Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah
அரசியலில் ஒரு சூழ்நிலைக் கைதிகளாகவே நாங்கள் தற்போது இருக்கின்றோம்
//அத்துடன் 1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு தென்னிலங்கையில் நடைபெற்ற இனக்கலவரம் ஒரு மாறாத வடுவாக இருப்பதைப் போல 1990ஆம் ஆண்டு யாழில் இருந்து வெளியேற்றப்பட்டமை என்றைக்கும் மாறாத வடுவாகவே இருக்கின்றது.//
1983 ஜூலை கலவரத்தோடு, வடக்கில் பாசிஸப் புலிகளால் அரங்கேற்றப்பட்ட ஒரு திட்டமிட்ட இனச்சுத்திகரிப்பை ஒப்பிடுவது பாரிய தவறு.
மேலும், யாழில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர் என்ற கூற்றை மாற்ற வேண்டும். யாழ் உட்பட ஐந்து மாவட்டங்களில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டனர்.ஆகக் குறைந்தது வடக்கில் இருந்து வெளியேற்றப் பட்டனர் என்றாவது கூற வேண்டும். யாழ்ப்பாணமும், மன்னார், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போல ஒரு மாவட்டமே என்பதை கவனத்திற் கொள்ள வேண்டும்.
// அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர் மேலும் கூறியதாவது, ‘தந்தை செல்வா அனைத்து இனங்களையும் அரவணைத்து தனது போராட்டத்தை முன்னெடுத்தார் சாத்தியமான வற்றை சாதித்துக்காட்ட வேண்டும் என்பதில் அவர் குறியாக இருந்தார்.//
‘தந்தை செல்வா அனைத்து இனங்களையும் அரவணைத்து தனது போராட்டத்தை முன்னெடுத்தார்“ இக்கருத்து முற்று முழுதாக உண்மைக்குப் புறம்பானது.
இனம் என்ற ரீதியில் முஸ்லிம்களை இணைத்திருக்கவில்லை. பிரதேசம் என்ற ரீதியில், வடக்கு, கிழக்கிற்கு வெளியே வாழும் தமிழரையோ, இந்திய வம்சாவழித் தமிழரையோ, முஸ்லிம்களையோ இணைத்திருக்கவில்லை. கட்சி என்ற அடிப்படையில், தமிழர் விடுதலைக் கூட்டணயில் அங்கமாகவும், பங்குதாரர்களாகவும் இருந்த இ.தொ.கா, வையோ, தமிழ் காங்கிரஸையோ இணைத்து தனிநாடு கோரிக்கை விடவில்லை.
தேர்தலில் வெற்றியை மையமாக வைத்தே தனிநாடு கோரிக்கை விடப்பட்டது என்பதை, அவர்களின் தேர்தல் வெற்றியின் பின்னர், இலங்கைச் சரித்திரத்தில் முதலும் கடைசி யுமாகத் தமிழ்க் கட்சி ஒன்று பிரதான எதிர்க்கட்சியாக மாறியதன் பின்னரான செயற்பாடு கள் வெளிப்படுத்தவில்லை.
தாம் தனிநாடு போராட்டம் தொடராமல் பாராளுமன்றில் தொடர்ந்து இருப்பதற் கான ஆணையை,அவர்கள் தமது பதவிகளை வறிதாக்கிவிட்டு மக்களின் தீர்ப்புக்கு விட்டிருக்க வேண்டும். ஆனால் எதுவும் நடைபெறவில்லை.
தனிநாடு கோரிக்கையை முன்வைத்துப் பெற்ற அமோக வெற்றியை, தமது சுயநலத் துக்காகவே கட்சி பாவித்தது. சரியான கொள்கை இருந்திருந்தால், ஆகக் குறைந்தது, 1978 ஆம் ஆண்டு ஜே.ஆரால் கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பை எதிர்த்தாவது பாராளுமன்றை விட்டு வெளியேறி இருக்க வேண்டும். ஆனால், தவிர்க்க முடியா நிலையில் ஆறாவது திருத்தத்தை எதிர்த்தே பாராளுமன்றை விட்டு வெளியேறினர்.
டெலோ இயக்க சிவாஜிலிங்கம், தந்தை செல்வாவின் உருவச் சிலைக்கு மாலைபோட முடியுமென்றால், டக்ளஸ் தேவானந்தவும், கருணாவும் ஏன் அக்கூட்டத்திற்கு அழைக்கப்படக் கூடாது! யேசு நாதர் கூறியது போல் குற்றம் செய்யாதவர் முதற் கல்லை எறிய வேண்டும். அந்த வகையில், குற்றஞ்சாட்ட முனைபவர்கள் முதலில் இரத்தக்கறை யற்றவர்களாக இருக்க வேண்டும்.
No comments:
Post a Comment