Commented by nizamhm1944: http://tinyurl.com/q4hjc5y
Lankamuslim.org
Lankamuslim.org
ஆதாரத்தோடு நிரூபித்தால் கடும் நடவடிக்கை எடுப்பேன்!: ஜனாதிபதி
கடந்த இரு வருடங்களாக நாட்டில் பாரிய பிரச்சினையாக உருவாகிக் கொண்டு இருக்கும் நிலையில், உலகத் தலைவர்கள் உட்பட அனைவரதும் கவனத்தை ஈர்த்து, மனித உரிமை ஆணையாளரால்கூட ஐநா வில் பேசப்பட்ட பின்னர், ஜனாதிபதி முஸ்லிம் இராஜ தந்திரிகள் மத்தியில் ஆற்றிய உரை, அந்த இராஜ தந்திரிகளின் உள்ளத்தில் எவ்வாறான கருத்தை ஏற்படுத்தி இருக்குமோ!
ஆனால், இந்நாட்டில் வாழும் சிறுபான்மையினரான முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், மற்றும், நடுநிலையாளர்கள், அவதானிகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பாரிய அவநம்பிக்கையை, அச்சத்தை, விரக்தியை ஏற்படுத்தியுள்ளமை ஆரோக்கியமானதல்ல!
குறிப்பாக பொதுபலசேனாவின் பேச்சுக்களையும். ஊடக அறிக்கைகளையும் வாசிப்போர் இங்கு நடப்பது என்ன என்று இலகுவாக அறிந்து கொள்வர். நாட்டின் சட்ட நடைமுறை என்பது, ஜனாதிபதியிடம் நிரூபித்து நீதி பெறுவதாக இருந்தால், இந்நாட்டின் அனைத்து முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி, மதவிரோத நடவடிக்கைகளை முன்வைத்த போது, ஜனாதிபதியால் அவர்களுக்கு, இதன் பின்னர் இதுபோன்ற மதவிரோத நடவடிக்கைகள் இடம் பெற்றால், அப்படியானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியிருக்கத் தேவையில்லை.
எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளின் மேடைப் பேச்சுக்கள் பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டு, அவர்களது பேச்சுக்கள் நாட்டில் பிரச்சினையைத் தூண்டுவதாகக் கூறி அவர்கள் மேல் விசாரனை நடத்தப்படவும், வழக்குகள் பதிவாக்கவும் செய்யும் நடவடிக்கைகள் இந்நாட்டில் இன்றும் இருக்கின்றன.
இது போன்ற பகிரங்கமாக நடைபெறும், யாப்பு மீறல்கள் கூட, தனி மனிதரால், ஸ்தாபன ரீதியில் நிரூபிக்கப்படுவதில்லை. மேலும், குற்றச் செயல்களைக் கண்காணிப்பதும்,விசாரணைக்கு உட்படுத்தி, ஆதாரங்களுடன், நீதிமன்றுக்கு சமர்ப்பிப்பதும், நிரூபிப்பதும் கூட, பொலிஸாரினது கடமையே! அவர்கள், இந்த விடயத்தில், தமது கடமைச் செய்யவில்லை என்பது, மக்களால், பொலிஸார் மீது சுமத்தப்பட்ட குற்றச் சாட்டு.
1983 ஜூலையில் தெற்கில் தமிழர்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்ப்ட்ட அராஜகத்தின் போது, அதனைக் கட்டுப்படுத்த பொலீஸ் படையும் தவறியதுடன், பொறுப்புள்ள அரசும், மெளனித்ததுடன், நாட்டின் அதிபரே, பகிரங்கமாக, ஆத்திரம அடைந்த சிங்கள மக்கள் செய்கின்றார்கள் என அப்பாவிச் சிங்களவர் மேல் பழியைப் போட்டதன் பின்னணியால் உருவானதே, அகில உலகிலும் சிங்களவருககும், பௌத்தத்திற்கும் ஏற்படுத்தப்பட்ட அபகீர்த்தியும். மேலும், அதனால் தொடர்ந்த முப்பதாண்டுக் கொடூரங்களும், அழிவுகளும், உயிரிழப்புகளும், மறக்க முடியாதவை. இன்னும், இற்றைவரை நடைபெற்றுக் கொண்டு இருக்கும் சர்வதேசத் தலையீடுகளும், குற்றச்சாட்டுக்களும். ஐநாவில் முன்மொழியப்படுகின்ற தீர்மானங்களும். தொடர் நடவடிக்கைகளும் கூட, அன்றைய நாட்டின் அதிபரின் உரையின் எதிர்விளைவே!
No comments:
Post a Comment