Tuesday, July 30, 2013

‘கஞ்சிக் கோப்பைக்கும்’, ‘புரியாணி பொதிக்கும்’ சமூகத்தை காட்டிக்கொடுக்கக் கூடாது

Commented by nizamhm1944 on:   http://tinyurl.com/naw8qod

Lankamuslim.org
One World One Ummah

‘கஞ்சிக் கோப்பைக்கும்’, ‘புரியாணி பொதிக்கும்’ சமூகத்தை காட்டிக்கொடுக்கக் கூடாது


முஸ்லிம் அரசியல் வியாபாரிகளுக்கு சமூக உணர்வா? வேண்டவே வேண்டாம். சமூகத்தை ஈடுவைக்காமல் இருந்தால் போதும் என்றே முஸ்லிம்கள் கூறுகின்றனர். வெட்கம்.  


சமூக உணர்வு தேவையில்லை, இஸ்லாமிய உணர்வாவது இருந்தால் போதுமே!!!  அரசியல், சமூகம் என்றது போய், தற்போது மார்க்க வியாபாரம்!!! நாளை மஃஷரில் என்ன பதிலைக் கூறப் போகின்றார்களோ!!! 

முஸ்லிம்களை விரட்டத் துடிக்கும் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அங்கீகாரம்

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/kwjj7lz

Lankamuslim.org
One World One Ummah

முஸ்லிம்களை விரட்டத் துடிக்கும் கூட்டமைப்புக்கு உத்தியோகபூர்வமாக அங்கீகாரம்


உண்மையில் ததேகூட்டமைப்பினர் புலிகள் காலத்தில் வாய்திறக்க முடியாதவர்களாக இருந்துள்ளனர். எம்மைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்புள்ள அரசுகளும் கூட அந்நிலையில் இருந்தமையை மறந்து விடலாகாது. வடக்கு முஸ்லிம்களைப் பொறுத்து அனைவரும் குற்றவாளிகளே! இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை.

 23 ஆண்டுகள் கழித்தும் முஸ்லி்களின் மீள்குடியேற்றத்தில் அரசு தெளிவான நிலைப்பாட்டில் இல்லை. எப்படியாவது நடக்கட்டும் என்ற பாணியில் காரியமாற்று கின்றது. வெளியேற்றத்தின் போது இடம்பெற்ற இழப்புக்கள், 23வருட கல்வி வாய்ப்பு, தொழில் வாய்ப்பு, வணிகம், சொத்துக்களின் வருவாய், அழிவுக்குள்ளாகிய சொத்துக்கள், மனோரீதியாக ஏற்படுத்தப்பட்ட தாக்கங்கள் போன்ற எதுவும் கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாமல் மீள்குடியேற்றம் என்ற மாயை ஏற்படுத்தப்பட்டு, முஸ்லிம்கள் பலிக்கடாவாக்கப்பட்டுள்ளனர். இனமுறுகல்களை ஏற்படுத்தி குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கும் முயற்சியில் அனைத்துத் தரப்புகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றன.  முன்னர் அமைதியாக வாழ்ந்த அப்பாவி வடக்கு மக்களுக்குள் குழப்பமே எஞ்சியுள்ளது. 

முஸ்லிம்களின் கிராமங்கள் தமிழ்த் தலைமைகளால் அபகரிக்கப்படுவதை, அதிகாரத்தைக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் அரசு  கைகட்டி வாய்மூடிப் பார்த்துக் கொண்டி ருந்ததா? கிராமங்களின் பெயர்கள் அரச அனுமதியின்றி மாற்றப்பட முடியாது என்பதை மக்கள் அறிவார்கள்.  அரசியல் தலைவர்களாக தம்மை வெளிப்படுத்துவோர் நீதிமன்றின் மூலம் முஸ்லிம் கிராமங்களைத் தக்க வைததுக் கொள்ளலாமே! வடக்கு முஸ்லிம்களின் மீள்குடியேற்த்தின் போது செய்யப்பட வேண்டியவை பற்றி இப்பந்தியிலும், அரசிற்கும் நேரடியாகவும் எழுதியுள்ளேன். அது 'குறித்துக் கொள்ளப்ட்டது' என்ற பதிலுடன் நின்று கொண்டிருக்கின்றது, இதுதான் முஸ்லிம்கள் நிலை! 

எபபடியோ வடக்கு முஸ்லிம்க்ள அங்குள்ள தமிழ் சகோதரர்களுடன் சேர்ந்து வாழ வேண்டியவர்கள். சேர்ந்து  வாழ்ந்தவர்கள்.  தமிழ்க் கட்சிகள் வேண்டுமானால் துரோகமிழைக்கலாம் ஆனால் அங்குள்ள மக்கள் நல்லதை நினைப்பவர்கள். இது எமது கடந்த கால அனுபவம் மட்டுமல்ல தற்போதைய நிலையும் கூட. எத்தனையோ கட்சிகள் மறைந்துள்ளன. உதாரணமாக தவிகூ தற்போது புறந்தள்ளப்பட்டுள்ளது. பிழை செய்பவர்கள் என்றும் அதற்கான எதிர்விளைவை எதிர்கொள்ளவே ‌வேண்டும். 

Sunday, July 28, 2013

வரங்களே சாபங்களானால்…- 13 ம் சீர்திருத்தமும் வேலிக்கு வைத்த முள்ளும்

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/m7gb2pl          Lankamuslim.org

வரங்களே சாபங்களானால்…- 13 ம் சீர்திருத்தமும் வேலிக்கு வைத்த முள்ளும்


தற்போதைய முஸ்லிம் பெயர் கொண்ட கட்சிகளை வைத்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் பெயர்களைக் கொண்டவர்கள் அதிகமானோர் புரோகிராம் பண்ணப்பட்ட சென்ஸர் பொருத்திய இயந்திர உதிரிப் பாகங்களைப் போன்றவர்களே!

சில வேளைகளில் சென்ஸர் மக்கர் பண்ணும் போது பிழையாக சில உண்மைகளை வெளியிடுவர். பின்னர் சென்ஸர் திருத்தப்பட்டால் பழைய நிலைக்குத் திரும்பிவிடும். சென்ஸராக இயங்குவது பதவிகளே!   

அவனது உதவியின்றி வேறொன்றும் பயனளிக்கப் போவதில்லை: ACJU

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/qj9zhlq

Lankamuslim.org

அவனது உதவியின்றி வேறொன்றும் பயனளிக்கப் போவதில்லை: ACJU


முயற்சிக்கு ஏற்பவே பலனும் தரப்படும் என்பதும், ஒரு சமூகம் தன்னை மாற்றாதவரை அல்லாஹ் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்பதும் இறை வாக்கே! கையால் எடுத்துக் குடிக்காத வரை நீர் தானாக வாயினுள் நுழைந்து விடுவதில்லை என்பது அருள்வாக்கே!

வெறுமனே சித்தாந்தமாகவல்லாது, நடத்திக் காட்டப்பட்ட ஓரே மார்க்கம் இஸ்லாம் என்பது செயற்படுத்தலை அடிநாதமாகக் கொண்டது என்பதை வெளிப்படுத்துகின்றது. வாளாவிருத்தலை அல்ல! 

செயற்படுத்தலின் உண்மை நிலைக்கேற்ப இறையுதவி கிடைக்கப் பெறுமே தவிர, எல்லாவற்றுக்கும் முஸ்லிம்கள் என்ற ரீதியில் அவனது உதவி கிடைக்கப் போவதில்லை. அதனாலேயே பயபக்தியாளர் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து உதவி தேடுவர் என்று, உதவி தேடுபவரின் தகுதியையும் வெளிப்படுத்தி உள்ளான். 


தங்கையை திருமணம் செய்வதேன்


 ” யார் உங்கள் சொத்துக்களுக்குப் பங்காளியாகின்றாரோ அவர்தான் உங்கள் சகோதரர்.  இது பிஜே அவர்கள், ஒரு தாய்க்கும் அல்லது ஒரு தந்தைக்கும் அல்லது ஒரு தாய்க்கும் ஒரு தந்தைக்கும் பிறக்கும் குழந்தைகள் மட்டுமே சொந்த சகோதரர்கள்  என்பதற்காக கொடுக்கப்பட்ட முதன்மையான ஒரு விளக்கம்..

மேற்கண்ட  சொந்த சகோதரர்களைத் தீர்மானிப்பதற்கு, சொத்துக்குப் பங்காளர்கள் என்ற கருத்தை அடிப்படை ஆதாரமாகக் கொள்ளுதல், குர்ஆனின் பல வசனங்களுக்கு முரண்பாட்டை ஏற்படுத்தி விடுகின்றது.  காரணம், யாசிப்போருக்கும் யாசிக்காதோருக்கும், ஏழைகளுக்கும் உங்கள் சொத்தில் பங்குண்டு என்ற அல் குர்ஆனின் வசனமே!

ஆக, சொந்த சகோதரர்கள் என்பதைத் தீர்மானிப்பதற்கு சொத்தில் பங்காளராகவிருப்பது என்ற விளக்கம் முற்றுமுழுதாகப் பிழையான விளக்கமே!


Saturday, July 27, 2013

அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார் : மஹியங்கனை விகாராதிபதி

Commented by nizamhm1944:

http://tinyurl.com/olmoo3z

Lankamuslim.org
One World One Ummah

அமைச்சர் ரவூப் ஹக்கீம் பொய்யான அறிக்கை வெளியிடுகிறார் : மஹியங்கனை விகாராதிபதி

பள்ளிவாசலாக அக்கட்டடம் இருந்திராவிடில் அதனை மூடும் உத்தரவு, . பொறுப்பும், அதிகாரமுமுள்ள மாகாண அமைச்சர் ஒருவரால் வழங்கப் படுவானேன்! 

பதிவுகள் இல்லாமல் இருந்தால்கூட, வேறு ஆவணங்கள் இல்லாமல் இருந்தால் கூட அது ஒரு பள்ளிவாசலாகப் பாவிக்கப்படவில்லை என்ற முடிவுக்கு எவரும் வரமுடியாது. நிலத்துக்கடியில் தோண்டிக் கண்ட சில இடிபாடுகள்கூட அங்கு ஒரு வணக்க ஸ்தலம் இருந்தது என நிரூபிக்கப்பட்டு புனித பூமிகளாக மாறும் நிலையில் 21 வருடம் தொழுவதற்காகப் பாவிக்கப்பட்ட ஒரு பள்ளிவாசலை இல்லாத ஒன்றாக கருத்துக் கூற முடியாது. 

இந்த நாட்டில் பிறப்புப் பதிவில்லாமல் எத்தனையோ குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களை இந்நாட்டின் பிரஜைகள் இல்லை எனக் கூறுவோமா அன்றேல் அவர்களைப் பதிவை மேற்கொள்ளுமாறு வசதிகள் செய்து கொடுத்து உற்சாகப்படுத்துவோமா. பதிவுகள் என்பது சில தேவைகளுக்காக அறிமுகப்படுத்தப்படட்வை மட்டுமே. 

2500 ஆண்டுகளு்க்கு முன்னர் ஆலயங்கள் எந்தப் பதிவைக் கொண்டிருந்தன. அவைகளை நாம் 2500 வருடப் பாரம்பரியம் கொண்டவைகளாக வரலாற்றுப் பெருமை கொண்டவைகளாக ஏற்கவில்லையா. 

Tuesday, July 23, 2013

நீங்கள் ஒன்றுமைப் பட்டது போதும் அச்சுறுத்தல்களை சட்டரீதியிலாவது அணுக முன்வாருங்கள்

Commented by nizamhm1844 on:  http://tinyurl.com/klbfuey

Lankamuslim.org
One World One Ummah

நீங்கள் ஒன்றுமைப் பட்டது போதும் அச்சுறுத்தல்களை சட்டரீதியிலாவது அணுக முன்வாருங்கள்


முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமை - தம்மை வளர்ப்பதற்காக, தமது பதவி‌களைத் தக்க வைக்க, தமது ஊழல்க‌ள் வெளிபபடாது காத்துக் கொள்ள அரசின் அடிவருடிகளாக, எவன் பெண்டாட்டி எவனுடன் போனால் என்ன லெப்பைக்கு நாலு பணம் என்ற அடிப்படையில், அரசுக்கு முண்டு கொடுப்பதற்காகவே! 

வட மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக முஸ்லிம் அரசியல்வாதிகளால் சூட்சுமமாக வெளியிடப்படும் கருத்தின் போக்கைக் கவனிக்கும் போது, நடக்கப் போவது என்ன என்பது தெளிவாகிறது. அதாவது, முஸ்லிம் கட்சிகள் அரசைப் பலப்படுத்தும் நோக்கில், வடக்கில் பலப் போராட்டத்தை முன்னெடுக்கும் வாக்கில், அரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடல் என்பதன் மூலம் அறியலாம். 

அத்தகைய ஒரு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், அது நடந்து முடிந்த அனைத்து இஸ்லாம் விரோத நடவடிக்கைகளுக்கும் அங்கீகாரம் கொடுத்ததாகவே அமையும்.  அத்தோடு, மேலும் இருக்கும் பள்ளிவாசல்களையும் உடைப்பதற்கு ஊக்குவிக்கும் செயலாகவும் மாறும். அதற்கு மேல் முஸ்லிம்கள் இந்நாட்டில் பூரண சுதந்திரத்துடன் சகல சௌபாக்கியங்களுடனும் அமைதியாக வாழ்வதாக. வெளியுலகை  நம்ப வைக்கும் நடவடிக்கையாகவும் அமையும். இதுவே முஸ்லிம் வரலாற்றில் நடக்கப் போகும் மிகப் பெரிய கழுத்தறுப்பும், காட்டிக் கொடுக்கும் செயலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.  

அத்தோடு தமிழர் கையில் சென்றடைய வேண்டிய வ.மா.சபை அதிகாரத்தை அரசிற்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் தரங்கெட்ட வேலையைச் செய்த தான பழிக்கும் முஸ்லிம் சமூகம் முகங்கொடுக்க வேண்டி வரும். எந்த நிலையிலும், முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பாக உள்ள பிரதேசம் வடக்கும் கிழக்குமே தவிர வேறில்லை. அதையும் பேரின அரசியலுக்குள் சங்மமாக்கி விட்டால் அதற்குப் பின்னர் அவ்விடங்களும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப் பற்ற பிரதேசமாக மாறிவிடும். கிழக்கு மாகாண சபை தேர்தலுக்குப் பினனர் தோன்றியுள்ள நிலை, அதற்கு உதாரணம். .தெற்கில் புத்த கடும் போக்கு வாதிகள் போன்று, கிழக்கில் தமிழ் கடும்போக்கைக் கொண்ட தீவிரவாத அமைப்புக்கள் தோன்றி தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளன.  அதே நிலை வடக்கிலும் தோற்றுவிக்கப்படும்.  அதே வேளை தீரா நிரந்த வடுவை யும், தொல்லையையும் அங்கு வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டி வரும். 

சில அரசியல் நன்மைகளையும், தற்காலிகமான சில சலுகைகளையும் முன்வைத்து எதிர்கால முஸ்லிம் சந்ததியினரின் வாழ்வுக்குக் குந்தகம் விளைக்கும் அத்திவாரங்களைப் போட்டுச் செல்வதாகவே அமையும். தயவு செய்து, சந்தர்ப்பவாத, சுயநல, ஏமாற்று அரசியல் வித்துவத்தை வடமாகாண சபைத் தேர்தலில் பிரயோகிக்க வேண்டாம் எனக் கோருகிறோம். முடிந்தால் ஒற்றுமைப்பட்டு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னலைப் போக்கப் பாருங்கள்.

பாராளுமன்றிலும், அமைச்சரவையிலும் முஸ்லிம் அமைச்சர்கள் இல்லா திருந்திருப்பின் இலங்கையி்ல் நடந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை, இன ஒழிப்பு, மதஅழிப்பு, வியாபார சுதந்திரம் பறிப்பு, சுதந்திரமாக நடமாடும் உரிமை பறிப்பு, அவமதிப்பு, அவதூறு போன்றவை பகிரங்கமாகத் திட்டமிட்டபடி ஒழுங்கு முறையில் தேசிய அளவில் அதிகார ஆசீர்வாதத்துடனும்,அனுசரனையுடனும் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை உலகம் கண்டு கொண்டிருக்கும். உலகு காணமாமல் இருப்ப தற்கு தற்போதைய பதவிகளிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகளும், அமைச்சர்களுமே தடைக்கற்களாக இருக்கின்றனர். சம்பவங் களின் கனத்தை மறைத்துப் பூசி மெழுகுகின்றார்கள். அத்தோடு அவர்கள் முஸ்லிம்களின் அழிவுகளை வெளியுலகிற்கு தெரியாமல் மறைப்பதற்காகப் பூசப்படும் முலாம்களாக பயன்பட்டுக் கொண்டிருக் கின்றார்கள்.

Monday, July 22, 2013

இரு சதாப்தங்களின் பின் யாழ் பல்கலைக் கழகத்தில் இfப்தார்

Commented by nizamhm1944 on :
http://tinyurl.com/lkq33v8

Lankamuslim.org
One World One Ummah

இரு சதாப்தங்களின் பின் யாழ் பல்கலைக் கழகத்தில் இfப்தார்


நோன்பு நோற்காமலே நோன்பு திறப்பு!  இஸ்லாம் அல்லாதவரும் திறக்கும் நோன்பு திறப்பு !! பசித்திருக்காமலே புசித்து மகிழும் நோன்பு திறப்பு !!! .சமூக இணக்கத்தை உருவாக்குவதாகக் கூறி பலிக்கடாவாக்கப்படும் இப்தார்.  

அரசியல்வாதிகள் , புகழ் விரும்பிகள், சுயநலமிகள், மார்க்க வியாபாரிகள் என்ற நிலையில் இருந்து, சர்வகலாசாலை என்ற நிலைக்கு உயர்ந்துள்ளது, இப்தாரின் கேலித்தனமும், போலித்தன்மையும்! அல்ஹம்துலில்லாஹ்.  

”உனக்காக நோன்பு நோற்கவில்லை, உன்னை விசுவாசிக்கவில்லை, உனக்காக நோன்பு நோற்கவுமில்லை. உன் ‌பொறுப்பில் என் காரியங்களை விடவுமில்லை. இந்த அமைப்பு தந்த விருந்தைக் கொண்டு வயிற்றை நிரப்பிக் கொண்டேன். நான் உண்ட உணவைச் சீரணிக்க உதவி செய்வாயாக என்று கூறியா?  நோன்பு திறப்பர், மன்னிக்கவும், மாற்று மதத்தவர்! 

இவ்வாறான மதவிரோத, மதத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும், கொச்சபை்படுத்தும் நடவடிக்கைகள் ஏற்கனவே நடைபெற்றிருந்ததற்கான இறை தண்டனையும், இருதசாப்தங்களுக்கு மேல் வடக்கை விட்டே விரட்டப்பட்ட துன்பியல் நிகழ்வுக்கான காரணங்களில் ஒன்றாக இருக்கலாம் என எண்ண வைக்கிறது. 

Tuesday, July 16, 2013

தேர்தல் ஆணையாளருக்கு நன்றி சொல்கிறார் முஸம்மில்!

Commented by nizamhm1944 on: http://tinyurl.com/q3ss9yh

Lankamuslim.org
One World One Ummah

தேர்தல் ஆணையாளருக்கு நன்றி சொல்கிறார் முஸம்மில்!


அல்லாஹ் மனிதனுக்கு முகத்தை வெவ்வேறு அமைப்பில் தந்துள்ளமைக்கான முக்கிய காரணம், அவர்கள் அறியப்படுவதற்கு நெருக்கமாகும் என அல்லாஹ்வே பெண்களின் ஆடை பற்றிக் கூறிய, 33:59 ' நபியே! உம்முடைய மனைவியருக்கும், உம்முடைய பெண்மக்களுக்கும், முஃமின்களின் பெண்களுக்கும் அவர்கள் தங்களுடைய மேலாடைகளைத் தங்கள் மீது தொங்கவிடுமாறு நீர் கூறுவீராக! அவர்கள் அறியப்படுவதற்கு இது மிக்க நெருக்கமாயிருக்கும். அப்பொழுது அவர்கள் துன்புறுத்தப்பட மாட்டார்கள். ...' என்ற அதே ஆயத்திலேயே கூறியிருப்பது, ஆளடையாளத்துக்கு முகத்தின் முக்கியத்துவத்தை தெளிவாக வெளிப்படுத்துகிறது.

மேலும், 24:31 இல், 'இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக!அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளவும். தங்களது மறைவிடங்களை பாதுகாத்துக் கொள்ளவும். இன்னும் தங்கள் அலங்காரத்தை அதிலிருந்து வெளியில் தெரிவதைத் தவிர அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். தங்கள் முன்தானைகளை தம் மேல் சட்டைகளின் மீது போட்டுக் கொள்ளவேண்டும். ......' எனவும்,

7:26 இல், 'ஆதமுடைய மக்களே! உங்களது வெட்கத் தலங்களை மறைக்கும்படியான ஆடையையும், அலங்காரத்தையும், திட்டமாக உங்களுக்கு நாம் இறக்கி வைத்திருக்கிறோம். ஆயினும் இறை அச்சம் என்னும் ஆடை, அதுவே மிகச் சிறந்தது. இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எனவும் கூறியிருப்பவை, முஸ்லிம் பெண்களின் ஆடை விடயத்தில் மிகத் தெளிவாக அல்லாஹ் காட்டிய வழி. இவ்வழியைப் பின்பற்றினால், தேர்தல், அடுத்தவர் முன்னிலையில் திறந்து காட்டும் அவலம் ஏற்படாது அல்லவா!

அரசுக்கு எதிராக முஸ்லிம்கள் வீதிகளில் இறங்குவதை தடுக்க முடியாமல் போய்விடும்: அஸாத் சாலி

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/pql8mhp

Lankamuslim.org
One World One Ummah

அரசுக்கு எதிராக முஸ்லிம்கள் வீதிகளில் இறங்குவதை தடுக்க முடியாமல் போய்விடும்: அஸாத் சாலி


புலியிடம் அகப்பட்ட புள்ளி மான் குட்டிகூட தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ள மிக் உக்கிரமமாகப் போராடும். சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பதும், அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதும் சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுப்பதை ஒக்கும். 

இவ்வாறுதான் சாதுவான தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட போது தமது எதிர்ப்புகளை கண்டனங்களாகவும், அறிக்கைகளாகவும், அஹிம்ஸை வழியில் வெளியிட்டுக் கொண்டிருந்தனர். நிலை தலைக்கு மேல் வெள்ளம் போனால் சாண் என்ன முழம் என்ன என்ற நிலை ஏற்பட்ட போது, நாடு 30 வருட அகோர யுத்தத்தை முகம் கொடுக்க வேண்டியிருந்தது என்பதை ஆட்சியாளர் எண்ணிப் பார்க்க வேண்டும். 

இதிலிருந்து பாடங்களைக் கற்றுக் கொள்ளாவிடில் நாடு இந்த இருண்ட யுகத்துக்கு திரும்புவதை தடுத்து நிறுத்த முடியாமல் போய்விடும். 

அமைதி வழியில் அனைவருடனும் புரிந்துணர்வுடனும், நாட்டுப் பற்றோடும் வாழ்ந்து கொண்டிருக்கும் அமைதி விரும்பும் குற்றமற்ற முஸ்லிம்களை வாழவிடுங்கள் என்று வேண்டுகின்றோம். இயல்பு வாழ்வை பாதிக்கும் அநாவசியத் தடைகள்,  குறுக்கீடுகள் விலக்கப்படாவிட்டால்,  உடைக்கப்படுவது என்பது இயல்பு. அதன் ஆரம்ப கட்டமாகவே மேற்கண்ட அறை கூவலை பார்க்கலாம். 

தீர்வுகாண முடியாமல் அறிக்கைகளை மாத்திரம் விடும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கேலிக்கூத்து: PMGG

Commented by nizamhm1944 on:  http://tinyurl.com/q8hgkm3

Lankamuslim.org
One World One Ummah

தீர்வுகாண முடியாமல் அறிக்கைகளை மாத்திரம் விடும் முஸ்லிம் அரசியல்வாதிகளின் கேலிக்கூத்து: PMGG


பள்ளிவாசல்கள் மீது தொடர்ந்து நடத்தப்பட்டுவரும் அடாவடித்தனங்களும், கட்டுமீறிய காவாலித்தனங்களும் அவற்றைச் செய்பவர்கள் இழிபிறப்புக் களாகவே இருப்பர் என்பதனை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது. 

அரசுக்கும், அவற்றைச் செய்வோருக்கும் நமது முஸ்லிம் அரசியல்வாதி களின் கையாலாகாத்தனம் அல்லது அடிமைத்தனம் மிக நன்றாகவே தெரிந்திருக்கிறது என்பதனாலேயே, காவாலிகளும் தமது கைவரிசையைக் காட்டுகின்றார்கள், அரசும் தனது மாற்றாந்தாய் மனப்பான்மையை வெறும் அறிக்கைகளை மட:டும் விடுத்துச் செய்து கொண்டிருக்கின்றது. 

இனிமேல் நடந்தால் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்பதும், அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் அற்று, அதனைவிட பெரும் தாக்குதல்கள் நடைபெறு வதும், இவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளியோம் என்பதும், அது தொடருவதும் என்பது கேட்டுக் கேட்டுப் புளித்துப்போன செய்தியாகி விட்டது. 

மினசாரத்தைத் தமது அராஜகங்களுக்காக துண்டித்து விட்டு செயற்படு மளவுக்கு செல்வாக்குடன், பகிரங்கமானதாகவே மஹியங்கனை சம்பவம் நடைபெற்றுள்ளது என்றால், குற்றவாளிகளைப் பிடிப்பதற்கு நீண்ட நேர‌‌மோ, சாதுரியமோகூட அவசியமில்லை. மின்சாரத்தைத் துண்டித்தவர்களிடம் இருந்து உண்மைக் கள்வர்களை அறிந்து கொள்ள முடியும்.  

இனி மேல் இவ்விதம் நடக்காது என்பதற்கு அரசால் இதுவரை உறுதியான உத்தரவாதம் கொடுக்கப்படவில்லை. நிலைமையைச் சமாளிக்கும் வகை யிலான பதில்கள் மட்டுமே வந்து கொண்டிருக்கின்றன. இதன் பின்னணி, நமது அரசியல்வாதிகளைக் காப்பாற்றுவதற்கானதாகவே கருத இடமுண்டு. அது போன்றே எமது அரசியல்வாதிகளின் அறிக்கைகளும் யாரையோ காப்பாற்றுவதற்காக விடப்படுபவையாகவே காணப்படுகின்றன.  

எந்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும், அரசின் தரப்பிலிருந்தோ, எம் அரசியல்வாதிகளின் தரப்பிலிருந்தோ எடுத்ததற்கான எவ்வித அறிகுறிகளும் இதுவரை காணப்படவில்லை என்பது, இந்த விடயத்தை எவரும் ஒரு பிரச்சினையாகவே கருதவில்லை என்பதையும், அவர்களுக்கு இதைவிட முக்கியமான நிகழ்ச்சி நிரல்கள் உண்டு என்பதையும் பட்டவர்த்தனமாகப் பகிரங்கப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

Monday, July 15, 2013

இது உங்களது அமைப்புக்கு அவமரியாதை அல்லவா?

Commented by nizamhm1944 on:   http://tinyurl.com/n8v3fyv

Lankamuslim.org
One World One Ummah

இது உங்களது அமைப்புக்கு அவமரியாதை அல்லவா?


// இப்போது யுத்தம் நிறைவடைந்து விட்டது. அனைத்து   இன மக்கள் மத்தியில் சுமூகமான   நிலைமையை உருவாக்கி மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.//  தேரர் கூறும் அனைத்து இன மக்கள் மத்தியில் சுமுகமான நிலையை உருவாக்க வேண்டும் என்று எப்போதாவது, தேரர் ஆர்ப்பாட்டம் செய்ததுண்டா? மாறாக, புலிகளின் அழிவிற்குப் பின்னர் சிறிது சிறிதாக மக்கள் மத்தியில் உருவாகிக் கொண்டிருந்த சுமுக நிலையை குழப்பியடித்து, இன, மத விரோதக் கருத்துக்களை அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் தூவி, சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களையும், ஆர்பாட்டங்களயைும் நடத்தி, நாட்டில் குழப்பத்தை அல்லவா ஏற்படுத்தின் கொண்டிருக்கின்றார். 

ஒரு மதபோதகர், துறவி என்ற ரீதியில் செய்ய வேண்டிய விடயங்களா தேரர் செய்தவை. அரசியல்வாதிகளைவிட, ஏறத்தாழ கடையர்கள் கடைப்பிடிக்கும் செயற்திட்டங்களை அல்லவா நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.  அத்துமீறல், அடாவடித்தனம், சட்டத்தைத் துச்சமாக மதித்தல், யாப்பை மிதிப்பது போன்ற அறிக்கைகளும், செயற்பாடுகளும், எரிப்புகள், தகர்ப்புகள், சண்டித்தனம், தரமற்ற வார்த்தைப் பிரயோகங்கள், பொய்கள் எனப் பட்டியலை நீட்டிக் கொண்டல்லவா இருந்தனர். 

புத்த மதத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டில் காணப்படக் கூடாத மது, மாது. சூது போன்றவைகட்கு எதிராக எப்போதாவது கூக்குரலிட்டது உண்டா! மாற்று மதத்தவர் உரிமைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது, அவர்களின் உரிமைகளில் குறுக்கீடும், தடையும் ஏற்படுத்த வேண்டும் என்று புத்த தர்மம் போதித்துள்ளதா!

ஆனால், முஸ்லிம்கள் அந்நியர்களுக்கு பொருட்களை விற்கும் போது, மூன்று முறை  துப்பிய பின்னரே விற்க வேண்டும் என கு்ர்ஆன் கூறியுள்ளதாகவும், அதன்படியேதான் முஸ்லிம் வியாபாரிகள் பொருட்களை விற்றுக் கொண்டிருக்கின்றனர் என பகிரங்க மேடையில் கூறி மக்களை ஏமாற்றினாரே இந்த தேரர். அவருக்கு அவர் கூறியதை நிரூபிக்க முடியுமா” அன்றேல், அவர் அவருடைய மதம் தடை செய்துள்ள பொய்யைப் பகிரங்கமாகக் கூறியதுடன்,  தனது மக்களையும் வழிகெடுத்து, அந்நிய மதத்தவர் மேலும் அபாண்டம், அவதூறு களங்கம் ஏற்படுத்தியமைக்கு என்ன கூறப் போகிறார்? 

இந்த நிலையில் அரசியல்வாதிகளை விமர்சிக்க முனையும் இவரது பொறுப்பு எத்தகையது? // இந்நாட்டு அரசாங்கம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.//  தேரர் இக்கூற்றை வெளியிட தேரரிடம் என்ன ஆதாரம் உள்ளது! எங்கிருந்து இத்தகவலைப் பெற்றார்?  இக்கூற்றும், முன்னைய பொய்களின் வரிசையில் இணைந்து கொண்ட இன்னொரு பொய்யா? புரட்டா? 

Saturday, July 13, 2013

தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவைப் பேணும் வகையிலான இப்தார் நிகழ்வு

Commented by nizamhm1944 on:   http://tinyurl.com/ppdtye5

Lankamuslim.org
One World One Ummah

தமிழ்-முஸ்லிம் இன நல்லுறவைப் பேணும் வகையிலான இப்தார் நிகழ்வு

றமழான் இப்தார் என்பது ஒரு களியாட்டமோ, விருந்துபசாரமோ, கூடிக் கலையும் சடங்கோ அல்ல.  இது ஒரு முஸ்லிமின் முக்கிய கடமைகளில் ஒன்றான நோன்பை நோற்று, அதனை இறையச்சத்துடன் திறக்கும் நேரம். இது அந்நிய மதத்தவர்களுக்கானதோ, நோன்பு நோற்காத முஸ்லிம்களுக் கானதோ நிகழ்வல்ல. 

இன நல்லுறவைப்பேணுவதற்கு எத்தனையோ சந்தர்ப்பங்களை வருடத்தின் 11 மாதங்களிலும் ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த புனித தருணத்தை இறையச்சத்துடன் போக்க வேண்டுமே தவிர அதனை கூடிக்குலவிடும் கூத்து மேடையாக்கிடக் கூடாது. 

ஏழை, எளியோரின் பசிப்பிணி அறிந்து, உலகில் எவரும் பசியுடன் வாழக்கூடாது என்ற இஸ்லாமிய அடிப்படை நோக்கத்தை நிறைவு செய்யும் மன நிலையை வளர்த்து அதனை வருட முழுதும் கடைப்பிடித்தல். அதைவிடுத்து, பசியே என்னவென்றறியாதோருக்கும். பசித்திருக்காதோருக் கும் பரிமாறுவதல்ல. 

மதக்கடமை மதக்கடமையாகவே அதன் புனிதத்துடன் பேண வேண்டும். அது வேறு எந்த நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட முடியாது. அப்படிச் செய்வது இறை நோக்கத்துக்கே எதிரான செயற்பாடாகிவிடும். 

Friday, July 12, 2013

வடக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கினார் ஜனாதிபதி!

http://lankamuslim.org/2013/07/12/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5/#comment-9959

Commented by nizamhm1944 on

Lankamuslim.org
One World One Ummah

வடக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கினார் ஜனாதிபதி!

வடக்கில் சிலர் பாதிக்கப்படவில்லை. ஒட்டு மொத்த முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டனர்.  இதில் தெரிவு செய்த சிலருக்கு மட்டுமென நட்.டஈடு கொடுப்பது, மனித உரிமை மீறல.

இது அரசியலாக்கும் விடயமல்ல.  மனிதாபிமனப் பிரச்சினை. அரசின் தட்டிக் கழிக்க முடியா கடமை. ஆதலால் சரியான ஒரு நிகழ்ச்சித்தட்டத்துடன், நடைபெற்ற இழப்புகளுக்கு நட்டஈடு கொடுக்கும் பொறிமுறை ஒன்றை அரசு முன்னெடுக்க வேண்டும். இன்றேல் இறைதண்டனைக்கு உட்படவே வேண்டும். அவர்களின் கண்ணீர் எப்படி புலிகளின் அழிவுக்கு வழிவகுத்தது என்பது நினைவிற் கொள்ளப்பட வேண்டியது. 

ஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையும் இந்து சமய வேதங்களும்

ஏகத்துவம் என்னும் ஓரிறைக் கொள்கையும் இந்து சமய வேதங்களும்

இன்று நாம் பார்க்கும் இந்து சமயத்தைத் தமது மார்க்கமாகக் கொண்டுள்ள மக்கள்> பல தெய்வக் கோட்பாடுகளுக்குள் தம்மை முழு மையாக ஆழ்த்திக் கொண்டுள்ளனர் என்பதை நாடெங்கிலும் காணப் படும் வெவ்வேறு தெய்வங்களுக்கான கோயில்களும்> நாள் தவறாது நடைபெறும் திருவிழாக்களும்> மற்றுமுள்ளவைகளும் வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன. இவைகள்தான் இந்து சமய வேதங்கள் கூறும் கொள்கைகளா என எண்ணிப் பார்த்தால் விடை எதிரிடையானதாகவே காணப்படுவதை அவதானிக்கலாம்.

இந்து சமயம் என நாமழைக்கும் இந்த பெயர்> இடைப்பட்ட காலத்தில் வெள்ளயைர்கள் ஆட்சிக் காலத்தில்> அவர்களால் சனாதன தர்மத்துக் குக் கொடுக்கப்பட்டதாகவே தெரிகின்றதுஇந்து மத வேதங்கள்தான் ஆதியானவை அல்லது ஆதி மதத்துக்கு அடுத்தபடியாகத் தோன்றிய வையாக இருக்க வேண்டும். ஆயினும்> நிச்சயமாக> முக்கிய மூன்று வேதங்களான தோறா> கிறிஸ்தவம்> இஸ்லாம் ஆகியவற்றுக்கும் முந்தியதாகவே உள்ளது. இதற்குப் பிந்திய வேதங்கள் யாவும் யாரோ ஒரு இறை தூதர் மூலம் இறைவனால் வழங்கப்பட்டதாகக் கூறப்பட் டாலும்> இந்து வேதங்கள் மட்டும் ஒரு புறநடையாகவே இருப்பதையும் அவதானிக்கலாம்.

இந்து வேதங்கள் றிக்> சாம> யசூர்> அதர்வன என நான்காக அறியப்பட் டுள்ளன. இவை ஒன்றாயிருந்து நாலானவையா? அன்றேல் இயல்பாக நான்காகவே இருந்தவையா? என்பவையெல்லாம் சர்ச்சைக்கு உரிய னவே! இவற்றை ஆராய்ந்தவர்கள்>இவ்வேதங்கள் நோவா என்ற நூஹ் நபியவர்கள் மூலமாக அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டதாக இருக்க வேண்டும் என நம்புகின்றார்கள். அதற்கு ஆதாரமாக> நூஹ் நபியின் பெயரை ஒத்த பெயர் பல இடங்களில் அவ்வேதங்களில் கையாளப்பட் டுள்ளதைக் கூறுகிறார்கள். நோவா கால ஜலப்பிரளயம் அந்த நிராகரிப் பாளர்களை அழித்ததுடன் அவ்வேதம் பற்றிய பதிவுகளையும் அழித் திருக்கலாம். அதன் பின்னரும் வேதங்கள் கொடுக்கப்பட்டிருக்கலாம். அல்லது அழிந்த வேதங்களை பின்னர் வாழ்ந்தவர்கள் சிலர் தமது ஞாபகத்திலிருந்து பாதுகாத்து வந்திருக்கலாம். பின்னர் அவை எழுத் துக்கள் தோன்றியதன் பின்னர் நூல் வடிவை ஏற்றிருக்கலாம்.
எப்படியோ இந்து வேதங்கள் நான்கு. அவை றிக்> சாம> யசூர்> அதர்வன என்பதை யாரும் மறுக்கவில்லை. அவைகளையே நாமும் நமது கருத் துக்கு ஆதரவாக எடுத்துக் கொள்வோம். இவற்றிலுள்ள குறிப்பிடக் கூடியளவு வசனங்கள் குர்ஆனுடன் முரண்படாத தன்மையைக் கொண் டுள்ளமையும், அதன் போக்கும் குர்ஆனில் காணப்படும் போக்கை ஒத்ததாக இருப்பதும்> இவை இறைவனிடம் இருந்து வந்துள்ளவை தான் என்று நம்புவதற்கு நமக்கு இடம் தருகின்றன.

ஆதியான 'றிக்' வேதம்> 1028 பாடல்களையும். 10>000 உக்கும் அதிகமான செய்யுள்களையும் கொண்டுள்ளதாக தெரிகிறது.

அடுத்தபடியான 'யசூர்' வேதம்> யாகங்கள் முதலாம் வைதிகச் சடங்கு களைக் கொண்டுள்ளது

'சாம' எனப்படும் இசையை ஒட்டிய வேதம்> பண்களின் தொகுப்பாகவே காணப்படுகின்றது. இதில் 1500உக்கும் அதிகமான எண்ணிக்கையில் பாடல்கள் காணப்படுகின்றன. ஆயினும் இவைகளில் பெருமளவு எண்ணிக்கையானவை 'றிக்' வேதத்திலுள்ள பாடல்களாகவே இருக் கின்றன.

அதர்வன வேதம் முழுமையாக துர்தேவதைகளை மகிழ்விப்பதற்காக எழுதப்பட்ட மந்திரங்களாகவே காணப்படுகின்றன. இதனை மந்திர வேதமெனவும் கூறுவர்.

ரிக் வேதம் 8:6:11 'தொன்மைக் காலத்து மரபுச் செய்திகளைத் தொகுத்தே அழகான பாடல்களை உருவாக்கி இருக்கிறேன்.' இந்த வசனம்> ஒன்று, இவ்வேதம் ஆதியானது என்பதையும்> இரண்டு, மனித னால் பின்னர் தொகுக்கப்பட்டுள்ளது என்பதையும் கூறி நிற்கின்றது.

நமது தலையங்கத்துக்கு வந்தால்>இவ்வேதங்கள் எதிலாவது ஓரிறைக் கொள்கை எடுத்தாளப்பட்டிருக்கின்றதா என்ற கேள்விக்கு 'ஆம்' என்ற பதிலை அவைகளே தந்து நிற்கின்றன. மாத்திரமல்ல பல தெய்வக் கொள்கையையும்> அவ்வாறான வணக்க வழிபாட்டையும் தடைசெய்தே இருக்கின்றன என்பதும் புலனாகும்.

ரிக் வேதம் 8:1:1 'புகழ் அனைத்தும் வல்லமை கொண்ட கடவுள் ஒருவனுக்கே' இதே கருத்தை கொடுப்பதாகவே> குர்ஆனின் ஆரம்ப வசனமான 1:1> 'புகழ் அனைத்தும் அகிலங்களைப் படைத்துப் பரிபாலிக் கும் அல்லாஹ் ஒருவனுக்கே' என்கின்றது.  

ரிக் வேதம்  3:34:1 'அளவற்ற தயாள குணம் வாய்ந்தவன்' என்கின்றது. இதே கருத்தில் அல்குர்ஆன் 1:2 'அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன்.' என்கின்றது.  

யசூர் 40:16 'எங்கள் நன்மைக்கான நேர்வழியைக் காட்டு' என்கின்றது. இதை மெய்ப்படுத்துவதாகவே அல்குர்ஆனின் 1:5> நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக' என்பது அமைகிறது.

ரிக் வேதம் 1:100:1 'பரந்த வானங்களின் மீதும்> புமியின் மீதும் ஆட்சி அதிகாரமும்> வல்லமையும் கொண்டவன் அவனே. அந்த ஈஸ்வரனால் மட்டுமே அவர்களுக்கு உதவ முடியும்.' நிச்சயமாக வானங்கள் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அல்லாஹ்வையன்றி உங்களுக்குப் பாதுகாவலனோ, உதவி செய்பவனோ இல்லை என்பதை நீர் அறியவில்லையா? என்று 2:107 மூலம் உண்மைப்படுத்தி சாட்சியம் கூறுகின்றது .

ரிக் வேதம் 10:11:14 ' அவன் எல்லா திசைகளிலும் இருக்கிறான்'. ரிக் 10:36:4 கிழக்கிலும் மேற்கிலும்> மேலிலும் கீழிலும்> ஒவ்வொரு இடத்திலும் இவ்வுலகைப் படைத்தவன் இருக்கின்றான்'. 10:81:3 'இறைவனின் பார்வை எல்லாப் பக்கங்களிலும் இருக்கிறது. இறைவ னின் முகம் எல்லாத் திசைகளிலும் இருக்கிறது'.  இம்மூன்று வசனங் களையும்> அல்குர்ஆன் 2:115 கிழக்கும் மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறதுநிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன்> எல்லாம் அறிந்தவன்.' கூறி உண்மைப்படுத்துகின்றது

அதர்வன வேதம் 7:19:1 'பரமாத்மா எல்லாப் பொருட்களுக்கும் காரண கர்த்தராக இருக்கிறார்.' இதனை அல்குர்ஆன் 25:2 'அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான்' என எடுத்தியம்புகின்றது.

ரிக் வேதம் 10:190:2 ' இரவுகளும் பகல்களும் அவன் விதித்து அமைத் ததே'. அல்குர்ஆன் 25:62 அவன்தான் இரவையும் பகலையும் அடுத் தடுத்து வருமாறு ஆக்கினான்' என்ற வசனம் மெய்ப்படுத்துகின்றது.

ரிக் வேதம் 10:190:3 அந்த மாபெரும் படைப்பாளியே முந்தைய படைப்புகளையும் சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான். அல் குர்ஆன் 6:96 அமைதிபெற அவனே இரவையும்> காலக் கணக்கினை அறிவதற்காக சூரியனையும் சந்திரனையும் உண்டாக்கினான் அதனை வெளிப்படுத்துகின்றது.

ரிக்வேதம் 1:32:2 பரமேஸ்வரா! நீ அந்தரங்கமானவனும்> முந்தியவனும்> நன்கறிந்தவனுமாவாய். அல்குர்ஆன் 57:3முந்தியவனும் அவனே> பிந்தியவனும் அவனே> பகிரங்கமானவனும் அவனே> அந்தரங் கமானவனும் அவனே. மேலும் அவன் அனைத்துப் பொருட்களையும் நன்கறிந்தவன்' மூலம் மேற்கண்ட அதே அறிவிப்பை செய்கிறது.

அதர்வன வேதம் 18:1:5 'அவன் நடைமுறைகளில் ஒன்று கூட மாற்றத்துக்கு உரியது அல்ல' என்ற இந்த வசனத்தை நிரூபிப்பதாகவே அல்குர்ஆன் 48:23 அல்லாஹ்வுடைய சுன்னத்தில் (வழியில்) நீர் எவ்வித மாறுதலையும் காணமாட்டீர்' வசனம் .அமைகின்றது. அத்தோடு அது இற்றைவரை உண்மையாகவும் இருக்கின்றது.

ரிக்வேதம்  1:24:10 - இறைவனின் புனித வாக்கியங்களில் மாற்றங்களே இல்லை. அல்குர்ஆனும் தனது 10:64 இல் அல்லாஹ்வுடைய வாக்கு களில் எவ்வித மாற்றமும் இல்லை என அப்படியே கூறுகின்றது

அதர்வன வேதம் 20:58:3  இறைவன் உண்மையில் மிகப் பெரியவன்.’ அதனை மெய்ப்படுத்துவதாகவே அல் குர்ஆன் 13:9 அவன் மிகவும் பெரியவன்> மிகவும் உயர்ந்தவன்’ என்ற வசனம் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்கண்டவைகளை நான் ஒப்பீடாகக் கூறியுள்ளமை> இந்து வேத வசனங்கள் மனிதரால் சிலவேளை தொகுக்கப்பட்டதாக இருப்பினும்> அவற்றில் காணப்படும் கருத்துக்கள், கொள்கைகள் அனைத்தும் குர்ஆனின் ஏகத்துவத்தையே பிரதிபலிப்பனவாகக் காணப்படுவதைக் காட்டுவதற்காகவே

அத்தோடு> அல்குர்ஆன் முந்தைய வேதங்களை உண்மைப்படுத்துவ தற்கும்> சாட்சி பகர்வதற்காகவுமே இறக்கி அருளப்பட்டது என்பதுடன்> முஹம்மது நபி அவர்களுக்குப் புதிதாக எதனையும் கொடுத்துவிடவு மில்லை என்பதையும்> அனைத்தும் முன்னைய நபிமார்கள் மூலம் பல்வேறு காலங்களில்> பல்வேறு இடங்களில்> பல்வேறு பாஷைகளில் வேதங்களாகவும் வேதக் கட்டளைகளாகவும் இறக்கி அருளப்பட்டதே என்பதைக் குறிப்பாகக் காட்டுவதற்காகவே!

அல் குர்ஆன் 41:43 உமக்கு முன் தூதர்கட்குத் திட்டமாகக் கூறப் பட்டதைத் தவிர உமக்குக் கூறப்படவில்லை. இன்னும்> 2:97>135>136> 3:95> 4:125>163> 35:31> 42:13 போன்றவையும் மேற்கண்ட கருத்தில் அமைந்த வையே!

மேலும் ‌ஒத்தது போன்ற சில வசனங்களும்  இந்த> இந்து வேதங்களில் காணப்படுகின்றன. அவைகளைக் காண்போம்

உண்மையானவன் ஓருவன்தான். தெய்வீகத் தன்மை வாய்ந்த பண்பு களைக் கொண்டு அவனுக்கு ஏராளமான பெயர்கள் இருக்கின்றன. என ரிக் வேதத்தின் 1:16:46 கூறுகிறதுஇதையே அல்குர்ஆன் 17:110 - நீங்கள் அல்லாஹ் என்ற அழையுங்கள். அல்லது அர்ரஹ்மான் என்ற ழைத்தாலும்> எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தாலும்> அவனுக்குப்பல திருநாமங்கள் இக்கின்றன என்று நீர் கூறுவீராக! இது முழுமையாக ஓரே இறைவனைப் பற்றிக் கூறும் வசனமே என்பதை யாரும் மறுப்பதற்கு இல்லை.

இந்துக்களின் பிரம்ம சாஸ்திரம்> ஏகம் பிரஹம் தவித்ய நாஸ்தே நஹ்நே நாஸ்தே கின்ஜன்> அதாவது இறைவன் ஒருவனே. வேறு எவரும் இல்லை> இல்லை> இல்லவே இல்லை. என்பதாகும்  இது இஸ்லாமிய தாரக மந்திரமான கலிமா எனப்படும் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற அரபு சொற்றொடரின் வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை’ என்ற கருத்தின் மற்றொரு உருவமாகும்.

அதற்கு மேலும்> ரிக் வேதம் 6:45:16 மிகத் தெளிவாக> லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற பொருள்படும்” , யா இக் இத் முஸ்தி எனும் வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே என்ற ஏகத்துவ> ஓரிறைக் கொள்கையை பிரகடணப்படுத்தி இருக்கிறது.

மேலும்> பகவத் கீதை 7:19 - அவன் மஹாத்மா! காணுதற்கரியவன் என்கின்றது. குர்ஆன்கூட> 7:143 இல்> என்னை ஒருபோதும் நீர் பார்க்க முடியாது’ என்றும்> 6:103இல்> பார்வைகள் அவனை அடைய முடியாது. .அவனோ எல்லாப் பார்வைகளையும் அடைகிறான். மேலும்> அவன் நுட்பமானவன்> நன்கறிபவன்.  என்றும் கூறுகின்றது.

மேற்கண்டவை போன்று இந்து வேதங்களில் ஓரிறைக் கொள்கையை வலியுறுத்தி நிற்கும் இன்னும் பல வசனங்கள் உண்டுஉண்மைகளை அறிய விரும்புவோருக்கு இவைகளே போதும். ஏற்காதவர்களுக்கு எவ்வளவு எழுதினும் பயன்தரப் போவதில்லை என்பதுவே வரலாறு நமக்குக் கற்றுத் தந்த பாடம்.


2013.06.24                                          - நிஹா

இணைப்புபேரின்ப மணிமாலை> சிவன்> பிரம்மா> திருமால் பற்றிக் கூறுதைப் பாருங்கள்

மூவரையும் சனியன்தான் பிடித்ததாலே
முதலொருவன் வலையிழந்தான் முக்கண்ணுன்ளோன்
சாவுவருமென முனிவன் தனக்குமஞ்சித்
தானொளித்தான் ஐவேலி தன்னிலேதான்
பாவியென்ற திருமாலோர் பெண்ணினாலே
பதியிழந்து பாரியுடன் வனத்திற்சென்றான்
தேவனென்றே இவர்கள் தம்மை வணங்கினாரித்

திறமையுள்ள கதியருளும் தேவனாமோ!