Monday, December 30, 2013

தமிழர்களும் , முஸ்லிம்களும் இணைந்து போராடும் தருணம் இது!

Commented on :  http://tinyurl.com/lh5vqpn
Lankamuslim.org

தமிழர்களும் , முஸ்லிம்களும் இணைந்து போராடும் தருணம் இது!

அப்பட்டமான உண்மைகள் பலவற்றை அள்ளி வீசியிருப்பது குறித்துப் பாராட்டாமல் இருக்க முடியாது. அத்தனையும் உண்மை மட்டுமல்ல, இதற்கு மேலும் உள்ளது.

நாசுவன் (நாவிதன்) குப்பையைக் கிளறினால் மயிரைத் தவிர எதுவும் இருக்காது எ்ன்ற நிலையே இலங்கை முஸ்லிம்கள் அரசியல்வாதிகள்எனத் தம்மைக் கூறிக் கொள்ளும் அரசியல்வியாபாரம் செய்வோர் பற்றிய விமர்சனம்.

இந்த அரசியல்வாதிகள், நக்குண்டார் நாவிழந்தார் நிலையில், கழுவ முடியாத கறைபடிந்த அங்கங்களைக் கொண்டவர்கள், இவர்கள் துதி பாடியேனும், தம் கதியைத் தக்க வைத்துக்கொள்ளாது எதிர்ப்புக் காட்டினால், தமது கோவைகள் அடியில் இருந்து இழுக்கப்பட்டு, தாங்கள் குப்பைகளைவிடக் கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம் எனற் அச்ச நிலையே தவிர இல்லை.

ஆதலால், பட்ட மரம் தளிர்த்துப் பால் வடியும் என எதிர்பார்த்திருப்பதை ஒத்ததே, முஸலிம் அரசியல்வாதிகளால், முஸ்லி்மகளுக்கு விமோசனம் கிடைக்கும் என எதிர்பார்ப்பது! அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான அறிக்கைகளை விடுவதையாவது தவிர்ப்பார்களாயின் அதுவே முஸ்லிம்களுக்குச் செய்யும் பேருதவியாக இருக்கும்.

ஆதலால், அனைத்து இனங்களிலுமுள்ள புத்திஜீவிகள், ஆர்வலர்கள், சமூக நலன் நாடுவோர் ஒன்றிணைந்து ஆக்கபூர்வமாச் சிந்தித்து, செயற்படுவதே நன்மை பயப்பது. பாதிக்கப்ட்டோர் அனைவரும், சிங்களவர் பெளத்தர் உட்பட, கிறிஸ்தவர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாட்டைக் காக்கும் முயற்சியில் ஈடுபடுதல் இன்றியமையாதது.

தமிழர்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும். அது அரசியலவாதிகளின் தலைமையில் எ்னபதில் ஏற்கனவே கற்ற பாடங்கள் இரண்டு முறை சிந்திக்க வைக்கின்றது. இது போன்ற முஸ்லிம் அரசியல்வாதிகள் அங்கும் வரமாட்டார்கள் எனபதற்கும், இதுவரை வரவில்லை என்பதற்கும் உத்தரவாதமில்லை.

மேலும், எதிர்பார்க்கப்படும் தமிழ் – முஸ்லிம் இணைவு பெரும்பான்மைச் சமூகத்தவர் மத்தியில் விஷவிதையாகத் தூவப்பட்டு பிரச்சினையை சிக்கலாக்கிவிடும்.

சிறுபான்மையினர் பிரச்சினைகள் நியாயமானவை தீர்க்கப்பட வேண்டியவை என சிங்கள சமூகத்தைஉணர வைக்கும் நிலையை ஏற்படுத்துவது, சிரமமாயினும் அதுவே நிரந்தரமான, நியாயமான, கௌரவமான தீர்வை எட்ட வைக்க உதவுவது.

சிங்கள பெரும்பான்மையினரிடம் இருந்து “சிறுபான்மையர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும்“ என்ற குரல் காட்டமாக ஒலிக்க வேண்டும்! அதுவே வெற்றிப் பாதையில் அனைவரையும் செலுத்தும். இந்நாடும் சுபிட்சப் பாதையில் பயணிக்கும்.