Tuesday, April 16, 2013

அப்பாஸ் ஜிலானியுடனான முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு பற்றி விசாரித்த ஜனாதிபதி


Commented by nizamhm1944 on
Lankamuslim.org
One World One Ummah

அப்பாஸ் ஜிலானியுடனான முஸ்லிம் பிரதிநிதிகள் சந்திப்பு பற்றி விசாரித்த ஜனாதிபதி

// அங்கு கருத்துரைத்துள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் இந்த நாட்டில் மூன்று இனங்களும் சமாதானமாக வாழ்வதாகவும் முஸ்லிம்களுக்கு நாட்டில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பது வெறும்  வதந்திகள்  என்று   தெரிவித்துள்ளார் .//

செய்தி உண்மையாயின், அஸ்வர் அவர்கள், அல்லாஹ் கண்டிக்கும் உண்மையுடன் பொய்யைக் கலப்பவர் என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நாட்டில் மூன்று இனங்களும் சமாதானமாக வாழ்வது என்னமோ நியாயமான அளவு உண்மையே!  நடக்கும் குழப்பங்கள் மக்களிப்புடன் நடப்பதில்லை.

சிலர் அதனை மக்களின போராட்டமாக சித்தரிக்கிறார்கிறார்கள். யாரோ சிலர் எங்கோ நின்று குழப்பங்களைச் செய்து விட்டு அதனை மக்கள் மேல் போடு கின்றனர்.  தாம் எழுத வேண்டியதை எழுதிவி்ட்டு மக்கள் இப்படி நினைக்கின் றார்கள் என எழுதி தம்மைக் காத்துக் கொள்கின்றனர். ( நல்ல விடயங்களா யின் அதில் நானும் அப்படித்தான்) அரசு, எதிர்கட்சி அனைத்தும், சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைமைகள் உட்பட அதைத்தான் செய்கின்றன. ஏன் மதத் தலை வர்கள் என்போர்கூட விதிவிலக்கல்ல. புலிகளும் தாங்கள் செய்ய வேண்டிய அக்கிரமங்கள் அனைத்தையும் மக்களின் பெயராலேயே செய்தனர். அழிவைத் தமது மூலதமாக்கிக் கொண்டனர்.

ஆனால் பாவம் அப்பாவி மக்களின் பெயர் அநியாயமாகப் பாவிக்கப்பட்டு,  பாதிப்படை ய வைக்கப்படுபவர்களும் அந்த மக்களே!

விடயத்துக்கு வந்தால், “முஸ்லிம்களுக்கு நாட்டில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பது வெறும்  வதந்திகள்“ என்று கூறியதன் மூலம் அஸ்வர் பொய்யைக் கலந்துவிட்டார். இம்மாதிரியானவர்கள்தான் குழப்பக்காரர்.

 குர்ஆன் குழப்பக்காரர்கள் விடயத்தில் இப்படிக் கூறுகிறது:

5:32 - இதன் காரணமாகவே, ”நிச்சயமாக எவரொருவர் ஒரு ஆத்மாவுக்குப் பகரமாக, அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்திற்காகவோ அல்லாமல் மற்றோர் ஆத்மாவைக் கொலை செய்வாரோ, அப்பொழுது அவர் மனிதர்கள் அனைவரையும் கொன்றவர் போன்றாவார்.  மேலும், எவரொருவர் அதனை உயிருடன் வாழவிடுவாரோ, அப்பொழுது அவர் மனிதர் அனைவரையும் உயிர் வாழவிட்டவர் போன்றவராவார்.” என்று இஸ்ராயீல் சந்ததிகள் மீது விதியாக்கினோம்.  .....

5:33 - அல்லாஹ்வுடனும், அவனுடைய  தூதருடனும் போர் தொடுத்து இப் பூமியில் குழப்பத்தைச்செய்துகொண்டு திரிபவர்களுக்குரிய தண்டனை யானது, அவர்கள் கொல்லப்படுவது, அல்லது அவர்கள் தூக்கிலிடப்படுவது, அல்லது அவர்கள் மாறுகால், மாறு கை துண்டிக்கப்படுவது. அல்லது அவர்கள் நாடு கடத்தப்படுவது. இது அவர்களுக்கு இவ்வுலகில் உள்ள இழிவு ஆகும். மறுமையில் அவர்களுக்கு மகத்தான வேதனையுண்டு.// அங்கு கருத்துரைத்துள்ள தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் அஸ்வர் இந்த நாட்டில் மூன்று இனங்களும் சமாதானமாக வாழ்வதாகவும் முஸ்லிம்களுக்கு நாட்டில் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பது வெறும்  வதந்திகள்  என்று   தெரிவித்துள்ளார் .//

செய்தி உண்மையாயின், அஸ்வர் அவர்கள், அல்லாஹ் கண்டிக்கும் உண்மையுடன் பொய்யைக் கலப்பவர் என்பதைப் பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளார்.

நக்குண்டார் நாவிழக்கலாம். அதிலும் மிகச் சிறு நியாயமுண்டு. ஆனால்,  அஸ்வர் நடந்ததை, உலகறிந்ததை, நிரூபணமானதை, மாண்புமிகு ஜனாதிபதி கூட தனக்கு தெரியாது என்றோ, அப்படி நடக்கவில்லை எ்னறு கூறாததை, பாதுகாப்புச் செயலாளர் கூட நடந்தவைகளுக்கு தாம் எவ்விதத்திலும் தொடர்பு இல்லை எனக் கூறியதன் மூலம், இங்கு முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் இடம் பெற்றுள்ளது என்பதை மறுக்காததை, வேறு யாரும் மறுத்ததாகவும் தெரிய வில்லை, பொது பல சேனா கூட இதில் தாம் சம்பந்தப்பட்டிருக்க வில்லை எனக் கூறி, நடந்த அக்கிரமங்களை ஒத்துக்கொண்டுள்ளதை வதந்தி எனலாமா?  ஆனால், உலகில் அவை ”வெறும் வதந்திகள்” எனக் கூறிய ஒருவர் அஸ்வர் அவர்களே.

இவரை உலகின் மிகப் பெரிய பொய்யைக் கூறியவர் என்பதற்காக, அவரது பெயரை கின்னஸில் பதிவு செய்வதற்காக சிபாரிசு செய்யலாம்.

No comments: