Tuesday, July 23, 2013

நீங்கள் ஒன்றுமைப் பட்டது போதும் அச்சுறுத்தல்களை சட்டரீதியிலாவது அணுக முன்வாருங்கள்

Commented by nizamhm1844 on:  http://tinyurl.com/klbfuey

Lankamuslim.org
One World One Ummah

நீங்கள் ஒன்றுமைப் பட்டது போதும் அச்சுறுத்தல்களை சட்டரீதியிலாவது அணுக முன்வாருங்கள்


முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒற்றுமை - தம்மை வளர்ப்பதற்காக, தமது பதவி‌களைத் தக்க வைக்க, தமது ஊழல்க‌ள் வெளிபபடாது காத்துக் கொள்ள அரசின் அடிவருடிகளாக, எவன் பெண்டாட்டி எவனுடன் போனால் என்ன லெப்பைக்கு நாலு பணம் என்ற அடிப்படையில், அரசுக்கு முண்டு கொடுப்பதற்காகவே! 

வட மாகாண சபைத் தேர்தல் சம்பந்தமாக முஸ்லிம் அரசியல்வாதிகளால் சூட்சுமமாக வெளியிடப்படும் கருத்தின் போக்கைக் கவனிக்கும் போது, நடக்கப் போவது என்ன என்பது தெளிவாகிறது. அதாவது, முஸ்லிம் கட்சிகள் அரசைப் பலப்படுத்தும் நோக்கில், வடக்கில் பலப் போராட்டத்தை முன்னெடுக்கும் வாக்கில், அரசுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடல் என்பதன் மூலம் அறியலாம். 

அத்தகைய ஒரு நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், அது நடந்து முடிந்த அனைத்து இஸ்லாம் விரோத நடவடிக்கைகளுக்கும் அங்கீகாரம் கொடுத்ததாகவே அமையும்.  அத்தோடு, மேலும் இருக்கும் பள்ளிவாசல்களையும் உடைப்பதற்கு ஊக்குவிக்கும் செயலாகவும் மாறும். அதற்கு மேல் முஸ்லிம்கள் இந்நாட்டில் பூரண சுதந்திரத்துடன் சகல சௌபாக்கியங்களுடனும் அமைதியாக வாழ்வதாக. வெளியுலகை  நம்ப வைக்கும் நடவடிக்கையாகவும் அமையும். இதுவே முஸ்லிம் வரலாற்றில் நடக்கப் போகும் மிகப் பெரிய கழுத்தறுப்பும், காட்டிக் கொடுக்கும் செயலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.  

அத்தோடு தமிழர் கையில் சென்றடைய வேண்டிய வ.மா.சபை அதிகாரத்தை அரசிற்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் தரங்கெட்ட வேலையைச் செய்த தான பழிக்கும் முஸ்லிம் சமூகம் முகங்கொடுக்க வேண்டி வரும். எந்த நிலையிலும், முஸ்லிம்களுக்குப் பாதுகாப்பாக உள்ள பிரதேசம் வடக்கும் கிழக்குமே தவிர வேறில்லை. அதையும் பேரின அரசியலுக்குள் சங்மமாக்கி விட்டால் அதற்குப் பின்னர் அவ்விடங்களும் முஸ்லிம்களுக்குப் பாதுகாப் பற்ற பிரதேசமாக மாறிவிடும். கிழக்கு மாகாண சபை தேர்தலுக்குப் பினனர் தோன்றியுள்ள நிலை, அதற்கு உதாரணம். .தெற்கில் புத்த கடும் போக்கு வாதிகள் போன்று, கிழக்கில் தமிழ் கடும்போக்கைக் கொண்ட தீவிரவாத அமைப்புக்கள் தோன்றி தொல்லை கொடுக்கத் தொடங்கியுள்ளன.  அதே நிலை வடக்கிலும் தோற்றுவிக்கப்படும்.  அதே வேளை தீரா நிரந்த வடுவை யும், தொல்லையையும் அங்கு வாழும் முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டி வரும். 

சில அரசியல் நன்மைகளையும், தற்காலிகமான சில சலுகைகளையும் முன்வைத்து எதிர்கால முஸ்லிம் சந்ததியினரின் வாழ்வுக்குக் குந்தகம் விளைக்கும் அத்திவாரங்களைப் போட்டுச் செல்வதாகவே அமையும். தயவு செய்து, சந்தர்ப்பவாத, சுயநல, ஏமாற்று அரசியல் வித்துவத்தை வடமாகாண சபைத் தேர்தலில் பிரயோகிக்க வேண்டாம் எனக் கோருகிறோம். முடிந்தால் ஒற்றுமைப்பட்டு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னலைப் போக்கப் பாருங்கள்.

பாராளுமன்றிலும், அமைச்சரவையிலும் முஸ்லிம் அமைச்சர்கள் இல்லா திருந்திருப்பின் இலங்கையி்ல் நடந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை, இன ஒழிப்பு, மதஅழிப்பு, வியாபார சுதந்திரம் பறிப்பு, சுதந்திரமாக நடமாடும் உரிமை பறிப்பு, அவமதிப்பு, அவதூறு போன்றவை பகிரங்கமாகத் திட்டமிட்டபடி ஒழுங்கு முறையில் தேசிய அளவில் அதிகார ஆசீர்வாதத்துடனும்,அனுசரனையுடனும் நடைமுறைப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதை உலகம் கண்டு கொண்டிருக்கும். உலகு காணமாமல் இருப்ப தற்கு தற்போதைய பதவிகளிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகளும், அமைச்சர்களுமே தடைக்கற்களாக இருக்கின்றனர். சம்பவங் களின் கனத்தை மறைத்துப் பூசி மெழுகுகின்றார்கள். அத்தோடு அவர்கள் முஸ்லிம்களின் அழிவுகளை வெளியுலகிற்கு தெரியாமல் மறைப்பதற்காகப் பூசப்படும் முலாம்களாக பயன்பட்டுக் கொண்டிருக் கின்றார்கள்.

No comments: