Tuesday, January 29, 2013

Paristamil Tamil News - இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் பிரான்ஸ்!!! (தாக்குதல் காணொளி)

Paristamil Tamil News - இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் பிரான்ஸ்!!! (தாக்குதல் காணொளி)


உங்கள் பத்திரிகையில் நேர்மை, நடுநிலை இல்லை.

முஸ்லிம்களைப் பற்றித் தவறாக எழுதுவதற்கு அனுமதிக்கும் நீங்கள் அதற்கு நியாயமான, உண்மையான பதிலை எழுதினால் அதனை அழித்து விடுகிறீர்கள்.

எங்கே நான் எழுதிய மறுப்பு? அதில் என்ன பிழையைக் கண்டீர்கள்?  இதுதான் ஊடக பயங்கரவாதம் என்கிறேன்!

Paristamil Tamil News - விண்ணுக்கு வெற்றிகரமாக குரங்கைச் செலுத்திய ஈரான்

Paristamil Tamil News - விண்ணுக்கு வெற்றிகரமாக குரங்கைச் செலுத்திய ஈரான்


மாமி உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொற்குடம் என்பது போல் இருக்கின்றது, மேற்குலக நாடுகளின் கருத்து.  கீழைத்தேய நாடுகள் விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டால் அதற்கு வேறோரு முலாம் பூசப்படுகின்றது.

உண்மையில் நாகரிகமும், விஞ்ஞான கண்டுபிடிப்புக்களும், மேற்குலகுக்குப் புதிதாக இருக்கலாம், ஆனால் மேற்கு அஞ்ஞான இருளில் மூழ்கியிருந்த போதே கிழக்கு நாகரிகத்திலும், விஞ்ஞான கண்டுபிடிப்புக்களிலும் முத்திரை பதித்துள்ளது.

Paristamil Tamil News - அமெரிக்க உயர்மட்ட குழுவின் விஜயமும் - வீரவன்சவின் கண்டுபிடிப்பும்

Paristamil Tamil News - அமெரிக்க உயர்மட்ட குழுவின் விஜயமும் - வீரவன்சவின் கண்டுபிடிப்பும்


ஒபாமா கூறாததை “என் அப்பன் குதிருக்குள் இல்லை“ என்பது போல், வீரமுழக்கம் செய்துள்ளார்!        

//  இதேவேளை, உளவுத் தகவல்களை திரட்டும் நோக்கிலேயே அமெரிக்கப் பிரதிநிதிகள் சிறிலங்கா வந்துள்ளதாக அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.   //      திரட்டுவதற்கு இங்கு தகவல் உள்ளது எனக் கூறுகின்றாரா!    

கலிமா இஸ்லாத்தின் நுழைவாயில்,              ஈமானின் அத்திபாரம், ஈடேற்றும் இறைவாயில்.


இஸ்லாம் ஐந்து தூண்களில் நிறுவப்பட்டுள்ளதாகவும்,  அந்த ஐந்தையும் நிறைவேற்றுவது ஒவ்வொரு இஸ்லாமியனின் கடமை எனவும், இக்கடமை களை நிறைவேற்றுபவனே முஸ்லிமாகவும் இருப்பான் எனவும் அறிவிக்கப் பட்டு அதனை நாம் அறிந்தும் வைத்துள்ளோம். இது பற்றிய ஒரு சிறு ஆய்வே இவ்வாக்கம்.  

முஸ்லிம்களுக்குக் கடமையாக்கப்பட்டுள்ள ஐந்து காரியங்களில் முதன்மை யானதாகக் கலிமா கூறப்பட்டு உள்ளது.  கடமையைச் செய்ய வேண்டியவன் ஏற்கனவே  முஸ்லிம் ஆகியிருக்க வேண்டியுள்ளது. முஸ்லிம் ஆனதனால் தான் அவனுக்குச் சில கடமைகள் இருக்கின்றன. அப்படியாக அவன் செய்ய வேண்டியுள்ள கடமைகள்தான் கலிமா,தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் ஆகிய ஐந்து தூண்களும். 

இப்போது ஒரு கேள்வி, அது மிகவும் நியாயமானதே! அதாவது மேற்கண்ட கடமைகளைச் செய்ய  ஒருவன் ஏற்கனவே முஸ்லிம் ஆகியிருப்பான் என்பதால் அவன் எப்படி முஸ்லிம் ஆனான்? கலிமா ஏன் பின்னர் கடமை என்ற வட்டத்துள் அடக்கப்பட்டுள்ளது? என்பதே. 

முதலாவது கேள்விக்கு நம்மிடம் ஒரு பதில் உண்டு. அது, அந்த ஒருவன் இஸ்லாம் கூறியுள்ள ஆறு விடயங்களில் ஈமான் கொண்ட ஒருவனாக இருக்க வேண்டுமென்பது. அந்த ஆறு விடயங்களில் முதன்மையானதும், நான்காவதாகக் குறிப்பிடப்பட்டிருப்பதும், அல்லாஹ் மீதும், அவனது தூதர்கள் மீதும் ஈமான் கொள்வது. நான்காவதானதைத் தற்போதைக்கு ஒரு புறம் வைத்துவிட்டு, முதன்மையான அல்லாஹ் மீது ஈமான் கொள்வது என்ற விடயத்தை அணுகினால்,  அல்லாஹ்வை எப்படி நம்பவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. 

ஆக ஒருவன் இஸ்லாமியனாக ஆகும் அந்தஸ்தை வழங்குவது எது? முன்னைய இரண்டு கேள்விகளுக்கும்  விடையாக அல்லாஹ்வை நம்புவது, அது லாஇலாக இல்லல்லாஹ் என்று,'இல்லை நாயன் அல்லாஹ்வைத் தவிர’ என அனைத்துத் தெய்வங்களையம் மறுத்து ஓரே இறைவன் மட்டுமே உண்டு என்பதை ஏற்று அதன் மேல் நம்பிக்கை கொள்வது. ஆயின், அக்கலிமா ஏன் கடமைக்குள் அடக்கப் பட்டுள்ளது? என்ற கேள்வி விடையின்றி நிற்கின்றது.

மேற்கண்ட பந்தியில் காணப்படும் உண்மை, ஒருவன் இஸ்லாமியனாக ஆவதற்கே, கலிமா என்ற தாரக மந்திரம் தேவை என்பதை மிகத் தெளிவாக்கி யுள்ளது. இந்நிலை கடமை என்ற வட்டத்துள் அடக்கப்பட்டு இருந்த கலிமாவை வெளியே எடுத்து, அக்கலிமா அனைத்துக்கும் முதன்மையானது முன்னோடி யானது என்கின்றது. அதனால் இந்தக் கலிமா, ஈமானுக்கு முந்திய நிலையைக் கொண்டு, அதன் அத்திபாரமாகக் காணப்படுகிறது.

ஆயினும், நாம் இதுவரை, கலிமா சொல்வதை ஓர் கடமையாகக் கொண்டே இயங்கி வருகின்றோம்,மற்றைய நான்கினையும் செய்வதுபோல். இன்னோர் வகையில் மற்றைய நான்கும் செயல் முறையைக் கொண்டுள்ளனவாகவும், முதலாவதான ‘லா இலாக இல்லல்லாஹ்’ என்ற கலிமா மட்டும் வாயால் கூறி மனதால் ஏற்பதாகவும் கருதப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகிறது. இதுவும் ஏதோ வகையில் முரண்பாடான தன்மையைக் கொண்ட அமைப்பில் கடமைகளுக்குள் கலிமா அடக்கப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

ஆசிரியன் ஒருவனுக்கே கற்பித்தல் என்ற கடமை இருக்கும். அதுபோல்  இஸ்லாமியன் ஒருவனுக்கே  ஐந்து கடமைகள் இருக்கும் எனக் கொண்டால்,  மேற்கண்டவாறு கலிமாவைக் கூறி மனதால் ஏற்று இஸ்லாமியனான ஒருவனுக்கு, மீண்டும் அதனைக் கடமையாகக் கூறப்படுவதில் ஏதோ தவறிருப்பதைக் காணக்கூடியதாக இல்லையா?

ஆக கலிமா என்பது இஸ்லாமியனின் கடமை அன்று. அது இஸ்லாமியனாக ஆவதற்கான தாரக மந்திரம். இஸ்லாத்தின் நுழைவாயில், அதன் அத்திபாரம், இணை மறுப்பு. ஏக இறை ஏற்பு. ஈடேற்றும் இறைவாயில்.  

அல்ஹம்து லில்லாஹ்.

                                                                                                                                - நிஹா -     

Colombo  03
2011.05.06
Mobile: 0718156970

Monday, January 28, 2013


ஹலால் சான்றிதழா? ஹறாம் பற்றிய அறிவா? அல்லாஹ் அறிவித்தது! 


உயிரினங்களின் வாழ்வுக்கு ஊன்றுகோலாக அமைவது உணவு. உணவின் தேவை இல்லாமல் இருந்திருப்பின் உலக இயக்கமும் நின்றிருக்கும். அந்த அடிப்படையிலேயே அனைத்து உயிரினங்களுக்கும் உணவளிக்கும் பொறுப்பைத் தன்வசம் வைத்துள்ளான் “றஸ்ஸாக் - உணவளிப்பவன்“ என்ற பெயரைத் தாங்கிய வல்ல நாயன் அல்லாஹ்.

அனைத்தையும் மனிதருக்காகவே படைத்துள்ளதாகக் கூறும் அல்லாஹ், மணமுள்ளவற்றை, உண்ணுங்கள், பருகுங்கள், வரம்பு மீறாதீர்கள் எனக் கூறி, அவற்றில் சிலவற்றைத் தடுக்கப்பட்டவைகளாக வகைப்படுத்தி யுள்ளான். இந்நடை முறை, பாலகன் முதல் வயோதிபர் வரை, பாமரர் முதல் பாவலர் வரை மிக இலகுவாக, குறுகிய நேரத்தில் அறிந்து கொள்ள உதவுவதே.  எவை சாப்பிடக் கூடாதவை என்ற அறிவு இருந்தால்,  தங்கள் சூழலில் கிடைக்கக் கூடியவற்றில் இருந்து சாப்பிடக்கூடிய உணவுகளை எவ்வித கஷ்டமுமின்றி, இலகுவாக, சந்தேகமற அறிந்து உண்ணலாம் என்பதே!

இந்நடைமுறை கடந்த 1400 வருடங்களுக்கு மேலாக உலகெங்கும் அனைத்து முஸ்லிம்களாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு அமோக வெற்றியையும் பெற்றுள்ளது. இன்னும் சொல்லப் போனால், முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரும் இஸ்லாமியரின் ஹறாமான உணவுகளை மிக நன்றாகவே அறிந்து வைத்துள்ளனர். அத்தோடு, முஸ்லிம்கள் அவ்வுணவுகளைப் பெற்றுக் கொள்வதில் உதவுபவர்களாகவும் இருந்து வந்துள்ளனர். அந்த அடிப்படையில், இந்நாட்டில், இறைச்சிக் கடைகள் அனைத்தும் முஸ்லிம்களால் நடத்தப்பட்டு வருவது நாமறிந்ததே. அதற்கு மேலும், உலக மக்களின் அங்கீகாரம் கூடக் கிடைத்துள்ளது எனலாம். அவற்றை நாம் நமது நடைமுறை வாழ்வில் மிகச் சாதாரணமாகக் காணக் கூடியதாகவுள்ளது.

குர்ஆனியச் சட்டங்களின் போக்கை அவதானிக்கும் ஒருவர், அல்லாஹ் மிக நுட்பமமாக சட்டங்களை ஆக்கியுள்ளமையை அறிந்து கொள்ள முடியும். சுருக்கமாகக் கூறின், அத்தியாவசியமான சில விடயங்களில் அவன் கையாண்டுள்ள  வழி, நடைமுறை பிரச்சினைகளை எக்காலத் திலும் ஏற்படுத்தாத நிலையில் யாக்கப்பட்டுள்ள தன்மையைக் கொண்டு  உள்ளதைக்  காணலாம்.

ஆடை பற்றிய சட்டத்தை யாக்கும் போது, அத்தியாவசிய தேவை கருத்திற் கொள்ளப்பட்டுள்ளதையும், உலகின் எந்த மூலையில், எவ்வித சுவாத்தி யங்களிலும், வரப்பிரசாதங்களுடனும், வளங்களுடனும், வாய்ப்புக்களு டனும்  வாழ்பவர்கள் தமது அந்தஸ்து. உடல்நிலை, தேவை, வசதி போன்ற பல் வேறு நிலையிலும் அணியக் கூடிய பண்பைக் கொண்ட விதமாகப் பரிந்துரை செய்துள்ளான்.  ஆம் மானத்தை மறைக்கக் கூடியதாக, அழகாக, அலங்காரமாக அமையக் கூடிய விதத்தில் ஆடையைத் தேர்வு செய்யும் உரிமையை நமக்களித்துள்ளான். இதை விளக்கப் புகின் நமது நோக்கம் திசை திரும்பி விடும். உய்த்துணர்வோர் நன்மைகளை அறிந்து இறை கருணையை உவப்பர்.

பெண்களுக்குரிய ஆடை விடயத்தில் அல்லாஹ், பாதுகாப்பு, மானம், குழப்ப நிலை தவிர்ப்பு போன்ற காரணங்களை முன்வைத்து,சிறிது கண்டிப்பான போக்கைக் கையாண்டுள்ளமையை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. சிருஷ்டிப்பின்  அவசியம் காரணமாக, பெண்கள் கவர்ச்சிகரமாகப் படைக்கப்பட்டுள்ளனர். கண்டதும் ஆசை கெள்ளும் அளவில் அவர்களது உடல் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் அவர்களை உங்களுக்குப் பூந்தோட்டமாக ஆக்கித் தந்துள்ளளோம் எனவும். நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும், அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும் கூறியுள்ளான்.

இதனால் சில முறைகேடுகள் நடந்து விடும் என்பதையறிந்த வல்ல நாயன் அதற்கான உடையைப் பரிந்துரை செய்திருக்கிறான். உங்கள் ஆடைகளைத் தொங்க விடுங்கள், உங்கள் முந்தானைகளால், உங்கள் மார்பகங்களை மூடிக் கொள்ளுங்கள், தானாகத் தெரிவதைத் தவிர வெளிப்படுத்தாதீர்கள். நிலத்தில் பாதங்களை அடித்து  குலுங்க நடவாதீர்கள், நளினமாகப் பேசாதீர்கள், நோயுள்ள நயவஞ்சகர் பிழையாக நடக்க முற்படுவர்,  இவை அடையாளங் காணப்படுவதற்கு மிக நெருக்க மானவை என்றெல்லாம் கூறியுள்ளமை எந்தளவு நமது நன்மையில் கரிசனை கொண்டு, சிறப்பான கவனத்துடன் சட்டங்கள் யாக்கப்பட் டுள்ளதைக் காட்டுகின்றது. ‘அடையாளங் காணப்படுதல்’ என்ற தொடரில் ஆயிரம் உண்மைகள் பொதிந்துள்ளன.

மேலும், ஆண்களாயினும், பெண்களாயினும் தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் எனக் கூறியிருப்பதன் கரு த் தை உற்று நோக்குவோர், அது பல விடயங்களுக்கு, சிக்கல்களுக்கு தீர்வுகளைக் கூறிக் கொண்டிருப்பதை அறிவர்.

திருமண விடயத்தில் மிகவும் கறாறான நடைமுறையைக் கையாண்டு உள்ளான். அதற்காக, திருமணம் செய்வதற்கு தடுக்கப்பட்டவர்களின் பட்டியலை விளாவாரியாகவும், திருமணம் செய்ய ஆகுமாக்கப்பட்ட வர்களின் பட்டியலை விளாவாரியாகவும் வெளிப்படுத்தியுள்ளான். காரணம், திருமண பந்தத்தில் நடைபெறும் எவ்வித தவறும் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கும் என்றிருந்தாலும், அவைகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படுவது, பிழையான திருமண பந்தங்களால் பெறப்படும் குழந்தையின் உரிமை, கௌரவம், சமூக நிலை போன்ற இன்னோரன்னவை பெற்றாரின் பிழைகளால், பிள்ளைகளின் வாழ்க்கை யைக் கேள்விக்குறியாக்கி விடக் கூடாது என்ற பெருங் கருணையே!

மதுவையும், சூதையும் பற்றிக் கேட்கிறார்கள், அதில் சில நன்மைகள் உண்டே ஆயினும், அவற்றால் வரக்கூடிய பாவங்கள் அதிகம் என்பதனால் அவற்றைத் தவிர்த்துக் கொள்ளும்படி கூறுகின்றான்.

இன்று உலகளாவிய ரீதியில் பொருளாதாரத்திற்குப் சவாலாகப் பெரும் பிரச்சினையாக  உருவெடுத்துள்ள தமிழில் வட்டி என்ற சொல்லாலும், ஆங்கிலத்தில் ' usury' எனவும் கூறப்படும் “றிபா“ என்ற நடைமுறையில் எதிர்காலத்தில் பல பிரச்சினைகளை ஆக்கவல்லது என்பதை அறிந்தி ருந்த அல்லாஹ், மிகத் துல்லியமாக அதன் கருத்தை, அதாவது றிபா வுக்கான வரைவிலக்கணத்தைத் தனது குர்ஆனில் வெளிப்படையாகவே தந்துள்ளான். இது இன்றைய அனைத்துப் பொருளாதாரப் பிரச்சினை களுக்கும் இலகு தீர்வைத் தன்னகத்தே தக்கவைத்துக் கொண்டுள்ளது. அறிவோர் இதன் பயனை அடைவர். 3:130இல் ‘இறைநம்பிக்கையாளர் களே! இரட்டிப்பாக்கப்பட்ட பன்மடங்காகிவிடும் “றிபா“வை நீங்கள் தின்னாதீர்கள். நீங்கள் வெற்றியடையும் பொருட்டு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்’ எனக் கூறியிருப்பது நமது அறிதலுக்கு உரியது.

இப்படியாக சட்டங்களை ஆக்கி வைத்த அல்லாஹ், உணவு விடயத்தில், சிலவற்றின் பெயர்களைக் குறித்து தடை செய்யப்பட்டதாகக் கூறி யுள்ளான். ஆம், தானாகச் செத்தவை, இரத்தம், பன்றி இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறி அறுக்கப்பட்டவைகளைத் தடுத்துள்ள தாகக் கூறியுள்ளான். அதற்குக் காரணம் அவை அசுத்தமானவை என்கின்றான். அதற்கு மேலும், தனது கருணையின் வெளிப் பாடாக, நீங்கள் வரம்பு மீறாமலும், பாவம் செய்யும் நோக்கமின்றியும் நிர்ப்பந்திக் கப்பட்டு, அவற்றை உண்டால் அல்லாஹ் மன்னிப்பவனாக இருக்கிறான் எனக் கூறுகிறான். இந்த விதிவிலக்கு, மனித வாழ்க்கையில் உணவின் அத்தியாவசியம் கருதிச் செய்யப்பட்ட ஏற்பாடே என்பதை அறியலாம்.

இந்த அளவில், தலையங்கத்துக்கு வந்தால், ஹலால்சான்றிதழ் பெற்று ஹலால் முத்திரையுடன் விற்கப்படும் பொருட்கள் பற்றிய அறிவா, அன்றி ஹறாமானவை என்னவென்று அறிந்து அவற்றை விலக்கி வாழும் அறிவா அல்லாஹ்வால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் ஹறாம் பற்றிய அறிவே, ஏற்புடைத் தன்மை கொண்டது, இலகுவானது, பாமரரும், சிறுவருங்கூடத் தெரிந்து கொள்வது, நினைவில் வைத்திருக்கக் கூடியது, நிச்சயமானது, சந்தேகம் அற்றது,  எவ்வித பிரச்சினைகளையும் ஏற்படுத்தாதது. எவருக்கும் தொல்லை தராதது, எக்காலத்துக்கும் உகந்தது, நடைமுறைச் சிக்கலற்றது. இவற்றை மறுப்பாருண்டோ!

