Thursday, December 13, 2012

Paristamil Tamil News - உலகம் ஏன் நேற்று அழியவில்லை - நாசா வீடியோ இணைப்பு

Paristamil Tamil News - உலகம் ஏன் நேற்று அழியவில்லை - நாசா வீடியோ இணைப்புமதங்கள் முட்டாள் தனமாக்க் கூறியிருக்கின்றன என பொறுப்பான பத்திரிகை என்ற ரீதியில் எழுதுவது உங்கள் அறியாமையை மட்டுமே வெளிப்படுத்தும்.  அறிவாளர்கள் அன்றி இறை வசனங்களை அறிந்து கொள்ளமாட்டார்கள் என்ற இறைமொழிக்கேற்ப, இன்று விஞ்ஞானிகளே இறைகருத்துக்களை உண்மையென ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இறைமொழிகளில் காணப்படும் எத்த‌னையோ எதிர்வுகூறல்கள், கருத்துக்கள் தற்போது நிதர்சனமாகக் காணக் கூடியதாகவும், விஞ்ஞான ரீதியில் ஏற்கப்பட்டதாகவும் உள்ளன. அவற்றிற் சிலவற்றை இங்கு பதிவது இறைவசனங்களின் உண்மைத் தன்மையை விளங்கிக் கொள்ள உதவும்.

இருகடல்களுக்கு இடையில் நாம் கண்ணுக்குத் தெரியாத தடை‌யொன்றை ஏற்படுத்தியுள்ளோம். அவை அதனை மீறுவதில்லை. ஒன்று மதுரமாகவும் மற்றையது கசப்பாகவும் இருக்கும் இது இறை மொழி. சென்ற நூற்றாண்டில் கடலாய்வாளர்கள் நீண்ட கால ஆராய்ச்சிக்குப் பின்னர் கடலில் கண்ணுக்குத் தெரியாத தடையொன்று உள்ளது, அதுபோன்று நீரின் தன்மைகளிலும் ஒவ்வொரு கடல்களுக்கிடையிலும் வேறுபாடுகள் காணப்படுவதாகவும். அவை கடற் சந்திப்பின் போது மாறிவிடுவதில்லை போன்ற உண்மைகளைக் கண்டு இறை கருத்துக்கள் உண்மைதான் என ஏற்றும் உள்ளனர்.

மேலும்,  மோஸஸ் காலத்தில் எகிப்திய பேரரசன் பாரோ, மோஸேஸால், இறைவல்லமை‌யுடன் பிளக்கப்பட்ட கடலில் மூழ்கடிக்கப்பட்ட நிகழ்வு  பைபிளிலும், குர்ஆனிலும் பதிவாகியுள்ளது.  மேலும், குர்ஆனில், அப்படி மூழ்கடிக்கப்பட்ட பாரோ மன்னனின் உடலை உலக மக்களின் படிப்பினைக்காக தாம் பாதுகாப்போம் எனக் கூறப்பட்டுள்ளது. மேற்கண்ட இறைமொழி, சென்ற   நூற்றாண்டில் பாரோவின் இறைவனால் பாதுகாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் உடல்    ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது எகிப்தின் கெய்ரோ புதைபொருள் மையத்தில் வைக்கப்பட்டுள்ளதன் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

இன்னும், நோவா காலத்து ஜலப்பிரளயத்தில் உபயோகிக்கப்பட்டதாக நம்பப்பபடும் கப்பல் தற்போது மலை உச்சியில் காணப்படுவது கண்டுபிடிக்கப்ட்டுள்ளது. இந்தச் செய்தி புனித குர்ஆனில் அக்கப்பல் ஜூதி எ்னற  மலை முகட்டில் வைக்கப்பட்டுள்ளதாகக் கூறியிருக்கின்றது. இவை  போன்ற எதிர்வு கூறல்களை விஞ்ஞானிகள் கூட ஏற்றுள்ளனர்.

இது போன்று வானத்திலும் பூமியிலும் படைகள், சூரியன், சந்திரன், கோளங்கள், நட்சத்திரங்கள் போன்றவற்றின் ஒழுக்குகள், அவற்றின் சுழற்சிகள், மாறா வேகம் போன்றவை, பாதைகள், பூமியில் உயிரினம் வாழும் வகையில் செம்மைப்படுத்தப்பட்டுள்ள கூற்று போன்றவை விஞ்ஞானம் ஏற்றுக் கொண்ட கருத்துக்களே.  எழுந்தமானமாக மதங்களைப் பிழை எனவும், அதனை வைத்து புகழும், பொருளும் சம்பாதிக்க முயல்கின்றனர் எனக கூறுவதும், குழப்பத்தை உண்டு பண்ணுகின்றனர் எனக் கூறுவதும் பொறுப்பற்ற அடிப்படையற்ற கூற்றே.  நாள் குறிப்பிட்டு உலகம் அழியப் போகின்றது  என்பது பொய் வதந்தி என்பதற்காக ஒட்டுமொத்தமாக அடிப்படையின்றி மதக் கருத்துக்களைச் சாடுவது ஏற்புடைத்தல்ல.

இறைவன் மறுமை நாள் பற்றியும், அண்டசராசரங்களின் அழிவு பற்றியும், பரம்பொருள் ஒற்றே நித்தியமானது, மற்றைய அனைத்தும் அநித்தயமானவை, அழியப் போபவை எனவும் கூறியிருப்பதும், அதற்காக நற்செயல் செய்து ஆன்ம ஈடேற்றத்தைப் பெறுங்கள் என அழைப்பு விடுத்திருப்பது குழப்பததை அறவே நீக்குவதற்காக, மனிதனை நல்வழிப்படுத்துவதற்காக என்பதை உணர வேண்டும்.

விஞ்ஞானம் கூட இந்த அண்டம் ஓர் நாள் அழியப் போகிறது என்ற உண்மையை Theory of Crunch மூலம் வெளியிட்டிருப்பது மேற்கண்ட இறைகூற்றுக்களை ஆதாரப்படுத்துபவையே. இவை ஒன்றும் பெயர் போடுவதற்காகவோ, புகழ் தேடுவதற்காகவோ, பொருள் தேடுவதற்காகவோ, அல்லது குழப்பத்தைப் பயத்தை ஏற்படுத்துவதற்காகவோ எழுதப்படவில்லை. மாறாக இப்பிரபஞ்சத்தின் அழிவை யாராலும் தடுத்து விட முடியாது, ஆதலால், அதன் அழிவுக்கு முன்னர் நன்மையைச் செய்து குழப்பம் ஏற்படுத்தாது, மக்களை ஏமாற்றிப் பிழைக்காது, பொய் வதந்திகளைப் பரப்பாது,  தூய்மையான வாழ்வை மேற்கொண்டு, பிறரை நேசித்து, கொலை கொள்ளைகளில் ஈடுபடாது நன்மையை மட்டுமே செய்து வருமாறே கூறுகின்றது. கவலை, அச்சம் தவிர்த்து, சாந்தி, சமாதானமாக வாழும்படியே கூறுகின்றது.

உலகம் என்றும் அழியாது என்பதற்கு ஆதாரபூர்வமான சாட்சியங்கள், ஆதாரங்கள் கிடையாது என்பதைப்  பொய என் நிரூபிப்பதே அறிவுடமை. தற்போது ஊடகங்களில் கூறப்படுவது போன்று உலக அழிவு ஏற்படப் போதி்லலை. ஆனால் எ்னறோ இந்த வானங்கள், பூமி அழியவே  போகின்றன. இடைப்பட்ட காலத்தில் மனிதன் இறை நிராகரிப்பில் இருந்து விடுபடும் வரை, வருடத்திற்கு ஒரு முறையோ இரு முறையோ, நோய்கள், பஞசம், இயற்கை அனர்த்தங்கள் போன்றவற்றை உலகின் நாலா பக்கங்களுக்கும் அனுப்பி நமமைச் சோதித்துக் கொண்டே இருப்பான் என்பதும் இறைமொழியே!

பாரிஸ் தமிழ் என்ற பெயருடன் இயங்கும் ஊடகம் தமிழைப் பிழையாக எழுதுவது தவிர்க்கப்படுதல் தமிழுக்குச் செய்யும்
மிக உயர்வான சேவை. இன்று இலத்திரணியல் ஊடகங்‌களே தமிழைக் கொலை செய்து கொண்டிருக்கினறன.  ழ,ள,ல கரங்கள், ண,ன,ந கரங்கள், ற,ர கரங்கள், இன்னும், வசனப் பிழைகள், பன்மையில் தொடங்கி ஒருமையில் முடித்தல், கருத்துப் பிழைகள் போன்ற எண்ணற்ற வழுக்கள் காணப்படுகின்றன.

உலக அழிவு 21 டிசம்பர் 2012 எனக் குறிப்பிட்டுவிட்டு நேற்று (12.12.12) உலகம் ஏன்  நேற்று முற்றுப் பெறவில்லை எனக் கேட்பது எந்த அடிப்படை கொண்டது? தாங்கள் கூறியிருப்பது போன்று உலகம் பகுதி பகுதியாக அழியப் போகின்றது என்பதற்கு நீங்கள் கூறும் ஆதாரம் என்ன?

இறைவன் உலகை நாலா பக்கங்களிலும் இருந்து குறைத்துக் கொண்டு வருகின்றான் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? என அறைகூவல் விடுத்துள்ளான். உண்மையில் இன்று கடலரிப்பால் நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டு போவதை  சிறுவரும் கூட ஏற்றுக் கொள்வர். கடற்கரையை அண்டிய பகுதிகளைப் பார்வையிடுவதன் மூலம் அல்லது அங்கு வாழ்வோரிடம் கேட்பதன் மூலம் இவ்வுண்மையை அறிந்து கொள்ளலாம்.

No comments: