாக்ககிவிடப் போவதில்லை. இதனை மறுப்பவர்கள், புலிகளையும் மறுப்பவர்களே ! மட்டுமல்ல தமிழர்களுக்கு விமோசனம் பெற்றுக் கொடுக்க முடியாதவர்களே! முஸ்லிம்களின் பங்களிப்பற்ற ஒரு தீர்வு சிறுபான்மையினருக்கு என்றும் கிடைக்கப் போவதில்லை. அது குதிரைக் கொம்பே ! இந்நிலை இரு இனங்களுக்கும் பாதிப்பையே தரும்.
புலிகளின் போராட்டத்துக்கு முழுமையான சர்வதேச அங்கீகாரம் கிடைப்பதில் முட்டுக்கட்டையாக இருந்தது, தமிழ் பேசும் சிறுபான்மையினராக வடக்கில் பாரம்பரியமாக வாழ்ந்தவர்களை ஆயுத முனையில் வெளியேற்றி இன அழிப்பைச் செய்தமையே. மட்டுமல்ல சிறுபான்மையினருக்கான புலிகளின் உரிமைப் போராட்டத்தை மலினப்படுத்தியதுடன், நலிவடையவும் செய்திருந்தது அச்செய்கை. அதுவே அவர்களாலேயே அதனை ஓர் Great Blunder of the Tigers என்ற விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டது.
No comments:
Post a Comment