Commented by nizamhm1944 on:
Voice Of Mannar
வடக்கில் முஸ்லிம்கள் வந்தேறு குடிகளல்ல – ஹூனைஸ் பாரூக்
// புலிகள் அவர்களது போராட்டத்தை முன்னெடுத்தமை சரியா? பிழையா?என்பது பின்னர் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயம்.இருந்தாலும் அன்றைய சூழல் முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும்.தற்போதைய நிலையில் வெளியேற்றப்பட்ட அந்த முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்ற குறைந்தளவிலான உணர்வு அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது தான் மனித நேயம். //
”அன்றைய சூழல் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும்.” . இப்படிக் கூறுவதற்கான எவ்வித சூழலும் அன்று, முஸ்லிம்களைப் புலிகள் பலாத்காரமாக வெளியேற்றுவதற்கு ஆதாரமாகக் காணப்படவிலலை. அன்று நடந்தது, முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட, நியாயப்படுத்தப்பட முடியாத ஒரு இனச் சுத்திகரிப்பே தவிர வேறெதுவுமில்லை.
மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் அல்லது செய்யப்பட வேண்டும் என்பது மனித நேயத்தின் அடிப்படையில் நடைபெற வேண்டியதில்லை. மீள்குடியேறுவது வடக்கு முஸ்லிம்களின் பிறப்புரிமை, அடிப்படை மனித உரிமை. அதில் எவரும் தலையிட முடியாது. அதற்கு யாருடைய அனுதாபமோ, அனுமதியோ, தயவோ தேவையில்லை.
ஆனால் அரசுக்கு ஒரு கடமையுள்ளது. அது அவர்களை, அவர்கள் வாழ்ந்த பூமியில், காலங்காலமாக அவர்கள் அனுபவித்து வந்த அனைத்து சௌபாக்கியங்களோடும், உரிமைகளோடும், கௌரவமாக வாழ்வதற்கு வசதி செய்து கொடுக்கப்படுவது.
// புலிகள் அவர்களது போராட்டத்தை முன்னெடுத்தமை சரியா? பிழையா?என்பது பின்னர் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய விடயம்.இருந்தாலும் அன்றைய சூழல் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும்.தற்போதைய நிலையில் வெளியேற்றப்பட்ட அந்த முஸ்லிம்களை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்ற குறைந்தளவிலான உணர்வு அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது தான் மனித நேயம். //
”அன்றைய சூழல் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள் என்று வைத்துக் கொண்டாலும்.” . இப்படிக் கூறுவதற்கான எவ்வித சூழலும் அன்று, முஸ்லிம்களைப் புலிகள் பலாத்காரமாக வெளியேற்றுவதற்கு ஆதாரமாகக் காணப்படவிலலை. அன்று நடந்தது, முழுக்க முழுக்க திட்டமிடப்பட்ட, நியாயப்படுத்தப்பட முடியாத ஒரு இனச் சுத்திகரிப்பே தவிர வேறெதுவு மில்லை.
மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் அல்லது செய்யப்பட வேண்டும் என்பது மனித நேயத்தின் அடிப்படையில் நடைபெற வேண்டியதில்லை. மீள்குடியேறுவது வடக்கு முஸ்லிம்களின் பிறப்புரிமை, அடிப்படை மனித உரிமை. அதில் எவரும் தலையிட முடியாது. அதற்கு யாருடைய அனுதாபமோ, அனுமதியோ, தயவோ தேவையில்லை.
ஆனால் அரசுக்கு ஒரு கடமையுள்ளது. அது அவர்களை, அவர்கள் வாழ்ந்த பூமியில், காலங்காலமாக அவர்கள் அனுபவித்து வந்த அனைத்து சௌபாக்கியங்களோடும், உரிமைகளோடும், கௌரவமாக வாழ்வதற்கு வசதி செய்து கொடுக்கப்படுவது.
No comments:
Post a Comment