ஆனால், ஹலால் முத்திரை பொறிக்கும் வழமை, அண்மைக் காலத்தில் எவராலோ நயவஞ்சக நோக்கோடு அறிமுகப்படுத்தப் பட்டு,  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வாலும் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்போது நம்நாட்டு முஸ்லிம்கள் மத்தியில் பெரும் பிரச்சினையாக விஸ்வரூபம் பெற்று உள்ள ஹலால் சான்றிதழ், ஹலால் முத்திரை அல்லாஹ்வின் சுன்னாவை விட்டு விலகியது.  நடைமுறைச் சாத்தியமற்றது. அபாயகரமானது. குழப்பத்தை உருவாக்குவது.

உலகம் தோன்றிய காலமுதல், ஹறாமானதைத் தவிர்த்து வாழ்ந்ததற்கு மாறான,, நபிகளார் முதல் எவரும் பின்பற்றியிராத நடைமுறை.

பல் வேறு சிக்கல்களையும், பிரச்சினைகளையும் தோற்றுவித்து, தற்போது பாரிய எதிர்ப்புக்குள்ளாகி, முஸ்லிம்களின் இருப்பு, அவர்கள் தம் மதக் கடமை களைக்கூடச் செய்ய முடியாத நிலை, அவர்களின் வாழ்வாதாரமான வியாபார நடவடிக்கைக்குக் குந்தகம் போன்றவற்றை உருவாக்கியுள்ளது.

1400 வருடங்களாகப் பரீட்சிக்கப்பட்டு வெற்றியடைந்த அல்லாஹ்வின் வழியான ஹறாம் என்பதை விலக்கி ஹலாலை முத்திரை ரூபத்தில் தேடுதல் என்ற மார்க்க அங்கீகாரமற்ற முறை பல்வேறு பிரச்சினைகளை குறுகிய கால எல்லையுள் முகம் கொடுக்க வைத்துள்ளது.

அது தோற்றுப் போன ஒரு நடைமுறை.  இதனை, ஹலால் முத்திரை யுடன், பன்றி இறைச்சி  சுப்பர் மாக்கட்டுகளில் விற்பனைக்குக் காணப் படுவதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவே கூறி யுள்ளமை நிரூபிக்கின்றது.  இதன் காரணமாக, அது, ஹலால் அல்ல, ஹறாம் என்பது  பற்றிய அறிவை , எச்சரிக்கையை மக்களுக்கு பத்திரிகையாளர் மாநாட்டைக்  கூட்டி வெளிப்படுத்த வேண்டிய இக்கட்டான, அவல நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அவர்களின் ஹலால் முத்திரை தோல்வியை மட்டுமல்ல,மிகப் பெரும் குற்றங்களுக்கும் வித்திட் டுள்ளது. அதாவது முத்திரையைப் பார்த்து ஹறாமானதை அப்பாவி முஸ்லிம்கள் உண்ணும் இழிநிலை ஏற்படுத்தி உள்ளது என்பதால் அறியப்படுகின்றது.  இது விளங்காதவர்கள் மீது அல்லாஹ் வேதனை யைச் சாட்டி விடுகின் றான் என்பதைக் காட்டுவதுடன், அல்லாஹ்வினது அங்கீகாரமற்ற எதுவும் தோல்வியையே தழுவும் என்பதை வெளிப்படுத்  துகின்றது.

ஹலால் சான்றிதழ் வழங்கி, ஹலால் முத்திரையுடன் உணவுப் பொருட்களை விற்பனைக்கு விடும் முறையால் ஏற்படவுள்ள பயங் கரங்களை, மிகக் குறுகிய காலத்திலேயே அறியத் தந்த அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும். எத்தனை முஸ்லிம்கள் ஹலால் முத்திரை பார்த்து, ஹறாமானதைத் தாமும் உண்டு, தமது பாலகருக்கும் கொடுத்து வருகி றார்களோ!

இக்குற்றத்தை ஹலால் முத்திரை பொறிப்பதற்காகப் பணத்தைப் பெற்றுக் கொண்டு, தமது முத்திரையைப் பொறிக்கும் அங்கீகாரத்தைக் கொடுத்துள்ள அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவே சுமக்க வேண்டி வரும். மறுமையில் தீர்ப்பளிப்பதாகக் கூறும் அல்லாஹ், இங்கும் அவமானங்களையும், தோல்விகளையும், அச்சுறுத்தல்களையும் சந்திக்க வைத்துள்ளான்.
                                                                                         ஹா.மு.நிஸாம்
Colombo 03.
2013.01.28
Mobile No: 0718156970

Saturday, January 26, 2013

Paristamil Tamil News - பிரான்ஸ் மேற்கொண்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான போர் - ஒபாமா ஆதரவு!

Paristamil Tamil News - பிரான்ஸ் மேற்கொண்டுள்ள பயங்கரவாதத்திற்கு எதிரான போர் - ஒபாமா ஆதரவு!


பத்திராதிபர் அவர்களே!

தற்போதைய செய்தியில் மாலிப் போராளிகுழுக்களின் செய்தியில் “இஸ்லாமிய பயங்கரவாதிகள்“ என்ற முலாம் பூசாமல் தவிர்த்தமைக்காக உங்களுக்கு எமது முஸ்லிம்கள் சார்பாக நன்றி தெரிவிக்கின்றேன்.

அமைதி விரும்பும் முஸ்லிம்கள் சார்பாக.
நிஸாம் ஹா.மு.

Paristamil Tamil News - இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் பிரான்ஸ்!!! (தாக்குதல் காணொளி)

Paristamil Tamil News - இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் பிரான்ஸ்!!! (தாக்குதல் காணொளி)


தாங்கள் அறியாமல் பேசிக் கொண்‌டிருக்கிறீ்ர்கள். உலகில் விடுதலை இயக்கங்கள் தோன்றி, திசைமாறிய பறவைகளாக, பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டன. நீங்கள் சொல்வது போல் தமிழ் பேசும் மக்களின் உரிமையை வென்றெடுப்பதாகத் தொடங்கப்பட்ட ஆயுதக்குழுக்கள், புலிகளின் கொடுவாளுக்குப் பலியாகி அழிந்தன. சில மறைந்தன. சில மாறின. அந்த இயக்கத்தில் முஸ்லிம்கள் சிலரும், கத்தோலிக்கர் சிலரும் இருந்தனர் என்பதும் உண்மையே! ஆனால், வடக்கு முஸ்லிம்களை எவ்வித காரணமுமின்றி, அவர்களது உடமைகள் அனைத்தையும் கொள்ளையடித்து, வெற்றுக்கையினராக, கொலைப் பயமுறுத்தலுடன், வரலாறு காணாத ஒரு இனச் சுத்திகரிப்பை மேற்கொள்வதற்கு சில மாதங்களுக்கு முன்னரேயே, அவர்களுடன் இருந்த முஸ்லிம் போராளிகளை வெளியேற்றினர்.

அது ஒரு புறமிருக்க, விடயத்திற்கு வந்தால், ““இஸ்லாமியப் பயங்கரவாதத்திற்கு எதிராகப் போர் தொடுக்கும் பிரான்ஸ்!!! ““ மேற்கண்ட தலையங்கத்திற்குக் கீழ் எழுதப்பட்ட கருத்து, மாலியில் ஒரு போராளிக் குழு பற்றியது. போராளிக்குழு எந்த மதத்தைச் சார்ந்தது என முஸ்லிம் அல்லாத வேறு மதத்தவர்கள் ஈடுபடும்போது, அவர்கள் மதத்தால், கத்தோலிக்க, கிறிஸ்தவ, இந்து, பௌத்த என மதீயாக அவர்களை அழைப்பதில்ல‌ை. புலிப்பயங்கரவாதிகள் எனக் கூறினார்களே தவிர, இந்து பயங்கரவாதிகள் என பத்திரிகை உலகு எழுதுவதில்லை என்பதே உண்மை. இது போன்று ஐஆர்ஏ ‌யை கிறிஸ்தவ பயங்கரவாதிகள், மாவோ, சிவசேனா போன்ற பயங்கரவாதிகளை இந்துப் பயங்கரவாதிகள் என அழைப்பதில்லை. மேலும் விளக்க வேண்டியதில்லை என நினைக்கிறேன். ஆனால் ஊடகப் பயங்கரவாதம் என இதனை நான் கூறுகிறேன்.

அதனாலேயே, சகோதரர் Imran Mohamed என்பவர் தனது ஆதங்கத்தை எழுதினார். உண்மையில் அவர் இனவாதம் பேசவில்லை. இனவாதக் கருத்தாக “இஸ்லாமிய பயங்கரவாதம்“ மாலி போராட்டத்துக்குப் பெயர் சூட்டியது, பரிஸ் தமிழ் தான். அதுதான் இனவாதக் கருத்தை வெளியிட்டது. அதனையே அவர் கண்டித்திருந்தார். அது சற்று தரக்குறைவான முறை என்பதே எப்போதும் எனது கருத்து.

தாங்கள், இனவாதத்தைச் சாடுபவராக இருந்தால், சாடியிருக்க வேண்டியது, பரிஸ் தமிழையே தவிர, சகோதரர் இம்றான் அவர்களை அல்ல். அந்த வகையில் நீதியாகக் கண்ணோட்டமிட்டால், உண்மையாக நீங்களும், பரிஸ் தமிழ் போன்று இனவாதத்தையே கக்கியுள்ளீர்கள்.

உண்மையில், உண்மையை அறிய வேண்டியவர் தாங்களே என்பதே யதார்த்தம். வடக்கில் ஒட்டுமொத்தமாக, கிழக்கில் மூதூரில் புலிகள் நடத்திய இனச்சுத்திகரிப்பு, வணக்க ஸ்தலத்துக்குள்ளே குழந்தைகள், முதியோர் எனப் பாராது வணக்கத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோரை க் கொன்று குவித்த போது கூட, இந்து, கத்தோலிக்க பயங்கரவாதிகள் என முஸ்லிம்கள் அழைக்கவில்லை. பத்திரிகைகள் எழுதவில்லை. புலிகள் என்றே கூறினர் என்ப‌தே போதும், இனவாதம் பேசுவோர் யார் என்பதை அறிந்து கொள்ள. தயவு செய்து பழைய தமிழ், ஆங்கில தினசரிகளைப் பாருங்கள் உண்மை புரியும். தற்போதைய தினசரிகளின் இனவாதப் போக்கு புரியும்

Paristamil Tamil News - பத்ம பூஷன் விருதினை பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி புறக்கணிப்பு

Paristamil Tamil News - பத்ம பூஷன் விருதினை பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி புறக்கணிப்பு

பத்ம பூஷன் பட்டம் கிடைத்தாதான் எஸ்ஜானகி அவர்களை சினிமா உலகம் தெரிந்து கொள்ளும் என்ற நிலை இல்லையே!

Paristamil Tamil News - முஸ்லீம்கள் மீது பெரும் தாக்குதலுக்கு முஸ்தீபு

Paristamil Tamil News - முஸ்லீம்கள் மீது பெரும் தாக்குதலுக்கு முஸ்தீபு


You are in the fools paradise. Your reply shows that you  did not know what happen to the North Muslims in 1990.
The theologian Anton Balasingam and Leader of the LTTE had openly accepted the forcible eviction of North Muslims  is a BLUNDER in an International Press Conference held in Kilinochchi.
தெரியாத விடயங்களில் மூக்கை நுழைக்க முற்படாதீர்.

Paristamil Tamil News - எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவி மரணம்

Paristamil Tamil News - எரிகாயங்களுடன் மீட்கப்பட்ட யாழ். பல்கலைக்கழக மாணவி மரணம்

நீங்கள் சொல்வது உண்மையல்லவென்றால், இப்படியும் செய்யலாம் என உங்கள் அனுபவத்தில் தெரிந்த தந்திரத்தைப் பொலிஸாருக்கும் சொல்லிக் கொடுக்கிறீர்கள் போல் தெரிகிறது.

Paristamil Tamil News - முஸ்லீம்கள் மீது பெரும் தாக்குதலுக்கு முஸ்தீபு

Paristamil Tamil News - முஸ்லீம்கள் மீது பெரும் தாக்குதலுக்கு முஸ்தீபு


You are in the fools paradise. Your reply shows that you  did not know what happen to the North Muslims in 1990.
The theologian Anton Balasingam and Leader of the LTTE had openly accepted the forcible eviction of North Muslims  is a BLUNDER in an International Press Conference held in Kilinochchi.
தெரியாத விடயங்களில் மூக்கை நுழைக்க முற்படாதீர்.

Friday, January 25, 2013


நபிகளாரின் ஜனன தினத்தை ஒட்டிப் பிரசுரிக்கப்படுகின்றது.

உலகை உய்விக்க அல்லாஹ்வின் அருட்கொடையாக
அவனியில் உதித்த உத்தமர் பற்றிய அவதூறுகளும்
அனைத்துலக முஸ்லிம்களின் கொந்தளிப்பும்


அண்மைக் காலமாக மேற்கத்தைய நாடுகளில் உள்ள இழிபிறப்புக்கள் அருள்மறை தந்த திருத்தூதரும்இ இறுதி நபியுமான இறைதூதர் நபிகள் கோமான் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களைத் தூஷிக்கும் முயற்சியாக நூற்கள் வெளியிடுதல், கேலிச் சித்திரங்கள் வரைதல், குறுந் திரைப்படங்கள் தயாரித்தல் போன்ற பல்வேறு கீழ்த்தர, மனித வர்க்கத்துக்கே அவமானத்தை, அபகீர்த்தியை விளைவிக்கும் கேடுகெட்ட கேளிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றன. அவற்றின் பின்னணி குறித்து பெருமளவு சந்தேகங்களும், யூகங்களும், குற்றச் சாட்டுக்களும் நிலவு கின்றன. எதனைக் குறித்து உமக்குத் தீர்க்கமான ஞானமில் லையோ அதனை நீர் பின்பற்றாதீர் என்ற 17:36 இறையாணைக்கேற்ப அறிந்தவற்றோடு நின்று கொள்வதே அறிவுடமை. அன்றேல் தேவையற்ற பகைகளை நமக்கு நாமே வளர்த்துக் கொள்வோம்.  

எது எப்படியாயினும் யாரோ தறிகெட்ட நெறிபிறழ்ந்த சில கட்டாக்காலிகள் இது போன்ற நாசகாரத் தூஷனைச் செயல்களில் ஈடுபட்டு வருவது மட்டும் உண்மை. அந்த வரிசையில் சில மேற்கத்தைய நாடுகளுடன் ஸல்மான் ருஷ்;டி, தஸ்லிமா நஸ்ரின் போன்ற இஸ்லாமியப் பெயர் கொண்ட நிராகரிப்பாளர்களான இழி பிறப்புக்களும் இணைந்து உள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக மேற்கு நாடுகளும் செயற்பட்டு உள்ளமையும் வரலாற்றில் பதிவாகி உள்ள உண்மை. அவர்களுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த இஸ்லாமிய அலைகள் எதையும் சாதித்து விடவில்லை என்பது அதைவிட பெரிய வரலாற்று உண்மை. கண்டனங்களும்இ தண்டனைகளும்இ பயமுறுத்தல் களும் அறிவிக்கப்பட்டனவே தவிர நடைமுறையில் எதுவும் நிகழ்ந்து விடவில்லை என்பதும், குற்றவாளிகளது கருத்துக்களும், அவர்களும் அப்படியே இற்றைவரை உள்ளன, உள்ளனர் என்பதும் கசப்பான ஆனால் மறுக்க முடியா அருவருப்பான செய்தி. இவற்றிலிருந்து நிறைய விடயங்களை முஸ்லிம்கள் கற்றுக் கொள்ள வேண்டி உள்ளன. ஒன்று, அவதூறுகள் சம்பந்தமாக எடுத்த முடிவுகள், தீர்ப்புக்கள், தீர்மானங்களில் பிழை அன்றேல், நமது கையாலாகாத்தனம். இன்னும், நாம் தண்டிக்கும் சக்தியற்றிருப்பதையும் வெளிப்படுத்துகின்றது. மேலும் கையாள்கையில் உள்ள குறைபாடு. அவை எவையாகிலும் பரிசீலனைக்கு உரியனவே. அனைத்துக்கும் மேலாக இறைநியதி. 

இவ்வாறான சந்தர்ப்பங்களில் இஸ்லாத்தின்மேல் கொண்ட பற்றுதலால் வீறுகொண்டெழும் முஸ்லிம்களை அவ்வப்போது அரசியல்வாதிகளும், மதப் பெரியார்கள் எனத் தம்மைக் கூறிக் கொள்வோரும்,  தலைமைத் துவத்தைப் பெற்றுக்கொள்ளத் துடியாய்த் துடிப்பவர்களும் மதத்தின் பெயரால் தோற்றமாகியுள்ள சில காளான் குழுக்களும் பயன்படுத்தி, ஊடகங்களில் நிகழ்வுகளை, விளம்பரங்களாக்கிக் கொள்கின்றனர். அதற்கு அவ்வப்போது பலியாகும் அப்பாவி முஸ்லிம்களும், முஸ்லி மல்லாதோரும் கூட உண்டே! ஆனாலும்கூட மேற்கண்ட அவதூறுகளை அகற்றுவதற்காகவோ, அவ்வாறான மலிவான அவதூறுகளைப் பரப்பு வோருக்கு எதிராகவோ உருப்படியான எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்பதே யதார்த்தம். ஆர்ப்பாட்டம், கண்டனங்கள், அறிவிப்புக்கள் என்பவற்றோடு முடங்கி சோடா போத்தலில் கேஸ் வெளியேறியது போன்றாகி விடுகின்றன அனைத்து ஆவேஷ அறிக்கைகளும், கண்டனங்களும், ஆர்ப்பாட்டங் களும். அதன் பின்னர் அவ்விடயம் தேடுவாரற்று அநாதையாக்கப்பட்டு விடுகிறதுஇ 1990 இல் இலங்கையின் வட புலத்தில் புலிகளால் இனச் சுத்திகரிப்புக்காளான முஸ்லிம்கள் போல்.

மேற்சொன்ன இஸ்லாத்துக்கு எதிரான கீழ்த்தர நடவடிக்கைகளை தடுப்பதற்காக திட்டமிட்ட நடவடிக்கைகள் எதுவும் எந்த நாடுகளாலோ, சமய ஸ்தாபனங்களாலோ, தனிப்பட்ட பணம் படைத்தோராலோ மேற்கொள்ளப் படாமையினால் அவை சில இனவாதக் கும்பல்களால் காலத்துக்கு காலம் கட்டவிழ்த்து விடப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இன்னும் நூற்றுக் கணக்கான இணையத்தளங்கள் இதனையே தம் முழுநேரத் தொழிலாகவே செய்து கொண்டு வருகின்றன. இவை எல்லோர் கண்ணிலும் படுவதில்லை என்பதே உண்மை. அப்படி இல்லையென்றால், எதிர்ப்புக்களால் பயனில்லை என்ற நிலையாக இருக்கலாம்!  

இதுவொரு புறமிருக்க, இப்படியான இழிசெயல்களால் இஸ்லாத்துக்கோ அதன் தூதர் கண்மணி நாயகம் முஹம்மது ஸல் அவர்களுக்கோ எவ்விதக் குறைகளும் இதுவரை நேரவில்லை. இனியும் நேரப் போவதுமில்லை. மாறாக இஸ்லாத்தினதும், அதன் தூதரினதும் புகழ் நாளுக்குநாள் அறிஞர்கள் மத்தியில் கூடிக்கொண்டே போகின்றது என்பது நிதர்சனமாகி உள்ளது.அல்குர்ஆன் 3:18 இந்நிலையை வெகு அழகாக விபரிப்பதை பார்ப்போம். “ ‘நீதியை நிலைநாட்டக் கூடியவனாக உள்ள நிலையில் தன்னைத்தவிர யாரும் இல்லை’ என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். அவ்வாறே வானவர்களும், அறிஞர்களும் சான்று பகர்கின்றனர்.அவனைத் தவிர வேறு யாருமில்லை. மிகைத்தவனாகவும், ஞானமுள்ளவனாகவூம் இருக்கிறான்”. இதிலிருந்து இஸ்லாத்தின் தற்போதைய உண்மை நிலையை உறுதிபட நாம் அனைவரும் தெரிந்து கொள்ளலாம். பெரும்பான்மையானவர் இதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என இறைவன் பல்வேறு இடங்களில் கூறியிருப்பதால், The Fast Growing Religion என்பது எந்தளவு பொருந்துமோ! ஆனால் அதிகளவு அறிஞரால் அறியப்பட்டு மனதார ஏற்றுக் கொள்ளப்படும் பெருமைக்குரிய மார்க்கம் எனக் கூறின் அது மிகையல்ல.  இன்னும் அதில் முன்னறிவிப்பு செய்யப்பட்டவைகள், விஞ்ஞான உண்மைகள், பௌதிக மாற்றங்கள் போன்றவை ஆதாரபூர்வமாகக் கண்டு பிடிக்கப்படுவதில் இருந்து இஸ்லாம் அல்லாஹ்வால் அருளப்பட்டது தான் என்பதும் அறிஞர் பெருமக்களால் ஏற்கப்படுகின்றது.

அண்மைக் காலமாக, அறிஞர்கள், கல்விமான்கள், ஆய்வாளர்கள்,  ஆராய்ச்சியாளர்கள், விஞ்ஞானிகள், சமூகவியலாளர், சமூக ஆர்வலர்கள் என்ற உயர் அந்தஸ்தில் உள்ளோர் இஸ்லாத்தின் உண்மைகளைக் கண்டறிந்து,  அதனை உண்மையென ஏற்று,  இஸ்லாத்துக்குத் திரும்பி யுள்ளனர். இஸ்லாத்தின் எதிரிகளாகவே அனைவராலும் கருதப்படும் யூதர்களில் அதுவும் அவர்களின் “ரப்பி“ எனக் கூறப்படும் மதத்தலை வர்களில் இருந்து கூட , இஸ்லாம்தான் உண்மை மார்க்கம், அதன் தூதர்தான் உலகை உய்விக்க வந்தவர், அவர் கொணர்ந்த வேதமே இறுதியானதும், அல்லாஹ் வால் இறக்கப்பட்டு அதே நிலையில் எந்த மாற்றமும் இன்றி இற்றைவரை உள்ளது என்பதும், அல்லாஹ் ஒருவனே, அவனைத் தவிர வேறு நாயனில்லை என்பவற்றுக்கும் ஆதாரங்களோடு சாட்சி கூறுவோர் பகிரங்கமாக வெளி வருகின்றனர். இதனை யூ டியூப் பிலேயே கண்டுகொள்ள முடியூம். முஹம்மது என்ற பெயர் பைபிளில் சங்கீதம் 5:16 வசனத்தில் கூடக் காணப்படுவதாக ஆதாரபூர்வமாக நிறுவி உள்ளார்கள்.

இதுபோன்றுஇ இந்து சமயப் பெரியார் ஒருவர் தனது நீண்ட கால ஆராய்ச்சி ஒன்றின் மூலம் முஹம்மது நபி அவர்கள்தான் கலியுகத்தில் பிறந்த கல்கி என்பவர்,  கலியுகம்தான் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது, அது பற்றிய முன்னறிவித்தல் வியாச முனிவரின் பவிஷ்ய புராணத்தில் மிக அழகாக விவரிக்கப்பட்டுள்ளதாக ஆதாரபூர்வமாக நிறுவியுள்ளார். (கல்கி 2:4,5,7,11,15 பகவத்கீதை 1:3:25) அது போன்று நான்கு வேதங்களில் ஒன்றான அதர்வன வேதத்திலும் அல்லாஹ்வுக்குத் துவக்கம் இல்லையென்றும் அவன் சம்பூரணமானவன்,முழுப் பிரமானத்துடைய இரட்சகன், சிவனுடைய பதவியில் இருக்கும் ‘மஹாமத்’ அல்லாஹ்வுடைய  ரசூல்……அல்லாஹ்வைத் தவிர வணக்கத்துக்குரியவன் வேறு எவருமில்லை. எனக் கூறியிருப்பதும் அறியப்பட்டு ஏற்கப்பட்டுள்ளது. இதன்படி சிவனும் மனிதனே என்பதும், அவர் இறைதூதராக இருந்துள்ளமையும் கண்டறியப் பட்டுள்ளன. இவையும் அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வங்களில்லை என்பதை நிரூபிப்பவையே. அல்லாஹ் கூறியபடி சத்தியம் வந்துவிட்டது அசத்தியம் அழிந்தே தீரும் என்பது நிரூபனமாகி உள்ளது.  

அல்லாஹ் இந்த வேதத்தை அறிஞர்களுக்காகவே தந்துள்ளதாக கூறியிருக்கும் அதே வேளை, அறிவீனர்களைப் புறக்கணித்து விடுமாறும், அவர்களுடன் அவனது தூதருக்கே கூட எவ்வித சம்பந்தமுமில்லை எனவும் கூறியிருப்பதும், அறிஞர்களுக்கும், செவிமடுப்போருக்கும், ஏற்பவருக்குமே இந்த உபதேசம் என்றெல்லாம் கூறியிருப்பதும் நமது கவனத்தை ஈர்க்க வேண்டும். அத்தோடு உலகில் பெரும்பாலோர் இதனை ஏற்கமாட்டார்கள் என்று கூறி இருப்பதில் இருந்து எந்தளவுக்கு அல்லாஹ் சிறுகூட்டத்தவரான அறிவுக்கும், அறிஞர்களுக்கும் மதிப்பளித்துள்ளான் என்பதும் தெரிய வருகிறது. ஆக மேற்கூறியது போன்ற மதவிரோதக் கழிசடைகள் பற்றி முஸ்லிம்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லை. அசிங்கத்தைக் காணும் ஒருவன் தனது மூக்கைப் பொத்தி அந்த நாற்றத்தில் இருந்து தன்னை விலக்கிக் கொள்வது போல், இப்படியான இழிபிறப்புக்களை,அவர்களது ஈனச் செயல்களைக் காணும்போது புறக்கணித்து விடுவதே அவர்களுக்கான சரியான தண்டனை. அதுவே இறைவழி.

குர்ஆன் இதற்கு மேலும் ஒருபடி சென்று நிராகரிப்பாளர்களுடன் தர்கிக்க நேர்ந்தால் மிக அழகானதைக் கொண்டு தர்க்கம் செய்யவும்,  ஏற்காத சந்தர்ப்பத்தில் “ஸலாம்“ கூறி ஒதுங்கிக் கொள்ளவும் எனவும் கூறியிருப்பதும், தான் வழிகாட்டாதவர்களுக்கு உலகில் வேறெவராலும் வழிகாட்டிட முடியாது எனவும், தூதுச் செய்தியை எடுத்துச் சொல்வதைத் தவிர வேறு எதுவும் நபிகளார் மீது கடமை இல்லை எனவும் கூறியிருப்பதும் நாம் கவனிக்க வேண்டியனவே.

இதற்கு மேலும், 6:108இல் அல்லாஹ்வையன்றி அவர்கள் இணை வைத்துக் கொண்டிருப்போரை நீங்கள் திட்டாதீர்கள், அப்பொழுது அவர்களும் அறிவின்றி வரம்புமீறி  அல்லாஹ்வைத் திட்டுவார்கள்,  எனக் கூறியிருப்பதில் இருந்தும் அநாவசியான சர்ச்சைகளில் இருந்து நம்மை ஒதுக்கிக் கொள்வதை இறைவன் விரும்பி இருப்பதும் புரிகிறது. ஓர் கை தட்டினால் சத்தம் வருவதில்லை எப்போது நாம் கவலைப்படுகிறோம், வருத்தப்படுகிறோம் என்பதை நாம் எதிர்ப்புத் தெரிவிக்கும் போதே எதிரிகள் அறிந்து கொள்கிறார்கள். அதனால் அவர்தம் ஆர்வம் கூடுகிறது. நாம் கண்டுகொள்ளாது விட்டுவிட்டால் அப்படியே புஷ்வானமாகிவிடும். நாம் பொறுமையாக அல்லாஹ்வை நமது காரியங்களுக்குப் பொறுப்பாளி யாக்கிவிட்டு அமைதியாக இருப்போமானால் இழிசெயல்களில் ஈடுபடு வோர் அதனைத்  தொடர்ந்து செய்வதை நிறுத்திக் கொள்வர். தீர்வும் சிறப்பாகக் கிடைக்கும்.

15:9 இல் நிச்சயமாக நாமே இவ்வேதத்தை இறக்கி வைத்தோம்,  நிச்சயமாக நாமே அதனைப் பாதுகாப்போம் என அவன் கூறியிருப்பதில் இருந்து இந்த மார்க்கத்துக்கு எவ்விதக் குறைவையும் யாராலும் ஏற்படுத்திவிட முடியாது என்பதால், நாம் அது பற்றி பெரிதாகக் கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. அவனது பாதுகாப்பில் உள்ளதை எதுவும் அணுகிட முடியாது. களங்கத்தையூம் ஏற்படுத்திட முடியாது என்பதை அல்லாஹ்வை நம்பும் நாம் ஏற்கவே வேண்டும். நம்பிக்கை யாளரைப் பாதுகாப்பது நமது கடன் என்றும் அல்லாஹ் குர்ஆனில் 10:103,  30:47 வசனங்களில் கூறி இருப்பதில் இருந்து அவன் தனது தூதருக்கு எவ்வித குறைவும் வராது பார்த்து கொள்ளுவான். 94:4இல் உமது பிரஸ்தாபத்தை நாம் உமக்கு உயர்த்தியுள்ளோம் என நபிகளார் ஸல் அவர்களுக்கு அவன் கூறியிருக்க அவர்களுக்கு எவ்வித களங்கமும் எவராலும் ஏற்படுத்திட முடியாது என்பதையும் நாமறிதல் வேண்டும். மேலும் 33:56இல் நிச்சயமாக  அல்லாஹ்வும் அவனது வானவர்களும் நபிகளார் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மீது ஸலவாத்து எனும் புகழ்மொழி கூறுகிறார்கள்;. முஸ்லிம்களும் அல்லாஹ்வின் ஆணைப்படி நபிகள் மேல் ஸலவாத்து என்ற புகழுரையும் ஸலாமும் கூறிய வண்ணமே உள்ளனர். உலகில் இந்தப் பெருமைக்குரிய ஓரே நபர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களே!

மேலும், உலகில் எந்த மனிதருக்கும் கிடைத்திடாத உயர் கௌரவங்கள் உலகின் அதியுயர் நிலையில் வைத்து எண்ணப்படும் பெருந்தகைகளால் கொடுக்கப்பட்டு உள்ளமை, நாயகத்தின் பிரஸ்தாபம் அல்லாஹ்வால் உயர்த்தப்பட்டு உள்ளதை நிரூபிக்கின்றது. இன்னும்,   சில வருடங்களுக்கு முன்னர் ஒரு கத்தோலிக்கரான வரலாற்று ஆய்வாளரும், சமூகவியல் பட்டதாரியும்,  அறிஞருமான அமெரிக்கரான மைக்கல் ஹார்ட் என்பவர், உலகில் இந்நாள் வரை தோன்றியுள்ள மனிதர்கள் அனைவரையூம் ஆய்ந்து, அவற்றில் முதல் நிலையில் இருப்பவர் நமது நாயகம் முஹம்மது ஸல் அவர்களே என ஆதாரபூர்வமாகக் கூறியிருப்பதும், அல்லாஹ்வின் வாக்கான,உமது பிரஸ்தாபத்தை நாம் உமக்கு உயர்த்தி உள்ளோம் என்பது, உலகில் நிறைவேற்றப்பட்டு வந்துள்ளதை நமக்குப் புரிய வைக்கிறது.

நாயகம் ஸல்  உயிரோடு வாழ்ந்த காலத்திலும் அவர்களுக்கு அவதூறுகள் கூறப்பட்டே வந்துள்ளன. அவர்களது மனைவியருக்குக் கூட அவதூறு கற்பித்த சந்தர்ப்பங்களும் உண்டு. அவை எல்லாம் செல்லாக் காசாகியதும் அறிந்ததே. அவை அனைத்தும், நபிகளாருக்கு நன்மையையே பயத்துள்ளன என்பதை 24:11 தெளிவாகக் கூறுகிறது. நாயகமவர்களை அவரகளது இரத்த உறவினர்கள் கூட எதிர்த்திருக்கின்றார்கள். அவர்களை நபி என ஏற்காது விட்டுள்ளனர். ஹுதைபியா உடன்படிக்கை எழுதப்பட்டபோது அவரை, இறைதூதர் முஹம்மது அல்லாஹ்வின் ரசூல் என எழுதியிருந்ததைக்கூட, ஏற்காது அவ்வாசகத்தை நீக்கும்படி கூறியதும், அதனை நபியவர்கள் மறுக்காது நீக்கியதும் வரலாற்று உண்மையே! இதிலிருந்து மார்க்கத்தை, உண்மையை ஏற்காதோர் உலக அழிவு வரை இருந்து கொண்டே இருப்பர் என்பதும், அவர்கள் இதுபோன்ற ஈனச் செயல்களில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பர் என்பதும் தெளிவு. நபிமார்கள் அனைவரும் பரிகாசம் பண்ணப்பட்டவர்களே என இறைவனே கூறியுள்ளமை இது பற்றி தெளிவு கொண்டு பொறுமையடைய உதவும். 

நாம், நபிகளார் அவர்களை இறையாணைப்படி நமது உயிரினும் மேலாக மதிப்பதாயிருந்தால்,அவர்கள் கற்றுத்தந்த மறைவழியான இறைவழியில் நடப்பதே மேல். அதுவே நாம் அவர்களுக்குக் கொடுக்கும் கண்ணியம். இறைவன்கூட நபிகளாருக்கு உரிய கூலி என்பது, அவர்கள் கற்றுத் தந்ததை செயற்படுத்துவோரை வைத்து கணிக்கப்படுவது போன்று கூறியிருப்பது, நமது கருத்தை ஈர்க்கவல்லது. 25:57 இதன்மீது உங்களிடம் எத்தகைய கூலியையும் நான் கேட்கவில்லை. தனது ரப்பின்பால் ஏதேனும் ஒரு வழியை ஏற்படுத்திக் கொள்ள நாடுகிறவனைத் தவிர என்று நீர் கூறுவீராக!  அப்படியாயின் நாம் எந்தளவு அவர்கள் காட்டித் தந்த வழியில் நடக்கிறோமோ, அந்தளவு அவருக்கு உதவி செய்கிறோம் என்றே பொருள். உயிரினும் மேலாக மதிப்பது என்பதும் பொருள் பொதிந்ததாகிவிடும். நாயக வாழ்வில் தம்மை நையப்புடைத்தோரைக்கூட அவர்கள் பழிவாங்கியதில்லை என்பதும் அவர்கள் வழியே. இறைவன் மன்னிப்பை மேற்கொள்வீராக எனக் கூறியிருந்த அதே வழி.

மக்காவைக் கைப்பற்றியோது தன்னைக் கொல்ல முனைந்தவர்களைக்கூட ஒரு வார்த்தையால் கூட தண்டிக்க முயலவில்லை என்பதும் முன்மாதிரியாக் கொள்ளப்பட வேண்டியதே! இரத்தம் சிந்தாமல் தன்னை வெளியேற்றிய நாட்டை, யாரையும் வெளியேற்றாது, கைப்பற்றிய சரித்திரத்தைக் கொண்ட நபிகளாரின் உம்மத்துக்கள் நாம் என்பதை உலகுக்கு உணர்த்த வேண்டும். அதுவே அந்த ஈனர்களுக்கு இவ்வுலகில் பெரும் தண்டனையாக இருக்கும்.  

அல்லாஹ் எடுத்ததற்கெல்லாம் அழிப்பு வேலைகளைச் செய்வதாயிருந்தால் உலகில் எந்த உயிரினமும் இன்று உயிருடன் இருக்க முடியாது, என்பதை அவனே குர்ஆனில் ஓரிடத்தில் கூறியுமுள்ளான்.  எல்லாவற்றுக்கும் ஒரு கால வரையறையை நிர்ணயித்துள்ளான் அதுவரை அவர்கள் எதனையும் செய்து கொள்ளலாம். அத்தோடு,  குற்றவாளிகளை மேலும் மேலும் குற்றம் செய்து தமது பாவத்தைக் கூட்டிக் கொள்வதற்காகவே அழிக்காது விட்டு வைத்திருப்பதாகக் கூறியிருப்பதும் அறிதற்குரியதே. அவனை எவரும் உலகில் இயலாமல் ஆக்கிவிட முடியாது. அவன் மிகைத்தவன். ஆக இவை எல்லாம் நமக்குப் படிப்பினையே தவிர இல்லை. ஆதலால் 2:143இன்படி நடுநிலையான சமுதாயமாக படைக்கப்பட்டுள்ள முஸ்லிம்களாகிய நாம் எந்த விடயத்திலும் மிகவும் சாவதானமாகவும், புத்தியாகவும், எந்தக் காரியத்தையும் அவன் வழியில் அணுக வேண்டும். அது குழப்பமற்ற வழி.   
  
அல்குர்ஆன் 41:34 இப்படிக் கூறுகிறது. ‘நன்மையும் தீமையும் சமமாகாது. எது மிக அழகானதோ அதைக் கொண்டு தடுத்துக் கொள்வீராக. அப்போது எவருக்கும் உமக்கும் இடையே பகைமை இருந்ததோ அவர், உமது உற்ற நண்பரைப் போல் ஆகிவிடுவார்.’ இன்னும் 23:96 மிக அழகானதைக் கொண்டு தீமையைத் தடுப்பீராக என்று கூறியிருப்பது மிக ஆழமான கருத்துக்களைக் கொண்டுள்ளமையை உய்த்துணர்வோர் அறிந்து கொள்வர். 

நாம் செய்யும் எதிர்ப்பு நடவடிக்கைகள் குளிக்கப் போய் சேறு பூசியதாக இருக்கவோ, யானை தன்தலையில் மண்ணை வாரிப் போடுவது போலவோ இருக்கக் கூடாது. நாம், உலகிற்கு முன்மாதிரியாக வந்த நபிகள் கோமான் முஹம்மது ஸல் அவர்களைப் பின்பற்றுவோர் என்பதால், நாமும் மனிதருக்கு முன்மாதிரியாகவே ஒவ்வொரு செயல்களிலும் முத்திரை பதிக்க வேண்டும். நடுநிலையான சமுதாயமாகப் படைக்கப்பட்டுள்ள நாம் இந்த விடயத்தில் காட்டும் எதிர்ப்பு உலகினால் மெச்சப்படுவதோடு அது அவர்களால் பின்பற்றப்பட வேண்டிய படிப்பினையாகவும் அமையும். அதற்கு வேண்டிய விதமாக வியூகங்கள் அமைத்து, நாம் நமது எதிர்ப்பைக் காத்திரமாக வெளிப்படுத்த வேண்டும். நமது எதிர்ப்பு விடிவைத் தருவதாக அமைதல் வேண்டும். 

அதனை விட்டு, எந்தக் காரணமும் ஆதாரமுமின்றி அமெரிக்காவை,ம் மேற்குலகை,ம் குற்றம் சாட்டுவதும் அவர்களுக்கு எதிராக இயங்குவதும், அவர்களைக் கேவலப்படுத்தும் விதமான நடவடிக்கைகளில் ஈடுபடுபடுவதும் நியாயமற்றதும் இறைவனால் ஏற்கப்பட மாட்டாததும். அதனால் நியாயமான நமது போராட்டம் கூட நலிவடைந்து விடும். அத்தோடு மறைமுகமாக எதிராகச் செயற்பட்டோர்கூட வெளிப்படையான எதிரிகளாகிவிடுவர். நாயகம் அவர்கள் உயிருடனிருந்திருந்தால் நடந்து முடிந்த போராட்டங்களில் நிச்சயமாக தனது வெறுப்பைக் காட்டி இருப்பார்கள்.

லிபியாவில் எதிர்ப்பு நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் பலியான அமெரிக்க இராஜதந்திரிகள் என்ன குற்றம் செய்தார்கள்? தக்க காரணமின்றி ஒருவனை கொலைசெய்வது மனித சமுதாயத்தையே கொல்வதற்கு சமமானது என்ற கருத்தைக் கொண்ட குர்ஆனைப் பின்பற்று வோரால் இப்பாவச் செயல் செய்யப்பட்டது என்பதை நினைக்கும் போது நாமனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டியுள்ளது.

மேலும், அமெரிக்க தனது நாட்டில் கொடுத்துள்ள கருத்துக் கூறும் சுதந்திரம் என்பது இப்போது நாமும் அனுபவித்து வருவதே. அந்த கருத்துச் சுதந்திரத்தை அங்குள்ள கேடு கெட்டவர்கள் பிழையாகப் பாவித்து முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்துகின்றார்கள் என்பது நமது குற்றச்சாட்டாயின், நாம் நமக்குரிய சுதந்திரத்தைப் பாவிக்கும் போது குற்றமற்றவர்களது மனம் நோகாதவாறு அல்லவா செயற்பட வேண்டும். இன்னும் அந்த நாட்டில் அப்படியொரு சட்டம் இருப்பதைக் குறைகூற நமக்கு எவ்வித உரிமையும் இல்லை. ஆனால் நாம் அவர்கள் நாட்டில் உள்ள சட்டத்தை இழிபிறவிகள் பயன்படுத்தி உலக முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்துகின்றார்கள் என்பதையும் அதனால் அமெரிக்கா வுக்கும் கேவலத்தை உண்டு பண்ணுகின்றார்கள், குழப்பத்தைத் தூண்டு கின்றார்கள், அமைதியின்மையைப் பயங்கரவாதம் உருவாகும் நிலையை திட்டமிட்டுச் செயற்படுத்தி வருகின்றார்கள் என்பதைப் பவ்வியமாக எடுத்துச் சொல்லி, அதனை தீர்க்கும் வழி வகையினை திறந்து விடலாம்.

அமெரிக்காவில் உள்ள சமூக இணையத்தளமான யூ டியூப் பில் உலகளாவிய ரீதியில் யாரும் எதனையும் வீடியோவாக தரவேற்றம் செய்யவோ, தரவிறக்கம் செய்யவோ அனுமதிக்கின்றது. அதனைப் பாவிப்போர் குற்றச் செயல்களில் ஈடுபடின் அதனை அவர்களுக்கு, அவர்களின் விதிமுறைகளைக் கருத்து வெளியீட்டாளர் எவ்விதம் மீறியிருக்கிறார் என்பதைச் சுட்டிக்காட்டி அதனைத் தடை செய்யக் கோரலாம். அல்லது அக்குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுக்கலாம். இதன் மூலம் அந்த வீடியோவை இணையத் தளத்திலிருந்து நீக்கவும்  செய்யலாம். மேலும், ,நாமும் ஓர் இணையதளத்தை, புளக்கை திறந்து, நமது எதிர்ப்பை உலகுக்கு வெளிப்படுத்தலாம். அதில் உலகிலுள்ள முஸ்லிம்கள் தமது மன வேதனையை, உள்ளக் குமுறலை, கண்டனத்தை, எதிர்ப்பை அழகான முறையில் வெளிப்படுத்தலாம். இதன் மூலம் அந்தக் குற்றவாளியின் செயலை தடை செய்யுமாறு கோரிக்கை விடலாம்.     

அதனை விடுத்து ஆர்ப்பாட்டங்கள் செய்வது, அத்துமீறுவது, குற்றச் செயல்களில் ஈடுபடுவது, பிறர் மனதைப் புண்படுத்தும் பதாகைகளை உயர்த்துவது, கோஷங்களை எழுப்புவது போன்றவை பிரச்சினைகளைக் கூட்டுமே யல்லாது, பரிகாரமாக அமையாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இன்னும் அதற்கு மேலாகவும் ஒரு படிசென்று யூடியூப் பைத் தடைசெய்யூம்படி இலங்கை அரசை வேண்டுவது எல்லாம் எந்த வகையில் சாத்தியமானது, நியாயமானது என்பதை உணர வேண்டும். கருத்துச் சுதந்திரம் மீறப்படுகின்றது எனக் கூறிப் போராட்டம் செய்வோரே, கருத்துச்சுதந்திரத்தை, சட்டத்தை, ஒழுங்கை மீறும் பண்பே அனைத்து எதிர்ப்பலைகளிலும் பொதுவாகக் காணக் கூடியதாக இருக்கின்றன. நமது உரிமைகளுக்காக கொடுக்கப்படும் குரல் அடுத்தவரின் உரிமைகளைப் பறிக்கு மாயின்,  நமக்குள்ள உரிமையை நாமே அழிப்பது போன்றாகி, முன்னனையதைவிட மோசமான இழப்பை ஏற்படுத்தி விடுகிறது. 

கொழும்பு 03,
2012.09.23                                                                                                  - நிஸாம் ஹா.மு. -                                            
 


Wednesday, January 23, 2013

Paristamil Tamil News - முஸ்லீம்கள் மீது பெரும் தாக்குதலுக்கு முஸ்தீபு

Paristamil Tamil News - முஸ்லீம்கள் மீது பெரும் தாக்குதலுக்கு முஸ்தீபு


புலிகளின் ஆலோசகர் அன்ரன் பாலசிங்களம் பகிரங்கமாக, வடக்கு முஸ்லிம்களை வெளியேற்றியமை அசல் முட்டாள்தனம் ( BIG BLUNDER) எனக் கூறி, புலிகளின் மகோன்னதப் பிழையை ஏற்றுக் கொண்டார்.

அதன் பின்னர் புலித்தலைவன் பிரபாகரன், தான், முதலும் கடைசியுமாக நடத்திய சர்‌வதேச பத்திரிகையாளர் மாநாட்டில், அது துன்பியல் நிகழ்வு எனவும், அவர்கள் மீண்டும் வரலாமெனவும் கூறி,  பாலசிங்கத்தின் கருத்தை வழிமொழிந்தார்.

தாங்கள் எதையோ புதிதாக, புலித்தலைவனுக்கும், அவரது ஆலோசகருக்கும் தெரியாமல் மறந்துவிட்ட காரணத்தைக் கூறப போகிறீர்களா?  உங்கள் பெயர் கின்னஸில் பதியப்பட வேண்டியதே!

Monday, January 21, 2013

Paristamil Tamil News - முஸ்லீம்கள் மீது பெரும் தாக்குதலுக்கு முஸ்தீபு

Paristamil Tamil News - முஸ்லீம்கள் மீது பெரும் தாக்குதலுக்கு முஸ்தீபு


உங்களைப் போன்ற நிதான போக்குடையவர்கள் இருப்பதை நினைக்கும் பெருமையாக இருக்கிறது. உண்மையில் தரங்கெட்ட முறையில் எழுதுவோர் எல்லாப் பக்கங்களிலும் உள்ளனர். அவர்களைப் பற்றிக் கவலைப்படுவதில் பணனில்லை. காரணம் அவர்கள் இறைவனால் வழி கெடுக்கப்படடவர்கள்.

சொல்லப் போனால் வடக்கிலிருந்த அப்பாவி அமைதி விரும்பும் முஸ்லிம்களை எதுவித காரணமுமின்றி, அவர்களது உடைமைகளைத் தமதாக்கிக் கொண்டு புலிகள் விரட்டியடித்து, இனச்சுத்திகரிப்பொன்றை மேற்கொண்ட போது கூட,  அந்த முஸ்லிம்கள் தமிழர்களைக் குற்றம் சாட்டவில்லை. அவர்களைக் குறைகூறவும் இல்லை. மாறாக, அவர்கள் என்ன செய்வார்கள் பாவம், அவர்கள் நிலையும் அப்படித்தான் உள்ளது எனக் கூறித் தம்மை ஆசவாசப்படுத்திக் கொண்டார்கள்.

Sunday, January 20, 2013


Azhar Imam Orders Niqab off, Wants Ban

IslamOnline.net & Newspapers

“The niqab is a tradition and has nothing to do with Islam,” said Sheikh Tantawi, vowing to ban it in Al-Azhar schools.
CAIRO – The head of Al-Azhar, the highest seat of learning in the Sunni world, has ordered a school girl to remove her niqab during a visit to an Al-Azhar school, saying he would seek an official ban for the face veil in schools, Al-Masri Al-Youm newspaper reported on Monday, October 5.
“Why are you wearing the niqab while sitting in the class with your female colleagues?” Al-Azhar Grand Imam Sheikh Mohamed Sayyed Tantawi asked the 8th grader.
The young girl was shocked with the question coming from the country’s top scholar.
A teacher intervened to explain.
“She takes off her niqab inside the class, but she only put it on when you and your entourage came in.”
But Sheikh Tantawi was not satisfied and insisted that the young girl takes off the face cover.
“The niqab is a tradition and has nothing to do with Islam.”
After the girl complied he insisted she should not wear it any more.
“I tell you again that the niqab has nothing to do with Islam and it is only a mere custom. I understand the religion better than you and your parents.”
Most Muslim women in Egypt wear the hijab, which is an obligatory code of dress in Islam, but an increase in women putting on the niqab has apparently alarmed the government.
The ministry of religious endowments has recently distributed booklets in mosques against the practice.
The majority of Muslim scholars believe that a woman is not obliged to cover her face or hands.
They believe that it is up to every woman to decide whether to take on the face-cover or not.
Ban
The Grand Imam of Al-Azhar imam vowed to issue a ban against the face-veil in all schools linked to Al-Azhar.
“I intend to issue a regulation to ban the niqab in Al-Azhar schools,” he said.
“No student or teacher will be allowed into the school wearing the niqab.”
Established in 359 AH (971 CE), Al-Azhar mosque drew scholars from across the Muslim world and grew into a university, predating similar developments at Oxford University in London by more than a century.
Al-Azhar, which means the "most flourishing and resplendent," was named after Fatima Al-Zahraa, daughter of Prophet Muhammad (PBUH).
The first courses at Al-Azhar were given in 975 CE and the first college was built 13 years later.
Al-Azhar first admitted women students in 1961, albeit in separate classes.
Also in 1961, subjects in engineering and medicine were added to classes on Shari`ah, the Noble Qur’an and the intricacies of Arabic language.
Sheikh Tantawi’s remarks coincided with those of Higher Education Minister Hani Hilal who has banned the face-veil in student hostels.
“Face-veiled students are free to do what they want outside the hostels but there is no room for the niqab inside the women-only hostels,” he said earlier this week.
Many students demonstrated against the minister’s statements and the Egyptian Initiative for Personal Rights plans to take him to court.
“The minister’s decision violates the principles of privacy, personal freedom and freedom of faith, which are guaranteed by the constitution.”

--------------------------------------------------------------------------------
Battle over face veil brewing in Egypt

CAIRO (Reuters) : Rokaya Mohamed, an elementary school teacher, would rather die than take off her face veil, or niqab, thrusting her to the forefront of a battle by government-backed clerics to limit Islamism in Egypt.

Egypt's state-run religious establishment wants teachers like Mohamed to remove their veils in front of female students, sparking a backlash by Islamists who say women should be able to choose to cover their faces in line with their Islamic faith.

A Cairo University student wearing a niqab stands with her luggage outside the university dormitory on.

"I have put on the niqab because it is a Sunna (a tradition of the Muslim prophet Muhammad). It is something that brings me closer to religion and closer to the wives of the Prophet who used to wear it," she said.

"I know what makes God and his prophet love me, and no sheikh is going to convince me otherwise. I would rather die than take it off, even inside class," she added.

Egypt, the birthplace of al Qaeda's second-in-command Ayman al-Zawahri, fought a low-level Islamist insurgency in the 1990s, has faced sporadic militant attacks targeting tourists since then, and is keen to quell Islamist opposition ahead of parliamentary elections next year and a 2011 presidential vote.

The spread of the niqab, associated with the strictest interpretations of Islam, is a potent reminder to the government of the political threat posed by any Islamist resurgence emanating from the Gulf, where many young Egyptians go to work.

Controversy over the niqab flared last month after the state-appointed head of Egypt's al-Azhar mosque asked a young student to remove her face veil during a visit to her school.

Grand Sheikh of al-Azhar Mohamed Sayed Tantawi later issued a religious edict or fatwa barring women and girls from wearing the niqab in all-girl Azhari schools, saying there was no reason for girls to cover their faces amongst themselves.

An Azhari research center later backed the ruling, saying the face veil should be removed when a girl is in an all-female class with women teachers, in all-female exam rooms, and in all-female dormitories.

Egyptian state-run media have also called for women to show their faces, citing the "damaging" effects of niqab on society.

GULF INFLUENCE While a majority of Egyptian women and girls consider it an Islamic religious obligation to cover their hair and neck with a scarf, few Muslim scholars say the full face veil is mandatory.

Yet growing numbers of Egyptian women are abandoning the simple headscarf in favor of the niqab, analysts say, reflecting the growing sway of strict Saudi-based Wahhabi ideology on an already conservative and Islamized society.

"It increased mainly because of the major influence from the Gulf. This habit is not from the heart of Egyptian society. It is imported from the Gulf," political analyst Hala Mustafa said.

"(Extremism) has been increasing in Egyptian society for the past 30 years and therefore Egyptians are accepting more extremism and becoming more closed off," she said.

Egypt, unlike other Muslim states Saudi Arabia and Iran, does not require women to cover their heads with a scarf. But the millions of Egyptians who have lived or worked in Gulf states such as Saudi Arabia are believed to be a source for the spread of Wahhabi ideology.

Just 30 years ago, women attended Egypt's flagship Cairo University wearing miniskirts and sleeveless tops.. They strolled along the beaches of Alexandria in skimpy swimsuits at a time when society was seemingly more liberal and tolerant.

Analysts say the headscarf, or hijab, was seen as a status indicator and was prevalent among lower-income classes. Women from upper and middle classes rarely veiled at a young age and those who did usually followed fashionable interpretations of hijab. The niqab was uncommon at that time.

NIQAB MORE PREVALENT
But the niqab has become more prevalent. Women in flowing black robes are a common sight strolling through Egypt's fanciest shopping malls and five-star hotels, as well as in shanties.

Analysts say challenging the stricter interpretations of Islam could be a long journey that requires, in particular, introducing reforms on an educational system that has allowed women in niqab to teach small children.

"These decisions have to be accompanied with ideological procedures and requires challenging the ideology so there will be moderate ideology," Mustafa said.
Egyptian courts have a history of ruling in favor of women wearing niqab inside universities. In 2007, a court ruled that the American University in Cairo, seen as a bastion of Western liberal education in Egypt, was wrong to bar a female scholar who wears niqab from using its facilities. The court cited personal and religious freedom as grounds for its ruling.

Ordinary Egyptians on the streets of Cairo have conflicting feelings regarding the niqab. Some say it should be banned on security grounds because it can be used by criminals to disguise themselves and escape police searches.

Others hail it as the right way to fulfill religious duties or as the best way to protect women from sexual harassment, although a recent study showed veiling had little effect on harassment rates in Egypt.

"When a man cannot see a woman, then what is he going to harass her for? Nothing," said Abu Donya, a taxi driver, whose views are shared by many Egyptians. "So imagine if all women wear niqab, things would be better," he said.

Thursday, January 17, 2013

Paristamil Tamil News - முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க

Paristamil Tamil News - முகத்தில் உள்ள ரோமங்கள் நீங்க

These were used by our women normally in their day to day life and maintained their beauty. Now these are recommended as treatments of their removal of hair growth, See the difference of life style. Nature is the solution and its the Grace of Almighty.
Short Message Service 


எஸ்.எம்.எஸ். (Short Message Service) எனப்படும்
குறுந்தகவல் சேவைக்கு 20 வயது நிறைவடைந்துள்ளது..
கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் மாதம் 3ம் தேதிதான் முதல்
எஸ்எம்எஸ் பிறந்தது.  இங்கிலாந்தைச் சேர்ந்த என்ஜினியர்
நீல் பாப்வொர்த் (22) என்பவர் தனது ஆர்பிடெல் 901
செல்போனில் இருந்து வோடபோன் நெட்வொர்க் மூலம்
மெர்ரி கிறிஸ்துமஸ் என்று எஸ்.எம்.எஸ். அனுப்பினார்.
இதுதான் உலகின் முதல் எஸ்.எம்.எஸ்.
ஆனால் வர்த்தக ரீதியாக எஸ்.எம்.எஸ். சேவை 1993ம்
ஆண்டு ஸ்வீடனில் தொடங்கியது. அதன் பிறகு அதே
ஆண்டில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்திலும் எஸ்.எம்.எஸ்.
சேவை துவங்கியது.
தொடர்ந்து 1994ம் ஆண்டு எஸ்.எம்.எஸ். சேவையூடன்
கூடிய நோக்கியா 2110 போனை நோக்கியா நிறுவனம்
அறிமுகப்படுத்தியது.
தற்போது ஒவ்வொரு நொடிக்கும் 2 இலட்சத்திற்கும்
அதிகமான எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பப்படுகின்றது என்பது
குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது இன்டர்நெட்
வசதியூடன் கூடிய ஸ்மார்ட்போன்கள் வந்த பிறகு
எஸ்.எம்.எஸ். அனுப்புவோரின் எண்ணிக்கை வெகுவாக
குறைந்துள்ளது.
பலர் பிளாக்பெர்ரி மெசஞ்சர்இ வாட்ஸ்ஆப் மற்றும் கூகுள்
டாக்கை பயன்படுத்த அதிகம் விரும்புகின்றனர்.
ஆனால் கல்லூரி மாணவ-மாணவிகள் எஸ்.எம்.எஸ்.
சேவையைத்தான் அதிகம் பயன்படுத்துகின்றனர்.

From: Vaanavil

Sunday, January 13, 2013

அதி சிரேஷ்ட சங்கைக்குரிய அனைத்து மகாநாயக்க பீட தேரர் அவர்களுக்கும்,


அதி சிரேஷ்ட சங்கைக்குரிய
அனைத்து மகாநாயக்க பீட தேரர் அவர்களுக்கும்,

இலங்கை முஸ்லிம்கள் சார்பாக
 ஓர் பகிரங்க வேண்டுகோள்!

இந்து சமுத்திரத்தின் முத்தாக, இயற்கை வனப்புடன், ஏற்றமிகு தோற்றத்தினைக் கொண்டு தனக்கு நிகர் தானே என்றவாறு இலங்கிக் கொண்டிருக்கும் இவ்வழகு மிகு இலங்கை மணித்திரு நாட்டில் பிறந்தமைக்காக முதலில் இறைவனுக்கு நன்றி கூறுகின்றோம்.

அடுத்து எமது பெருமதிப்பையும், கௌரவத்தையும் சங்கைக்குரிய தேரர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றோம்.

எமது அரேபிய முன்னோர் இந்த நாட்டின் பெருமையையும்,  இங்கு விளையும் வாசனைத் திரவியங்கள்யு முத்துக்கள், யானைத் தந்தங்கள் போன்றவற்றைப் பெற்றுச் செல்வதற்காக இத்தீவிற்கு பயணம் மேற் கொண்டிருந்தனர். அப்படி வருகை தந்த காலங்களில்,  இங்குள்ள மக்களின் உயர் பண்புகளினால், உபசரனைகளால் ஆகர்ஷிக்கப்பட்டு இங்கேயே சிலர் வாழத் தொடங்கினர். அவர்கள் அராபிய மொழி பேசுவோராயினும் முஸ்லிம்களாகவே இங்கு கால் பதித்து முஸ்லிம் குடிமக்களாகவே இற்றைவரை வாழ்ந்து வருகின்றனர்.

அராபியருக்குப் பின்னால் போர்த்துக்கேயர், டச்சுக்காரர், பிரித்தானியர் வருகை இலங்கைக்கும் அதன் பெரும்பான்மைச் சமூகமான சிங்கள வருக்கும், பௌத்த மதத்துக்கும் சோதனைக் காலமாகவே இருந்து வந்துள்ளதை நாம் கூறி நீங்கள் தெரியத் தேவையில்லை. 

முஸ்லிம்களின் வருகையால் இந்நாடு அமைதியை இழக்கவில்லை. அதன் அந்தஸ்தை ஈடு வைத்திடவில்லை. மாறாக இங்கு பொருளாதாரம் பெருகியது. மேற்குலகில், இந்நாட்டின் மேன்மை விளங்கியது. உலகின் நாகரிகங்கள் அறிமுகமாயின. வந்த அராபியர் தம் அரபி மொழியை இங்கு பரப்பவில்லை. மாறாக இங்கு காணப்பட்ட மொழிகளைப் பயின்றனர். அதற்கு மேலதிகமாக அரபுத் தமிழ் என்ற புதிய மொழியை உருவாக்கி அராபிய நாகரிகங்களை, விஞ்ஞான,  தொழில்நுட்ப, மருத்துவ, வானிலை போன்ற அரிய பல பொக்கிஷங்களை நூல் வடிவில் யாத்து மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த உதவி செய்தனர்.

அவர்கள் இந்த நாட்டை வெகுவாக நேசித்தனர் ஆனால் தமதாக்கிக் கொள்ள வேண்டுமென்று எப்போதும் நினைத்திலர். அது மட்டுமல்ல தமது மதத்தைக்கூட அவர்கள் பரப்பும் முயற்சியில் இறங்கியிருக்க வில்லை.  தற்போதைய முஸ்லிம் களின் சனத்தொகை சாதாரண இயற்கையான வளர்ச்சியே தவிர மதமாற்றங்களால் ஏற்படுத்தப்பட்டது அல்ல என்பதை எவரும் எளிதில் ஏற்றுக் கொள்வர். இஸ்லாமிய கலாச்சாரத்தைக்கூட சிங்கள மக்களில் புகுத்தவில்லை. மாறாக அவர் களுடன் புரிந்துணர் வோடு அந்நியோண்ய வாழ்க்கையையே மேற் கொண்டனர். இந்நிலை இன்றும் இலங்கையின் மூலை முடுக்குகளில் எல்லாம் முஸ்லிம்கள் சிங்கள பௌத்தருடன் இரண்டறக் கலந்து சிங்களத்தைப் பேசிக் கொண்டு வாழ்வதில் இருந்து புரிந்து கொள்ளக் கூடியது.

அப்படி வந்த முஸ்லிம்கள் தமிழைத் தம் தாய்மொழியாகக் கொண்ட மைக்கான காரணங்கள், சிங்கள மொழியில் தமது இஸ்லாம் மார்க்கத் துக்குரிய நூல்கள் காணப்படாமையும், அயல்நாடான இந்தியாவின் தமிழ் நாட்டில் இஸ்லாமிய இலக்கியங்கள் தமிழில் பல்கிப் பெருகி இருந்த மையும் ஆகும். அவர்கள் தமது மார்க்க விடயங்களை அறிந்து கொள்ள அயல் நாட்டின் தமிழ் மொழி மூல நூற்களே உதவி செய்தமையால் அவர்கள் தமிழைத் தமது மொழியாகக் கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்திருக்கிறது. அத்தோடு தமது மனைவியரையும் அங்கிருந்து பெற்றுக் கொண்டமையும் ஒரு காரணமாகலாம் எனத் தென்படுகிறது. ஆயினும் சிங்களம் பேசுவதில் முஸ்லிம்கள் சிங்கள வருக்கு இளைத்த வர்கள் என்றவாறாக சிங்களத்தையும் பயின்றும், பேசியும் வாழ்ந்து வருகின்றனர். தமிழ் பிரதேசங்களில் சிங்கள மொழி மூலப் பாடசாலை கள் காணப்படுவது முஸ்லிம்களின் சிங்களத்தையும் கற்கும் ஆர்வத்தைக் காட்டுகிறது.

மேலும் அந்நிய நாட்டினர் இங்கு ஆக்கிரமிபுச் செய்த போதெல்லாம் இங்கிருந்த முஸ்லிம்கள் தமது முழுமையான ஆதரவை உளமாற சிங்கள மன்னர்களுக்கே வழங்கியதுடன், சிங்கள மன்னரோடு தோளோடு தோள் சேர்ந்து அந்நியப் படைகளுடன் போர் புரிந்தும் இருக்கிறார்கள்.  இவை வரலாறு நெடுகிலும் காணப்படுவது. இதனை நன்குணர்ந்ததன் பயனாக சிங்கள அரசர்கள் தமது பாஞ்சாலைகளுக்குப் பக்கத்திலேயே பள்ளி வாசல்களை அமைப்பதற்குக் காணிகளைக் கொடுத்து பள்ளிவாசல்களை யும் அமைத்து தமது நன்றிக் கடனைச் செலுத்திக் கௌரவித்துள்ளனர். தமக்குச் சமத்துவமாக தமது அரச அவைகளிலும் பதவிகளை வழங்கி அவர்களை ஆதரித்து வந்துள்ளனர்.

இது மட்டுமல்ல இன்று முஸ்லிம்கள் அனுபவித்து வரும் பல்வேறு சலுகைகள் எந்த நாட்டிலும் காணமுடியாதவை எனலாம். அதற்காக என்றும் முஸ்லிம்கள்  இந்நாட்டுக்கும் மக்களுக்கும் கடமைப்பட்டுள்ள வர்களே. இவை அனைத்தும் பௌத்த சிங்கள மன்னர்களாலும், சிங்கள பெரும்பான்மை அரசாங்கங்களாலும் பௌத்த பீடங்களின் அனுசரனை யுடன், பெருமனது கொண்டு செய்து கொடுக்கப் பட்டவை என்பதிலிருந்து முஸ்லிம்கள் எந்தளவு சிறப்பான உறவு முறையூடன் சிங்களவருடன் வாழ்ந்து வந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வைக்கின்றது. இந்த சலுகைகள்இ வசதிகள் அனைத்தும் இதயபூர்வ புரிந்துணர்வோடு பெற்றுக் கொள்ளப்பட்டவையே தவிர போராடிப் பெற்றவை அல்ல என்பதை பெருமையோடும் நன்றியோடும் நினைவுகூர வேண்டியுள்ளது. 

இந்த நாட்டில் 1914 இல் ஏற்பட்ட சிங்கள முஸ்லிம் கலவரம் என வர்ணிக்கப் பட்டதற்கும் இலங்கை முஸ்லிம் களுக்கும்இ இலங்கைச் சிங்களவருக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. அது முற்று முழுதாக இந்திய முஸ்லிம் வியாபாரிகளுக்கும் இலங்கை சிங்கள வியாபாரி களுக்கும் இடையில் ஏற்பட்ட தகராறே என்பதை நீங்கள் அறிந்தே இருப்பீர்கள்.  

இந்த நாட்டில் நடைபெற்ற புரட்சிகள், சதி நடவடிக்கைகள் அனைத்திலும் எவ்வகையிலும் முஸ்லிம்கள் சம்பந்தப்பட்டிருக்கவில்லை என்பது எமது நாட்டுப் பற்றை, நாட்டின் தலைமைக்குக் கட்டுப்படுதலை, நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளித்து இணங்கி வாழ வேண்டும் என்ற எமது மதத்தின் கொள்கையை வெளிப்படுத்துவனவே.பெரும்பான்மைச் சிங்கள இளைஞர் இந்த நாட்டில் துப்பாக்கி மூலம் அதிகாரத்தைக் கைப்பற்ற முனைந்து நாட்டையே அல்லோல கல்லோலப்பட வைத்திருக்கின்றனர். தமிழர்கள் இந்த நாட்டில் தமது உரிமைகளுக்காகத் தொடங்கிய போராட்டங்கள் இறுதியில் ஆயுதப்போராட்டமாக மாறி இந்நாட்டு மக்களை வகை தொகையின்றிக் கொன்று இரத்த வெள்ளத்தில் மிதக்க வைத்தமை யாவருமறிந்ததே!

ஆனால்முஸ்லிம்களால் இந்த நாட்டுக்கோ, ஆட்சிக்கோ, பௌத்தத் துக்கோ என்றும் எவ்வித அச்சுறுத்தலும் இருந்திருக்கவில்லை என்பதே வரலாறு கூறும் உண்மை. 

அண்மைக் காலங்களில் ஆங்காங்கே நடைபெற்ற, சிங்களவருக்கும் முஸ்லிம்களுக்கும் ஏற்பட்ட, சிறுசிறு இனமுறுகல்கள் தனிநபர்களால் அல்லது கட்சி அரசியலால் உருவாக்கப்பட்டவையே. அவைகளை அவ்வக் காலங்களில் ஆட்சி நடத்திய அரசுகள் முளையிலேயே கிள்ளி எறிந்தே இருக்கின்றன.

இந்த நாட்டை உலுப்பிக் கொண்டிருந்த யுத்தத்தின் போதுகூட முஸ்லிம்கள் அந்தப் போராட்டங்களுடன் சம்பந்தப்பட்டிருக்கவில்லை. முஸ்லிம்கள் அப்படி இருந்ததனால்தான் கிழக்கில் காத்தன்குடியிலும், ஏறாவூரிலும் பள்ளிவாசால்களில் தொழுகையில் இருக்கும் போது வகை தொகையின்றிக் குரூரமாக புலிப்பயங்கர வாதிகளால் கொன்றொழிக்கப் பட்டனர். மூதூரில் இருந்து முஸ்லிம்கள் துரத்தி யடிக்கப்பட்டனர். வடக்கில் ஐந்து மாவட்டங்களில்  அமைதி வாழ்வை மேற்கொண்டிருந்த முஸ்லிம்கள் அதே புலிப் பயங்கரத்தால் எதுவித காரணமுமின்றி, ஆனால் அவர்களுடன் சேர்ந்து போராடவில்லை, ஒத்துழைப்புத் தர வில்லை என்ற காரணங்களால் கொலைப் பயமுறுத்தலுடன் உடமைகள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டு வெற்றுக் கையினராக வெந்த மனத்துடன் ஒட்டுமொத்தமாக விரட்டியடிக்கப் பட்டனர். 

இந்த இனச் சுத்திகரிப்பால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் இற்றைவரை சிங்கள மக்கள் மத்தியில் தெற்கில் அகதி வாழ்வை மேற்கொண்டு வருகின்றனர் என்பது தாங்கள் அறியாததல்ல.

இந்த நிலையில் அண்மைக் காலமாக முஸ்லிமகள் தமது மதக் கடமைகளை நிறைவேற்ற முடியாதவாறான பல சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. பள்ளிவாசல்களைத் தகர்த்தல் என்ற அளவுக்கு, இந்த குழப்ப நிலை வளர்ந்துள்ளது என்பது இந்த நூற்றாண்டில் நடக்கும் பிற்போக்குவாத நிலை. அதுவும் பௌத்த மதத்தின் பெயரால் இவை செய்யப்படுவது, புத்த மதக் கொள்கை யினையே தலைகுனிய வைக்கும் செயலாகவே கருதப்படுகிறது. இது இந்த நாட்டைப் பற்றிய தவறான கருத்துக்கள் பரவுவதற்கும், நாட்டுக்குப் பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கும் காரணமாகின்றன. 

மனித உரிமை மீறல் சம்பந்தமாக இந்த நாடு குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வகையான வக்கிர எண்ணங்களும் நடவடிக்கைளும் இலங்கையின் சுயாதிபத்தியத்துக்கே அச்சுறுத்தலை உருவாக்கவல்லது.

இந்த சிறிய நாடு இன்னுமொரு பேரழிவைத் தாங்கிக் கொள்ளாது என்பதை முப்பது வருட வரலாறு நமக்குத் தந்து கொண்டிருக்கின்றது. தற்போதைய நிலையில் முஸ்லிம் நாடுகள் மட்டுமே இந்த நாட்டுக்கு முண்டு கொடுத்துக் கொண்டிருக்கின்றன. இவ்வகைச் செயற்பாடுகள் அவர்களது உதவியையும் இல்லாமல் ஆக்கிவிடுவதற்காகத் திட்டமிட்டுச் செயல்படுத்தப்படுவதாகவே நம்ப வேண்டியுள்ளது. 

என்றுமில்லாதவாறு இன்று, அதுவும் ஐநாவில் நீதி விசாரனைக்கு இந்நாடு முகங்கொடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் நடத்தப்படுவதில் வெளியார் தலையீடுகளும் இருக்க வேண்டும் என்றே நம்ப வேண்டியுள்ளது.

ஆதலால், இந்த நாட்டுக்கும், மக்களுக்கும் தக்க தருணத்தில் தக்க அறிவுரைகளைக் கொடுத்து இந்நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் சகோதரர்களாக வாழ்ந்து வருவதற்கான தங்களால் இயன்ற அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து, இந்நாட்டையும்,  அதன் பாரம்பரியத் தையும், கலாசாரத்தையும், காருண்யத்தையும் காப்பாற்றி சமாதான சகவாழ்வையும் மேம்படுத்த உதவுமாறு உங்களை இறைவன் பெயரால் கேட்டுக் கொள்கிறோம். 

தங்களுக்கு எல்லாம்வல்ல இறைவனின் ஆசிகள் கிடைக்கப் பிராத்தித்து,

தங்கள் மேலான நடவடிக்கையை எதிர் நோக்கியோராக,

அமைதி வாழ்வை விரும்பும் 

இந்நாட்டை நேசிக்கும் முஸ்லிம்கள்.


COLOMBO 03.
2013.01.14


நீதி நாதியற்று சேதியாகிவிட்டதா ?
நீதி நாதியற்று சேதியாகிவிட்டதா ? இறைவன் இந்த உலகத்தைத் தோற்றுவித்த போதே,  நீதியையும் தோற்றுவித்து விட்டான் எனத் தெரிய வருகிறது. காரணம் அவன் நீதியை நிலைநாட்டக் கூடியவனாக உள்ள நிலையில் தன்னைத்தவிர யாருமில்லை எனக் கூறி யுள்ளமையே! நீதி என்ற பதம் வெளியான அக்கணமே அநீதி என்ற பதமும் மயாமி இரட்டையர் போன்று ஒட்டிப் பிறந்துள்ளதாக அறிய வருகிறது. அதற்குக் காரணம் அவன் அனைத்தையும் சோடி சோடிகளாகப் படைத்துள்ளேன் எனக் கூறியுள்ள மையே! இவ்வாறு படைக்கப்பட்டதனாலோ என்னவோ அடிக்கடி இவ்வுலகு நீதிக்கும் அநீதிக்கும் இடையே வேற்றுமை காணமுடியாமல் அநீதியையே நீதியாகக் கொண்டு விடுகிறது. அப்படித் தோற்றுவித்ததனால் தான் போலும் தோற்றும் விட்டது நீதி. தற்போது ஆண் பெண்ணுக்குள் வேற்றுமை காண முடியாதவாறு.  

வல்ல இறைவன் நீதி செலுத்தக்கூடியவனாக உள்ள நிலையில் எனக் கூறுவதில் இருந்து, நீதி செலுத்துவதற்கும் ஒரு நிலை தேவைப்படுகின்றது என்பது புலப்படுகின்றது. அந்த நிலை நீதிபதி என்ற பெயரில் பல்வேறு பரிமானங்களைக் கொண்டுள்ளது. உய்த்துணர்பவர் அறிந்து கொள்வர். அதனை நான் விவரிக்கப் புகின் தற்போதைய நீதிபதிகளாகி அத்தொழிலைச் செய்து கொண்டிருப் பவர்களின் தகுதி பற்றி விமர்சனம் செய்யும் ஒன்றாக இக்கட்டுரை மாறிவிடும். ஆதலின் நீதி செலுத்தும் ஒருவர் அநீதி என்ற ஒன்றை ஐயமறத் தெரிந்திருக்க வேண்டியது அத்தியாவசியம் ஆகின்றது. இதில் கருத்து வேறுபாட்டுக்கு இடமில்லை. அன்றேல் நீதிபதியினது தீர்ப்பே அநீதி என்ற வட்டத்துள் சங்கமித்து விடும் அபாயத்தை முதற்கண் அனைவரும் அறிந்திருக்க வேண்டியுள்ளது.

அப்படி ஒரு நிலை வந்துவிடக் கூடாது என்பதனாலேயே சட்டப்படி எவை குற்றம் என்பதை படித்தறிவது நீதித் துறையுள் நுழையும் தகைமையாக வேண்டப் படுகின்றது. இக்கல்வி மனித சட்டத்தில் குற்றங்கள் எவை என்பதைக் கூறி அவற்றுக்கான தண்டனைகள் பற்றிக் கூறும் கல்வியே! நீதிபதிகளுக்கு ஒரு செயல் எவ்வாறு ஒரு சட்டத்தால் குற்றமாகக் கொள்ள முடிகிறது என்பது பற்றிய பயிற்சி நெறிகள் வழங்கப்படுவதாகத் தெரியவில்லை. இது பிரச்சினைகள் தோற்றுவிக்கப்படும் இடமே என்பதை அறிவதும் களைவதும் இன்றியமையாத ஒன்றாகிவிடுகிறது. இதனால் வக்கீல்களின் வாதங்கள் சட்டங்களைத் தமக்கு ஏற்றவாறு திசைதிருப்பி குற்றத்தைக் குற்றமற்றதாகவும் செய்து விடுகின்றன. 

அறிதலின்றிச் செய்யப்படுவனவே அநீதியில் கொண்டுபோய்ச் சேர்க்கின்றன. அநீதிக்கும் நீதிக்குமிடையில் வித்தியாசம் காண்பது மனச்சாட்சியுடன் அணுகப்பட வேண்டும். அந்த மனசாட்சிகூட தீர்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தி துஷ்பிரயோகத்துக்கு  இட்டுச் சென்றுவிடக் கூடாது. மனச்சாட்சியுடன் அணுகுதல் என்பது பக்கச் சார்போ, அனுதாபமோ, நல்லது, கெட்டது, உயர்வு? தாழ்வு,  பெரியவர், சிறியவர்,  வேண்டியவர், வேண்டாதோர்,  உள்ளவர்,  இல்லாதவர், எளியவர்,  வல்லவர் எனப் பார்ப்பதோ போன்ற எதுவுமல்ல என்பதால் அவை தீர்மானம் எடுக்கும் போது, தீர்ப்பில் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளாக அமைந்து விடக் கூடாது. 

அந்த அடிப்படையிலேதான் நீதி தேவதையின் கண் கறுப்புத் துணியால் கட்டப்பட்டிருக்கிறதே தவிர காரணம் வேறில்லை. உண்மைகளை மட்டுமே நீதியின் கண் பார்க்கும், மற்றவைகளைப் பார்த்து விடக் கூடாது என்பதை நீதிபதிகளுக்கு வலியுறுத்திக் காட்டுவதே அதன் முழு நோக்கமும். ஆயினும், அநீதியின் பக்கல் நீதிபதி சாயாவிட்டாலும், அநீயை அறிய வேண்டியே உள்ளது. இல்லையேல் அநீதியும் நீதிக்குள் சங்கமமாகி விடுவதை அறிந்து கொள்ள முடியாது போய்விடும். நீதி தேவiதை கண்ணைக் கட்டிக் கொள்ளட்டும், ஆனால்,  நீதிபதி கண்ணில் எண்ணெய்யை ஊற்றிக் கொண்டு மிகக் கவனமாகத் தொழிற்படல்  வேண்டும்.

மேற்கண்ட உண்மைகள், நீதிபதியாவதற்கு அவர்களிடமுள்ள சட்டப்படிப்புக்கு மேலதிகமாக பல்வேறு பண்புகள் அமைந்திருக்க வேண்டியுள்ளது என்பவற்றைத் தெளிவாக்குகின்றன. ஆனால் சட்டத்துறையுள் நுழைவதற்குக் கபொதப உயர்தர சாதாரண சித்திகளுடன் போட்டிப் பரீட்சை ஒன்றில் சித்தி அடைவது நான்கு வருட சட்டத்தைக் கற்கும் தகுதியைத் தந்து, ஒருவரை தற்போதைய பாஷையில் சட்டத்தரணியாக்கி விடுகிறது. இவர் நொத்தாரிசாகவும், கொமிஷனர் ஒப் ஓத்ஸ் ஆகவும் செயல்படுகிறார். அதற்கு மேல் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவரிடம் பயிற்சி பெற்றதாகக் கூறும் ஒரு சான்றிதழ் தேவைப்படுகின்றது.

இன்னோர் வகையில் சர்வகலாசலை ஒன்றில் உள்வாரி மாணவராகவோ வெளிவாரி மாணவராகவோ சட்டப்படிப்பை மேற்கொள்ள முடியும். சட்டப் படிப்பை முடிப்பவர்கள் நீதிமன்றத்தோடு தொடர்பு வைத்திருக்கும் உரிமையைப் பெற தனது இறுதி ஆண்டை, சட்டக் கல்லூரி ஒன்றில் பெற்றுக் கொள்வார். இவர்களில் இருந்தே நீதிபதிகள் தெரிவு நடைபெறு கின்றதாகத் தெரிகிறது. 

நீதிபதியாவதற்கு சட்டப்படிப்புக்கு மேலதிகமாக பல்வேறு பண்புகள் வேண்டி யிருக்கின்றது என முன்னர் கூறிய தகுதிகள் மேற்கண்ட நீதிபதிகளைத் தெரிவு செய்யும் முறையில் காணப்படவில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

அவர்களிடம் நுண்ணறிவு, சமயோசிதம், விரைவாகக் கிரகிக்கும் தன்மை, சிறந்த ஞாபக சக்தி, தனது கருத்தைக் கூறிக்கொள்ள முடியாத ஒருவனிடமிருந்து கூட, அவனிடமுள்ள உண்மைகளை உணர்ந்து வெளிக்கொணரும் திறன், எச்சந்தர்ப்பத்திலும் நிலை தடுமாறா, நிலைகலங்கா உறுதி, பக்கச் சார்பின்மை, எதற்கும் அஞ்சாத நெஞ்சம், விலை போகாத் தன்மை, முகபாவங்களில் இருந்து கூட குற்றவாளியை இனம் காணும் மன முதிர்ச்சி, மனோதத்துவம், உளவியல், பொறுமை, சகிப்புத் தன்மை, பொருளாதார நிறைவு, எரிச்சலடையா பண்பு, ஆசாபாசங்களுக்கு இடம் கொடுக்கா உள்ளம், முகபாவங்களை வெளிப்படுத்தாத் தன்மை, மேலாக தான் இறை தொழிலைச் செய்து கொண்டிருக்கிறேன் என்ற அச்சத்தோடு கூடிய பொறுப்புணர்வு இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். சுருங்கக் கூறின் இறைவனிடம் காணப்படும் பண்புகள் அவரிடமும் காணப்பட வேண்டும். இப்படியானோரைத் தெரிவு செய்யக்கூடிய ஆற்றல்மிகு தேர்வாளர்கள் இல்லாமல் இருக்கலாம் என்பதும் உண்மை. ஆக நீதித்துறை சிறப்பாகச் செயற்பட இப்பண்புகள் உள்ளனவா என்பதைக் கண்டறியக்கூடிய விதமான வினவல் முறைகள், எழுத்து, வாய்மூலப் பரீட்சைகளாக  அறிமுகப் படுத்தப்படுவது ஓரளவாவது பயன் தரலாம்.

அனைத்தும் அறிந்த இறைவன்கூட, நீதி செலுத்த தராசைப் பாவிப்பதாகக் கூறுகிறான். இது அவனுக்கு தராசு இருந்தால்தான் நீதி செலுத்த முடியுமென்பதற்காகவல்ல. ஆனால் நீதி செலுத்துவது வெளிப்படையாக, அனைவருக்கும் தெரிவதுடன், அனைவராலும் ஏற்கப்பட்டு, அங்கீகாரமும் பெறப்பட வேண்டும் என்பதனாலேயே! தராசின் எந்தப் பக்கம் எடை கூடு கிறதோ அந்தப் பக்கமே தீர்ப்பு வழங்கப்படுகின்றது. நன்மை கனத்தால் நன்மைக்கான தட்டு பதிந்துவிடும். அன்றேல் தீமையின் தட்டு அவ்விடத்தை எடுத்துவிடும். இத்தராசு மூலம் தீர்ப்பு அனைவருக்கும் மிக இலகுவாகக் காட்சிப் படுத்தப்படுகிறது. நீதிபதி தீர்ப்பை எழுத முன்னரே மக்கள் தீர்ப்பை அறிந்து கொள்ள முடியும். அதன் காரணமாகவே கறுப்புத் துணியால் கண்கள் கட்டப்பட்ட நீதி தேவதையின் கையில் தராசு கொடுக்கப்பட்டுள்ளது. ஆக அங்கு மக்களே தீர்ப்பாளர் ஆகிவிடுகின்றனர் என்பது தெளிவாகிறது. அதனால் நீதிபதியின் தீர்ப்பு மக்களின் தார்மீக அங்கீகாரத்தைப் பெற்றுவிடுகிறது. அப்போதுதான் நீதிக்கும் அதனை வழங்கியவருக்கும் கௌரவம், கண்ணியம் கிடைக்கின்றன.

அது தார்மீக ரீதியிலான அங்கீகாரம் மட்டுமே! ஆயினும் மக்கள் அங்கு தீர்ப்புச் சொல்லுவது மில்லை. அப்படிச் சொன்னாலும் அது ஏற்கப்படுவதும் இல்லை. இறைநீதி போன்ற முழுமைத் தன்மையை மனித நீதி கொண்டிருப்ப தில்லை. அதனால், அதனை அறிந்த நீதித் துறை, மேல்மட்ட நீதிமன்றுகளில் இருவர், மூவர் என ஏழு பேர் வரை நீதிபதிகளாக இருந்தும் விசாரணை நடத்தித் தீர்ப்பு வழங்கும் ஏற்பாட்டைச் செய்திருக்கின்றது. இவ்வாறு பெறப்படுவது கூட முழுமையான தீர்ப்பாகி விடுவதில்லை என்பதை, தீர்ப்பின் போது நீதிபதிகளுள் ஏற்படும் முரண்படு பண்பு வெளிப்படுத்துகிறது. இந்நிலை நீதி செலுத்தக் கூடியவனாக உள்ள நிலையில் என இறைவன் கூறியுள்ளமையின் செறிவை வெளியாக்கு கின்றது. தீர்ப்பு உண்மையின் அடிப்படையில் அமையுமாயின் முரண்பாடுகளுக்கு இடமேது!

இந்த நிலையில் சிறு முன்னேற்றகரமான மாற்றம் விரும்பியே ஜுரர்களைக் கொண்ட நீதிமன்றச் செயற்பாடும் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த ஜுரர்களும் தமக்குள் முரண்பாடு கொண்டவர்களாகவே காணப்படும் சந்தர்ப்பமும் உண்டு. இத்தன்மை, உண்மையின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப் படாமையினால் ஏற்படுவதாகவே இருக்க வேண்டும் என்பதை, மேலும் வலுப்படுத்துகின்றது. உண்மையின் மூலம் பெறப்படும் தீர்ப்பு ஒன்றே ஏகோபித்த அங்கீகாரம் பெறக் கூடியது.  மேலும், ஜுரர்கள் கூட, அவர்களுக்கு வழங்கப்பட்ட அதிகார எல்லையுள், தமக்குக் கொடுக்கப்பட்டதில் தங்கள் ஒப்புதலை, அன்றி நிராகரிப்பை வெளிப்படுத்தலாம். இவை உண்மைகள் வெளிப்படாதவரை நீதியான முறையில் தீரப்பைக் கொடுத்து விட முடியாது என்ற பேருண்மையை வலியுறுத்தி நிற்கின்றது. அத்தோடு இந்நிலை, நீதி வழங்கப்படுவதற்கு மேற்கொள்ளப்படும் அணுகு முறையில் உள்ள குறைபாடே தவிர வேறில்லை என்பதையும் அறியத் தருகின்றது. அதாவது நீதி செலுத்தக் கூடியதாக உள்ள 
நிலை தோற்றுவிக்கப்படவில்லை என்பதே உண்மை.

இறைவன் தராசை ஓர் கருவியாகப் பாவிப்பதற்கு உதவுவதற்காக இவ்வுலகில் நடந்த உண்மைகள் அனைத்தும் பதியப்பட்ட புத்தகம் ஒன்று அவனிடம் உள்ளது. அதனால் அவனது தீர்ப்புக்கு தேவையான உண்மைத் தகவல்கள் அங்கு ஆதாரமாகிவிடுகின்றன. உலகில் தராசு நிலையில் நீதி கொடுக்கப்பட் டிருந்தாலும் உண்மைகள் நீதி மன்றுக்குக் கொடுக்கப்படுவது இல்லை. அதற்குப் பல்வேறு காரணிகள் உள. அதனால் கனக்கும் தட்டை அறிவதில் நீதிபதிக்குச் சிரமமுளது. நீதி என்ற தராசில் உண்மைக்குப் பதிலாக ஏதோ விழுகின்றன. அவற்றை நிராகரிக்கும் பண்பில் குறைபாடுகள் உள. அதனால் இறைவனை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகமான நீதிபதிகளால் கொடுக்கப்படும் தீர்ப்புக்கள் நீதியை வெளிப்படுத்துவனவாக அமைவதில்லை என்பதை யதார்த்தமாகக் காணக் கிடக்கின்றது.

நமது உலக அமைப்பில் உண்மையை வெளிக் கொணரும் சாதனங்களோ, முறைமைகளோ காணப்படவில்லை. அப்படியே இருப்பவை கூட நீதிமன்றில் ஏற்கப்படும் நிலையில் இல்லை என்பது கவலைக்கிடமானதே! உண்மையில் இச்சாதனம் பாவிக்கப்படுமாயின் குற்றவாளிகளை தமது வாயாலேயே எந்த பலவந்தமும் இன்றி நடந்தவற்றைக் கூற வைத்து விடலாம். அதன் மூலம் உண்மையை அறிந்து எளிதாகத் தீர்ப்பு வழங்கிவிடலாம். இது கால, நேர, பொருள், சக்தி விரயம், ஊழல், வீண் விரயம் போன்றவைகட்கு இடமில்லாத நிலையை ஏற்படுத்தி வேலையை இலகுபடுத்தி விடுகிறது. வக்கீல் எனப்படும் சட்டத்தரணி களின் தேவைகூட வேண்டியதில்லை என்றாகின்றது.

மறுமையில் அனைவரும் ஆஜர் செய்யப்பட்டு அவர்கள் வாழ்நாளில் செய்த அனைத்தையும் கண்டறிந்து உண்மைகளின் அடிப்படையில் மிகச் சிறந்த தீர்ப்பை வழங்கிட இறைவன் வகுத்துள்ள முறையும் மேலே நான் கூறிய, சந்தேக நபர்களையே பேச வைப்பதே! ஆம் இறைவன் நீதி விசாரனையின் போது நமது அங்கங்களைப் பேச வைத்து விடுகிறான். அவை தாம் செய்த அனைத்தையும் அப்படியே ஒப்புவித்து விடுகின்றன. வேறு சாட்சிகளோ விவாதங்களோ கூடத் தேவையில்லை. இப்போது குற்றம் வெளிப்படையாகி மக்கள் தாமே தீர்ப்பைக் கூற முற்பட்டுவிடுவர். என்ன குற்றத்துக்கு என்ன தீர்ப்பு என்பதே நீதிபதிக்கு தேவையாகின்றது. மக்களும் பூரண திருப்தியுடன் தீர்ப்பை ஏற்றுக் கொள்வர். இதில் சில சிக்கல்களும் உண்டே! ஆம் அது யாரை விசாரிப்பது என்பதே. இது மேலதிகமான புலனாய்வு மூலம் தீர்க்கப்படலாம். எப்படியோ குற்றமற்றவராவது தண்டிக்கப்பட மாட்டார் என்பதால் குற்றவாளியைத் தேடும் படலம் தொடர வாய்ப்புண்டு.

ஆனால் நம்நாட்டில்  இரண்டு சாராரிடமுள்ள ஆதாரங்கள் (அவை உண்மையற்ற போலியானதாகவும் இருக்கலாம்) சிலவற்றை அடிப்படையாகக் கொண்டே வழக்குகள் நடத்தப்பட்டு தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன. ஆக உண்மையின் அடிப்படையில் தீர்ப்புக்கள் வழங்கப்பட வில்லை என்பது மிகத் துலாம்பரமாகத் தெரிகிறது. கிடைக்கப்பட்ட சாட்சிகளையும்,  ஆதாரங் களையும்,  வாதத் திறமைகளையு,ம் வைத்து, நீதிபதியைத் தீர்ப்புக் கூற வைக்கும் நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுகிறது. உண்மைகளை வழங்குவதற்குப் பதிலாக, வேறு ஏதோவழியில் நீதிபதிக்கு இடப்படும் விலங்கின் மூலமே தீர்ப்பு பெறப்படுகின்றது. உண்மை கண்டறியப்படாத நிலையில் கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு தீர்மானம் எடுக்கப்படும் போது உண்மையான தீர்ப்பு எங்கிருந்து வரப்போகின்றது. ஆக நீதி செத்துவிடுகிறது. இதனால் நீதிமன்றங்களின் தீர்ப்போடு வெளியே வருபவர்கள் அதிருப்தியுடன் வருவது நாளாந்த நிகழ்வாகி உள்ளது.

இதன் பின்னர் மேன்முறையீட்டு நீதி மன்றம், உயர் நீதி மன்றம், உச்ச நீதி மன்றம் என்ற நீதிமன்றங்கள் தானும் உண்மையில் அடிப்படையில் நீதி வழங்கவுள்ளனவா என்றால் அவையும் சுற்றிச் சுற்றிச் சுப்பர் கொல்லை என்ற நிலையிலேயே உள்ளன. காரணம் அங்கும் ஏற்கனவே உள்ள நடைமுறையே காணப்படுகின்றது. சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களும் சாட்சிகளும் மீளாய்வுக்கு உட்படுத்தப்படுகின்றனவே தவிர வேறில்லை.

இது நீதி மன்றுகளின் பிழையா? அன்றேல் நீதிபதிகளின் தவறா? என்றால் இரண்டுமே இல்லை என்பதுதான் தனித்த பதிலாகும். காரணம் நீதித்துறையில் உண்மை காண விழைவதில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படைப் பிழை. அடிப்படையில் பிழையான ஒன்றில் இருந்து எப்படி நீதி வெளிப்பட முடியும்? அடிப்படையில் மாற்றம் கொண்டு வரப்படல் வேண்டும். உண்மையின் மீது  பெற்ற தீர்ப்பின் மூலம் நீதி வெளிப்பட வேண்டுமே தவிர, எதன் மீதோ பெற்ற  தீர்ப்பால் நீதி நுழைக்கப்பட முடியாது. உண்மைகள் வெளிவரும் போது அசத்தியம் அழியவே வேண்டும். உண்மைகள் வெளிவரும் சாத்தியங்கள் நமது நீதித் துறையில் புகுத்தப்படவில்லை என்பதே அந்தப் பேருண்மையும் பேரநீதியுமாகும். இது உலகில் பெரும் பிரச்சினைகளை உருவாக்கி சமூகச் சீரழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது என்பது இங்கு மறைந்துள்ள உண்மை. சத்தியம் வந்து விட்டது அசத்தியம் அழிந்தே தீரும் என்றுதானே அல்லாஹ் கூறியிருக்கின்றான்.

நீதித் துறையில் தீர்ப்பு வழங்குவதில் உள்ள குறைபாட்டை விளக்க எளிய உதாரணங்கள் சிலவற்றைக் கூறுதல் பொருத்தமாக இருக்கும். ஒரு கொலை நடை பெற்றுள்ளது. அதனைப் பலர் கண்கூடாகக் கண்டுள்ளனர். கொலை செய்தவன் வெளியேறிவிடுகிறான். அல்லது கொலைக்கு காரணஸ்தனாக இருந்தவன் மறைந்து விடுகின்றான். போலிஸார் சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தருகின்றனர். அவ்விடத்தை தடை செய்யப்பட்ட இடமாக்கி ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். இத்தடையின் மூலம் கண்ணால் கண்ட சாட்சிகள் வெளியேற்றப்பட்டு விடுகின்றனர். தடயப் பொருள் தேடுகின்றனர். அந்த பொதுமக்கள் உலவும் இடத்தில் யார் யாருடையவோ தடயங்கள் நிறைந் திருக்கும். ஏன் யாரோ  தொலைத்த, அக்கொலை திருடி வைத்திருந்த யாருடைய வோ ஆளடையாள அட்டை  போன்றவை அங்கு கிடந்திருக்கலாம். அவற்றில் சிலவற்றை வைத்து, சிலரைக் சந்தேகத்தில் கைது செய்கின்றனர். 

திட்டமிட்ட கொலைகளில் யாரோ ஒருவன் தானாக வலிந்து பொலிஸில் நிலையத்தில் சரணடையும் சந்தர்ப்பங்களும் உண்டு. வழக்கைத் திசை திருப்பும் முயற்சிகளில் ஒன்று அச்சரணடைவு. அவன் அன்று கொலை நடந்த இடத்தில் நின்றவனும் அல்ல. அவனிடம் இருந்த ஆயுதம்கூட கொலைக்காகப் பாவிக்கப்பட்டதுமன்று. கொலையைக் கண்ணால் கண்ட சாட்சிகள் முன்வரவுமில்லை. பொலிஸார் அப்படியானோரை தேடவுமில்லை. யாரோ சில சாட்சிகள், அல்லது தடயப் பொருட்கள், அல்லது சாட்சிகளும் தடயப் பொருட்களுடன் சந்தேக நபர்களை வைத்து வழக்கு விசாரணை நடைm பெறுகின்றது. இது ஒரு கேலிக் கூத்தாகத் தென்படவில்லையா? இவை போன்றவைதான் இன்றைய நீதி மன்றங்களில் நடைபெறுவன.

உண்மையில் கண்ணால் கண்டவர்கள் தாமாக முன்வந்து சாட்சியம் கூறுவதாயின் பல சிக்கல்களை, ஆபத்துக்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. உயிருக்குக் கூட பயமுறுத்தல் வந்து விடுகின்றது. அவனுக்குப் பாதுகாப்பில்லை என்ற நிலை. அதனால் யாரும் முன்வராது நமக்கேன் என விலகிச் சென்றுவிடுகின்றனர். புலனாய்வுத்துறையும் அதனை அப்படியே விட்டு விடுகின்றது. இதற்கு மேலும் உயிரைப் பணயம் வைத்து ஒருவர் சாட்சியம் கூற வந்தால் ஊக்குவிப்போரோ, உற்சாகம் தருவோரோ கிடையாது. சட்ட வல்லுநர்கள்  மிரட்டல்களான கேள்விகளாலும், வாதத்திறமையினாலும் உண்மையான சாட்சியிடமிருந்து வெளிவரும் உண்மைகளைப் பொய்யாக்கி விடுகின்றனர். அல்லது சந்தேகத்துக்கு உரியதாக ஆக்கி விடுகின்றனர். சந்தேகங்கள் குற்றவாளிக்குச் சாதகமாகும் என்ற நீதியின் பண்பு மிகுதி வேலையைச் செய்து தீர்ப்பை மாற்றி விடுகிறது. இங்கு நீதி மௌனித்து விடுகிறது. அவனது கால, பணவிரயம் பற்றிச் சிந்திப்பார் யாருமில்லை. குற்றச் செயல் அத்தோடு குப்பைக் கூடைக்குள் குற்றுயிராகி பழங்கதையாகி விடுகிறது.

அமைதி வழியில் ஓர் உரிமைப் போராட்டம் நடத்தப்படுகின்றது. அதனைக் குழப்பும் யாரோ விஷமிகள் பொதுச் சொத்து அழிப்பில், வாகனங்களுக்கு தீவைப்பதில், கல்லெறிதலில் ஈடுபடுகிறார்கள். இறுதியில் இவற்றைச் செய்தவர்கள் அப்பாவிகளான, அந்த உரிமைப் போராட்டம் நடத்தியவர்களாகக் குற்றம் சுமத்தப்பட்டு, அவர்கள் தாக்கப்படுகின்றனர். குற்றவாளிகளாக்கப் படுகின்றனர். இங்கு உண்மை என்ன? நீதி செலுத்தப்படுகின்றதா? இதுவே பிற்காலங்களில் வன்செயலுக்கு வித்திடுகின்றன. நாட்டில் குழுக்களால், இனங்களால் செய்யப்பட்ட வன்செயல்களில் அனேகமானவை இப்படியாக உருவாக்கப்பட்டனவே.


உண்மையில் நாட்டில் குற்றவியல் புலனாய்வுத்துறை என்ற ஒன்று உள்ளதே! அத்துறை மெஜிஸ்திரேட் நீதிமன்றங் களுக்கு உண்மைத் தகவல்களை வழங்க வேண்டிய கடப்பாடு உடையன! அதற்காகவே குற்றவியல் சார்ந்த வழக்குகள் போலிஸாரால் பதிவு செய்யப்படுகின்றன. ஆக உண்மையில் குற்றங்கள் போலிஸாரால் உண்மைகளின் அடிப்படையில் பதிவு செய்யப்படுமாயின், அப்படியான வழக்குகளில் இலகுவாகத் தீர்ப்புச் செய்யக் கூடிய சாதகத் தன்மைகள் நிறைந்து காணப்படும். ஆனாலும் விசரரணையின் போது வக்கீல்களின் கேள்விகள் மூலம் உண்மைகள் வலுவிழக்கச் செய்யப்படும் சந்தர்ப்பங்களும் இருப்பதனால் தீர்ப்புக்களும் மாற்றங்களைப் பெற்றுக் கொள்கின்றன. இங்கு நான் முன்னர் கூறிய மனிதாபிமானத்தோடு வழக்கு விசாரணை நடைபெறும்போது, எதனுடைய செல்வாக்கும் தீர்ப்பு வழங்கு வதற்குப் பாதகமாக ஆகிவிடக் கூடாது என்ற நியதிக்கு மாறாக, புதிய ஒன்றான வக்கீலின் வாதம் தீர்ப்புக் கூறுபவரின் உரிமையை மழுங்கடித்து விடுகிறது. நீதியின் பாதுகாவலர்கள் தனது கட்சியின் (குற்றவாளியின்) பாதுகாவலராகி நீதியைச் சாகடித்து விடுகின்றனர். நீதியை நிலைநாட்டுபவரை எவரும் சிறந்த வக்கீலாகக் கருதுவதில்லை, மாறாக, எந்த உண்மைகளை,ம் தனது வாதத் திறமையால் வென்று தான் சார்ந்தோரை வெல்ல வைப்பவரே சிறந்த வக்கீல். வக்கீல் தொழிலுக்கு வரும்போது அவர்கள் எடுத்த உறுதிமொழி காற்றில் நாற்றமடித்துக் கொண்டிருக்கின்றது.

வக்கீல் தொழில் உண்மையின் அடிப்படையிலும், நீதியை நிலைநாட்டுவதற் காகவுமே என்ற வகையில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் அந்த உயர் நோக்கத்தை, அத்தொழில் நிறைவு செய்வதாயில்லை என்பதே கசப்பானாலும் அப்பட்டமான உண்மை. காரணம், வக்கீல் தான்பெற்ற பணத்துக்காக தனது கட்சிக்காரரை வெல்லவைக்கும் மனப் போக்கே, இந்தத் தொழிலில் பிரதான இடத்தை வகிக்கின்றது. அத்தோடு சிறந்த வக்கீல் என்ற பெருமைகூட தனது கட்சிக்காரரை வெல்ல வைப்பதன் மூலம் மட்டுமே கணிக்கப்படுகின்றது. நீதியை நிலை நாட்டுவதற்கென்று சத்தியப் பிரமாணம் எடுத்து வந்த சட்டத்தரணிகள், கட்சிக்காரரைக் காப்பாற்றும் கைங்கரியத்தில் ஈடுபடுகின்றனர். அப்படி இல்லையேல் சமூகம் அவரை சிறந்த சட்டத்தரணியாக ஏற்பதோ அவரை நாடுவதோ இல்லை. திறமையற்றோர் பட்டியலில் சங்கமாகி அவரது வாழ்வே கேள்விக் கிடமாகிவிடும். இது உண்மையாக நீதியை நிலைநாட்டும் வகையில் வாதிடும் சட்டத்தரணிகளைக் காண நினைப்பது என்பது, எட்டி பழுக்கும் என எதிர்பார்த்த கதையை ஒத்ததே!

குற்றம் செய்தவர்களை எப்படி சட்டத்தின் பிடியில் இருந்து தப்ப வைத்து நீதியைக் குழி தோண்டிப் புதைக்கலாம் என்பதற்காகவே தாம் கற்ற சட்டக் கல்வி பாவிக்கப்படுகின்றது. அத்தோடு சட்டங்களிலுள்ள குறைபாடுகள் (Loop holes )  தேடப்படுகின்றன. எப்படிக் குற்றத்தைச் செய்தால் சட்டத்தின் பிடியில் அகப்படாமல் தமது தரப்பை தப்பிக்க வைக்கலாம் என்பதே இத்தொழிலில் முதன்மையைப் பெறுகின்றது. இதுவே சட்டத்தரணியின் திறனாகவும்  கணிக்கப் படுகின்றது. தாம் செய்யும் நொத்தாரிசுத் தொழிலில் தாமேகூட இந்த குறுக்கு வழிகளைக் கையாண்டு நீதி தேவதையை இரத்தக் கண்ணீர் விட வைக்கின்றனர். (கண்கடடப்பட்டு இருப்பதால் நமக்கு அது தெரிவதில்லை.) இதன் மூலம் மக்கள் நீதித் துறையின் மேல் கொண்டிருந்த நம்பிக்கையைக் குழிதோண்டிப் புதைக்க வைத்து விட்டனர். கோர்ட் எடுத்தவன் ஓடெடுத்தவன் என்ற பழமொழி, வேறும் பல அநியாயங்களையும் வெளிப்படுத்திக் கொண்டு இருக்கின்றது. களவு கொடுத்தவன் தனக்கு அநியாயம் நடந்து விட்டது என முறையிடச் சென்றால் கையில் இருப்பதையும் இழக்க வேண்டிய நிலையைத் தான் இன்று நகர பாதுகாவலர்களினாலும் நீதியின் காவலர்களினாலும் ஏற்படுத்தப்பட்டுள்ளதைக் காணக் கூடியதாக இருக்கின்றது. 

இலங்கையின் குருநாகல் பகுதியில் மறைந்த டீஐஜீ ஒருவரின் பூதல் வழக்கு ஏறத்தாழ தொண்ணூறு வருடங்களாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்பது எனது கூற்றை வலுப்படுத்தும். மேலும் நீதிமன்றங்களில் தீர்க்கப்படாது மாமாங்கங்களாக றெக்கோர்ட் ரூமை நிறைத்திருக்கும் கோவைகளும் சாட்சி கூறும். ஆயிரக்கணக்கான பக்கங்களைக் கொண்ட வழக்கு ஒன்று பல நூறு நீதிபதிகளைக் கண்டிருக்கும். அங்கு என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமோ, ஆற்றலோ இல்லாத நிலையில் வழக்குகள் வாய்தா கொடுக்கப்பட்டு எப்படியோ தப்பினோம் பிழைத்தோம் என்று நீதிபதிகள் மாற்றம் பெற்றுச் சென்று விடுகின்ற பண்பையும் நாட்டு நிலைமைகள் தெரியத் தருகின்றன.

ஆரம்ப நீதிமன்றங்களில் அமைதிக்குப் பங்கம் விளைவிப்பதைத் தடுப்பதற்காக, நாட்டில் அமைதி நிலவ வேண்டுமென்பதற்காக ஏற்படுத்தப்பட்டுள்ள 66ஆவது சட்டச் சரத்து கடைசி இரண்டு மாத ஆட்சி பற்றிக் கூறுகிறது. இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டதன் நோக்கம் உண்மையாக ஒரு சொத்தில் பிரச்சினை தொடங்கிய சந்தர்ப்பத்துக்கு முந்திய இரு மாதங்கள் யார் அங்கு ஆட்சியில் இருந்தவரோ அவரை அவரது ஆட்சியைத் தற்காலிகமாக தொடரும் சட்ட அந்தஸ்தை வழங்கி, பிணக்கை மாவட்ட நீதிமன்றிற்கு சென்று உரிமைப் பிரச்சினையை தீர்த்துக் கொள்ள வேண்டுமென்பதே. தலையாயது அச்சமயத்தில் அமைதியை நிலவ வைப்பது.

ஆனால் நாட்டில் இச்சட்டமே பிழையான வழியில் ஒருவருடைய காணியை அபகரிப்பதற்காக பாவிக்கப்படும் அவல நிலை தோன்றியுள்ளது. உண்மையான காணிச் சொந்தக்காரன் எதுவித ஆதாரங்களும் இல்லாதிருப்பான். திட்டமிட்டுக் காணியை அபகரிக்க நினைப்பவன் தான் அக்காணியில் இருந்தமைக்கான தடயங்களைச் செயற்கையாக உருவாக்கி விடுகிறான். இங்கு புலனாய்வு மேற்கொள்ளப்பட்டால் உண்மை வெளிவரும். ஆனால் புலனாய்வுக்குப் பதிலாக சத்தியக் கடதாசிகளும், சாட்சிகளும்,ஆவணங்களும் காணியின் உடமையைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்கை ஆற்றி, உண்மையைப் புதை குழியில் நிரந்தரமாகத் தூங்கவைத்துப் பெறப்படும் தீர்ப்பின் மூலம் அநீதி போசனமிட்டுப் பாசனம் செய்து வளர்க்கப்படுகின்றது.
   
உண்மையான காணிச் சொந்தக்காரன் அந்தக் காணியை மீளப் பெற மாவட்ட நீதிமன்றை நாட வேண்டும். அதற்குப் பெருந் தொகைப் பணமும், நீண்ட காலமும் தேவைப்படுகின்றன. அதற்கான ஆவணங்கள் பெறுவதில் சிரமம். ஆவணங்கள் இல்லாதிருத்தல். எதிர்க்கட்சிக்காரன் போலிஆவணங்களைச் சட்டபூர்வமாக்கி வைத்துள்ளமை போன்றவை அங்கு அந்த காணியைப் பறிகொடுத்தவனால் உண்மையை நிலை நிறுத்த முடியாது போகின்றது. போலி ஆவணங் களினதும், சாட்சிகளினதும், வாதத்திறமைகளினதும்,  பொருளாதார பலத்தினதும் குறை பாட்டினால் காணிச் சொந்தக்காரன் காணியை இழக்க வேண்டி வருகிறது. உண்மைகள் கண்டறியப்படாமல் தீர்ப்புகள் வழங்கப்படுவதன் மூலம் அநீதி இழைக்கப்படுகின்றது.

காணி உரிமையைக் காலங்கள் தீர்மானித்தல், குற்றவியலுக்கு எதிராகக் குறிப்பிட்ட காலத்தில் வழக்குகள் பதிவாக வேண்டும் என்ற சட்டங்கள் எல்லாம் அநீதி நடப்பதற்கென்றே உருவாக்கப்பட்டன போல் கையாளப்படுகின்றன. கள்ள உறுதியொன்றை எழுதி, பத்துப் பதினைந்து வருடம் கிடப்பில் போட்டுவி;ட்டு அதற்கு உயிர் கொடுக்கப்படுகின்றது. காணிச் சொந்தக்காரன் வானசாஸ்திரம் பார்ப்பவனாக இருந்தால் மடடுமே இப்படியான களவுகளைக் கண்டுபிடிக் கலாம்.  ஒரு காணி பலரின் கைகளுக்கு மாற்றஞ் செய்யப்படும் வித்தைகளும் நொத்தாரிசுமாரால் செய்யப்படுவனவே! நொத்தாரிசுக்குப் பணம் வந்து சேருகின்றது. காணிக் கொள்ளையருக்குப் பல மில்லியன் பெறுமதியான காணி போய்ச் சேர்ந்து, விற்றுத் தீர்க்கப்படுகின்றது.

அப்படி இல்லாமல் அக்காணிச் சொந்தக்காரனே வெற்றிவாகை சூடிவிட்டாலும், அக்காணியில் நீண்ட கால இடைவெளிக்குள் கைமாற்றங்கள், அபிவிருத்திகள் செய்யபட்டமை காரணமாக அக்காணியை உரியவனுக்கு வழங்குவதில் தடைக் கற்களாகி விடுகி;ன்றன. தற்போது நீதிமன்று உண்மையான காணிக்காரனைக் கண்டறிந் திருந்தும், அங்கு நடைபெற்றிருந்ததாக கூறப்படும் உரிமை மாற்றங்கள், அபிவிருத்திகள் தீர்ப்பில் பாதிப்பை வலிந்து ஏற்படுத்தி விடுகின்றன.  நீதிபதியும் தீர்ப்பில் மாற்றத்தை உட்படுத்துகின்றார். நீதித்துறையில் ஏற்கனவே உள்ள குறைபாடுகள் நீதிபதியை உண்மையின் அடிப்படையில் கண்ட உண்மை யான தீர்ப்பில் இருந்து சரிந்துவிட வைத்து விடுகின்றது. அநீதி, நீதிமன்றால் வழங்கப்பட்ட சட்ட அந்தஸ்துடன், நீதி என்ற பெயரில் வீறு நடை போடுகிறது.

நொத்தாரிசு எதனை அத்தாட்சிப்படுத்தினாலும்,  அதனைப் பதிந்து அதற்கு சட்ட அந்தஸ்துக் கொடுக்கும் நிலையில் மாற்றம் கொண்டு வராதவரை கள்ள உறுதி எழுதிக் காணிகளை அபகரிக்கும் பண்பு உயர்மட்டத்தில் நடந்து கொண்டே இருக்கும். இதனால் குழப்பங்கள், வன்செயல்கள், கொலைகள் போன்ற அமைதி வாழ்வுக்குப் பங்கம் விளக்கும் அனைத்தும் தங்கு தடையின்றித் தொடர்ந்து கொண்டே இருக்கும். நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட முடியாமல் கிடப்பில் கிடக்கும் அனேக வழக்குகள் காணித் தகராறால் ஏற்பட்டவையே. ஆக ஒரு நொத்தாரிசு செய்யும் அடாவடித்தனத்தால் ஒரு சமூகமே, நாடே கூட சில வேளை பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது. ஒரு வியாபார ஸ்தாபனத் தின் பெயரைப் பதிவு செய்யப்படும் போது எடுக்கப்படும் முன்னெச்சரிக்கைகளின் அளவு கூட காணிகளின் உறுதிகளைப் பதிவு செய்வதில் எடுக்கப்படுவதில்லை என்பதே மக்கள் எதிர் நோக்கும் பாரிய பிரச்சினை. இவ்விடயத்தில் அரசு தனது கண்ணைத் திறக்க இதனைவிடச் சிறந்த சந்தரப்பம் இல்லையென்பதே எனது கருத்து.

உண்மைகளின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கப்படாத தற்போதைய சட்டத்தில் உள்ள குறைபாடுகள் எவ்விதமான குளறுபடிகளுக்கெல்லாம் வித்திட்டு விருட்ச மாக்கப்படுகின்றன என்பதையறிய இன்னோர் வகை வழக்கைக் குறிப்பிடு கிறேன். யாரோ ஒருவருடைய காணி; காலச் சூழ்நிலையால் தேடுவாரற்ற நிலையில் காணப்படுகிறது. காணித் திருடரின் கண்களில் இது பட்டுவிடுகின்றது. சட்டத்தரணியான நொத்தாரிசு ஒருவரின் ஆலோசனையின் பேரில் அவ்விரு வரில் ஒருவர் தற்போது காணியை அபகரித்துள்ளதாகவும் அது தனது காணியென்று கூறும் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆவணங்களுடன் கோர்ட்டில் வழக்குத் தொடரப்படுகிறது. வழக்கு விசாரணையி;ல் தமக்களிக்கப்பட்ட போலி உறுதிகளினதும் வேறு ஆவணங்களினதும் அடிப்படையில் அவ்விரு திருடரில் ஒருவருக்குக் காணி சொந்தமானது எனத் தீர்ப்பு வழங்கப்படுகின்றது நீதிபதி யால். இங்கு உண்மை என்னவென்பது யாருக்கும் தெரிவதில்லை. போலி வழக்காளர்களில் ஒருவர் சட்டபூர்வ அந்தஸ்தைப் பெறும் அவலம். இதன் பின்னர் உண்மையான காணிச் சொந்தக்காரன் நீதிமன்ற உத்தரவின் மூலம் வேறொரு வருக்கு உரிமையாக்க, உடமையாக்கப்பட்ட காணி ஒன்றுக்கு எதிராக உரிமை கொண்டாடுவது நடைமுறைச் சாத்தியமானதா!

இன்னொரு புதுமை இந்நாட்டில் நடந்து இருக்கின்றது. ஆம் ஒருவர் ஏதோ குற்றச்சாட்டின் பேரில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது வழக்கு சம்பந்தமான கோப்பு மன்றில் திட்டமிட்டு அழிக்கப்பட்டு விடுகின்றது. அந்த வழக்கு என்றுமே இனிக் கோர்ட்டுக்கு வரப் போவதில்லை. கோப்பின்றி அவரது வழக்குக்கு தேதி நிர்ணயிப்பது யார்? அதனால் அந்த சந்தேக நபருக்கும் விடிவு இல்லை. அதனால் தொடர்ந்து சிறைக் கம்பிகளை எண்ணியே பித்துப் பிடித்தவராகி உள்ளார் என முன்பு கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் இன்னும் உயிரோடு இருக்கிறாரோ தெரியவில்லை. அவர் ஒரு போலிஸ் வாகனச் சாரதி என்றும் கேள்வி. இவை சட்டத்திலா அல்லது நடைமுறைப்படுத்தலிலா உள்ள குறைபாடு? எப்படியோ அநீதி அட்டகாசம் செய்து கொண்டு இருக்கின்றது என்பது என்னவோ உண்மை.


நொத்தாரிசும் சட்டத்தரணியும் குற்றவியல் நடவடிக்கையில் ஈடுபட்டு அதனால் யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அப்படியாக பாதிப்புக்காளானோர் சுப்பிரீம் கோர்ட் எனப்படும் உச்ச நீதி மன்றில் முறைப் பாடொன்றைப் பதிவு செய்யலாம். அந்த அடிப்படையில் நானும் நிறைய கள்ள உறுதிகளை எழுதி அநேகமானோரின் உடமைகளை வேறொருவரின் உடமையாக்கிய குற்றவாளிச் சட்டத்தரணிக் கெதிராக ஓர் முறைப்பாட்டை உச்ச நீதிமன்றில் பதிவு  செய்தேன். மூன்று வருடங்களின் பின்னர் எனது வழக்கு விசாரணைக்காக மூவர் கொண்ட குழுவிடம் ஒப்படைக்கப் பட்டது. என்னால் சமர்ப்பிக்கப்பட்ட சத்தியக் கடதாசியில் உள்ள குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்குப் பதிலாக நான் எவ்வகையில் பாதிக்கப்பட்டேன் என்பதை என்னிடம் கேட்கப்பட்ட பின்வரும் கேள்விகள் விளக்கும். ஏன் சட்டத்தரணி ஒருவரின் உதவி பெறப்படவில்லை? சுருக்கமாக நடந்ததைக் கூறும்படி கேட்கப்பட்டேன். இதனை எதிர்பார்த்தே நான் என்னால் தயாரிக்கப்பட்டிருந்த வழக்குக்குப் பின்னணியாக உள்ளவற்றை கொடுத்தேன். அதனை வாங்க மறுத்த குழுத் தலைவர் ஏன் சட்டத்தரணியுடன் வரவில்லை என்று கேட்டதுடன் இனிமேல் சட்டத்தரணியை வைக்கமாட்டீரா? என்றார். தேவை ஏற்பட்டால்  சட்டத்தரணியை நியமிப்பேன் என்றேன். Itemize ஐடமைஸ் பண்ணவில்லை? என்றெல்லாம் கேட்டு எனது நியாயம் எதனையும் கேட்க மறுத்து வாய்தா போட்டார்கள்.

நான் ஓர் சட்டத்தரணி அல்ல. சட்டவல்லுநர் போன்று விடயங்களைச் சமர்ப்பிக்க,  ஒரு சாதாரண குற்றமிழைக்கப் பட்டவனால் முடியுமா? ஆயினும் நான் சமர்ப்பித்திருந்த சத்தியக் கடதாசியையும், ஆவணங்களையும் பார்வையிட்ட பின்னரே பிரதம நீதியரசர் எனது முறைப்பாட்டை விசாரணைக்காக மூவர் கொண்ட குழுவுக்கு அனுப்பினார் என்பதுவே நான் எழுதியிருந்ததை பிரதம நீதியரசர் புரிந்துள்ளார் என்பதை அறியத் தருகிறது. அப்படியிருக்க என்னிட மிருந்த உண்மைகளை, நியாயங்களை, ஆதாரங்களை எனது பேச்சைக் கூட கேட்க மனமற்ற நிலையில் நடந்து, அடுத்த முறை வரும்போது சட்டத்தரணி யுடன் வருமாறு கூறப்பட்டது.

நான் எழுதி இருந்த சத்தியக் கடதாசியில் இருந்த அநீதிகளை, சட்டத்துக்குப் புறம்பானவற்றை, நொத்தாரிசான சட்டத்தரணியின் தில்லுமுல்லுகளை விளங்கியே பிரதம நீதியரசர் எனக்கு அநியாயம் ஒன்று நடந்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளார். அதனை விசாரித்து அறிக்கையிடுமாறு விசாரரணைக் குழுவிற்கு உத்தரவிட்டிருந்தார். அப்படி இருக்க நான் என்ன பிழை விட்டிருக் கிறேன். ஆயினும் நான் குறிப்பிட்டிருந்த குற்றச்சாட்டுக்களை தெளிவாக்கக் கூடிய ஆவணங்களையும் இணைத்திருந்தேன். எனது சத்தியக்கடதாசியையும் அதை ருசுப்படுத்தும் காணிப்பதிவாளரிடம் இருந்து பெற்ற ஆவணங்களையும் வைத்தே எனக்குத் தீர்ப்பு வழங்கி இருக்கலாம். எனது கட்சியை வெளிப்படுத்தும் உரிமை தரப்படாமல், அதற்கு மாறாக எனக்கு என்ன நஷ்டம் எனக் கேட்டனர். நான் எனது பங்கையும், எனக்கு அட்டோணி தத்துவம் வழங்கியிருந்த 79 பேரின் பங்குகளையும் அந்த நொத்தாரிசான சட்டத்தரணியின் திட்டமிட்ட மோசடிச் செயலால் முற்றாக இழந்த நிலையில் இந்த கேள்வி என்னை பலத்த அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை கேள்விக் குறியாகியது.


மேலும், எனது குற்றச்சாட்டுக்குள்ளான நொத்தாரிசு உறுதிகளில் செய்த மோசடிகளை மிகத்  தெளிவாக விளக்கி இருந்தேன். ஆயினும் தெட்டத்தெளிவாக நான் நிரூபித்திருந்ததை மறுத்து தான் சரியாகவே அனைத்து உறுதிகளையும் எழுதி இருந்ததாகப் பொய் கூறி உச்ச நீதிமன்றை ஏமாற்றியிருந்ததைக் கூட அந்த விசாரணைக்குழு கவனத்தில் எடுக்கவில்லை என்பது அவர்களின் பக்கச்சார்பை தெளிவாக விளக்கி இருக்கின்றது. அதைவிட அந்த நொத்தாரிசு தான் மோசடி செய்த உறுதிகளுடன் எனக்குத் தொடர்பில்லை எனக்கூறி இருந்ததையும் குழு கவனத்தில் எடுக்கவில்லை. எனக்கு அக்காணியில் உரிமை இல்லை என்றதை நிராகரித்து அதனை வெளிப்படுத்த எனக்கு அவகாசம் தரப்படவில்லை. ஆயினும் நான், எனக்குப் பங்குண்டு என்பதை அந்த நொத்தாரிசே ஏற்றிருந்து, அதே வகையில் இன்னொரு காணியில் எனக்குப் பங்குண்டு என அதே நொத்ததாரிசு எழுதியிருந்த உறுதிகளைக் காட்டியும் பார்வையிடுவதைத் தவிர்த்தனர். வேறொரு சத்தியக்கடதாசி எழுதி வருமாறு பணித்தனர். தேவைப்பட்டால் அப்படி ஒன்றை எழுதி வருவேன் எனக் கூறினேன்.

குழுவின் உத்தரவுக்கிணங்க, அடுத்த தவணைக்கு முன்னர் சட்டத்தரணிக்கு எதிராக வழக்குப் பேச இன்னோர் சட்டத்தரணியைப் பிடிப்பது அவ்வளவு சுலபமானதல்ல என அறிந்த தனால்தானோ என்னவோ சட்டத்தரணி இன்றியே நமது கட்சியை வெளிப்படுத்தும் உரிமை நல்கப்பட்டிருந்தது. எப்படியோ ஓர் சட்டத்தரணியின் உதவியுடன் அங்கு சென்ற எனக்கு அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் வந்திருந்த சட்டத்தரணி என்னைக் குறைகூறி, தான் ஆயத்தமாக வரவில்லை எனக் கூறி தவணை ஒன்றைக் கேட்டமையே. அச்சந்தர்ப்பத்தில் நான் ஆயத்தமாக இருப்பதாகக் கூறினேன். விசாரணையைத் தொடர்ந்து நடத்தும்படி வேண்டினேன். எனது வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்கின் ஓசையானது. தவணை தரப்பட்டது. மீண்டும் தவணை.

மேலதிக சத்தியக்கடதாசியுடனும் பல் வேறு வகையில் எனது கட்சியை விளக்கக்கூடிய வகையில் என்னால் தயாரிக்கப்பட்ட Charts களையும், இன்னும் பல Survey Plan களுடனும் சென்ற எனக்கு முன்னைவிட பேரதிர்ச்சி காத்திருந்தது. மன்றில் எனது சட்டத்தரணி தான் வழக்கை நடத்துவதற்கான ஆயத்தத்துடன் வரவில்லை எனக் கூறினார். நான் அதனை மறுத்து> சகல ஆயத்தத்துடனும் வந்துள்ளேன் ஆதலால் வழக்கை நடத்துமாறு கூறினேன் ஆனாலும் அவர்கள் எனது பேச்சை சிறிதும் ஏற்காது வழக்கை தள்ளுபடிDismiss செய்து விட்டனர். தாம் செய்வது பிழை என்பதை அவர்கள் நன்கு புரிந்தே வைத்து இருந்ததனால் எனக்கு மீண்டும் வழக்குத் தொடர்வதற்கான உரிமை மறுக்கப்படவில்லை எனக் கூறினர். ஏன் நான் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடரவில்லை எனக் கேட்டனர். உடன் மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடராவிடில் இங்கு முறையிட முடியாதா? எனக் கேட்டதும். பேச்சைத் திசைதிருப்பி, என்னை மாவட்ட நீதிமன்றில் வழக்குத் தொடருமாறும் ஆலோசனை வழங்கினர். மாவட்ட நீதிமன்றில்தான் நான் நொத்தாரிசின் குற்றச் செயலுக்கு நீதி பெறும் அனுமதி இல்லாத போது என்னை அங்கு போகும்படி பணிப்பது எவ்வகையில் நியாயமாகும். அத்தோடு உச்ச நீதிமன்றில் இப்படியொரு வசதி செய்யப்பட்டிருக்கும் போது அதனைச் செய்ய விடாது எனக்கு இவ்வாறு ஆலோசனை வழங்குவது உச்சநீதிமன்றச் சட்டத்தையே மதிக்காத செயலாகவே தெரிகிறது.

மேலும், மேற்படி நொத்தாரிசு, ஒருவர் தனக்குச் சொரியலில் சொந்தமான 25மரக்கால் பங்கை விற்கிறார். அதே பங்கை இந்த நொத்தாரிசு மேற்படி 25மரக்கால் பங்கு என்று அத்தாட்சிப்படுத்தி இருந்ததை தன்விருப்பப்படி 50மரக்கால் எனவும் காணியின் பெயரையும் திருத்தி, இரு வேறு காணிகள் போன்று இருவரின் பெயரில் உறுதி மாற்றஞ் செய்து இரண்டு பக்கங்களில் Folios பதிந்து 25க்குப் பதிலாக 75மரக்கால் காணியை அபகரித்ததை நான் வழக்கின் முதல் தவணையில் எடுத்துக் காட்டினேன். அதற்கு அக்குழுவிற்குத் தலைவராகவிருந்தவர் ஏதோ சப்புக்கொட்டியவராக, இந்த மாற்றம் முதலாவது உறுதி அத்ததாட்சிப்படுத்தப்பட்ட திகதியின் பின்னர் செய்யப்பட்டிருந்தால் கூறும்படி கேட்டுவிட்டு, அதனை நான் காட்டி நிரூபிக்க முனைந்ததும், அடுத்த தவணையில் பார்ப்போம் எனக் கூறியதையும் நினைவுபடுத்தி தற்போது அதனையும் காட்டினேன்.

ஆனால் எதனையும் பார்வையிடும் நிலையிலிருந்து அவர்கள் தடுக்கப்பட்டு இருந்தனரா! என்றே என்னை எண்ண வைத்தது அவர்களது நடவடிக்கை.  ஏற்கனவே நான் கேள்விப்பட்டிருந்த ஓர் செய்தியை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது இவர்கள் எனக்குத் தந்த தீர்ப்பு. தற்போது நடைபெற்ற அக்குழுவினது தீர்ப்பு எந்த வகையிலும் உண்மையைக் கண்டறிய நீதியை நிலைநிறுத்த முற்படாமல் இழுத்தடிக்கும் மனப்பான்மையையும் குற்றவாளி யைத் தப்புவிக்க எடுக்கப்பட்ட முனைப்பாகவுமே தெரிகிறது. அதாவது எனது வழக்கு தள்ளுபடி செய்யப்படும் என்பது முன்னரே தெரிந்த சேதியானதால் தானே அன்றைய தீர்ப்பு கல்யாண வீட்டில் பலர் முன்பாக கதைக்கப்பட்ட எதிர்வு கூறலாக மாறி இருந்தது.  

சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்தி அந்த வழக்கில் எனக்கு நீதி மறுக்கப்பட்டுவிட்டதென்பதை நான் மிகத் தெளிவாக இறுதியாகக் கூறினேன். அவர்கள் விரும்பாத நிலையிலும் சுருக்கமாக நொத்தாரிசு செய்திருந்த மோசடிகளை அட்டவணை மூலம் காட்டினேன். எனக்கு நடந்தது போன்று அநியாயங்கள் வேறு ஒருவனுக்கு நடந்திருந்தால் அவன் கொலைகாரனாக மாறியிருப்பான் என்றும் கூறினேன். அநீதியைத் தெரிந்தே செய்த அந்தக் குழுவுக்கு நான் கூறியது எதுவும் உறைக்க வில்லை. அவர்கள் இப்படியே பழக்கப்பட்டவர்கள் என்பதை முன்னொரு வழக்கிலும் வழக்காளி அவர்கள் பக்கச்சார்பாக நடந்து கொள்வதாக முகத்திற்கு முன்னால் கூறியதும் அவர்கள் காதில் படாதது போன்று நடந்து கொண்டதில் இருந்து தெளிவாகிறது. இது போன்ற குழுக்கள் நீதித் துறைக்கே அவமானத்தை உண்டு பண்ணுவன.

இந்நாட்டில் யதார்த்தமாக, பக்கச் சார்பற்று, நீதியாக நடந்து கொள்ளும் மனநிலை மக்கள் மத்தியில் இருக்கிறதோ இல்லையோ, நிச்சயமாக ஆட்சியாளர், அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள், கருத்து வெளியிடுவோர் போன்றவர் களிடம் காணப்படுகின்றது. எவரிடம் இவை இருந்தாலும் கூடப் பரவாயில்லை எனலாம். ஆனால் அது நீதித்துறையிலும் இருக்க நேரும் துரதிர்ஸ்டம் பயங்கரமான நிலையை உருவாக்க வல்லது.

குற்றச்சாட்டுக்களை அலசி ஆராய்ந்து தீர்ப்பு வழங்கி நீதியைக் காப்பாற்ற வேண்டியவர்கள் கூட முறை தவறிய வழிகளில் தமது எதிர்ப்பையும், கண்டனத்தையும், ஏன் அதற்கு மேலும் கூட போயிருப்பது கவலை தருவது. இவைகளால் தாம் வகிக்கும் பதவிகளின் தன்மைகளை கௌரவங்களைக் கணக்கில் எடுக்காதோராக மாறிவிட்டனரா என ஐயமுறும் அளவுக்கு நீதித்துறை சார்ந்தோர்கூட போதிய விளக்கமோ, ஆதாரமோ, பொறுப்போ இன்றி, அவசரக் குடுக்கைகளாக காரியமாற்றியிருப்பதன் மூலம் நீதி தேவதைக்கே அவர்கள் சவாலாகியுள்ளமை தெரிகிறது. நான் முன்பந்தியில் கூறிய வழியிலே தாமும் இணைந்துள்ளதாக நிரூபித்துள்ளார்கள்.

சிறந்த நீதிமானாகக் கருதப்பட்ட இஸ்லாத்தின் இரண்டாவது கலீபா உமர் கத்தாப் ரலி அவர்கள், தான் யாரைக் கொன்று பழிதீர்க்க வேண்டும் என எண்ணி சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாரோ, அப்படியான சந்தர்ப்பம் ஒன்று போர் முனையில் அவருக்குக் கிடைத்து அதை நிறைவேற்றாது விட்டுவிட்டார். 

அதற்குக் காரணம் நிலத்தில் மல்லாந்து கிடந்த அந்நபரை உமர் ஈட்டியால் தாக்க முற்பட்ட போது, அந்நபர் உமரின் முகத்தில் காறி உமிழ்;ந்துள்ளார். அதன் பின்னர் அக்கொலை நடந்திருந்தால், உமர் நியாயத்துக்காக அவரைக் கொல்லவில்லை, மாறாகத் தன்மேல் உமிழ்ந்ததற்காக கொன்று விட்டார் என்ற பழியைச் சுமப்பதுடன், அப்படிச் செய்வது சரி என அங்கீகாரம் கொடுக்கப்பட்டு,  முஸ்லிம்கள் அதனைப் பின்பற்றும் இழிநிலை கொண்ட சம்பிரதாயம் எதிர்காலத்தில் ஏற்பட்டு விடக்கூடாதே என்பதுதான்,  அவரது வேணவாவாக இருந்துள்ளது. உலகில் இதுவரை தோன்றிய சிறந்த நூறு பேர் என்ற மைக்கல் ஹார்ட் என்பரின் பட்டியலில், ஐம்பத்தோராவது இடத்தைப் பிடித்தார் என்பதற்கு இதுவம் கூட காரணமாக இருக்கலாம். இதனோடு நமது மதத் தலைவர்களின், நீதிபதிகளின் நிலையை ஒப்பிட்டு ஆராய்வது, இனிமேலாவது நீதி தேவதை இரத்தம் சிந்தாதிருக்க வழி செய்யும்.

முடிவாக,  நீதித்துறை, மக்களுக்கு நீதியைச் சரியான வகையில் செலுத்த வேண்டும் என எண்ணுமாயின், தற்போது கைக்கொள்ளப்படும் முறைக்கு மாறாக, உண்மையைக் கண்டறிந்து தீர்ப்பு வழங்கக் கூடியதான வகையில் வசதிகளைச் செய்து அதற்கேற்ப நீதியை நிலைநாட்ட, மக்கள் நிம்மதியாக வாழ வழி வகுக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றோம்.  

                                                                                                    _ நிஹா -                    
Colombo 03 

September 1st, 2012