Saturday, April 13, 2013

உரிமை


உரிமை

உரிமை கேட்போர், முதலில் உரிமை என தாம் நினைத்துக் கேட்பது,  கேட்கக் கூடிய உரிமைதானா ? அவ்வுரிமை தமக்கு உள்ளதா? என்பதைப் பகுப்பாய்வு செய்து அறிய வேண்டும்

அடுத்து அது, யாரிடம்? எப்படி? எப்போது? கேட்பவருக்கு அதனைத் தரும் தகுதி, அதிகாரம், அந்தஸ்து, மனம், தரக்கூடிய நிலை, சூழல், தந்தாலும் செல்லுபடியாகும் தன்மை,  நீடித்து நிலைக்கும் பண்பு  உள்ளனவா  போன்ற இன்னோரன்ன வற்றைத் தெளிவாக தெரிந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இன்னும், இவை எல்லாம் சரியாக உள்ளன, இப்போது நமது உரிமையைக் கேட்கலாம் என்ற முடிவுக்கு வந்த போது, யார் கேட்பது, அவர் தகுதி, யோக்கியதை, திறமை, வழி நடத்தும் பண்பு, பொறுமை, விளக்கம், நிலை களங்கா உள்ளம், சரியான தேர்வு. தீர்மானம் எடுக்கும் சமயோசிதம், முன்பின் முரணற்ற தன்மை, ஆத்திரமடையாத உயர் பண்பு போன்றவைகள் உள்ளவராக,  உண்மை, நேர்‌மை, சுயநலமின்மை, எதிர்பார்ப்பின்மை அல்லது அத்த‌னை பண்புகளையும் கொண்ட சிறு குழுவாவது ஒன்றிணைந்து, ஒற்றுமையாக இருப்பதை உறுதி செய்து கொளள வேண்டும்.

தர்ம் தேர்ந்தெடுத்த உரிமையைப் பெற்றுக் கொள்ளும், சாத்வீகமான வழிமுறை, எச்சந்தர்ப்பத்திலும் திசை திரும்பாது, வன்முறையாக மாறாது, அல்லது வன்முறைக்கு வித்திடாது, திசைதிருப்பப்படும் தந்திரங்களுக்குள் சிக்காமை ஆகிய மிக உயர்ந்த பண்புகளை கொண்டிருக்க வேண்டும்.

நமது போராட்ட முறையைக் கண்டு சம்பந்தப்பட்டவர்களை உள்ளம் உருக வைத்து, கடின மனத்தையும் ஆட்டங்காண வைத்து, அடக்கு முறையால் இவர்களை வெல்ல முடியாது, இவர்களது பிரச்சினையைத் தீர்த்து, அவர்களது உரிமையைக் கொடுப்பதே ஓரே சிறந்த வழி என்பதை உரியவர்களை விளங்க வைத்து, நமது உரிமையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும் பொது மக்கள் நாம் கேட்கும் உரிமை

 நியாயமானதே, அதனை அவர்களுக்கு வழங்கவே வேண்டும், அப்படி வழங்குவதனால் நமது பண்பும் மரியாதையும் மேலோங்கும் போன்ற நிலையில் பெறப்பட வேண்டும். அப்படிப்  பெற்றுக் கொள்ளப்பட்ட உரிமையே நிலைத்து நிற்கும், அமைதியை உருவாக்கும். புரிந்துணர்வை ஏற்படுத்தும், ஒருவரை ஒருவர் மதிக்கவும், அவர்களது உரிமைகளை பாதுக்காக்கவும் கூடியதான நல்லெண்ண நிலையை ஏற்படுத்தும். நிஸாம்

No comments: