இலங்கை முஸ்லிம்களின் உரிமைகளும் கடமைகளும்
ஓர் போஸ்ட்மோட்டம் (
post-mortem)
இலங்கை
முஸ்லிம்களிடம் காணப்படும் சிந்தனையில் மாற்றம் தேவை. நாமும் இந்நாட்டுப்
பிரஜைகளே! இந்நாட்டின்
பெரும்பான்மையினருக் குள்ள அதேயளவு உரிமைகள்
நமக்கும் உண்டு.
இன்னும் சொல்லப்
போனால், மற்றைய
இனங்களை விட
நாம் இந்நாட்டுக்கு
விஸ்வாசமாக நடந்துள்ளோம்.
சிங்களவரும்,
தமிழரும் கூட
இந்நாட்டில் புரட்சி, உரிமை என்ற பெயர் களில்
இரத்த ஆறை
ஓட வி்ட்டுள்ளனர்.
ஆனால் நாம்
என்றும் இந்நாட்டின்
அரசியல் யாப்புக்கெதிராக
கிளர்ந்தெழுந்த தில்லை. நமக்குப் பிரச்சினை
கள் ஏற்பட்ட போதெல்லாம் பேச்சு
வார்த்தை மூலமும்,
நீதிமன்றின் மூலமும் அவற்றைத் தீர்த்துக் கொண்டு
சிங்கள, தமிழ்
மக்களோடு சகஜீவன
வாழ்வை மேற்கொண்டு
வந்துள்ளோம்.
நமக்குப்
பிரச்சினைகள் ஏற்படுத்தப்பட்ட போதெல்லாம்
நாம் மற்றைய
இனங்களைக் குற்றம்
கூறவோ, திட்டித்
தீர்க்கவோ இல்லை. மாறாக அதில் ஈடுபட்டவர்களின்
செயல்களை மட்டும் நியாயமான முறையில்
கண்டித்துள்ளோம். அவர்களுடன் அதற்காக என்றும் பகைமை
பாராட்டிய தில்லை. இது இந்நாட்டு முஸ்லிம்களின்
பாரம்பரியம்.
ஆனால்
அண்மையில் நமக்கும்,
நமது வழிபாட்டு
நிலையங்களுக்கும், சில மத அனுஷ்டானங்களுக்கும் சில மதவிரோத சக்திகளால் பல்
வகையில் பிரச்சினைகள்
உருவாக்கப்பட்ட போது, சிறந்த முறையில் அதனை
அணுகவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.
அல்லது அணுகும் சந்தர்ப்பங்கள் அற்றுப் போயிருந்ததாகவே
நினைக்க வேண்டியுள்ளது.
1. பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கலாம்
என்ற பொறிமுறையைக்
கையாள நம்மிடம்
சரியான தலைமைத்துவம்
இருக்கவில்லை.
2. பேசக்கூடிய நிலையில் ஸ்தாபன ரீதியாக
இயங்கிக் கொண்டிருந்த
அகில இலங்கை
ஜம்இய்யத்துல் உலமா ஹலால் முத்திரை என்ற
பொறியில் தள்ளப்பட்டு,
குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட்டிருந்தது.
அதனால், அச்சபைக்கு
முஸ்லிம்களின் பிரச்சினையில் தலையிடுவதற்கு
மேலாக, தன்னைக்
காப்பாற்றிக் கொள்ளும் பாரிய பொறுப்பை நிறைவு
செய்யும் வழிவகைகளில்
நியாயங்களைத் தேட வேண்டிய நிலையில் இருந்தது.
அத்துடன்
அது பேச்சுவார்த்தை நடத்தும் சக்தியை இழந் திருந்தது.
குற்றம் சுமத்தப்பட்டவர்கள்
எப்படி ஒரு
இனத்துக்காகப் பேச முடியும்? அதனால்,
இறுதியில் யாருடைய வேண்டுகோளுக்காகவோ ஆரம்பிக்கப்பட்டது என்ற உண்மையை மொட்டையாகப் போட்டுடைத்து,
மிகுதியை நம்மீது
பாரத்தைப் போட்டு,
நமக்கு சில
ஆலோசனைகளை வழங்குவதன்
மூலம் தன்னைக்
காத்துக் கொண்டது.
3. அடுத்து,
மேற்கண்ட அஇஜஉ
வுக்கெதிரான குற்றச்சாட்டு, இஸ்லாத்துக்
கெதிரான, முஸ்லிம்களுக்
கெதிரான குற்றச்சாட்டாக
திரிபுபடுத்தப்பட்டு விட்டதால், முஸ்லிம்கள்
கூட பேசும்
சக்தியை இழந்து,
தம்மை இந்த
அபாயத்தில் இருந்து காப்பாற்றிக் கொள்ளும் வழியில்
அங்கலாய்த்துக் கொண்டிருந்தனர்.
4. அடுத்து முஸ்லிம்கள், தமது முஸ்லிம்
அரசியல்வாதிகளை நம்பினர். அவர்கள் பாவம், அவர்களால்
தமது பதவிகளைத்
தக்க வைத்துக்
கொள்ளும் வேலைகளைச்
செய்ய வேண்டிய
நிலையில் இரண்டாவது
இடத்தையே முஸ்லிம்களின்
பிரச்சினைக்கு வழங்கினர். அல்லது தமது பதவிகளைத்
தக்க வைத்துக்
கொள்வதற்காக நம்மைப் பலிக்கடாவாக் கினர்.
சிலர் நடைபெற்ற
அக்கிரமங்களை மறைத்தும் வேறு வகைகளி லும் வெளிப்படையாகவே
வக்காலத்து வாங்கி நியாயப்படுத்த முனைந் தனர். சிலர்
தடிக்கும் நோகாமல்
பாம்பும் சாகாமல்
தமது சாணக்கியத்தை
வெளிப்படுத்தினர்.
5. இறுதியாக
கட்சி பேதமின்றி மேதகு ஜனாதிபதியுடன் நடத்திய
பேச்சு வார்த்தையில்,
இனிமேல் முஸ்லிம்களுக்கு
எதிராக எதுவும்
நடைபெறு மானால், அது சட்டத்தின் மூலம் கட்டுப்படுத்தப்படும்
என்ற உறுதி
மொழியைப் பெற்றனர்.
இதன் மூலம்
நடந்தவைகள் அனைத்தும் தண்ட னைகளில் இருந்து விலக்கப்பட்டன.
நடந்தவைகட்கு சட்டத்தின்
மூலம் நடவடிக்கை
எடுக்காமல் முஸ்லிம் தலைவர்கள் வாளாவிருந்ததை மிக
நுட்பமாக ஜனாதிபதி
வெளிப்படுத்தினாரா?
6. எல்லாவற்றுக்கும் மேலாக, முஸ்லிம்களும், அஇஜஉவும்,
அரசியல் வாதிகளும்,
ஜெனிவாவில் இலங்கைக்கு ஆதரவாக சில முஸ்லிம்
நாடுகள் வாக்களித்ததையும்,
தாம் இது
சம்பந்தமாக எடுத்த நடவடிக்கை களையும் கூறி, எம்மைக்
காப்பாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்ட னர். இதுதான்
புரியாத புதிர். இந்நாட்டுக்கு
ஜெனிவா பிரச்சினை
ஏற்படா திருந்தால்
என்ன காரணத்தைக்
கூறி இருப்பர்?
நமக்கிழைக்கப்பட்ட அநியாயத்தை வெளிப்படுத்த,
நீதி கேட்க,
முஸ்லிம் நாடுகள்
இந்நாட்டை ஆதரித்திருக்க
வேண்டுமா? அடுத்து,
ஜெனிவாவில் அரபு நாடுகள் இலங் கைக்கு எதிராக
வாக்களித் திருந்தால்
என்ன செய்திருப்பர்?
7. மேற்கண்ட நடவடிக்கை மூலம்,
முஸ்லிம்களின் பிறப்புரிமை கேள்விக் கிடமாக்கப்பட்டு, உரிமைகளைக்
கைநழுவவிட்டு, பிச்சைக்காக
ஏங்கும் நிலையை
ஏற்படுத்திய புதிய பாரம்பரியம் ஒன்று உருவாக்கப்பட்டிருந்
தது. இன்னும், நாளை அரபு நாடு
இலங்கை முஸ்லிம்களுக்கு
எதிராகச் செயற்படுமாயின்,
அவர்களை நாம்
குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவதை, இந்நாட்டு அரசின்
மூலமாகவே நிறைவேற்ற
வேண்டியிருக்கும் என்பதை மறந்து விடலாகாது. இது
களநிலவரம்.
நாம்,
நமக்கும், நமது
மார்க்கத்துக்கும் பிரச்சினை வரும்போது, முதலில்
நம்மை, நமது
செயற்பாடுகளை நிதர்சனமாக
அணுகி, ஆக்கபூர்வ
விமர் சனத்தைச் செய்து, உண்மை நிலையைக் கண்டறிந்து,
நம்மிடமுள்ள குறைகளை அகற்ற முனைய வேண்டும்.
இதில் வெட்கப்படவோ,
இழிவாக நினைக்கவோ,
தோல்வியாக எண்ணவோ
இடமில்லை. இது
நமது நிலையை
அந்நியர் மத்தியில்
உயர்த்தவே செய்யும்.
இதுவே பெரிய
எத்தி வைத்தலாகும். வீரம் என்பதே
விவேகம்தான்.
நமது
பக்கத்தில் குறைகள் இல்லாத போது, நமக்கேற்பட்ட
பிரச்சினைகள் ஏன் தற்போது ஏற்பட்டன என்பதை
குர்ஆனிய அடிப்படையில்
அணுகி அறிய
முயல வேண்டும். நாம் குர்ஆனின் அடிப்படையில்
வாழாதபோது அல்லாஹ்வின்
சோதனை இவ்வாறெல்லாம்
வர இடமுண்டு.
நம்மீது
அந்நியருக்கு ஏதாவது காரணங்களால் அச்சமோ, அசௌகரி
யமோ, பாதிப்புக்களோ ஏற்பட்டிருந்தால் அவைகளைக் களையும் வழி வகையில்
செயற்பட வேண்டும்.
புத்திஜீவிகள்
கூடி, பிரச்சினைகளை
எப்படி தடுக்கலாம்
என்ற வழிவகை
களைக் கண்டறிந்து. நீதியின் மூலமாகவோ,
அன்றி பேச்சுவார்த்தையின்
மூலமாகவோ தீர்ப்பதற்கான
பொறிமுறைகளைப் பாவித்து, பிரச்சினை யை ஒழிக்க வேண்டும்.
நாம்,
நமது பிறப்புரிமைகளையும்,
நமக்கு,நம்
முன்னோர்கள் பெற்றுத் தந்த உரிமைகளையும், விட்டுச்
சென்ற
நிலவுரிமையையும், நற்பெயரையும்,
கௌரவத்தையும் நமது சந்ததியினருக்கு விட்டுச் செல்ல
வேண்டும்.
நாம் சரியான வழியில்,
நின்று கொண்டு.
அல்லாஹ்விடம் பிரார்த்திக்க
வேண்டும்.
- நிஹா -
No comments:
Post a Comment