Commented by nizamhm1944 on http://tinyurl.com/ns4kg2r
Lankamuslim.org
Lankamuslim.org
குண்டுச் சட்டிக்குள் ஓடும் குதிரைகள்!
தமிழில் ஒரு அழகான பழமொழியுண்டு, அது இந்த முஸ்லிம் அரசியல் விபச்சாரிகளுக்கு நன்றாகவே பொருந்தும் ”நக்குகின்ற நாய் செக்கிலும் நக்கும், சிவலிங்கத்திலும் நக்கும்’ ஆக இவர்கள் தொழி்ல் நக்கிப் பிழைப்பது என்பதை தாங்களே வெளிப்படுத்தி வருகின்றார்கள். தேங்காய் நெய் வாசம் வந்தால் போதும் அங்கெல்லாம் தமது நக்கும் தொழிலைச் செய்வோம் என வரிந்து கட்டி வாழ்க்கையை நடத்துகின்றார்கள்.
இன்னொரு அழகான சம்பவம் கூறுவது இவர்களது செயலை நன்கு படம் பிடித்துக் காட்டுவது. தமிழர்களில் கூலிக்கு மாரடிக்கும் பழக்கம் உள்ளது. அதாவது மரண வீட்டில் கூலி பெற்றுக் கொண்டு மார்பில் அடித்துக் கதறுவது. ஒரு செத்த வீட்டிற்கு கூலிக்கு மாரடிக்கும் இருவர் சென்றுள்ளனர். அந்த வீட்டில் பந்தலில் நன்கு முற்றிய பாகற்காய்கள் கிடந்ததை வந்தவளில் ஒருத்தி அவதானித்து, ’பந்தலிலே பாகற்காய், பந்தலிலே பாகற் காய்’ என்று ஒப்பாரியின் நடுவே கூற, மற்றவளும் நான் என்ன காணவில்லை என நினைக்கிறாயா என்ற தோரணையில், ’போகைக்க பாத்துக்கலாம், போகைக்க பாத்துக்கலாம்” என்ற கூற, கணவனைப் பறிகொடுத்த அந்த வீட்டுக்காரி, நான் ஒன்றும் சும்மா இருக்கவில்லை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன் என்பதைக் காட்ட, ”அது விதைக்கலலோ விட்டிருக்கு, விதைக்கல்லோ விடடிருக்கு” எ்னறாளாம். இதுதான் முஸ்லிம்களின் பிரச்சினையில் நடக்கும் மாரடிப்புகளில் நடப்பது.
இது முஸ்லிம் உரிமைகளைப் பெற்றுக் கொடுக்கவே தாம் அரசியல் பிரவேசம் செய்ததாகவும், பெற்றுக் கொடுத்துக் கொண்டு இருப்பதாகவும், இனியும் பெற்றுக் கொடுப்போம் என வீராவேசம் பேசும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் நிலை.
உண்மையில் அக்கரைப்பற்றில் அந்த விழாவில் நடந்த அந்த அசிங்கமான பாராட்டு நிகழ்வைப் பார்த்தபோது எத்தனை முஸ்லிம்கள் இரத்தம் கொதிப்படைந்திருப்பார்களோ! கொதிப்படையாதிருந்தால் அது ஆச்சரியமே !
ஆங்கிலத்தில், இன்னொரு சிறந்த கருத்து கூறப்படுகின்றது. " Benefitting out of others distress" மற்றவனுடைய துன்ப துயரத்தை சந்தைப்படுத்தி, அதிலும் இலாபம் சம்பாதிப்பது.
இதுதான் தற்போதை முஸ்லிம் அரசியலில் நடைபெறும் மிகச் சிறந்த வருவாய் தரும் தொழிலாகக் கருதப்படுகின்றது. உண்மையில் உலகில் நடைபெறும் குற்றச் செயல்களில் மிக மோசமான குற்றச் செயல் இதுவே! இதற்கான கேள்வி அதிகமாக உள்ளதால், இதனைச் செய்வதற்கு முன்வர சிலரே இருப்பதால், அவர்களுக்கு கிராக்கி அதிகம், அதனால் வருவாயின் அளவும் எதிர்பார்ப்பதைவிடக் கூடவே கிடைக்கின்றது.
No comments:
Post a Comment