Friday, July 5, 2013

தங்கள் ரப்பினிடத்தில் தாங்கள் நாடியதைப் பெறுவோர்....

Fu;Md; topapy; 

தங்கள் ரப்பினிடத்தில் தாங்கள் நாடியதைப் பெறுவோர்....

அல் குர்ஆன் 39: 33 - மேலும் உண்மையைக் கொண்டு வந்தவரும், அதனை உண்மைப்படுத்தி வைத்தவர்களும், அத்தகையவர்கள்தாம் பயபக்தி யாளர்கள்

அல்குர்ஆன் 39:34- அவர்களுக்குத் தங்கள் ரப்பிடத்தில் அவர்கள் நாடியவை உண்டு. அது நன்மை செய்கிறவர்களுக்குரிய கூலியாகும்.

இரண்டாவது கூறப்பட்ட  ரப்பிடத்தில் நாடியவற்றை பெற்றுக் கொள்வோர்முதலாவதாகக் கூறப்பட்ட பயபக்தியாளர் என்பதும். அந்த பயபக்தியாளர் யாவர் எனின், அவர்கள்உண்மையைக் கொண்டு வந்தவரும், அதனை உண்மைப்படுத்தி வைத்தவர்களும்’ எனக் கூறுகின்றதுமொத்தத்தில் பயபக்தியாளர் எனக் குறிப்பிடுவதோடு நிறுத்தி விடாமல், அல்லாஹ்,   “உண்மையைக் கொண்டு வந்தவரும்அதனை உண்மைப்படுத்தி வைத்த வர்களும்எனக் கூறியிருப்பது ஈண்டு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது.

இவ்வசனம்,  பொதுவாக எவ்விடத்திற்கும் பொருந்துமாக இருந்தாலும், சிறப்பாக, உண்மை என்பது, அல்லாஹ்வின் உண்மைகளைக் கொண்ட அல் குர்ஆனையும், அதனைக்  கொண்ர்ந்தவர் என்பது நமது கண்மணி நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்களையும். அதனை வெளிப்படுத்தி வைத்தவர்கள் என்பது,அவனது அந்த வேதத்தை உண்மைப் படுத்திக் கொண்டிருக்கும் அவனது உம்மத்துக்களையும் குறிக்கும்.

நம்முன் தற்போது எழுந்துள்ள கேள்வி, நாம்தான் குர்ஆனை ஏற்றுக் கொண் டுள்ளோமே, அதனால்தானே நம்பிக்கை கொண்டுள்ளோம், அப்படியானால் உண்மைப்டுத்துவோர் என்பது என்ன கருத்தில் கூறப்படடுள்ளது?  எவ்வாறு உண்மைப்படுத்துவோராவது? போன்றவற்றை அறிய வேண்டியது நமது தேவையாகின்றது. இத்தேவை, முழுமையாக நமது சுயநலத்தை அடியாகக் கொண்டும் உள்ளது. காரணம் நாம் நினைத்தவை நமக்குக் கிடைக்கும் வழியில் மிக இலகுவாக அறிந்து செயற்படுத்தக் கூடிய ஒரு சாதனமாக இது இருப்பதே!

உண்மைப்படுத்துவது என்பதை நடைமுறைப்படுத்தல் என்ற வரையறைக்குள் அடக்கலாம் என்றால்அது முழுமையான நடவடிக்கையாக அமையாது என்பதே எனது தாழ்மையான கருத்து. அது நடைமுறைப்படுத்தப்பட்டு சரியானஅதனால் எதிர்பார்க்கப்படும் பயனை அடைவதே உண்மைப்படுத் தலின் சரியான விளக்கமாக அமையும்.

இதனை உதாரணம் மூலம் விளக்குவதாயின், நம்மிடம் ஒரு சிறந்த பயன் தரக்கூடிய தாவரத்தின் விதை ஒன்று தரப்பட்டுள்ளது. அதனை நாம் பெற்று அதில் கூறியபடி அனைத்தையும் செய்து நட்டு விட்டோம். அதற்குரிய நீரைப் பாய்ச்சுகிறோம். பசளை  இடுகின்றோம். காவல்கூடக் காக்கின்றோம் என வைத்துக் கொள்வோம். அதனால் அவ்விதை குறிப்பிட்ட ஒரு காலக்கெடுவில் முளைத்திருக்க வேண்டும். சரி முளைத்து விட்டது எனவும் வைத்துக் கொள்வோம், ஆனால் அது குறிப்பிட்ட காலத்தில், அல்லது குறிப்பிட்ட அளவில், அல்லது தன்மையில் எதிர்பார்க்கப்பட்ட பலனைத் தரவில்லை எனின் நமது, செய்கைகள் அனைத்தும் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டியவையே!

இவ் விதையை நடும்  விடயத்தை அறிந்துஅதன்படி நடந்துள்ளோம். ஆனால் உண்மைப்படுத்திக் கொள்வதில் சில தங்கடங்கள் நிகழ்ந்துள்ளன. அவை களை மீள்பரிசோதனை, அல்லது ஆக்கபூர்வமான விமர்சனம் ஒன்றின் மூலம் கண்டறிந்து, உண்மைப்படுத்துவான் வேண்டி காரியமாற்ற வேண்டும். அப்போதுதான் எதிர்பார்க்கப்படும் பலன் கிடைக்கும்இங்கு நாம் 'நாடியது உண்டு' என்பதற்கு வரைவிலக்கணம் தேவையில்லை என நினைக்கிறேன்

ஆத்மிக ரீதியில் ஆயின்நாம் நாடுவது எப்போதும், சொர்க்க வாழ்வும், இறை நெருக்கமாகவுமே இருக்கும். சொர்க்க வாழ்வு கொடுக்கப்பட்டோருக்கு, 'தாம் விரும்பியது உண்டு' என்பதும் இறைவாக்கே!

லௌகிக வாழ்வில் ஆன்மீக நன்மைகளாக நாம் நாடுவனவற்றைப் பெற இறைவனின் வேண்டுளையே நிறைவேற்ற வேண்டியுள்ளது. உதாரணமாக, அந்த அடைவை எப்படி தர்மத்தின்> ஸக்காத்தின் மூலம் பெறலாம் என ஆராய்வோம். தர்மத்தை, ஸக்காத்தைப் பெற உரித்துடையவராகக் கூறப்பட் டுள்ள விடுபடுபவர்’ என்பதை எடுத்துக்கொண்டால், அக்காலை அடிமை கள்தான் நமது நினைவுக்கு வருகின்றர். ஆயினும், குர்ஆன் அடிமைகளற்ற காலத்தில் செயற்படுத்த முடியாத நிலையை அடையும் மார்க்கமல்ல இஸ்லாம் என்ற ரீதியில் சிந்திக்கும் ஒருவர், விடுபடல் என்ற வார்த்தை பரந்துபட்ட கருத்துக்களை உள்ளடக்கியுள்ள தன்மையைக் காண்பர்.

தொழிலின் அடிப்படையில் ஓர் ஒப்பந்தம் ஒன்றிற்குள் கட்டுப்பட்டு, தற்போது விடுபட முடியாத நிலையில் இருப்பவர். வியாதிக்குரிய வைத்தியம் செய்வ தற்கும் அதிலிருந்து விடுபடவும் முடியாத பொருளாதார பிடியில் இருப்போர். தொடங்கிய படிப்பை பணமுடை காரணமாக இடைநடுவில் விட வேண்டிய இடரில் இருந்து விடுபட்டு தனது படிப்பைத் தொடர வேண்டியவர் எனப் பலவாறாகப் பார்க்கலாம். ஆக நமது தர்மம், ஸக்காத் இவர்களுக்குச் சென்று அல்லாஹ்வின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வதன் மூலம், அவனது வசனங் களை உண்மைப்படுத்துவதாகக் கொள்ளலாம். அது போன்றே கடனாளிகள் விடயமும்.

உதாரணமாக, அடுத்து,  நமது சொத்தில் இரப்போருக்கும்இரவாதோருக்கும், ஏழைகளுக்கும் பங்கு உண்டு என்ற அருள் மறை வசனம். இதனை தர்மமாக, ஸக்காத் ஆக கருதிவிட முடியாது. பங்கு என்பது,  நமது சொத்தில் அவர்களது உரித்தை உள்ளடக்கியது. தர்மம், ஸக்காத், குர்ஆன் பரிந்துரைத்தவர்களில் நாம் விரும்பிய ஒருவருக்கோ. பலருக்கோ கொடுப்பது. இது நமது கடமையே தவிர. பெறுபவர்களது உரிமையல்ல
       
நமது சொத்தில் பங்கு என்பது குறித்துரைக்கப்பட்டவர்களின் உரிமை. சொத்தில் பங்கு உண்டு என்ற வசனம், சொத்திலுள்ள வருவாயையும் தன்ன கப்படுத்தி நிற்பதை நாமறியலாம்ஆதலால். நமது சொத்தின் வருவாயில் ஒரு பகுதிக்குக் கூட மேற்கண்டோர் பங்காளிகளாக இருக்கின்றனர் என்பது தெளிவு. இப்போது நம்மை நாம் விமர்சனம் செய்வோமாயின், அல்லது நமது செயற்பாட்டை மீள்பார்வை செய்வோமாயின் நாம் இறை கூற்றை உண்மைப் படுத்தி வைக்கவில்லை என்பது  தானாகவே வெளிப்படுவதை அறியலாம்.

ஒரு உண்மை புறக்கணிக்கப்பட்டதால், அல்லது மறைந்து கிடப்பதால். அல்லது உரியவர்களுக்கு உரிய பொழுதில் கிடைக்காமையினால், அநீதி ஒன்று நிகழ்ந்திருக்கலாம். அச்சந்தர்ப்பத்தில் அவ்வுண்மையை வெளிக் கொணர்ந்து அதனால் பெறப்பட வேண்டிய நன்மையை உரியவர் அடை வதற்கு வழிசமைத்துக் கொடுத்தலைக் கூறலாம். இது உலகியல் சம்பந்தப் படுவது, ஆயினும் இறைவனது இவ்வெகுமதியையும் பெற்றுக் கொடுப்பது. இதனைச் சட்டத்துறையில்கூட நாம் இணைத்துப் பார்க்கலாம். வக்கீல் உண்மையைக் கொணர்ந்தவராகவும், நீதிபதி அதனை உண்மைப்படுத்தி வைத்தவராகவும் கொள்ளும் போது அவர்களும் இந்த அடைவுக்குப் பொருத்த மானவர்களாக அமைந்து விடுகின்றனர்.
     
இன்னொன்றையும் உதாரணமாகக் கூறி ஆக்கத்தை நிறைவு செய்கிறேன். அதாவது நமது கடமையான தொழுகை. அல்லாஹ்வை நினைவுகூர்வதற்காக நமக்குக் கடமையாக்கப்பட்டது. தொழுகையை நிறைவேற்றுதல்> பேணி வருதல்> நிலை நிறுத்தல் போன்றவையின் மூலம் வலியுறுத்தப்படும் ஆத்மீக அடைவான அல்லாஹ்வை நினைவு கூர்தலில் நாம் வெற்றி பெறவில்லை என்றால். அவ்வசனத்தை உண்மைப்படுத்தியவர்களாக  நாம் ஆகமாட்டோம் என்பது மட்டுமல்ல, மாறாக, அவனது தொழுகையாளிகளுக்குக் கேடுதான், என்ற சாபத்துக்கும் உள்ளாகி விடுகின்றோம். இதனை சாபமாகக் கருதா விடினும் கூட தொழுகையால் பெற வேண்டிய பலனைப் பெறாத போது, கேடுதானே எஞ்சி நிற்கின்றது.

இறுதியாக மேற்கண்ட வசனத்தில், 'அது நன்மை செய்கிறவர்களுக்குரிய கூலியாகும்' எனக் குறிபட்டுள்ளமை, அந்த நாடியவை உண்டு என்ற அல்லாஹ்வின் அருட்கொடை நன்மை செய்கிறவர்களுக்காக அவனால் நியமிக்கப்பட்ட ஒன்று என்பது தெரிய வருகின்றது. இன்னும் ஒரு வகையில். உண்மைப்படுத்தி வைக்கும் செயலும் நன்மையின் பாற்பட்டது என்ற பொருளையும் தந்து நிற்கின்றது. எப்படியோ. நாடியவை உண்டு என்ற அளப்பரிய அருட்கொடை. உண்மைப்படுத்தி வைப்பவர்களுக்கும், நன்மை செய்கிறவர்களுக்கும் உரியதாகின்றது

-     நிஹா

கொழும்பு> 2013.07.05.    

No comments: