Tuesday, December 25, 2012

Paristamil Tamil News - விடுதலைப் புலிகளின் மூன்று முக்கிய பொறுப்பாளர்கள் தலைமறைவு?

Paristamil Tamil News - விடுதலைப் புலிகளின் மூன்று முக்கிய பொறுப்பாளர்கள் தலைமறைவு?


உண்மையில் சிறீலங்கா அரசைவிட தமிழக அரசுகளே (பன்மையில்) ஈழத்தமிழர்களை அடக்க முண்டியடிக்கின்றன மீண்டும் தமிழர்கள் எழும்பாதிருக்க எனவும், இதில் முஸ்லிம்களில் சில புல்லுருவிகளும் உள்ளார்கள் என தாங்கள் எழுதியிருப்பதற்கான அடிப்படை ஆதாரங்கள் ஏதும் உங்களிடம் உ்ணடா என தெரியத்தரவும்.

அப்படி இல்லையேல் ஆதாரமற்ற ‌குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி எல்லோரையும் எதிரிகளாக்கிக் கொள்ளாதீர்கள்.

Sunday, December 23, 2012

Paristamil Tamil News - இலக்கு வைக்கப்பட்டது புலிகளின் புதிய படையணி?

Paristamil Tamil News - இலக்கு வைக்கப்பட்டது புலிகளின் புதிய படையணி?


“ இலக்கு வைக்கப்பட்டது புலிகளின் புதிய படையணி?   “

மேற்கண்ட உங்கள் தலைப்பு, புலிகளின் படையணி ஒன்று உண்டென்பதையும், அது தற்போது அரச படைகளால் இலக்கு வைக்கப்படடடுள்ளது என்ற கருத்தையும் கொடுக்கின்றது. ஆனால், உள்ளடக்கம் அப்படி இல்லாதது போன்றும், அது சிங்கள நாளிதழின் இட்டுக்கட்டல் என்ற கருத்திலும் அமைந்துள்ளது.

பத்திரிகைத் தலையங்கங்கள் கவர்ச்சியாக இருக்க வேண்டுமென்பதற்காக, உட்கருத்தை வெளிப்படுத்தாத போக்கைக் கொண்டிருக்கக் கூடாது. தலையங்கத்தைப் பார்க்கும் ஒருவர் உள்ளே என்ன  செய்தி இருக்கின்றது என்பதைத் தெரிந்து கொள்வதாக அமைந்து இருக்க வேண்டும்.

பூமி அதன் சுற்றுப்புறங்களில் இருந்து குறைந்து கொண்டு போகின்றதா?


குர்ஆன் வழியில்…

பூமி அதன் சுற்றுப்புறங்களில் இருந்து
குறைந்து கொண்டு போகின்றதா?

பூமி அதன் சுற்றுப்புறங்களில் இருந்து குறைந்து கொண்டு போவது என்னவோ உண்மைதான். அதனை யாரும் மறுப்பதற்கில்லை. காரணம் பல வருடங்களுக்கு முன்பு கடல் இருந்த இடம் வேறு, அது தற்போது இருக்கும் இடம் வேறு. தூரத்தில் இருந்த கடல் நம்மை நோக்கி மிக அண்மித்து வந்து கொண்டிருக்கின்றது. நிலத்தின் அளவு வரவரக் குறைந்து கொண்டே போவதை சாதாரண கண்களினாலேயே காணக் கூடியதாயுள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் நிலம் நீரினால் காவு கொள்ளப்பட்டு உள்ளதாக வரலாற்றின் வாயிலாகவும் அறியக்கிடக்கின்றது. குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்க என வரும் புறநானுhற்றாலும் சரித்திர காலம் தொட்டே நிலத்தை நீர் விழுங்கிக் கொண்டு வந்துள்ளதை நாம் அறிந்து கொண்ட உள்ளோம். லெமூரியாக் கண்டம் நீரில் மூழ்கியமை அனைவரும் தெரிந்த ஒன்றே.

இதுவல்லாமல் ஆய்வுகள் மூலமும் நிலங்கள் நீரினுள் மூழ்கியுள்ளமை உறுதி செய்யப்படுகின்றன. மேலும். செயற்கைச் சந்திரனில் இருந்து பிடிக்கப்படும் படங்களை கூகுள் ஏர்த் எனப்படும் இணையதள வசதி கொண்டு பார்க்கக் கூடியதாயுள்ளது. இதன் மூலம் நீரினடியுள் மூழ்கடிக்கப்பட்டுள்ள நகரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மொத்தத்தில் நிலத்தின் அளவு முன்னொரு காலத்தில் இருந்ததைவிட தினமும் பல்வேறு வழிகளால் குறைந்து கொண்டே போவதை நிதர்சனமாக அறிந்து கொள்ளக் கூடியதாகவே உள்ளது.

இது தவிர ஆறுகள் நிலத்தைக் காவு கொண்டு கொண்டிருப்பதை நாம் கண்கூடாகக் காண்கின்றோம். பெருமழையின் போது பெருக்கெடுத் தோடும் ஆறுகள் நிலத்தை அரித்துச் சென்று கொண்டிருக்கின்றன. ஆற்றங்கரையின் மரமும் அரசறிய வீற்றிருந்த வாழ்வும் விழும்… என்ற செய்யுளில் இருந்து ஆற்றங்கரை மரமோ நிரந்தரமாக நிலைத்துவிடாது அது ஓர் நாள் நீரினால் வீழ்த்தப்படும் எனப் பாடியிருப்பதில் நிலவரிப்பு நடப்பதும் நிலம் குறைந்து கொண்டு போவதும் நீரின் ஆக்கிரமிப்பும் மறைவான செய்தியே.

இன்னும், நீரிலிருந்து நிலத்தைக் காப்பாற்றும் நடவடிக்கைகள் அரசுகளினால் எடுக்கப்பட்டு கடற்கரை ஓரங்களில் பாறாங்கற்கள், செயற்கையாகச் செய்யப்பட்ட கொங்கிறீட் பாளங்கள் அடுக்கப்பட்டு வருவதையும் அனைவரும் கண்டு கொண்டே இருக்கின்றோம். இதுவும் நிலம் அழிந்து கொண்டு போவதை அறிவித்துக் கொண்டிருக்கின்றது.

இன்னும் பெருமழை, ஆற்றோட்டம், வெள்ளப்பெருக்கு போன்றவற்றால் ஏற்படும் நிலவரிப்பின் போது மணல் அள்ளிச் செல்லப்படுகின்றது. அப்படிச் செல்லும் மணல் கடல்களிலேயே சங்கமாகின்றது. அதனால் கடல் நீர் கொள்ளும் கனவளவு குறைந்து அது வெளிப்பட வேண்டி யுள்ளது. அப்போது கடல்மட்டம் கூடுகின்றது. கடல் மட்டம் கூடின் நீர் வெளியேறிப் பூமி காவு கொள்ளப்பட்டு விடுவது தவிர்க்க முடியாதது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

இத்தனை அழிவுகளும் தானாக நடக்கின்றனவா என்றால். இல்லை அது இயற்கை என்போம். இப்படி நாம் கூறுவதன் காரணம் நாம் கண்டவற்றில் இருந்து பெறப்பட்ட அறிவே. அவ்வறிவே நம்மை அப்படிக் கூறிட வைக்கிறது. சற்று சிந்தித்தால் வேறும் பல செய்திகளும் நமக்குக் கிடைக்கின்றன. அதிலிருந்து நாம் கண்டவைதான் உண்மை யென்பதில்லை என்பதுவும் கண்டறியப்படுகின்றது. ஆக உண்மை வேறொன்றுள்ளதாகத் தெரிகிறது.

இந்நிலையில் வல்ல நாயன் அல்லாஹ் தன்அருள்மறையில் என்ன கூறியுள்ளான் எனப் பார்ப்போமாகில் அனைத்தும் தன்னால் நிர்வகிக்கப்பட்டுவருவதாகக் கூறியிருப்பது தெரிய வருகிறது. வானத்தை பாதுகாப்பான முகடாகத் தான் உயர்த்தி வைத்துள்ளதாகக் கூறுகிறான். தனக்குத் தெரியாமல் இப்பிரபஞ்சத்தில் எதுவும் நடந்துவிடுவதில்லை. அனைத்தும் தனது திட்டப்படியே நடந்து வருகின்றன. அவை தன்விருப்பத்தோடு எதனையும் செய்வதில்லை என்கிறான். இது போன்று நிறைய விடயங்களைக் கூறினும், நாம் இலகுவாக அறிந்து கொள்ளும் வகையிலும் தன் வல்லாண்மையை வெளிப்படுத்திக் கூறியுள்ளான். அவன் நமக்கு இலகுவை விரும்புபவன் அல்லவா!

இதற்கும் மேலாக பூமி அதன் சுற்றுப்புறங்களில் இருந்து குறைத்து வருவது பற்றி ஏதாவது கூறியிருக்கின்றானா என குறிப்பாக நாம் நோட்டமிடும் போது அதுபற்றியும் மிக அழகாகக் கூறியுள்ளமை தெளிவாகத் தெரிகின்றது. அல்குர்ஆன் 21:44 மிக அருமையான செய்தியை வெளிப்படுத்துகின்றது. ‘நிச்சயமாக நாம் பூமியை அதன் சுற்றுப் புறங்களில் இருந்து குறைத்துக் கொண்டு வருவதை அவர்கள் காணவில்லையா? எனவே இவர்களா நம்மை மிகைப்பவர்கள்’ என்ற கேள்வியோடு நிற்கின்றது. இது எச்சந்தர்ப்பத்தில் கூறப்படுகின்றது என்றால் இந்த வசனத்திற்கு முந்திய சில வசனங்களும் குறிப்பாக இவ்வசனத்தின் முன்பகுதியான, ‘எனினும் இவர்களையும் இவர்களது மூதாதையர்களையும் இவர்களின் ஆயட்காலம் நீண்டதாக ஆகும் வரை சுகமனுபவிக்கச் செய்தோம்’ என்பதாகவும் இதன் மூலம் உங்களையும் அழித்து விடுவோம். அது எமக்குப் பெரிய வேலையல்ல பூமியையே நாம் குறைத்துக் கொண்டு வருவதில் இருந்து நீங்கள் அறிந்து கொள்ளுங்கள் என்ற எச்சரிக்கையில் வெளிப்படுத்தி உள்ளான்.

இன்னும்இ அல்குர்ஆன் 13:41 ஆம் வசனத்தில் மீண்டும் ஒரு தடவை பூமியை அதன் சுற்றுப் புறங்களில் இருந்து தானே குறைத்து வருவதைக் கூறியுள்ளான். ‘நிச்சயமாக, பூமியை அதன் சுற்றுப் புறங்களிலிருந்து நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? மேலும், அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். அவனது தீர்ப்பைத் தடை செய்பவன் எவனுமில்லை. மேலும் அவன் கணக்குக் கேட்பதில் தீவிரமானவன்.’

மேற்கண்ட வசனமும் தன்னை நம்பாத மக்களுக்காகக் கூறப்பட்டதாகவே தெரிகிறது. தனது மாட்சியை வெளிப்படுத்த மக்கள் தினசரி காணும் காட்சியான பூமி குறைந்து வருவதைக் கூறி, இதனைத் தடுத்து நிறுத்த எவராலும் முடியாது என்பதையும் கூறி வைத்துள்ளான். நாம் தடுத்து நிறுத்துவதற்காக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளும்கூட ஓரலையால் அள்ளிச் செல்லபட்டுவிடும் நிலையே உள்ளது. நமது தடுப்பு நடவடிக்கைகூட கடலினுள் இழுத்துச் செல்லப்படுவதால் கடல் நீர் தங்கியுள்ள இடத்தின் கனவளவு குறைந்து, கடல் நீர் வெளியேறிப் பூமியின் அளவைக் குறைப்பதாகவே இருக்கின்றது. அல்லாஹ்வை இயலாமல் ஆக்குவோர் எவருமுளரா!

ஆக பூமி தன் சுற்றுப்புறங்களில் இருந்து குறைந்து கொண்டு வருவது தானாக நடக்கும் ஒரு செயலல்ல. அது வல்ல நாயன் அல்லாஹ்வால் செய்யப்படுவது என அதனை மறுப்புக்கு இடமின்றி முன்னறிவித்தல் செய்துள்ளான். இதில் உரிமை கோருவோர் எவருமுண்டா?

                                                                                                                         - நிஹா -
கொழும்பு 03
13.09.2012


குர்ஆன் வழியில் …

                                                                                                     
நரகம் செல்லும் மறதியாளர்களின் பண்புகள்   


இந்தத் தலைப்பை நான் தெரிவு செய்தது, நரகவாதிகள் யார் என்பதைக் கூறும் நோக்கல்ல. ஆனால் அவர்கள் ஏன் நரகவாதிகளாக வல்ல நாயன் அல்லாஹ்வால் குறித்துரைக்கப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்துவதே! ஆக மறதியாளர்கள் என்பதைக் கண்டு கொள்ளும் ஆற்றல், அறிவு, ஞானம் போன்ற எதுவும் நம்மிடம் இல்லாததால், நரகவாதிகளுக்கு உரிய பண்புகளை அறிந்து கொள்வதன் மூலம் நமது குறைபாடுகளை அறிந்து நம்மை நாமே திருத்திக் கொள்ளும் வகையில் இறையுதவியை நாடலாம் என்பதே! குர்ஆன் இலகுபடுத்தப்பட்டுள்ளது என்ற இறைவாக்கியத்தை நிறைவு செய்வது.

அந்த வகையில் அல் குர்ஆன் 7:179 வசனம் நமக்கு உதவி புரிகின்றது. ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் மிகுதமானவர்களை நரகத்திற் காகவே திட்டமாக நாம் படைத்துள்ளோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன. எனினும் அவற்றைக் கொண்டு விளங்கமாட்டார்கள். இன்னும் அவர்களுக்கு கண்கள் இருக்கின்றன. எனினும் அவற்றின் மூலம் பார்க்க மாட்டர்கள். இன்னும் அவர்களுக்குச் செவிகள் உண்டு. எனினும் அவற்றின் மூலம் அவர்கள் செவியேற்கமாட்டார்கள். இத்தகையோர் கால்நடைகளைப் போன்றார். அல்ல, இவர்கள் மிக்க கேடுகெட்டவர்களாவர்.

மேற்கூறப்பட்டவை மறதியாளர்களின் பண்புகள் என்பதால், அந்த மறதியாளர்கள் யாரென்பதை அல்லாஹ்விடம்; இருந்தே அறிய வேண்டி யுள்ளது. அந்த வகையில் அல்லாஹ் கூறியதனை வேறெங்கும் தேட முடியாது என்பதால் அவனது கலமான அல் குர்ஆனில் நமது பார்வையைச் செலுத்துவோம். அப்படிப் பார்க்கும் போது நிறையவே வசனங்கள் உள்ளன வாயினும், மிகவும் தெளிவாகவும், தர்க்க ரீதியாகவும், உண்மையைக் கொண்டும் வெளிப்படுத்தப்பட்ட இரகசியமே நமக்கு இன்றியாத ஒன்றாக அமைகின்றது. 7:172. இன்னும் உம்முடைய ரப்பு, ஆதமின் மக்களாகிய அவர்களது முதுகுகளில் இருந்து, அவர்களுடைய சந்ததிகளை வெளியாக்கி வைத்தபோது, ‘நான் உங்கள் ரப்பு அல்லவா?’ “ஆம் நாங்கள் சாட்சி கூறுகிறோம்” என்று அவர்கள் கூறியதை நினைவூட்டும். ஏனென்றால், “நிச்சயமாக நாங்கள் இதனை விட்டும் மறதியாளர்களாக இருந்து விட்டோம்” என்று மறுமையில் நீங்கள் கூறாதிருப்பதற்காக.

இப்போது யார் மறதியாளர் என்பதை நாமே வெளிப்படுத்தி இருப்பதையும், அல்லாஹ்வைப் பார்த்ததை, அல்லாஹ்வின் சந்திப்பின் போது அவனைத் தவிர வேறு நாயனில்லை என நாம் சாட்சியமளித்ததை மறந்ததையும் இவ்வசனம் தெளிவாக்குகின்றமை தெரிகிறது. ஆக மறதியாளர் யாரெனின் மேற்கண்டவற்றை ஞாபகத்துக்குக் கொண்டுவர முடியாமல் மறதியில் இருப்பவர்களே!

நபிமார் மூலம் வேதங்கள் அருளப்பட்டமைக்கான காரணம்,  மக்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதை மறந்திருப்பதை ஞாபகப்படுத்து வதற்காகவே! குர்ஆனில் பல இடங்களில் தன்னை நினைவுகூரும்படி அல்லாஹ் கூறியிருக்கின்றான். உங்கள் மூதாதையர்களை நினைவுகூர்வது போன்று அல்லது அதைவிட அதிகமாக அல்லாஹ்வை நினைவுகூருங்கள் என்றும், தன்னை அதிகம் அதிகமாக நினைவு கூருங்கள் என்றும் கூறியதுடன், தொழுகை மானக்கேடானவைகளில் இருந்தும் வெறுக்கத்தக்கவைகளில் இருந்தும் உங்களைக் காக்கும் என்றும் கூறி,  அதே வசனத்தில்,  அதைவிட மேலானது அல்லாஹ்வை நினைவுகூருவதாகும் என்கின்றான். என்னை நினைவு கூருவதற்காக தொழுகையை நிலைநிறுத்துங்கள் என்கின்றான். என்னை நீங்கள் நினைவு கூர்ந்தால் உங்களை நான் நினைவுகூருவேன் என்கின்றான்.என்னை நினைவுகூர்வதில் இருந்தும் அவர்களுடைய கண்கள் திரைக்குள் இருந்தன என்கின்றான். மறுமையில் நம்முடைய கண்களில் உள்ள திரை விலக்கப்படும் போது… என்கின்றான். அல்லாஹ்வை நினைவுகூர்ந்து தமது பாவங்களுக்காக மன்னிப்புத் தேடிக் கொள்வார்கள் என்கின்றான். 39:22 அல்லாஹ்வை நினைவுகூர்வதைவிட்டும் அவர்களுடைய இதயம் இறுக்கமடைந்து விட்டவர்களுக்குக் கேடுதான் என்கின்றான். 21:10 இல் திட்டமாக உங்கள் பால் ஒரு வேதத்தை நாம் இறக்கி வைத்தோம். அதில் உங்களுடைய நினைவுகூரல் இருக்கிறது. நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா? என்கிறான். இன்னும் பல்வேறு வசனங்களில் வெவ்வேறு விதமாக அவனை நாம் மறந்திருப்பதையும் நினைவுகூர்தலையும் நினைவுறுத்துகிறான். 2:152,  2:198, 2:200,  2:203,  21:42, 3:41, 3:135, 3:191, 4:114,  7:205,  13:28, 20:14,  20:115, 21:10,  21:42, 33:21, 33:41, 39:22, 50:22, 53:29, 58:19,

அல்லாஹ் தனது அருள்மறையில் மறுமையில் ளிஹார் என்னும் தரிசனத்தைப் பற்றிக் கூறியுள்ளான். அத்தோடு இவ்வுலகத்தில் குருடர்களாக இருப்போர் மறுமையிலும் குருடர்களாக இருப்பர் என்று கூறியிருப்பவை நமது கவனத்தை ஈர்க்கப்படாவிட்டால் நாம் நரகவாதிகள்தான் என்பதை நாமே முடிவு செய்து கொள்ளலாம். இவ்வேதனையின் உண்மையை அறிந்து கொள்ள இவற்றை விட மேலதிகமான விளக்கங்கள் தேவை இல்லை சாதாரண அறிவைக் கொண்டே நாம் நிர்ணயம் செய்து கொள்ளலாம்.

நரகவாதிகள் பற்றி இறைவன் கூறியுள்ள பண்புகள் நம்மிடம் காணப்படுவதை நாமே அறிந்து கொள்ளலாம். நாம் குர்ஆனில் கூறப்பட்டவற்றை விளங்கி அறிந்திருந்தால் அம்முயற்சியில் ஈடுபட்டிருப்போம். அவ்வாறில்லையேல், ‘இதயம் இருக்கும் அவர்கள் விளங்கிக் கொள்ள மாட்டார்கள்| என்பதற்கு நாம் உரித்தாளராகிடுவோம்.

நினைவுகூர்தல் என்ற விடயம் பார்த்த ஒன்றை நாம் ஞாபகத்துக்குக் கொண்டுவருவதே! அப்படிக் கொண்டு வரும்போது அவை காட்சிகளாக நமக்குத் தெரிகின்றது. ஆக நாம் பார்த்ததை தற்போது கண்டு கொள்ள முடியவில்லை என்றால், இரண்டாவது பண்பான கண்கள் இருக்கும் பார்த்துக் கொள்ளமாட்டார்கள்| என்ற பண்பு நம்மில் காணப்படுவதை அறியலாம்.

அடுத்து நமக்கு நல்ல விடயங்கள் சொல்லப்பட்டால் அதனைக் கேட்டு அப்படியே அவ்விடத்திலேயே விட்டுச் செல்லும் பண்பே நம்மிடம் நிறைவாக உள்ளது. அல்லது மிக நல்ல கருத்துக்கள் இன்று கூறப்பட்டது என்போம் ஆனால் கூறப்பட்டவை என்ன என்பது தெரியாத நிலையில் இருப்போம். இந்நிலை நரகவாதிகளின் மூன்றாவது பண்பான செவிகள் உண்டு ஆனால் செவியேற்க மாட்டரர்கள்| என்ற நிலையைக் காட்டுகிறது.

இப்போது நமது நிலை பற்றி யாரும் நமக்குக் கூறத் தேவையில்லை என்பது தெளிவு. இக்குர்ஆன் மிகத் தெளிவான விளக்கங்களைக் கொண்டுள்ளது, சந்தேகமற்றது என அல்லாஹ் பல இடங்களில் கூறியிருப்பதன் உண்மையும் நிரூபனமாகின்றது.

இதனை அறிவதன் மூலம் நம்மில் மாற்றங்களைக் கொண்டு வருவதில் நாம் முயற்சிக்க வேண்டும். முயற்சியாமல் எதுவும் கிடைத்து விடாது என்பதும், முயற்சி கணக்கில் எடுக்கப்படும் என்பதும், முயற்சியின் அளவுக்கே கொடுக்கப்படும் என்பதுவும் அல்லாஹ்வின் வாக்குறுதிகளே!

5:35 இப்படி அறைகூவல் விடுக்கிறது. இறைநம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை நீங்கள் அஞ்சிக் கொள்ளுங்கள். அவன்பால் நெருங்குவதற் குரிய வழியை தேடிக்கொள்ளுங்கள். மேலும் அவனுடைய பாதையில் போர் செய்யுங்கள் நீங்கள் வெற்றி பெறலாம்.

மேற்கண்ட தலைப்பில் எழுத முனைந்தது, நம்மை நாம் அளவிட்டு அறிந்து கொள்ளும் அல்லாஹ் அருளிய வாய்பாட்டை தெரியப்படுத்துவதன் மூலம் நம் நிலையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள நினைவுபடுத்துவதே! மேலும் குர்ஆனிய வசனங்களை மறைப்பதும் கொடுமையே!கொழும்பு 03
2012.10.24                                                                                       – நிஹா -

ஒருவர் நரகவாதியா? சொர்க்கவாதியா? 
என்ற ஆய்வு
ஈமானுக்கு விரோதமானது!


அண்மையில், ”அண்ணல் நபியின் அருமைப் பெற்றோர் நரகவாதி களா?” என்ற தலைப்பில், அவர்கள் நரகவாதிகள் என்று யாரோ கூறியதற்கெதிராக, அவர்களைச் சொர்க்கவாதிகள் என்று நிரூபிக்கும் நோக்கில் எழுதப்பட்ட நூலொன்றை வாசிக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது. அந்நூலில், தனது கட்சியை சார்பாகப் பல்வேறு உத்திகள், உதாரணங்கள், குர்ஆன் வசனங்கள் தம் விருப்புக்கேற்றவாறு கையாளப்பட்டிருந்தன. அவை பற்றி நான் இங்கு எழுதி, உங்கள் நேரத்தையும், எனது நேரத்தையும் வீணடிக்க விரும்பவில்லை. 

ஆனால் ஒரு முஸ்லிம் என்ற ரீதியில் சில விடயங்களைப் பார்த்துக் கொண்டு வாளாவிருக்க முடியாது என்ற நிலையில், உண்மையில் அது பற்றிய கொள்கை நமக்கு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றி எழுதுவதே எனது நோக்கமும், இறைவன் அனுமதித்ததுமாகும் என்ற வகையில் சில கருத்துக்களை குர்ஆனுக்கு மாற்றமின்றி முன்வைக் கலாம் என நினைக்கிறேன். இக்கருத்தில் உடன்பாடில்லாதவர்கள் இதிலிருந்து விலகிக் கொள்வது அனைவருக்கும் நன்று.

அருமை நபிகள் கோமான் அவர்களின் பெற்றோர் எப்படியானோர் என்பது பற்றி நமக்குப் போதிய அறிவில்லையாயினும்,  நபிகளாரைப் பெற்றெடுத் தோர் சமான்யர்களாக இருக்க முடியாது என்பதை ஓரளவு ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் இப்படி “ஓரளவு  ஏற்றுக் கொள்ள வேண்டும்“ என்று மட்டுப் படுத்திக் கூறுவதற்கான காரணம், நாயகத் திருமேனி முஹம்மது ஸல் அவர்களின் தந்தையரின் சொந்த சகோதரரான அபுஹிக்கம் என்ற பெயருள்ள, அபுஜஹீல் என அழைக் கப்பட்ட, இறைநிராகரிப்பில் முன்னிலை வகுத்தவரும், நாயகத்தை முழுமையாக எதிர்த்தவரும் அதே சந்ததியில் உருவாகி இருப்பதே! 

ஆக, சந்ததி, முன்னோர், பெற்றோர் போன்றவை ஒருவரின் ஈமானையோ, அந்தஸ்தையோ, நிலவரத்தையோ ஆராயப் போதுமான தாகவில்லை என்பதே! அதுபோன்றே> ஓர் உயர் நிலை அடைந்த உத்தமரான மகனை வைத்து, அவரின் பெற்றோரை உயர்ந்தவர்களாக எடைபோட முடியாது. (இப்படிச்சொல்வது உலக நடைமுறையே தவிர, நான் நபிகளாரின் பெற்றோரைக் குறைத்து மதிப்பிடுவதாக யாரும் எண்ணிட வேண்டாம்). இதனை, இறைவனின், உங்கள் முன்னோர் பிழையான வழியைப் பின்பற்றினாலுமா நீங்கள் அவர்களைப் பின் தொடர்வீர்கள் என்ற எச்சரிக்கையுடனான அறைகூவல், நன்கு நிரூபிப்பதுடன் உணர்த்தவும் செய்யும். 

உண்மையில், யாராவது நாயகமவர்களின் அருமைப் பெற்றோரை நரகவாதி என்று மட்டுமல்ல, சிறிது தரக்குறைவாகப் பேசினாலும், அதனை எந்த முஸ்லிமும் சகித்துக் கொள்ளவே மாட்டான். அது தனக்கு அவமானத்தை, இழுக்கை, நோவை ஏற்படுத்திய ஒன்றாகவே உணர்வான். அதனால், ஆத்திரமடையவும், வேறு நடவடிக்கைகளில் இறங்கவும் செய்வான். இங்கு ஆசிரியர் புத்தகம் ஒன்றை எழுதி இருந்தவரை ஓரளவு மன அமைதி பெறுகின்றது. 

ஆயினும், நாம், முஸ்லிம்கள் எதனைச் செய்தாலும்,அது யாருக்காக வேண்டி இருந்தாலும் குர்ஆனிலிருந்து சற்றும் விலகிவிடாத தன்மையைப் பேண வேண்டும். உங்கள் உறவினராக இருந்தாலும் நீதி செய்வதில் உங்களைப் பிறழ விடவேண்டாம் என்று கூறும் இறைவசனம் நினைவிற் கொள்ளப்பட வேண்டியதே!

அப்படியாயின், இது போன்ற கருத்துக்கள் வெளியாகும் போது நமது எதிர் நடவடிக்கைகள், நமது ஈமானையும், குர்ஆனையும் மீறிவிடாது கவனித்துக் கொள்ள வேண்டும். அவையே நமது அத்திபாரம். அதிலிருந்து ஏற்படும் எவ்வித சறுக்கலும் நம்மையே அழித்துவிடும். ஆக, இந்த விடயத்தில் நாம் நமது கருத்தைக் கூறுவதற்கு முன்னர், ஈமானை, நாம் கூறப் போகும் கருத்து, எவ்வகையிலாவது மீறி விடுகிறதா என மிக அவதானமாக உற்று நோக்கிய பின்பே தொடர வேண்டும். அடுத்து, நாம் பேசும் அனைத்தும் குர்ஆன் வழியில் ஏற்கப்பட்டதாக இருக்க வேண்டும். இவை உறுதி செய்யப்பட்ட பின்னரே நமது நடவடிக்கைகள்  தொடரப்படலாம்.

அந்த வகையில், நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களின் அருமைப் பெற்றோர் நரகவாதிகள் என்றோ, சொர்க்க வாதிகள் என்றோ எண்ண முயன்றோர்,  ஈமானில் தாம் கொண்டுள்ள இறை மகத்துவத்தை மீறுபவர்களாகவே உள்ளதைக் காண முடியும்.  நாம் நல்லதாக நினைப்பவை தீமையாகவும், தீமையாக நினைப்பவை நன்மையாகவும் இருக்கும் என்பதை மூஸா அலை அவர்களின் கற்றறிந்த நபர் ஒருவரின் சந்திப்பின் போது நடைபெற்ற சம்பவங்கள் உணர்த்தும். ஆக, இறைவனே மறைவான வற்றையும் அறிந்தவன். யாவுமறிந்தவன்.  நுண்ணறிவாளன். 

அப்படியானால், நாம் இந்த விடயத்தில் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்க முடியுமா என்ற கேள்வி எழுவது நியாயமானதே! ஆம், அப்படியான கேள்விகளின் போது, தீர்ப்புக்கள் யாவும் குர்ஆனிலிருந்தே கொடுக்கப்பட வேண்டும் என 4:105 கூறுவதற்கொப்ப, நாம் குர்ஆனிலேயே தீர்வு காண முற்பட வேண்டும். அப்போது இறைவன் நமக்குச் சரியான பாதையைக் காட்டுவான். 

சரி நாம் குர்ஆனில் இது பற்றி ஏதாவது சொல்லப்பட்டிருக்கின்றதா என்பதைப் பார்க்கு முன்னர், கேள்வியைப் புரிந்து கொள்ள வேண்டும். நாயகமவர்களின் பெற்றோர் நரகவாதிகளா? சொர்க்கவாதிகளா?  நரகவாதிகள் என்போர் பற்றி அல்லாஹ் பல இடங்களில் கூறியிருப் பினும், குறிப்பாகச் சொல்லப்பட் டிருப்பது, ஒரு சமூகத்துக்கு தனது தூதரை அனுப்பி அவர்களுக்கு நினைவூட்டாத வரை அச்சமூகத்தினரைத் தான் குற்றம் பிடிக்கமாட்டான் என்ற அவனது கூற்றே!

அந்த வகையில், அரேபியர் மத்தியில், முதன் முதலாக அனுப்பப்பட்ட இறை தூதர் நமது கண்மணி நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல் அவர்களே! அதனால், இஸ்லாம் என்றால் என்ன என்று அவர்களது பெற்றோர் அறிந்திருக்க நியாயமில்லை. காரணம், நாயகமவர்களின் ஆறு வயதிற்கு முன்னரே அவ்விருவரும் வபாத்தாகிவிட்டார்கள். நாயகம் கூட தனது 40ஆவது வயதில் குர்ஆனிய வசனங்கள், தனக்கு வஹீயாக  அனுப்பப்பபடும் வரை இஸ்லாத்தை அறிந்திருக்காத போது. அவர்களின் தந்தை, தாய் எப்படி இஸ்லாத்தை அறிந்திருக்க முடியும். அல்லாஹ்வே, நாயகம் முன்பு எதனையும் அறியாதவராக இருந்தார் என்பதைத் தனது திருமறையில் கூறிக் கொண்டிருக்கின்றான். 

அந்த அடிப்படையில், அல்லாஹ் தான் தனது தூதரை அனுப்பி அவர்களுக்கு வழிகாட்டாத நிலையில் இருந்த, இஸ்லாத்தை அல்லாஹ் நபிகளாருக்கு அருளுவதற்கு முன்னர் இறையடி சேர்ந்த, அரேபிய சமூகத்தினரான நபிகளாரின் பெற்றோரைக் குற்றம் பிடிக்கமாட்டான். அதனால், குற்றம் பிடிக்கப்படாதவர்களை நரகத்துக்கு அனுப்புவது என்பது அவனுடைய நடைமுறையல்ல. இந்த அடிப்படை யில் நபிகளாரின் அருமைப் பெற்றோர் நிச்சயம் நரகவாதிகளல்லர் என்பது நிரூபணமாகின்றது.அப்படியாயின் முடிவை நீங்களே தற்போது அறிந்து கொள்ளலாம். அவர்கள் செய்த நன்மை, தீமைகளின் கனத்துக் கேற்ப அவர்களுக்கு வெகுமதியோ, தண்டனையோ வழங்கப்படலாம்!  

நாயகத்தின் பெற்றோர் என்பதனால், தனது நீதியில் அணுவளவு தளர்வையும் அல்லாஹ் ஏற்படுத்திக் கொள்ள மாட்டான்.

கொழும்பு 03
2012.12.23                                                                                         - நிஹா -

Tuesday, December 18, 2012

Paristamil Tamil News - இறுதிக்கட்ட போரில் கொடூரமான இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிறிலங்கா படையினர்

Paristamil Tamil News - இறுதிக்கட்ட போரில் கொடூரமான இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய சிறிலங்கா படையினர்


வன்னியில் காயத்துக்கு மருந்திடத் தாமதித்ததால் உயிரிழந்த ஒரு மதகுருவின் நிலை, தனது குழந்தைக்குப் பாலூட்டிக் கொண்டிருந்த ஒரு தாயாரின் மரணத்தின் இறுதி நிமிடங்கள் என்பவற்றையும் இந்த நிகழ்வில் பிரான்செஸ் ஹாரிசன் விவரித்திருந்தார்.

ஆசிரியரின் மேற்கண்ட செய்தி ஒரு யுத்தம் நடந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் நடந்துள்ளது என்பதைக் காட்டுகின்றது. இவ்வாறாகப் பல நூறு மக்கள் இறவாமல் இருந்ததே ஆச்சரியம் . அதற்காக இறைவ‌னுக்கு நன்றி.

உண்மையைக்கண்டறியும் விடயத்தில் போரின்போது காணம‌ைட‌ைந்த சிலரின் செவ்விகள் அங்கு நடைபெற்றதாகக் குறிப்படப்படும் விடயங்களை நிரூபிக்கப் போதுமானவையாக இருக்க முடியாது.  இதுவரை இரசாயன ஆயுதங்கள் பாவிக்கப்பட்டன என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கவில்லை.  இது இவ்வாசிரியரின் புதிய குற்றச்சாட்டு.


//  போர் இறப்பு குறித்து, ஐ.நா. வெளியிட்ட முதல் தகவலில், 40 ஆயிரம் பேர் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால், கடந்தவாரம் வெளியான ஐ.நாவின் இன்னொரு அறிக்கையில், 70 ஆயிரம் பேர் பேர் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக வங்கியின் புள்ளி விவரங்களின்படி 2006 முதல் 2010 ஆம் ஆண்டு வரை ஒரு  லட்சம் பேர் வன்னியில் காணாமல் போயுள்ளனர். இதுவரை இவர்களுக்கு என்னவா யிற்று என்றும் தெரியவில்லை. //

மேற்கண்ட பந்தி, பாதிக்கப்பட்டோர் பட்டியலில் உள்ள குளறுபடிககளைக் காட்டுகின்றது. உலக வங்கிக் கணிப்பீடு நான்கு வருடங்களில் ஒரு இலட்சம்இ பேர் வன்னியில் காணாமற் போயுள்ளனர் எனக் கூறுகின்றது. இதன்படி, உக்கிரமமாகப் போர் நடந்த 130 நாட்களில் இலட்சத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என பகிரங்கப்படுத்தப்படும் விவரம் மறுக்கப்படுகின்றது. அல்லது மிகைப்படுத்தப்பட்ட் தகவலாகத் தெரிகின்றது.

ஆக உண்மை நிலையைக் கண்டறிய குடிசன மதிப்பு ஒன்றே வழி செய்யும்.  அந்த வகையில் இந்நாட்டில் சென்ற வருடம் எடுக்கப்பட்ட குடிசன மதிப்பை ஆராய்வோர் ஓரளவாவது உண்மை நிலையை அறிவர்.  மற்றும், ஒவ்வொரு குடும்பத்திலும் எத்தனை பேர் இக்கால கட்டத்தில் இறந்து, காணமற் போயுள்ளனர் என்ற தகவலைப் பெறலாம். இவர்களில் வெளிநாடுகளுக்குச் சென்றோர், புலிகள் இயக்கம் சார்ந்தோர் உள்ளடங்குவர். இவர்களை இறந்த அப்பாவி மக்கள் வரிசையில் சேர்க்க முடியாது.

மேலும் புலிகளாலும், இறுதிப் ‌போரின் போதும், அதற்கு முன்னரும் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்ற குற்றமும் உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

Paristamil Tamil News - உலக அழிவு குறித்து வதந்தி பரப்பிய 93 பேர் சீனாவில் கைது

Paristamil Tamil News - உலக அழிவு குறித்து வதந்தி பரப்பிய 93 பேர் சீனாவில் கைது


சீனா இந்த உலக அழிவு என்ற விஷமப் பிரச்சாரத்தில, உலகுக்கு ஓர் முன்மாதி‌ரியைக் காட்டியுள்ளது.  இவ்வதந்திய‌ைப் பரப்பி மக்களது இயல்பு வாழ்வுக்குக் குந்தகம் ஏற்படுத்திய அனைவரும் தண்டனைக்குரியவர்களே! இத்தவறான செய்தியைப் பல்வேறு உத்திகளைப் பாவித்துப் பரப்பிய ஊடகங்களும் தடைக்கு உட்படுத்தப்பட வேண்டியனவே! ஆதலால்
சம்பந்தப்பட்ட அரசுகள் இக்குற்றச் செயலைத் தடுப்பதுடன், இனிமேலும் இதுபோன்ற வதந்திகள் பரவாது தடுப்பதற்கான ஆக்கபூர்வ நடவடிக்கைக‌ளை மேற்கொண்டு, மக்களைத் தேவையற்ற பீதியிலும், சிக்கல்களிலும் இருந்து காக்கவேண்டும்.

Paristamil Tamil News - 93 வயதில் இப்படியொரு மூதாட்டியா?: அசத்தல் வீடியோ இணைப்பு

Paristamil Tamil News - 93 வயதில் இப்படியொரு மூதாட்டியா?: அசத்தல் வீடியோ இணைப்பு

Its fantastic. Her self confident is excellent  at this age.

Monday, December 17, 2012

Paristamil Tamil News - அமெரிக்காவில் பள்ளிச் சிறுவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞன் பற்றி திடுக்கிடும் தகவல்கள்

Paristamil Tamil News - அமெரிக்காவில் பள்ளிச் சிறுவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இளைஞன் பற்றி திடுக்கிடும் தகவல்கள்

இச் செயல் பாலஸ்தீனத்தில் நடந்தவைக்குப் பதிலடியாக இருக்க முடியாது. அப்படியே பதிலடியாக இருந்தால்கூட, உலகையே அறியாத, குறமற்ற பிஞ்சு உயிர்களைப் பறிப்பது? எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாதது. பாலஸ்தீனத்தில் இவ்வாறான அராஜகங்கள் நடந்து கொண்டிருக்கின்றது என்ப‌தைக் கூட அறியாத அம்மழலைகளைக் கொன்றது முழு மனித சமுதாயமும் வெட்கித் தலைகுனிய ‌வேண்டியது.

Paristamil Tamil News - மீண்டுமொரு பிரிவினைவாதத்தை உருவாக்கும் முயிற்சியில் மஹிந்தர்

Paristamil Tamil News - மீண்டுமொரு பிரிவினைவாதத்தை உருவாக்கும் முயிற்சியில் மஹிந்தர்


போராட்டத்தில் ஈடுபடுவோர் தக்க காரணமின்றி ஒரு உயிரைக் கொல்லவும் முடியாது. போராட்டம் நமது பிரச்சினைகளை வெளிப்படுத்தும் களமாக மட்டுமே இருக்க வேண்டும். வன்முறைகளின் களமாக ஆகிவிடக் கூடாது. அண்டை நாடான இந்திய உபகண்டத்தில் வெள்ளையருக்கு எதிரான போராட்டம் காந்திஜி அவர்களால் முன்னெடுக்கப்பட்ட போது, ஒரு கொலையைக்கூட அவர் செய்யத் தூண்டவில்லை. அங்கிருந்து பாகிஸ்தான் பிரிந்த போது கூட ஜின்னா ஒரு கொலையையும் தூண்டிட வில்லை. வெள்ளையர் ஆயிரக் கணக்கான போராட்ட தியாகிகளைக் கொன்று குவித்தனர், சிறையில் அடைத்தனர். ஆயினும், போராட்ட வீரர் அனைத்தையும் பொறுத்துக் கொண்டனரே தவிர, மாறறு நடவடிக்கையாக வன்முறையில் இறங்கவில்லை.

அதனால்தான் பிரித்தாணிய பேரரசின் யுத்த அமைச்சர் வினஸன் சேர்ச்சில் இப்படிக் கூறினார். காந்தியுடன் தன்னால் போரிட்டு வெல் முடியாமல் இரு்ப்பதற்கான காரணம், அவர் நிராயுதபாணியாகப் போராட்டம் நடத்திக் கொண்டிப்பதே எனவும், இதற்கான மாற்று வழிகள் தம்மிடம் இருக்கவில்லை என்றும் பகிரங்கமாக் கூறினார்.  அப்படியில்லாமல் அவர்கள் ஆயுதமேந்திப் போராடி இருந்தால் தான் சில மணிகளிலேயே அவர்களைத் துவம்சம் செய்திருக்க முடியும் என்றும் கூறியதில் இருந்து, உரிமைப் போராட்டம், விடுதலைப் போராடடம் என்பது என்வென்று படித்துக் கொள்ள வேண்டும்.

அரச அங்கீகாரமின்றி, எவர் கையில் ஆயுதத்தை எடுத்தாலும் அவர் ஒரு பயங்கரவாதியே! அவர் எதற்காகப் போராடினும் சரியே!

ஆயுதங்களை அரச படைகள் வைத்திருப்பது கூட மக்களையும், நாட்டையும் எதிரிகளிடம் இருந்து காப்பாற்றவே தவிர, மக்களையே கொல்வதற்காகவல்ல.  பயங்கரவாதமே, நாட்டு மக்களையே எதிரிகளாகப் பார்க்க வைக்கும் சந்தர்ப்பத்தை அரசுக்குக் கொடுக்கின்றது

Saturday, December 15, 2012

Paristamil Tamil News - இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சத்து ஆறாயிரம் மக்களை காணவில்லை: ஆதாரபூர்வமாக வரும் சாட்சியம்

Paristamil Tamil News - இறுதிக்கட்ட யுத்தத்தில் ஒரு இலட்சத்து ஆறாயிரம் மக்களை காணவில்லை: ஆதாரபூர்வமாக வரும் சாட்சியம்


சிறீ லங்கா விவகாரத்தைப் பற்றிப் புதிதாக எதையாவது கூறிப் புகழ் சேர்த்தும், பொருள் சேர்த்தும் வருவது தற்போது சாதனை போன்றும், வியாபாரமாகவும் நடைபெறுகின்றன.

நடந்து மு‌டிந்ததை மிகைப்படுத்திக் கூறி, இங்கு பிரச்சினைகளை உருவாக்கிக் கொண்டிராமல் உருப்படியாக எதையாவது பாதிக்கப்பட்டு தற்போது உயிரோடு வாழவழியின்றித் தவிக்கும் மக்களுக்கு தேவைப்பட்டதை தற்போது செய்யுங்கள்.

உண்மையில் இலங்கை சிறுபான்மைத் தமிழர் விடயத்தில் அக்கறை கொண்டவர்கள் யாராவது இருந்தால், அவர்கள் இங்கு வாழும் இம்மக்கள் சமவுரிமையுடன், கௌரவமாக வாழுவதற்கான வழிமுறைகளை வெளிப்படுத்துங்கள். அதற்காக எழுதுங்கள். குரல் கொடுங்கள். அவையே தற்போது இம்மக்களால் வேணடப்படுவது. இந்நாட்டுக்கும் தேவைப்படுவது.

இதைவிடுத்து குட்டையைக் குழப்பி மீன்பிடிக்க நினைப்பதும், குளிர்காய நினைப்பதும், புகழும் பொருளும் சேர்க்க முயல்வதும்  மகா கொடுமைகள். நடந்து முடிந்ததைக் கூறிக் கொண்டிருப்பதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்தவித நன்மையும் ஏற்பட்டுவிடப் போவதில்லை, தீமையைத் தவிர. யார் யாரோ கூறுபவை எல்லாம் ஒரு நாட்டில் நடந்த யுத்தத்தை அளக்கும் அளவு கோலாகிவிட முடியாது. அதுவே குற்றத்தைத் தீர்மானிக்கும் ஆதாரமாகவும் மாறமுடியாது. ஆதாரபூர்வமாக நிறுவப்பட முடியாதவை ஏலவே உள்ள உண்மைகளினதும் பெறுமதியைக் குறைக்க வைத்துவிடும்.

Benefiting out of others' distress is the worst crime in the world.

Thursday, December 13, 2012

Paristamil Tamil News - உலகம் ஏன் நேற்று அழியவில்லை - நாசா வீடியோ இணைப்பு

Paristamil Tamil News - உலகம் ஏன் நேற்று அழியவில்லை - நாசா வீடியோ இணைப்புமதங்கள் முட்டாள் தனமாக்க் கூறியிருக்கின்றன என பொறுப்பான பத்திரிகை என்ற ரீதியில் எழுதுவது உங்கள் அறியாமையை மட்டுமே வெளிப்படுத்தும்.  அறிவாளர்கள் அன்றி இறை வசனங்களை அறிந்து கொள்ளமாட்டார்கள் என்ற இறைமொழிக்கேற்ப, இன்று விஞ்ஞானிகளே இறைகருத்துக்களை உண்மையென ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இறைமொழிகளில் காணப்படும் எத்த‌னையோ எதிர்வுகூறல்கள், கருத்துக்கள் தற்போது நிதர்சனமாகக் காணக் கூடியதாகவும், விஞ்ஞான ரீதியில் ஏற்கப்பட்டதாகவும் உள்ளன. அவற்றிற் சிலவற்றை இங்கு பதிவது இறைவசனங்களின் உண்மைத் தன்மையை விளங்கிக் கொள்ள உதவும்.

இருகடல்களுக்கு இடையில் நாம் கண்ணுக்குத் தெரியாத தடை‌யொன்றை ஏற்படுத்தியுள்ளோம். அவை அதனை மீறுவதில்லை. ஒன்று மதுரமாகவும் மற்றையது கசப்பாகவும் இருக்கும் இது இறை மொழி. சென்ற நூற்றாண்டில் கடலாய்வாளர்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின்னர் கடலில் கண்ணுக்குத் தெரியாத தடையொன்று உள்ளது, அதுபோன்று நீரின் தன்மைகளிலும் ஒவ்வொரு கடல்களுக்கிடையிலும் வேறுபாடுகள் காணப்படுவதாகவும். அவை கடற் சந்திப்பின் போது மாறிவிடுவதில்லை போன்ற உண்மைகளைக் கண்டு இறை கருத்துக்கள் உண்மைதான் என ஏற்றும் உள்ளனர்.

மேலும்,  மோஸஸ் காலத்தில் எகிப்திய பேரரசன் பாரோ, மோஸேஸால், இறைவல்லமை‌யுடன் பிளக்கப்பட்ட கடலில் மூழ்கடிக்கப்பட்ட நிகழ்வு  பைபிளிலும், குர்ஆனிலும் பதிவாகியுள்ளது.  மேலும், குர்ஆனில், அப்படி மூழ்கடிக்கப்பட்ட பாரோ மன்னனின் உடலை உலக மக்களின் படிப்பினைக்காக தாம் பாதுகாப்போம் எனக் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட இறைமொழி, சென்ற   நூற்றாண்டில் பாரோவின் இறைவனால் பாதுகாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் உடல்    ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது எகிப்தின் கெய்ரோ புதைபொருள் மையத்தில் வைக்கப்பட்டுள்ளதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்னும், நோவா காலத்து ஜலப்பிரளயத்தில் உபயோகிக்கப்பட்டதாக நம்பப்பபடும் கப்பல் தற்போது மலை உச்சியில் காணப்படுவது கண்டுபிடிக்கப்ட்டுள்ளது. இந்தச் செய்தி புனித குர்ஆனில் அக்கப்பல் ஜூதி எ்னற  மலை முகட்டில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கின்றது. இவை  போன்ற எதிர்வு கூறல்களை விஞ்ஞானிகள் கூட ஏற்றுள்ளனர்.

இது போன்று வானத்திலும் பூமியிலும் படைகள், சூரியன், சந்திரன், கோளங்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றின் ஒழுக்குகள், அவற்றின் சுழற்சிகள், மாறா வேகம் போன்றவை, பாதைகள், பூமியில் உயிரினம் வாழும் வகையில் செம்மைப்படுத்தப்பட்டுள்ள கூற்று போன்றவை விஞ்ஞானம் ஏற்றுக் கொண்ட கருத்துக்களே.  எழுந்தமானமாக மதங்களைப் பிழை எனவும், அதனை வைத்து புகழும், பொருளும் சம்பாதிக்க முயல்கின்றனர் எனக கூறுவதும், குழப்பத்தை உண்டு பண்ணுகின்றனர் எனக் கூறுவதும் பொறுப்பற்ற அடிப்படையற்ற கூற்றே.  நாள் குறிப்பிட்டு உலகம் அழியப் போகின்றது  என்பது பொய் வதந்தி என்பதற்காக ஒட்டுமொத்தமாக அடிப்படையின்றி மதக் கருத்துக்களைச் சாடுவது ஏற்புடைத்தல்ல.

இறைவன் மறுமை நாள் பற்றியும், அண்டசராசரங்களின் அழிவு பற்றியும், பரம்பொருள் ஒற்றே நித்தியமானது, மற்றைய அனைத்தும் அநித்தயமானவை, அழியப் போபவை எனவும் கூறியிருப்பதும், அதற்காக நற்செயல் செய்து ஆன்ம ஈடேற்றத்தைப் பெறுங்கள் என அழைப்பு விடுத்திருப்பது குழப்பததை அறவே நீக்குவதற்காக, மனிதனை நல்வழிப்படுத்துவதற்காக என்பதை உணர வேண்டும்.

விஞ்ஞானம் கூட இந்த அண்டம் ஓர் நாள் அழியப் போகிறது என்ற உண்மையை Theory of Crunch மூலம் வெளியிட்டிருப்பது மேற்கண்ட இறைகூற்றுக்களை ஆதாரப்படுத்துபவையே. இவை ஒன்றும் பெயர் போடுவதற்காகவோ, புகழ் தேடுவதற்காகவோ, பொருள் தேடுவதற்காகவோ, அல்லது குழப்பத்தைப் பயத்தை ஏற்படுத்துவதற்காகவோ எழுதப்படவில்லை. மாறாக இப்பிரபஞ்சத்தின் அழிவை யாராலும் தடுத்து விட முடியாது, ஆதலால், அதன் அழிவுக்கு முன்னர் நன்மையைச் செய்து குழப்பம் ஏற்படுத்தாது, மக்களை ஏமாற்றிப் பிழைக்காது, பொய் வதந்திகளைப் பரப்பாது,  தூய்மையான வாழ்வை மேற்கொண்டு, பிறரை நேசித்து, கொலை கொள்ளைகளில் ஈடுபடாது நன்மையை மட்டுமே செய்து வருமாறே கூறுகின்றது. கவலை, அச்சம் தவிர்த்து, சாந்தி, சமாதானமாக வாழும்படியே கூறுகின்றது.

உலகம் என்றும் அழியாது என்பதற்கு ஆதாரபூர்வமான சாட்சியங்கள், ஆதாரங்கள் கிடையாது என்பதைப்  பொய என் நிரூபிப்பதே அறிவுடமை. தற்போது ஊடகங்களில் கூறப்படுவது போன்று உலக அழிவு ஏற்படப் போதி்லலை. ஆனால் எ்னறோ இந்த வானங்கள், பூமி அழியவே  போகின்றன. இடைப்பட்ட காலத்தில் மனிதன் இறை நிராகரிப்பில் இருந்து விடுபடும் வரை, வருடத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ, நோய்கள், பஞசம், இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றை உலகின் நாலா பக்கங்களுக்கும் அனுப்பி நமமைச் சோதித்துக் கொண்டே இருப்பான் என்பதும் இறைமொழியே!

பாரிஸ் தமிழ் என்ற பெயருடன் இயங்கும் ஊடகம் தமிழைப் பிழையாக எழுதுவது தவிர்க்கப்படுதல் தமிழுக்குச் செய்யும்
மிக உயர்வான சேவை. இன்று இலத்திரணியல் ஊடகங்‌களே தமிழைக் கொலை செய்து கொண்டிருக்கினறன.  ழ,ள,ல கரங்கள், ண,ன,ந கரங்கள், ற,ர கரங்கள், இன்னும், வசனப் பிழைகள், பன்மையில் தொடங்கி ஒருமையில் முடித்தல், கருத்துப் பிழைகள் போன்ற எண்ணற்ற வழுக்கள் காணப்படுகின்றன.

உலக அழிவு 21 டிசம்பர் 2012 எனக் குறிப்பிட்டுவிட்டு நேற்று (12.12.12) உலகம் ஏன்  நேற்று முற்றுப் பெறவில்லை எனக் கேட்பது எந்த அடிப்படை கொண்டது? தாங்கள் கூறியிருப்பது போன்று உலகம் பகுதி பகுதியாக அழியப் போகின்றது என்பதற்கு நீங்கள் கூறும் ஆதாரம் என்ன?

இறைவன் உலகை நாலா பக்கங்களிலும் இருந்து குறைத்துக் கொண்டு வருகின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? என அறைகூவல் விடுத்துள்ளான். உண்மையில் இன்று கடலரிப்பால் நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டு போவதை  சிறுவரும் கூட ஏற்றுக் கொள்வர். கடற்கரையை அண்டிய பகுதிகளைப் பார்வையிடுவதன் மூலம் அல்லது அங்கு வாழ்வோரிடம் கேட்பதன் மூலம் இவ்வுண்மையை அறிந்து கொள்ளலாம்.

Wednesday, December 12, 2012

Paristamil Tamil News - 2030ம் ஆண்டில் ஆசியா முந்தும்: கவலையடைகிறது அமெரிக்கா

Paristamil Tamil News - 2030ம் ஆண்டில் ஆசியா முந்தும்: கவலையடைகிறது அமெரிக்கா


தரமான சிந்தனைகளைக் கொண்டோர் இன்னொருவரின் வளர்ச்சி கண்டு கவலையுறவோ, திடுக்கமுறவோ தே‌வையில்லை.  தாமும் அவற்றிற்கு நிகராக உயர்வதென்ற சீனாவின் கொள்கையையாவது பின்பற்றலாமே!

இத்தனை காலமும் மேற்கு நாடுகள் உலகில் ஆதிக்கம் செலுத்திய போது ஆசிய நாடுகள் அமைதியாக தம்மை உயர்த்திக் கொள்வதிலதானே ஈடுபட்டிருந்தன. அதன் பயனைத்தானே 2030இல் அவை அனுபவிக்கப் போகின்றன!

Tuesday, December 11, 2012

Paristamil Tamil News - 12-21-12 உலகம் அழியப்போவது இல்லை இது உறுதி - விடியோ இணைப்பு

Paristamil Tamil News - 12-21-12 உலகம் அழியப்போவது இல்லை இது உறுதி - விடியோ இணைப்பு


உலகம் அழியாது என்று கூறுவதை ஏற்க முடியாது. ஆனால், இந்த பிரபஞ்சமே ஓர் நாள் அழியத்தான் போகின்றது. அது எ்பபோது   என்பது யாருக்கும் தெரியாத, தெரிந்து கொள்ள முடியாத ஒரு இரகசியம். இது இறைவனைத் தவிர எவருக்கும் தெரியாது என்பதை உலகின் இரு பெரும் மதக் கிரந்தங்களான புனித பைபிளு்ம், புனித குர்ஆனும் எடுத்துரைததுக் கொண்டிருக்கின்றன.

இந்த பூமியும், வானங்களும், அனைத்தும் ஒன்றோ ஓர் பொழுதில் அழியத்தான் போகின்றது. அது இந்த ஷணமாகக் கூட இருக்கலாம். அல்லது எப்போதாவதாக இருக்கலாம் என்பதே உண்மை.

Big bang theory கூறும் Theory of Crunch இன்படி மிக வேகமாக பயணித்து விரிவடைந்து கொண்டிருக்கும் இப்பிரபஞ்சம் கண்ணுக்குத் தெரியாத அளவு சிறிய ஒன்றாக மாறி முற்றாக மறைந்து விடும் என்பதே. இதனை நிரூபிக்கக் கூடியதாக அல் குர்ஆன் வசனம் And it is We Who have constructed the heaven with might, and verily, it is We Who are steadily expanding it. (Qur'an, 51:47) அமைந்துள்ளது.

தற்போது மேற்கண்ட இரு கூற்றுக்களை உண்மைப்படுத்துவதாக அமைந்துள்ளது 'Tachon' என்ற Hypothetical particle that travels  faster than the light travels.  அதாவது ஒளியின் வேகமான மணிக்கு 186000 மைலை விட வேகமாகப் பயணித்துக் கொண்டிருக் கின்றது என்ற விஞ்ஞான உண்மை. குறிப்பிட்ட வேகத்துக்கு அதிகமாக செல்லும் எதனையும் நாம் பார்த்துக் கொள்ள முடியாது என்பது ஒரு புறம், மறுபுறமாக அவை விரிவடைந்து அழிவைச் சந்திக்கும்.

மேலதிகமான தகவல்களை http://miraclesofthequran.com/scientific_03.html என்ற இணைய தளத்தில் காணலாம்.

Saturday, December 8, 2012

Paristamil Tamil News - இரா.சம்பந்தன் தமிழின விரோதியா? துரோகியா?

Paristamil Tamil News - இரா.சம்பந்தன் தமிழின விரோதியா? துரோகியா?


அன்பான ஆசிரியர் அவர்களுக்கு,

வாசகர்களுக்குத் தமது கருத்தை எழுதும் உரிமை மட்டும் உண்டே தவிர, தனியாள் விமர்சனங்கள், தரக்குறைவான வார்த்தைகள் பாவிக்கும் உரிமைகள் இல்லை என்பதை நீங்கள் அறிவிக்க வேண்டும்.

கருத்துச் சுதந்திரம் அடுத்தவரைக் காயப்படுத்தும் சுதந்திரமாக மாறுவது ஊடக கலாச்சாரத்துக்கு உகந்ததல்ல.

Paristamil Tamil News - 'பைத்தியக்காரியான' சிறிலங்காவின் தலைமை நீதியரசர்

Paristamil Tamil News - 'பைத்தியக்காரியான' சிறிலங்காவின் தலைமை நீதியரசர்


ஒரு நாட்டின் பிரதம நீதியரசரை விசாரிப்பதற்கான தகுதியாக பாராளுமன்ற அங்கத்தவராக இருப்பதோ, ஒரு கட்சியின தலைவராக‌ இருப்பதோ போதாது..

அதற்கு மேலும் சில தகுதிகள் வேண்டப்படும் என்பது சாதாரண கணிதம். அதுவே பிரதம நீதியரசரசரின் வெளி‌யேற்றதத்துக்குக் காரணமான நிலையை  ஏற்படுத்தி இருந்திருக்கும்.

இந்த நாட்டின் கௌரவம் காப்பாற்றப்படல் வேண்டும். அதன் கௌரவத்துக்கு இழுக்கை ஏற்படுத்தும் எதுவாயினும், எவராயினும் கண்டிக்கப்பட, தண்டிக்கப்பட வேண்டியவைகளே!