குர்ஆன் வழியில் …
மனிதர்
ரப்பைச் சந்திப்பது உறுதியென்கிறது
குர்ஆன்
நாம் பிறந்த இந்தப் பூவுலகிலும்> நம்மைச் சுற்றியுள்ள இந்த விண்ணகத்திலும் கோடானுகோடி நட்சத்திரங்கள்> கிரகங்கள்> பூமிகள்> பிரபஞ்சங்கள் என எவையெவை யெல்லாமோ விரவிக் கிடக்கின்றன.
இவைகளில் சிறிய> பெரிய> குளிர்ந்த, சூடான> வாயுக்களாலான. நெருப்பாலான. குடும்பங்களைக் கொண்ட. தனித்த. நிலத்தைக் கொண்ட. மனிதர் வாழக்கூடிய, வாழ முடியாத. ஒளி வீசுகின்ற. ஒளியைப் பிரதிபலிக் கின்ற. அண்மை. சேய்மையிலுள்ள மண்டலங்களும். இன்ன பிறவும் சிதறிக் கிடக்கின்றன.
சிதறிக் கிடப்பன போல் அவை காட்சிப் படுத்தப்பட்டுள்ளதால் நான் சிதறிக் கிடக்கின்றன என நான் இங்கு எழுதினாலும் அப்படியல்ல. அவை ஓர் ஒழுங்கில், கட்டுப்பாட்டில் அவற்றுக்குக் கொடுக்கப்பட்ட தொழில்களை, அவற்றின் நிலைகளாலும், வேறு வழிகளாலும் செய்து தமது நகர்வுகளை நடத்திக் கொண்டே இருக்கின்றன.
இப்படி அமைக்கப்பட்ட எதுவும் அந்தரத்தில் நடக்கும் அற்புதங்கள் என்பதும், ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டவை என்பதும் உண்மையே. அவை ஒன்றை ஒன்று முந்தவோ? பிந்தவோ? முரண்படவோ? முட்டி மோதிக் கொள்ளவோ செய்யாமல் சிறப்பான முறையில் செல்வதற் கான திட்டத்துடன் செயற்பட வைத்து நிர்வகிக்கப் படுகின்றன என்பது எமது கற்பனைகளுக்கு அப்பால் நடந்து கொண்டிருக்கும் செயலே.
ஆக இவை தானாக நடக்க முடியாதது. அப்படியாயின் அதனை யாரோ ஒரு அபார சக்தியுள்ள, நுண்ணறி வுள்ள களைப்பற்ற, கவனக் குறைவற்ற, சிந்தனைச் சிதறலற்ற, ஓய்வொழிச்சலற்ற, இயக்கமற் றிராத போன்ற நம்மால் விவரிக்க முடியாத, இயலாமையென்ற பேச்சுக்கே இடமற்ற சர்வ வல்லமையுள்ள ஒருவரே படைத்துப் பரிபாலனஞ் செய்து கொண்டிருக்க வேண்டும். முன்னனுபவமோ, முன் மாதிரியோ அற்ற நிலையில், எந்த விதக் குறைபாடுகளும் இன்றி இவை உருவாக்கப்பட்டு, நிர்வகிக்கப்படுகின்றன என்பதை நாம் அனுபவ வாயிலாக சிறிது அறிகின்றோம்.
இதனையெல்லாம் யார் செய்திருப்பார் என்ற சிந்தனை நமக்கு வருவதற்கு முன்னரேஇ வல்ல நாயன் அல்லாஹ் அவற்றை எல்லாம் தானே, தனித்து, யாருடையவும், எதனுடையவும் உதவியின்றிப் படைத்துப் பாலனஞ் செய்து வருவதாகக் கூறுகிறான். இவற்றை எல்லாம் அவன் நமக்குக் கூறுவதனால் அவனுக்கு என்ன பயன் உண்டு?
ஆனால் மறைவான விடயங்களை அறியாதிருக்கும் மனித வர்க்கத்துக்கு படைப்பாளனான அல்லாஹ் சொல்லிக் காட்டி அறிந்து நம்பிக்கை கொள்ள வைக்க வேண்டியுள்ளது.
அதன் மூல காரணம் அவனைத் தவிர சொல்லிதர வேறு யாருமில்லை என்பதால் அவன்மேல் அக்கடமை தானாகவே வந்து விடுகின்றது. ஏனெனில் மறைவான வெளிப்படாத விடயங்களே உலக அழிவும், அதைத் தொடர்ந்து வரக்கூடிய மறுமையும், அங்கு அல்லாஹ்வின் சந்திப்பும், விசாரணையும், தண்டனையும் என்பதால், அந்த உண்மையினை அவனது சிறந்த படைப்பான நமக்கு அறிவிக்கவே வேண்டும். இல்லையேல் நாளை மறுமையில் எங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கும் என்பது தெரிந்திருக்க வில்லை, அவற்றை மறந்து விட்டோம், அவற்றை அறிந்து அவற்றின்படி நடக்க வேண்டும் என்பது எமக்கு யாராலும் நினைவுறுத்தப்பட வில்லை, அப்படித் நினைவூட்டப்பட்டிருந்தால் நாம் சீரிய வாழ்க்கையை மேற் கொண்டு உனது சந்திப்பை எதிர்கொள்ள வேண்டிய முறையில் வந்திருப்போம் எனப் புகல் கூறித் தப்பிக்க நியாயம் ஏற்பட்டுவிடும்.
இதன் காரணமாக, அந்நாளும், விசாரணயும், தண்டனையும் மகா பயங்கரமாகவும், உதவி செய்திட சொந்த பந்தம், நண்பர், கடவுளர் என யாருமிருக்க மாட்டார்கள் என்பதால், மக்கள் அறியாத நிலையில் அவற்றைச் சந்திக்க அனுபவிக்க வைப்பது அவனது மகிமைக்கும் நீதிக்கும் உகந்ததல்ல என்பதாலேயே 124000 நபிமார்களையும்,313 தூதர்களையும், நான்கு வேதங்களையும், வேதக் கட்டளைகளையும் காலத்துக்குக் காலம் அனுப்பி அவற்றை ஞாபகப்படுத்திக் கொண்டி ருந்தான்.
அத்தோடு அந்த மறுமையின் சந்திப்பு நிட்சயமானது, ஒவ்வொருவரும் இறுதியில் .அடைய வேண்டியது என்பதால், அதனை முகங்கொடுப்பது எவ்வாறு என்பதற்கும் ஒர் சீரிய வாழ்க்கைத் திட்டத்தை நமக்கு அறிவித்து அதனைத் தனது இறுதி நபியும் தூதுவருமான முஹம்மது ஸல்லல் லாஹு அலைஹிவ ஸல்லம் அவர்கள் மூலம் நடைமுறைப் படுத்திக் காட்டியுமுள்ளான்.
இதன் காரணமாகவே அல்லாஹ் சுபுஹானஹுவதஆலா நமக்கு இந்த சர்வலேகங்கள் பற்றிய படைப்பையும், தான் அதனை நிர்வகித்து வருவதையும், தன்னைத் தவிர இவற்றை யாரும் செய்யவில்லை என்பதையும், அதனால் நீங்கள் என்னை எனது பண்புகளுக்கு ஏற்றவாறு அறிந்து, நம்பிக்கைகொண்டு, கண்ணியப்படுத்தி எனது புகழைத் துதி செய்து, எனக்குச் சிரம் சாய்த்து, நல்ல செயல்களைச் செய்து எனது சந்திப்பை எதிர்கொள்ள வாருங்கள் என்பதற்காக இந்தக் குர்ஆனில் விடயங்களை விவரித்துக் கூறுவதாக வலியுறுத்தி உள்ளான். உங்கள் ரப்பின் சந்திப்பை உறுதி கொள்வதற்காக, அவன் திருவசனங்களை விவரிக்கிறான் என 13:2ஆம் வசனத்தில் பதிவாக்கியுள்ளான்.
மறுமையில் சந்திப்பு உறுதி என்பதால் நாம் அவன் கூறிய வண்ணம் ஈமான் கொண்டு நற்செயல்களைச் செய்து மறுமையில் அவனது அடியார்கள் என்ற பேற்றுடன் சுவர்க்கத்துள் பிரவேசிப்போமா!
-நிஹா –
கொழும்பு 03.
2012.08.19
No comments:
Post a Comment