Monday, July 1, 2013

உலக மாற்றங்களுக்கும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும், மனித நாகரிகத்துக்கும் ஈடு கொடுத்துக் கொண்டிருக்கின்றதா புனித குர்ஆன்

உலக மாற்றங்களுக்கும், விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளுக்கும்,                  மனித நாகரிகத்துக்கும் ஈடு கொடுத்துக் கொண்டிருக்கின்றதா புனித குர்ஆன்

அசைவற்று, மாற்றங் காணாத எப்பொருளும் இந்த பிரபஞ்சத்தில் இல்லை. அசையாது என நாம் நினைத்துக் கொண்டிருக்கும் மலை களும் தன்னில் மாற்றத்தை ஏற்று, ஏற்படுத்திக் கொண்டிருப்பனவே! அசையாதது போன்று தோற்றமளிக்கும் உலகம் உட்பட அனைத்துக் கிரகங்களும், நட்சத்திரங் களும் அசைந்து கொண்டும், சுழன்று கொண்டும், பயணித்துக் கொண்டும், வேறு மாற்றங்களுக்கு உட்பட்டுக் கொண்டும் இருக்கின்றன என்பதை ஓரளவாவது மக்கள் தற்போது அறிந்தே இருக்கின்றார்கள்.

ஏன் வல்ல நாயன் அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா கூட ஒவ்வொரு ஷணமும் தான் ஓர் மாட்சியில் இருப்பதாகக் கூறுகிறான். மேற்கண்ட உண்மைகளைக் கூட, அல்லாஹ் தன்மாமறையில் மிக நாசூக்காக பல்வேறு வசனங்களில் கூறியேயுள்ளான் என்பதே இந்த தலைப்பிற்கு விடையாக அமையும். அதற்கு மேலும், அனைத்தும் தாம் விரும்பியோ விரும்பாமலோ அல்லாஹ்வைத் துதி செய்து கொண்டிருக்கின்றன. சிரம் சாய்க்கின்றன. அவற்றின் துதியை நீங்கள் விளங்கிக் கொள்கிறவர்களாக இல்லை எனக் கூறும் குர்ஆனிய வசனமே இதற்குச் சான்றாகும்விஞ்ஞானமும் அதனை ஏற்றுள்ளதை, அண்மைய கண்டு பிடிப்புக்களான Big Bang, Theory of Crunch, Tachyon போன்றவை உண்மைப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

ஆக,  இந்த உலகியல் மாற்றங்களுக்கு, மாறாச் சட்டங்களைக் கொண்ட புனித குர்ஆன் எப்படி முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றது என்பதைக் கண்டறிவதே இக்கட்டுரையின் நோக்கம்உலக அழிவு வரை ஈடு கொடுக்கவுள்ள குர்ஆனிய அறிவை அளக்கும் சக்தி மனிதரில் யாருக்கும் இல்லையாயினும்> நடைமுறைக் காலத்தில் காணப்படும் மாற்றங்களுக்கு எவ்விதத்தில் முரண்படாத தன்மையைக் குர்ஆன் கொண்டுள்ளது என்பதை உய்த்துணரும் எவரும் கண்டுகொள்ள முடியும். அதற்கும் இறைவனின் உதவி உண்டென்பதை அவனது வசனமே கூறிக் கொண்டிருக்கின்றது அவனது வசனம். அல்லாஹ் யாரை நேர்வழியில் நடத்த நாடுகின்றானோ அவர்களின் நெஞ்சங்களை இஸ்லாத்தின்பால் விரிவாக்கி விடுகின்றான்.

மேற்கண்ட வசனம், மேலும், உலக மாற்றங்களுக்கு தனது குர்ஆன் மட்டுமல்ல, தன்வழியில் முயற்சிக்கும் மனிதரையும் அத்தனை மாற்றங்களுக்கும் முகம் கொடுக்கும் வகையில், இஸ்லாமிய  அறிவைப் புகட்டி அவர்களை வெற்றியாளர்களாக ஆக்கிவிடுகின்றான் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது..

இங்கு நான் நிலையான மாறாச் சட்டங்கள் எனக் கூறியிருப்பது, சட்டத்திலுள்ள இறுக்கமான, நெகிழ்வற்ற தன்மையை அல்ல. குர்ஆனிய சட்டங்கள். எழுத்தால், சொல்லால், வசனத்தால், அதன் அமைப்பால் எவ்வித மாற்றத்தையும் ஏற்காது என்பதுவே. அது அன்று எப்படி இருந்ததோ அப்படியே என்றும், உலக அழிவு வரை மாற்றமற்ற பௌதிகத் தன்மையுடன் காணப்படும் என்ற உண்மையே!

மாறாச் சட்டங்களைக் கொண்ட புனித குர்ஆன் எப்படி உலகியல் மாற்றங்களுக்கு முகம் கொடுக்கும் என்பதற்குக் காரணம் கூறுவதாயின், அல்லாஹ் முற்றுமறிந்தவன் என்ற ஒரு சொல்லாலேயே மேற்கண்ட ஆய்வுக்கான விடையைக் கொடுத்து விடலாம்;.

சற்று விரிவாக்கின், முக்காலம் என்பதெல்லாம் நமக்குத் தானே தவிரஅல்லாஹ்வுக்கல்ல. காலம் அவனைக் கட்டுப்படுத்துவது இல்லை. அவனே காலமாக இருக்கின்றான். ஆதலால் எப்பொழுது, எங்கே, எதற்கு, எப்படியான மாற்றங்கள் உண்டாகின்றன என்பதெல்லாம் அவனுடைய ஏற்பாடாக, அவனது அறிவுக்கு உட்பட்டதாக இருப்பதனால், அவன் தனது குர்ஆனிய வசனங்களை அவற்றுக்கு முகம் கொடுக்குமாறு அமைத்  துள்ளான்.

அவ்வசனங்கள் மனித அறிவு விருத்திக்கு ஏற்பவும்,  மாற்றங்களுக்கு ஏற்பவும், அவ்வப்போது கருத்துக்களை விரிவுபடுத்திக் கொண்டிருக்கும். அதனால்தான், 6:125 வசனத்தில்> அல்லாஹ் எவருக்கு நேர்வழி காட்டிட விரும்புகின்றானோ அவருடைய நெஞ்சத்தை இஸ்லாத்திற்காக விரிவு படுத்துகின்றான்எனக் கூறியுள்ளான். இதன்படி குர்ஆனிய வசனங்களில் மறைந்து கிடக்கும் கருத்துக்கள் காலதேயவர்த்தமானங்களுக்கு ஏற்ப வெளிப்பட்டுக் கொண்டே இருக்கும்.  

இவற்றை விளக்குவதாயின் அதற்காக குர்ஆனிய வசனங்கள் அனைத் தையுமே காட்டலாம். ஆயினும், மிக முக்கியமானதெனக் கருதக் கூடிய சில வசனங்கள் எப்படி மாற்றங்களை அரவணைத்து தம்மில் மாற்ற மின்றி, அவற்றை ஏற்று நிற்கின்றன என்பதைக் கண்டறியலாம்.

உணவே உயிரினங்களின் அசைவுக்குத் தூண்டுகோலாக உள்ளது என்பதை யாரும் அறிவர். பசி என்ற ஒரு உணர்வை அல்லாஹ் உயிரினங்களில் வைத்துப் படைத்திராவிட்டால், அனைத்தும் அசைவற்றிருந்து அழிவை எதிர்கொண்டிருக்கும். குர்ஆன் மனிதருக்கும் ஜின்களுக்கும் கொடுக்கப் பட்டதாக இருப்பதால் மனிதரிலேயே நமது ஆய்வை மட்டுப்படுத்திக் கொள்வோம். நான், முன்னர் நிலையான சட்டங்களைக் குர்ஆனில் நமக்காக ஏற்படுத்தித் தந்துள்ளான் எனக் கூறினேன். உணவிலும் அப்படியான சட்டம் கூறப்பட்டுள்ளது. அது எவ்வகையில் இவ்வுலக மாற்றத்தோடு முரண்படாது சென்று கொண்டிருக்கின்றது என்பதைக் காணலாம்.

