Tuesday, December 3, 2013

வணக்க ஸ்தலங்கள் இடிக்கப்படுவதை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

Commented by nizamhm1944 on: http://tinyurl.com/nccdegq

Lankamuslim.org

வணக்க ஸ்தலங்கள் இடிக்கப்படுவதை நிறுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை

புததர் சிலை இல்லாத இராணுவ முகாம்களே இந்நாட்டில்  இருக்காது என்பது உண்மையே! எங்கெல்லாம் முகாம்கள் ஏற்படுத்தப்படுகின்றனவோ அங்கெல்லாம் மதவழிபாட்டுத்தலங்களும் உருவாகிவிடுவதைத் தவிர்க்கவும் முடியாது எனக் ககூறலாம். இந்திய அமைதி காக்கும் படை இங்கு இருந்த காலத்தில் அவர்ககும் தமது வழிபாட்டிடங்களை அமைத்தே இருந்தார்க்ள். இது மனிதன் வாழுமிடங்களில் அவை தோன்றுவது நியாயமானதே என்பதை வலியுறுத்துகின்றது. தற்போது அழிக்கப்படும் கணிதம் விடைதராதது.

பாதுகாப்பு வலயங்களாக இருந்த பகுதிகள்ில் காண்ப்படும் மதவழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்படுவதாகக் கூறப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்துவதே! தற்போது அவை இடிக்கப்படுவதில் இருந்து, யுத்தம் நடைபெற்ற காலங்களில் கூட அவை அங்கு  இருந்திருக்கின்றன என்பது தெரிய வருகின்றது. மேலும், பெளத்தர்க்ள் பெரும்பாலோர் இந்துக் கடவுளரை வழிபடுபவர்களே!

அப்போது அவை இருக்க முடியுமானால், தற்போது என்ன காரணத்துக்காக அழிக்கப்படுகின்றன என்பதை, சாதாரண நிகழ்வாக ஒதுக்கிட முடியாதது. அத்தோடு, பொதும்க்கள் செறிந்து வாழும் தெற்கிலும்கூட  மதவழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படும், அகற்றப்படும் அதே வேளை, புதிதுபுதிதாக காரியாலய முற்றங்களிலும்.பொதுச் சந்திகளிலும்,  சுற்றுவட்டங்களிலும், இன்னபிற இடங்களிலும் புத்த சிலைகள் நட்டப்படுகின்றன என்பது, மக்கள் மத்தியில் மட்டுமல்ல, சமூக  ஆர்வலர்கள், அமைதி விரும்புவோர், மதவிரோத சிந்தனையற்ற சிங்கள, தமிழ், முஸ்லிம்கள் மத்தியிலும், வெளிநாடுகளிலும் கூட பலத்த சந்தேகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.  இது நல்ல சகுனமாகத் தெரியவில்லை.  இறைசாபத்தைக்கூட வருவிப்பது.  யாப்பையும் கேலிப்பொருளாக மாற்றியுள்ளது.

No comments: