Commented by nizamhm1944 on: http://tinyurl.com/omzn2qy
BERU News
// கடந்த வருடம் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு முன்னதாக தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் பரீட்சையில் வந்த அதே கேள்விகளை மாதிரி வினாத்தாளாக அச்சிட்டு வழங்கியிருந்தமை தொடர்பில் எழுந்த சர்ச்சையையடுத்தே பரீட்சைகள் திணைக்களமும் கல்வியமைச்சும் இணைந்து இத்தீர்மானத்தினை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது //
BERU News
ரியூஷன்கள், மாதிரி வினாத்தாள்கள் கருத்தரங்குகளுக்கு நள்ளிரவு முதல் தடை!
// கடந்த வருடம் க.பொ.த. சாதாரணதரப் பரீட்சைக்கு முன்னதாக தனியார் வகுப்பு ஆசிரியரொருவர் பரீட்சையில் வந்த அதே கேள்விகளை மாதிரி வினாத்தாளாக அச்சிட்டு வழங்கியிருந்தமை தொடர்பில் எழுந்த சர்ச்சையையடுத்தே பரீட்சைகள் திணைக்களமும் கல்வியமைச்சும் இணைந்து இத்தீர்மானத்தினை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது //
இவ்விடயம் பரீட்சைத் திணைக்களத்தின் கையாலாகாத் தனத்தை வெளிப்படுத்துகின்றது. பரீட்சைத் திணைக்களத்துள் மிக மிக அந்தரங்கமாகத் தயாரிக்கப்படும், வினாத்தள்கள் எப்படி வெளியாகின்றன என்பதைக் கண்டுபிடிப்பதையும், அதனைச் சீர்செய்வதையும் விடுத்து எடுக்கப்படும் எவ்வித நடவஎக்கையும், பரீட்சை வினாக்கள் வெளியாவதைத் தடுத்துவிடப் போவதில்லை என்பதை அறியாதிருந்தால், நம் நிலை பற்றிச் சிந்திக்கவே வேண்டியுள்ளது.
உண்மையில், டியூஷன் வகுப்புகளும், மாணாக்கர் நலன் என்ற அடிப்படையில் தொடர்ந்து கொண்டிருக்கும் அனைத்துச் செயற்பாடுகளும், பாடசாலைக் கல்வியின் நிலையை வெளிப்படுத்துவன. பாடசாலைக் கல்வி சீராக மாணவருக்குக் கொடுக்கப்படுமாக இருந்தால் காளாண்களாகப் பெருகியிருக்கும், டியூஷன் வகுப்புகள் தோன்றியிரா!
தனியார் கல்வி நிலையங்களில் கற்கும் மாணவர்களுக்காக டியூஷன் வகுப்புகள் தோன்றியிருப்பதாக தெரியவில்லை என்பது, நிலைமையை சீர்தூக்கிப் பார்த்து அறிந்து கொள்ளவும், மாற்று நடவடிககைகள் எடுத்து, பாடசாலைக் கல்வியை மேம்படுத்தவும், அதன் மூலம் படிப்படியாக டியூஷன் தொல்லையையும், பெற்றார், மாணாக்கர் டியூஷன் மோக மனநிலையையும் தீர்க்க, மாற்றக் கூடியதாகவிருக்கும்.
இது மட்டுமல்ல, விடைத்தாள் திருத்தும் நிலையங்களில் நடைபெறும் குழறுபடிகளையும், களைவதற்கான மாற்று வழிகனளக் கண்டறிய வேண்டும்.
உத்தியோகங்கள் வழங்கப்படு முன்னர், சான்றிதழ்களைப் பார்த்து, நியமனங்கள் செய்யாது, அறிவை அளந்து தகுதியானவர்களைத் தெரிவு செய்யும் நடைமுறை பின்பற்றப்படல் வேண்டும். இன்றேல், தராதரப்பத்திரங்களைப் படிக்காமலே பெற்றுக் கொள்ளும் குறுக்கு வழிகளை மாணாக்கரும், பெற்றாரும் தேடிக் கொண்டிருக்கும் அவல நிலைகளை மாற்றியமைத்துவிட முடியாது.
இதன் மூலம் நடைபெறும் அவலங்களில் இருந்து நாட்டை விடுவிக்கலாம் !
No comments:
Post a Comment