2:168 - மனிதர்களே! பூமியில் உள்ளவற்றிலிருந்து அனுமதிக்கப்பட்ட மணமானவற்றையே உண்ணுங்கள்.... இவ்வசனம் மணமானவற்றை என்ற சொல்லால் நாம் சாப்பிடக்கூடிய அனைத்தையும் வெளிப்படுத்துகிறது.

பழுதடைந்த உணவுகள், கழிவுகள் நல்ல மணத்தைக் கொண்டிராது, அதனால், மனிதன் தனது உணவை மிக இலகுவாக இனங் கண்டுகொள்ள முடியும். கடும் இருட்டிலோ, கண்தெரியாத நிலையிலோ கூட பசிப்பிணியைப் போக்க தனது கையிலகப்பட்டதை நுகர்வதன் மூலம் கண்டறியலாம்.

சாப்பிடக்கூடிய பொருட்களைக் கூறியவன், அதனுள் ஒரு தடையையும் ஏற்படுத்தியுள்ளான். அது அனுமதிக்கப்பட்ட என்ற சொல்லால் வகைப் படுத்தப்படுகின்றது. எவ்வளவு நுணுக்கமாக மனிதர் சாப்பிடக் கூடிய வற்றை வெளிப்படுத்தியுள்ளான். இது உலக அழிவுவரை, எக்காலத் துக்கும், எவ்விடத்துக்கும், எவருக்கும், எந்நிலையிலும். எச்சந்தர்ப் பத்திலும், எச்சூழ்நிலையிலும் நடைமுறைப்படுத்தக் கூடியது. இதுவே இறை சட்டத்தின் நெகிழ்வுத் தன்மையும் பொருந்துமாறும்.

தடுக்கப்பட்டது அல்லது அனுமதிக்கப்படாதது என்பதை மிக இலகு வழியில் கூறியுள்ளான். தானாகச் செத்தது, இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்டவை. அவை அசுத்தமானவை என நியாயப்படுத்தியும் உள்ளான்இது பற்றி விளக்கம் அவசியம் இல்லையென நினைக்கிறேன். ஏற்போருக்கே அறிவுரை என்பதால்> இதனை ஏற்காதோர் பற்றி நாம் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

அத்தோடும் விடவில்லை, தடுக்கப்பட்ட இவ்வுணவுகளை உண்ண வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுமாயின், வரம்பு மீறாமலும், விருப்பமின்றியும் அவற்றைச் சாப்பிடுவதற்கு அனுமதி அளித்துள்ளான் என்பது, மனித வாழ்வில் உணவின் முக்கியத்துவத்தையும், உணவில்லாத நிலையில் எவரும் எக்கஷ்டத்தையும் அனுபவித்து விடக் கூடாது என்ற உயரிய நோக்கத்துடனும் சட்டமியற்றப்பட்டுள்ளதை, வெளிப்படுத்துகின்றது.

தற்போது மனிதரின் இன்னொரு அத்தியாவசியத்  தேவையான உடை பற்றிய சட்டத்தைப் பார்ப்போம். மானத்தை மறைக்கக் கூடியதும், அழகானதும், அலங்காரமானதுமான ஆடை அணியுமாறு கூறியுள்ளது குர்ஆன்இது மனிதன் எங்கு, எப்போது, எந்த சுவாத்தியத்தில், எவ்வகை நிகழ்வில்,  எப்படியான வசதியில், எப்படியான பதவியில், கிடைக்கக் கூடிய பண்பில், வாங்கக் கூடிய நிலையில் என  அனைத்துக்கும் ஈடு கொடுக்கும் வகையில் சிபாரிசு செய்யப்பட்டிருக்கின்றது. இவ்வசனமும் தன்னில் மாற்றத்தை ஏற்படுத்தாது, எவ்விடத்துக்கும் தக்கவாறு உடை அணிவதற்கு வசதியான தன்மையைக் கொண்டுள்ளதை யாரும் மறுப்பதற்கில்லை.

மனிதர்களுக்கான உடையைப் பரிந்துரை செய்த குர்ஆன், பெண்களுக்கான உடையில் சில கட்டுப்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளது. அது, உடைகளை தோளில் தொங்குமாறு அணிவது. தமது முந்தானைகளால் மார்பகங்களை மூடிக்காள்வது, தாமாக வெளியில் தெரிவதைவிட மிகுதியானற்றை மறைத்துக் கொள்ளவது. இந்த வசனம் இன்றைய நாகரிக உலகில், பெண்களுக்கு ஏற்படும் அனைத்து பாலியல் வன்முறைகளுக்கும் தீர்வாக அமைந்துள்ளதை எவரும் மறுத்துரைக்க முடியாது. இன்று பெண்கள் இச்சட்டத்தை ஏற்று நடைமுறைப்படுத்துவார்களாயின் அவர்களுக்கு எவ்வித பாலியல் அச்சுறுத்தல்களும் ஏற்படா. அவர்களது நாகரிக உடைகளே அவர்களுக்கு ஏற்படும் துன்பங்கள் அனைத்துக்கும் காரணமாகி யுள்ளன என்பதை அனைவரும் தற்போது அறிந்துள்ளனர்.

இதுவே குர்ஆனியச் சட்டங்களின் ஏற்புடைத் தன்மை. அது அனைத்து பாதுகாப்பையும் வழங்கிக் கொண்டு தன்னில் எவ்வித மாற்றத்தையும் ஏற்காதிருக்கின்றது. குர்ஆனியச் சட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் போது> எவ்வகையிலும் வேறு பிரச்சினைகள் எழாமல் வகுக்கப்பட்டிருப் பதே குர்ஆனின் சிறப்பம்சம். எதற்கும் ஈடு கொடுக்கும் தன்மை.

ஆண் பெண் இணைந்த வாழ்க்கைக்கான சட்டத்தை மிக அழகாகத் தந்துள்ளது. திருமணம் முடிக்குமாறும்> மணமுடிக்கு முன்னர் அப்பெண் ணுக்கு மஹர் என்ற திருமணக் கொடையைக் கொடுக்கு மாறும் கூறி யுள்ளது. ஒரு பெண்ணுடன் தனது இச்சையை தீர்த்துக் கொள்ள முடியாத வர்களுக்காகவும்> இன்னும் பல பிரச்சினைகளுக்கும் தீர்வாகவும்> பலதார மணத்தை அனுமதித்துள்ளது. அதிலுள்ள சிறப்பம்சங்களை எழுதப்புகின் அதுவே ஒரு தனி ஆக்கமாகிவிடும். என்பதால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு என்பதோடு நிறுத்துகிறேன். சிந்தித் துணர்க.

ஆனால்,யார் அப்படி முடிக்கலாம் என்பதையும், அது அவர்களால் முடியாத காரியம் என்பதையும் கூட மிக அழகாகத் தெளிவுபடுத்தியிருக்கின்றது. ஒவ்வொன்றாக. இவ்விரண்டாக, மும்மூன்றாக அல்லது நான்கு நான்காக மண முடிக்கலாம். அவர்களை நீதமாக  நடத்த முடியுமாயின் மணமுடி யுங்கள். ஆனால் உங்களால் நீதமாக நடந்து கொள்ள முடியாது எனவும் கூறியுள்ளதில் இருந்து, பலதார மணம் எச்சந்தர்ப்பத்தில், எப்படியானோ ரால் நடைமுறைப்படுத்தப்படலாம் என்பதை உணரலாம்.

திருமணமற்ற  பாலியல் வாழ்வை விபச்சாரமாகக் கருதுகின்றது குர்ஆன். திருமணத்தின் மூலம் கிடைக்கும் வாழ்வே பாதுகாப்பானது, அவமானத் தைத் தராதது. பொறுப்பானது, கௌரவமானது பெறப்படும் குழந்தைகளுக் கும் கண்ணியத்தையும், உறவு முறையையும், உரிமையையும் அளிப்பது. மேலும், தவறான பாலியல் தொடர்புகளால் ஏற்படும் பயங்கர வியாதி களிலிருந்து பாதுகாப்பும் கொடுத்துக் கொண்டிருக்கின்றது.  விபச்சாரம் பற்றி எழுதி விளக்க வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகிறேன்.

அதுபோன்றே, பெண்களையும், பிறக்கும் குழந்தைகளையும் பாதுகாப் பதற்கான 'இத்தா' என்ற காத்திருக்கும் காலம்' அல்லது 'கருவறியுங் காலம்'. அதாவது கணவனைப் பிரிந்த நிலையில், அல்லது கணவனை இழந்த நிலையில் ஒரு பெண் குறிப்பிட்ட காலம் வரை இன்னொரு ஆடவனை மணமுடிக்காதிருத்தல். இச்சட்டம் உண்மையில்  அனைத்து முஸ்லிம்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்டாலும், அவை பிழையான விளக்கத்துடன், சிக்கலானதாக, கஷ்டமானதாக, பெண்ணை வருத்துவ தாகவே கடைப்பிடிக்கப்படுகின்றது என்பதைத் தவிர அச்சட்டம் பெண் களுக்கு முழுமையான பாதுகாப்பை, கற்புக்கு, நடத்தைக்கு களங்கம் வராத பண்பைக் கொண்டுள்ளது

அத்தோடு, முன்னைய கணவனின் பிரிவு வேளையில் கர்ப்பமுற்ற நிலையில், கர்ப்பம் அறியப்படாத நிலையில் (காத்திருங்கும் காலம் பின்பற்றாத நிலையில்) மறுமணம் செய்யும் வேளையில் சில மாதங்களில் அவள் கர்ப்பினி என அறிய வரும்போது ஏற்படும் விபரீதம், அப்பெண்ணை மட்டுமல்ல அக்குழந்தையை, அதன் எதிர்காலத்தை, அதன் கௌரவத்தை> அதன் சமூக அந்தஸ்தை, அதன் மனத்தை, மேலாக, தாயைப் பற்றிய பிழையான கருத்தியலை அப்பிஞ்சு மனத்தில் விதைத்து விடுவதுவதுடன், அதன் சொத்துரிமையையும் முழுமையாகப் பாதித்து விடுகின்றது.

தலாக்கின் போது, திருமணத்தின் போது மணமகனால் மணமகளுக்குக் கொடுக்கப்பட்டது பொற்குவியலாயினும் அதனை மீளப் பெற வேண்டா மென்பதும், இன்றைய காலகட்டத்தில் மணமக்களுக்குள் நடக்கும் பிரச்சினைகளுக்கு எத்தகைய தீர்வைக் கொண்டுள்ளது என்பதை நான்  கூறி நீங்கள் விளங்க வேணடியதில்லை. ஆயினும் சில: உடற்பொருத்த மின்மை, மனப் பொருத்தமின்மை, குணப் பொருத்தமின்மை, குலப் பொருத்தமின்மை, மலட்டுத் தன்மை, தீரா நோயால் அவதிப்படும் ஆண் அல்லது பெண் போன்ற சந்தர்ப்பங்களில் மணவிலக்கின் அத்தியாவசியம் உணரப்படுகின்றது. இன்று நாளுக்கு எத்தனையோ மண முறிவுகள் கோர்ட்டிலும், றோட்டிலும் கேவலப்பட்டுக் கொண்டிருக் கின்றன. அதற்கான தீர்வு குர்ஆனிய சட்டமான ‘தலாக் என்ற விவாக விடுதலை ஒன்றேதான் என்பதை சிந்திக்கக்கூடிய எவரும் மறுக்க மாட்டார்கள்.

நடையில் மத்திமம், பேச்சில் மத்திமம்> தொழுகையில்கூட சத்தமிட்டு ஓதுவதில் மத்திமம், போன்றன இன்றைய நாட்டு நிலையில் எந்தளவு நம்மை வழிகாட்டிக் கொண்டிருக்கின்றது என்பது. பலாத்காரம், மதத் துக்கெதிரான கூப்பாடு, சத்தமிடக்கூடாத சட்டங்களைப் பின்பற்ற வேண்டிய காலத்திலும் ஈடு கொடுக்கும் தன்மை, இறைவனின் மதி நுட்பத்தையும், க்காலமும் உணர்ந்தவன் என்ற உண்மையையும் வெளிப்படுத்திய வண்ணமுள்ளது.

மீந்ததைக் கொடுங்கள் என்பதன் மூலம் எத்துனை அரிய, பெரிய உண்மைகளை, தர்மத்தில் உள்ளடக்கி உள்ளது என்பது தனிக் கட்டுரையில் விபரிக்கப்பட்டுள்ளது.

உங்கள் சொத்தில் இரப்போருக்கும், இரவாதோருக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் பங்குண்டு எனக் கூறி இல்லாமையை ஒழிக்கும் சமதர்மத்தை வளர்க்கும் அரிய கருத்தை, அதனைக் கௌரவத்துடன் பெறும் உரிமையை நிலைப்படுத்தி உள்ளது.

பெண்ணியம், பெண்ணுரிமை பற்றி வாய் கிழியக் கத்தி வம்பு செய்து> குழப்பங்களை விளைவித்துக் கொண்டிருக்கும் இவ்வுலகுக்கு, 1400 வருடங் களுக்கு முன்னதாகவே மிகச் சிறந்த உரிமைகளை, சலுகைகளை மற்றும் எவரும் நினைத்துப் பார்க்கவும் முடியாத சட்டங்களை ஆக்கி, அவர்களைக் கௌரவப்படுத்தி உள்ளது. இதனை எனது தனிக்  கட்டுரைகளான பெண்ணுரிமை> பெண்ணியம் போன்றவற்றில் விபரமாக அறியலாம்.

வட்டி, கடன் போன்றவற்றுக்கு வரைவிலக்கணத்தையும், வரைபுகளையும் மிகத் தெளிவாகக் கொடுத்து அதிலுள்ள நன்மை, தீமைகளை வலியுறுத்தி, அழகான கடனாகக் கொடுக்கும்படி பணித்துள்ளது. இன்று மனிதர்கள் மட்டுமல்ல, கடன்படாத நாடுகளே கூடக் கிடையாது என்பதை அறியும் போது, குர்ஆன் தன்னில்  மாற்றமற்ற நிலையில், ஆனால் மாறுபடும் உலகுக்கு எவ்வகைப் பங்களிப்பைச் செய்து கொண்டிருக்கின்றது என்பதை அறியலாம். இன்று வங்கிகள் தமது கடன் கொடுக்கும் முறையில் முழுமையாக குர்ஆனிய தன்மைகளைக் கொண்டிருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றதுஆனால், முஸ்லிம்களால் பிழையாக விளங்கிக் கொள்ளப்பட்ட குர்ஆனிய சட்டங்களில் இதுவும் ஒன்றே! வட்டி பற்றிய விளக்கங்களை எனது 'வட்டி ஓர் சிறப்புப் பார்வை...', 'வட்டி பற்றி குர்ஆன் கூறுவதென்ன?' என்ற கட்டுரைகளில்  காணலாம்.

மேலும், இரத்தத்துக்கும் சாணத்துக்கும் மத்தியில் இருந்து பால் வெளிப்படுத்தப்படுவது, கண்ணின் படைப்பு: கிட்ட உள்ளதை தூரத்தில் போன்றும், தூரத்தில் உள்ளதைக் கிட்ட உள்ளது போன்றும், பெரிதைச் சிறிதாகவும், சிறிதைப் பெரிதாகவும், அசைவதை ஓடுவது போலவும், ஓடுவதை அசைவது போலவும் என பல்வேறு வகையில் நாம் கண்ணைப் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளமை, உலகின் எவ்வித மாற்றங்களுக்கும். ஈடு கொடுத்துக்கொண்டிருக் கின்றது குர்ஆன் என்பதை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றது.

இயற்கை பற்றிய சில பேருண்மைகள்:1. பிரபஞ்சத்தின் தோற்றம், அழிவு 2. விரிந்து செல்லும் பிரபஞ்சம் 3. சூரிய, சந்திரர் பற்றிய உண்மைகள் 4. பாதுகாக்கப்பட்ட, தூணற்ற முகடாக வானம் 5. வானத்திலிருந்து நீர் இறக்கப்பட்டமை, மழை பற்றிய உண்மைகள், 6. செவ்வையாக்கப்பட்டு உயிரினங்கள் வாழ்வதற்கான பூமி 7. மலைகளை முளைகளாக நிறுவியமை 8. இறந்த பூமியை உயிர்ப்பித்தல் 9. தாவரங்களை முளைக்க வைத்தல் 10. சோடிகளாகப் படைக்கப்பட்ட இரகசியம். 11. கருவில் குழந்தையி்ன் வளர்ச்சி 12. ஏழு கடல்கள், அதனுள் அடக்கப்பட்டவை, சுவையில், தன்மையில் வேறுபாடு, அவற்றில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பு, அவற்றை மீற முடியாத பண்பு, 13. இரும்பை இறக்கித் தந்தமை, 14. பூமியின் சுழற்சி, இரவு, பகல் உண்டாகும் முறை, 15. காலங் காட்டும் சூரிய, சந்திரர், 16. மேகங்கள் நீரைச் சுமக்கும் விதம், 17. காற்று, அதன் பங்களிப்பு, 18. நீரிலும் காற்றைக் கரைத்து வைத்துள்ள இரகசியம், 19. தேனீ பற்றிய உண்மைகள், தேனின் உருவாக்கம்,  20. தாவரங்களுக்கும் உயிர், 21. பூமியிலும், வானத்திலும் படைகள்  22. மனிதனுக்கு மேல் ஏழு பாதைகள் என்பதன் இரகசியம்: அவை ஒளியில் உள்ள ஏழு நிறங்கள், 23.ஆகாயத் திலும், கடலிலும் கூட பாதைகள், 24. வரம்பு மீறாத கடல், 25. நாற்புறங்களிலும் குறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பூமி, 26. காற்றை வசப்படுத்தித் தந்தமை, 27. வலுவிருந்தால் வானத்தைக் கிழித்துக் கொண்டு செல்லலாம் என்ற குறிப்பு, 28. விதைகளைப் பிளக்க‌ வைக்கும் இரகசியம், 29. ஓர் ஆன்மாவில் இருந்து அனைத்து உயிரினங்களும் என்பதன் உண்மை, 30. மலைகளைப் போன்று கடலில் சுமந்து செல்லும் கப்பல் என்பதில் மறைந்துள்ள தொழில்நுட்பம், இவ்வாறு நாம் தெரிந்தவைகளும், தெரியாமல் அறியப்படாமல் இருப்பவைகள் பற்றியும் மிகத் தெளிவாக, இன்றைய விஞ்ஞான கண்டு பிடிப்புகளை உண்மைப்படுத்தும் ஓர் ஒப்பற்ற ஆவணமாக இருக்கின்றது குர்ஆன். இன்றைய எந்தக் கண்டு பிடிப்பாயினும்,அவை அனைத்தும் இயற்கையில் இருந்து பெறப்பட்டவையே! இவை அனைத்தையும் இறைவனே உருவாக்கியுள்ளதாக குர்ஆன் கூறிக் கொண்டிருக்கின்றது.

ஆக்கத்தின் சுருக்கம் கருதி சிலவற்றைத் தலைப்புகளாக மட்டும் தருவதோடு நிறுத்திக்கொண்டுள்ளேன்ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கமாக எழுதப்புகின் அது விரிந்து நூல் வடிவாகிவிடும். அது மட்டுமல்ல இவ்வளவுதான் விஞ்ஞான உண்மைகள் என்ற வகையில் மட்டுப்படுத்தப்பட்டு விடும். இவ்வுண்மைகள் தற்போது நாள்தோறும் புதிதுபுதிதாக வெளிவந்த வண்ணமே இருக்கின்றன. உலக முடிவு வரை அப்படியே வெளிவந்த வண்ணம் இருக்கும்

எல்லாவற்றுக்கும் மேலாக, பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் விரும்பியோ, விரும்பாமலோ அல்லாஹ்வைத் துதி செய்கின்றன. அவனுக்கு சிரம் சாய்க்கின்றன, அவனை வணங்குகின்றன. அவனது புகழ்பாடாதது எதுவுமில்லை எனக் குர்ஆன் பல இடங்களில் கூறி யிருப்பதன் மூலம், அனைத்துக்கும் இயக்கம் உண்டு என்பதை, மிகத் தெளிவாகக் கூறிக் கொண்டிருக்கின்றது. இதனை மறுப்பார் யாரோ!

- நிஹா

2013.07.01








No comments: