Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah
முஸ்லிம்களை புண்படுத்தும் செயற்பாடுகள், கருத்துக்கள் குறித்து நிதானம் தேவை
அல்லாஹ்தான் பன்றியையும் படைத்தவன் என்பதை நாம் ஏற்றுக் கொள்வோ மோயின், பன்றி உருவத்தில் வரும் பொருட்கள் நமது உள்ளத்தைப் புண்படுத்த முடியாது. அப்படியென்றால் அல்லாஹ் பன்றியைப் படைத்ததன் மூலம் நமது உள்ளத்தைப் புண்படுத்துவதான கருத்தியலை ஏற்படுத்தும்.
அனைத்து உயிரினங்களும் ஒரு ஆத்மாவில் இருந்து படைக்கப்பட்டுள்ளன என்ற அல்லாஹ்வின் கூற்றை முஸ்லிம்களாகிய நாம் அறிவோமானால், நம்மிடம் காணப்படும் வெறுபபுணரச்சி நம்மை விட்டு அகன்றுவிடும். அசுத்த மென்பதால் உண்பதற்கு மட்டும் தடைவிதித்துள்ளானே தவிர, அவ்வுரு வத்தைப் பார்க்கக் கூடாது, அப்பெயரைக் கூறக் கூடாது என்பதல்ல. அவ்வுரு வத்தில் எதனையும் செய்யக் கூடாது என்பதல்ல. மார்க்கம் பிழையாக விளங்கிக் கொள்ளப் படும் இடமிது. ஊர்வனவற்றில் மிக மோசமானது விளங்கிக் கொள்ளாத மனிதர் என்பது அல்லாஹ்வின் வார்த்தை. அத்தோடு விடாமல், விளங்காதவர்கள் மீது வேதனையை ஏற்படுத்தி விடுவதாகவும் கூறுகிறான்.
நாம் பிழையாக விளங்கிக் கொண்டு, இம்மாதிரி தேவையற்ற விடயங் களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை, இஸ்லாமியனாக இருப்பதற்குத் தேவையான ஈமான் என்ற நம்பிக்கைக்குக் கொடுப்பதில்லை. அதனை ஸ்டீரியோ டைப் என்பார்களே அப்படி வைத்துக் கொண்டுள்ளோம். நமது ஈமானை, புர்கான் என அல்லாஹ்வால் பரிந்துரைக்கப்பட்ட குர்ஆன் என்ற உரைகல்லில் உரைத்துப் பார்ப்பதில்லை. ஈமான் கொண்டு நற்செயல் செய்பவர்களுக்கு அல்லாஹ் சுவர்க்கத்தையே பரிசாகக் கொடுக்கிறான். அவர்களை வெற்றியாளர்கள் என்கின்றான். அனேகமான இடங்களில் ஈமானையும் நற்செயலையும் இணைத்துப் பேசுகிறான்.
சிலர் இந்த நற்செயல் என்பதற்குக் கூட, அவை இஸ்லாமிய கடமைகள் என விளக்கம் கொடுத்து, அல்லாஹ்வின் பரந்துபட்ட நோக்கத்தை குறுகிய எல்லைக்குள் அடக்கி விடுகின்றனர்.
என்னை நினைவு கூருங்கள் நான் உங்களை நினைவு கூருவேன் என்கின் றான். அதனை அறிய முற்படுவதில்லை. நினைவு கூருதலைப் பிழையாக விளக்கம் கொடுத்து, அவனது படைப்புக்களில் அல்லாஹ்வை நினைவு கூர்தல் என்கின்றனர். இது பிற மதத்தவர்கள் செய்வது. மேற்கண்ட வசனத் தின்படி, நாம் அல்லாஹ்வை அவனது படைப்புக்களின் மூலம் நினைவு கூர்ந்தால், அவனும் உங்களை நினைவு கூர, அவனது படைப்புக்களையே நினைவு கூரவேண்டும். இது அல்லாஹ்வின் கண்ணியத்தையே களங்கப் படுத்துவது.
தொழுகையே அல்லாஹ்வை நினைவு கூர்வதென்பதை 20:14ல் அறிந்து, ஏற்று, நினைவு கூர முயற்சிப்போமாயின், அச்சமயத்தில் அவனது படைப் புக்களை அறிந்து நினைவு கூரல் என்ற மனோஇச்சையுள், அவனை மட்டுமே நினைவுகூர்வதென்ற நிலை மாறி, அவனுக்காகவே செய்யப்படும் தொழுகை தனது பண்பை இழந்து, தொழுகையாளிகளுக்குக் கேடுதான், அவர்கள் பிறருக்குக் காட்டுவதற்காகவே தொழுகிறார்கள். தன்னை நினைவு கூரவல்ல என்ற நிலையை உருவாக்கும்.
மேலும். அல்லாஹ் படைப்பை அறிவதன் மூலம் அவனது அத்தாட்சிகளை அறியலாம“, படிப்பினைகள் பெறலாம் எனத்தான் கூறியுள்ளான். உங்களுக் குள்ளும் கவனித்துப் பார்க்க வேண்டாமா என்பது அவனது இருப்பை ஊர்ஜிதம் செய்வதே. ஆம் அவன் பிடரி நரம்புக்கும் அருகாமையிலும் இருக்கிறான்.
அவனை நினைவு கூர்வதற்கு அவனைப் பார்த்திருக்க வேண்டும். பார்க்காத ஒன்றை ஒருவர் எவ்வளவுதான் எடுத்துரைத்தாலும் நம்மால் நினைவு கூர முடியாது. வேண்டுமானால் யூகிக்கலாம். யூகங்களை அல்லாஹ் அனுமதிக்க வில்லை. தகப்பனை நினைவுகூர அவர் கட்டித் தந்த வீட்டை நினைவு கூரலாமா?
யாரிடமாவது. ஏன் கற்றறிந்த பலரிடம் நான் அல்லாஹ்வைப் பார்ததிருக் கிறீர்களா எனக் கேட்டால், இல்லை எனவும், அவனைப் பார்க்க முடியாதே எனவும் கூறுகின்றனர். அல்லாஹ்வை நமது பார்வைகள் அடைய முடியாது எனக் கூறி, தனது பார்வை எல்லோரையும் அடைவதாகக் கூறுகிறான். இதற்குக் கூட பிழையான விளக்கங்களைக் கொடுக்க முனைகின்றனர். இவர்களே தாமும் அறியாமல் பிறரையும் வழிகெடுப்பவர்கள் என அல்லாஹ் வால் கூறப்படுபவர்கள்.
எவர் இவ்வுலகில் குருடராக இருந்தாரோ, அவர் மறுமையிலும் குருடராக இருப்பார். இன்னும் அவர் பாதையால் மிகத் தவறியவர் என்ற வசனம் 18:72, நம்மால் பார்க்க முடியாது என்றதைக் கூறுகிறதா? பார்வைகள் தன்னை வந்தடைவ தில்லை, தான் பார்வைக்குள் வந்து விடுவேன் என்றுதானே கூறியிருக்கிறான். ஆக நாம் இவைகளை ஈமான் கொள்வதில்லை. விளையாட்டாக எடுத்துக் கொள்கிறோம். வீணாக எதனையும் அல்லாஹ் கூறுவதில்லை என்பதை நம்புவ தில்லை.
அதனை நம்பியவர்கள் சொர்க்கம் சென்றார்களோ என்னவோ (இணைவைக் காதிருந்தால் செல்வர்.) தொலைக் காட்சியைப் படைத்து, நம்மையெல்லாம் நம்மால் கண்டு கொள்கொள்ட முடியாதவைகளை, நமது பார்வைகள் சென்றடைய முடியாதவைகளை, நமது பார்வைக்குள் கொண்டு வந்துள்ளனர். இதன் பின்னர் கூட நாம், அல்லாஹ்வின் வசனத்தை ஏற்று அதன்படி நடக்க முற்படுவதில்லை.
தான் பொறுப்பேற்பவன் வக்கீலு என்பதை, பொறுப்பேற்பதில் நல்லவன் எனக் கூறியதை நாமும் கூறிக் கொள்வோம், அதனைப் பேச்சளவில் நம்புவோம், தவிர அவனிடம் காரியங்களை ஒப்படையோம். நிறைவேற்றி வைப்பவன் அல்லாஹ்வைத் தவிர இல்லை என்போம், ஆனால் இதுவும் முன்னையதைப் போன்றதே! இதனால்தான் அல்லாஹ் முழுமையாக இஸ்லாத்தில் நுழைந்து விடுங்கள் என்கின்றான். நமது ஈமான் இப்படித்தான் உள்ளது.
முன்னர் அல்லாஹ்வை நாம் கண்டிருக்கவில்லை என்ற நமது பிழையான கருத்தியலை, குர்ஆனில் உரைத்துப் பார்த்த போது அங்கு 7:172 மிகத் தெளிவாக நாம் அல்லாஹ்வைக் கண்டு சாட்சியம் கூறியது வெளிப்படுத்து கிறது. அதனைத்தான் நம்மை நினைவு கூரும்படி அழைப்பு விடுக்கின்றது. நாம் மறதியாளர்களாக இருக்கின்றோம். பின்னர் மறுமையில் வந்து நாம் மறநது விட்டோம் என்பதற்கு புகல் கூறாமல் இருப்பதற்காக தற்போது நமக்கு ஞாபகமூட்டி எச்சரிக்கை செய்கிறது.
அதனால் சிறு சிறு தேவையற்ற விடயங்களில் முஸ்லிம்களின் கவனத்தை செலுத்த வைப்பதை விடுத்து, அவர்கள் எதனைச் செய்யாமல், அறியாமல், அறிந்தாலும் முயற்சிக்காமல் இருக்கிறார்களோ அவற்றை எத்தி வைக்க முனையுங்கள். இவைதான் மக்களைச் சென்றடைய வேண்டியவை. இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரவிருப்பவை. மற்ற அனேகமானவை கவனச் சிதைவைத் தவிர, இறைநோக்கை நிறைவு செய்யா!
No comments:
Post a Comment