Monday, July 15, 2013

இது உங்களது அமைப்புக்கு அவமரியாதை அல்லவா?

Commented by nizamhm1944 on:   http://tinyurl.com/n8v3fyv

Lankamuslim.org
One World One Ummah

இது உங்களது அமைப்புக்கு அவமரியாதை அல்லவா?


// இப்போது யுத்தம் நிறைவடைந்து விட்டது. அனைத்து   இன மக்கள் மத்தியில் சுமூகமான   நிலைமையை உருவாக்கி மக்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும்.//  தேரர் கூறும் அனைத்து இன மக்கள் மத்தியில் சுமுகமான நிலையை உருவாக்க வேண்டும் என்று எப்போதாவது, தேரர் ஆர்ப்பாட்டம் செய்ததுண்டா? மாறாக, புலிகளின் அழிவிற்குப் பின்னர் சிறிது சிறிதாக மக்கள் மத்தியில் உருவாகிக் கொண்டிருந்த சுமுக நிலையை குழப்பியடித்து, இன, மத விரோதக் கருத்துக்களை அப்பாவி சிங்கள மக்கள் மத்தியில் தூவி, சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்களையும், ஆர்பாட்டங்களயைும் நடத்தி, நாட்டில் குழப்பத்தை அல்லவா ஏற்படுத்தின் கொண்டிருக்கின்றார். 

ஒரு மதபோதகர், துறவி என்ற ரீதியில் செய்ய வேண்டிய விடயங்களா தேரர் செய்தவை. அரசியல்வாதிகளைவிட, ஏறத்தாழ கடையர்கள் கடைப்பிடிக்கும் செயற்திட்டங்களை அல்லவா நிறைவேற்றிக் கொண்டிருந்தனர்.  அத்துமீறல், அடாவடித்தனம், சட்டத்தைத் துச்சமாக மதித்தல், யாப்பை மிதிப்பது போன்ற அறிக்கைகளும், செயற்பாடுகளும், எரிப்புகள், தகர்ப்புகள், சண்டித்தனம், தரமற்ற வார்த்தைப் பிரயோகங்கள், பொய்கள் எனப் பட்டியலை நீட்டிக் கொண்டல்லவா இருந்தனர். 

புத்த மதத்தைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டில் காணப்படக் கூடாத மது, மாது. சூது போன்றவைகட்கு எதிராக எப்போதாவது கூக்குரலிட்டது உண்டா! மாற்று மதத்தவர் உரிமைகளுக்கு இடம் கொடுக்கக் கூடாது, அவர்களின் உரிமைகளில் குறுக்கீடும், தடையும் ஏற்படுத்த வேண்டும் என்று புத்த தர்மம் போதித்துள்ளதா!

ஆனால், முஸ்லிம்கள் அந்நியர்களுக்கு பொருட்களை விற்கும் போது, மூன்று முறை  துப்பிய பின்னரே விற்க வேண்டும் என கு்ர்ஆன் கூறியுள்ளதாகவும், அதன்படியேதான் முஸ்லிம் வியாபாரிகள் பொருட்களை விற்றுக் கொண்டிருக்கின்றனர் என பகிரங்க மேடையில் கூறி மக்களை ஏமாற்றினாரே இந்த தேரர். அவருக்கு அவர் கூறியதை நிரூபிக்க முடியுமா” அன்றேல், அவர் அவருடைய மதம் தடை செய்துள்ள பொய்யைப் பகிரங்கமாகக் கூறியதுடன்,  தனது மக்களையும் வழிகெடுத்து, அந்நிய மதத்தவர் மேலும் அபாண்டம், அவதூறு களங்கம் ஏற்படுத்தியமைக்கு என்ன கூறப் போகிறார்? 

இந்த நிலையில் அரசியல்வாதிகளை விமர்சிக்க முனையும் இவரது பொறுப்பு எத்தகையது? // இந்நாட்டு அரசாங்கம் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை.//  தேரர் இக்கூற்றை வெளியிட தேரரிடம் என்ன ஆதாரம் உள்ளது! எங்கிருந்து இத்தகவலைப் பெற்றார்?  இக்கூற்றும், முன்னைய பொய்களின் வரிசையில் இணைந்து கொண்ட இன்னொரு பொய்யா? புரட்டா? 

No comments: