Commented by nizamhm1944 on : http://tinyurl.com/nv85d8c
BERU NEWS
// ஒரு காலத்தில், கொழும்பைப் போல சிங்கப்பூரையும் மாற்றியமைக்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு எழில் கொஞ்சும் நாடாக விளங்கிய எமது நாட்டை, மூன்று தசாப்த காலமாக ஆட்கொண்டிருந்த அந்தக் கொடிய நாசகார யுத்தமானது சின்னாபின்னமாக்கி, நிம்மதி என்றால் என்ன என்று கேட்கக்கூடியளவு மக்கள் கதிகலங்கிப்போய் இருந்தார்கள் //
BERU NEWS
பொது நலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாட்டை நோக்கி ஒரு பார்வை!
// ஒரு காலத்தில், கொழும்பைப் போல சிங்கப்பூரையும் மாற்றியமைக்க வேண்டும் என்று சொல்லுமளவுக்கு எழில் கொஞ்சும் நாடாக விளங்கிய எமது நாட்டை, மூன்று தசாப்த காலமாக ஆட்கொண்டிருந்த அந்தக் கொடிய நாசகார யுத்தமானது சின்னாபின்னமாக்கி, நிம்மதி என்றால் என்ன என்று கேட்கக்கூடியளவு மக்கள் கதிகலங்கிப்போய் இருந்தார்கள் //
மேற்கண்ட பந்தியில் மிகச் சிறந்த உண்மை ஒன்று பரிணமித்து நிற்கின்றது. அது ஒரு எச்சரிக்கை, அச்சமூட்டல் என்றும் கூறலாம். சிங்கப்பூர் கொழும்பை முன்மாதிரியாகக் கொள்ள வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்தும் அளவுக்கு அக்கால கட்டத்தில் அவ்வளவு சிறந்த தரத்திலேயே இந்நாடு இருந்துள்ளது.
அதன் பின்னர் இங்கு நடைபெற்ற ஒடுக்கு முறைகளும், அடக்கு முறைகளும், அடாவடித்தனங்களும், பிரஜைகளுள் ஏற்படுத்தப்பட்ட ஏற்றத்தாழ்வுமே, இந்நாடு 30 வருட கொடூர யுத்தமொன்றுக்குள் இவ்வழகுத் திருநதாட்டை நுழைய வைத்து அலங்கோலத்தை ஏற்படுத்தி உள்ளது என்பதைக் கட்டுரையாளர் ஏற்பாராயின், அபிவிருத்திக்கு முன்னர் செய்யப்பட வேண்டிய மற்றொரு முக்கிய பிரச்சினை தீர்த்து வைக்கப்படல் வேண்டும் என்பதை வெளிப்படுத்தியிரு்ப்பார்.
அதே பிரச்சினை தீ்ர்க்ப்படாமலே மேலும், பரந்து விரிந்து எங்கும் தனது தீச்சுவாலை என்ற நாக்கால் மற்றைய இனங்களையும் நக்கி, நசுக்கி அழிக்கும் வகையில், கட்டுப்படுத்துவாரோ, மட்டுப்படுத்துவாரோ இன்றி, தட்டிக்கொடுக்கும், தடவிக் கொடுக்கும் நிலையுடன் பரவிக் கொண்டிருக்கின்றது.
முப்பது ஆண்டு கோரத்துக்குக் காரணம் கண்டறியப்பட்டும், தீர்த்து வைக்கப்படாமல் செய்யப்படும் அனைத்தும் தடப்புரள்கை, அல்லது குதிரைக்கு முன்னால் வண்டியைப் பூட்டிய நிலையே ! அன்றி தந்திரோபாய மடைமாற்றலே !அதனால் எதன் காரணமாக முன்னைய அழிவுகள் ஏற்பட்டனவோ அக்காரணம் களையாமல் செய்யப்படும் அபிவிருத்திகள் அழிவுகளை எதிர் நோக்கியவையாகவே இருக்கும்.
இதுவே, எந்த சிங்கப்பூர் பிரதமர் இந்நாடை முன்மாதிரியாகக் கொள்ள நினைத்தாரோ, அவரே இன்று சிங்கப்பூர் பிரதமராக இல்லாத நிலையிலும், அவரது மகனின் ஆட்சி நடைபெறும் இக்காலத்தில், இல்ங்கையின் போக்கு பற்றி அதிபரைப் பற்றிக் கடுமையான விமர்சனம் ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார்.
ஆதலின் பிரச்சினைகளை ஓரங்கட்டிவிட்டுச் செயற்படுத்தப்படும் எதுவாயினும் அது நாட்டு நலனைக் கொண்டது என்று எவராலும் கூறமுடியாது. விரயம் என்ற நிலையை எட்டிவிட நேரமெடுக்காது!
No comments:
Post a Comment