Lankamuslim.org
One World One Ummah
நாங்கள் அரசாங்கத்திற்கு வெள்ளையடிக்க முயற்சிப் பதுமில்லை.
நிராயுதபாணிகளான, குற்றமற்ற, அப்பாவி, வடக்கு முஸ்லிம்களைப் பாசிஷப் புலிகள் அவர்தம் தாயகத்தை விட்டு, அநாகரிமாக, வெற்றுக்கையினராக, வெந்த மனத்தினராக விரட்டியடித்த போது, நடந்த ஆட்சி ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியே! அச்சமயம் தற்போது முஸ்லிம் சமூகத்துக்கே அவமானத்தைப் பாதிப்பை விளைவித்துக் கொண்டிருக்கும் சிலர், அக்கட்சியின் ஆட்சியில் பங்குதாரர்களாக, அமைச்சர்களாகக் கூட இருந்தவர்களே!
அப்பொழுதும், இப்பொழுது செய்த வேலையைத்தான் செய்து வந்தனர். இன்றேல், வடக்கு முஸ்லிம்கள் அவ்வேளை பகிரங்கமாக கூற முடியாத நிலையில் இரகசியமாகத் தம்மைப் புலிகளின் மிலேச்சத்தனத்திலிருந்து காப்பாற்றும்படி விடுக்கப்பட்ட வேண்டுகோள்கள் வியர்த்தமாக விட்டிருக்க மாட்டார்கள். அரசுக்கு அழுத்தம் கொடுததிருப்பர். இன்று அவர்கள் அகதிகளாக அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருக்க மாட்டார்க்ள. அதை வைத்தே சிலர் இன்றும் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்க மாட்டார்கள்.
ஒக்டோபர் 30ஆந் திகதி முஸ்லிம்கள் விரட்டப்பட்டு, அநாதைகள் ஆக்கப் பட்டதன் பின்னர், அரசின் ஆயுதப்படைகள் நொவெம்பர் முதலாந் திகதியே மன்னார்ப் பட்டினத்தைத் தமது ஆளுகைக்குள் கொண்டு வர முடிந்திருந்த தென்றால், அதற்கு இரு நாட்களுக்கு முன்னர் ஏன் அந்நடவடிக்கையை எடுத்திருக்கவில்லை? உடனடியாக அம்முஸ்லிம்களை மீள் குடியேற்றி இருக்கவில்லை?
அப்போது புலிகளுக்கெதிரான பிரச்சாரத்துக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப் படுவது, அவர்களுக்குத் தேவையாக இருந்தது. அரசு மௌனம் சாதித்தது. அதனால், இந்த தூக்குத்தூக்கிகள் அனைவரும் தலைவருக்கு வெண்சாமாரம் வீசி, பாத பூஜை செய்து கொண்டிருந்தனர்.
அன்று அரசு நினைத்திருந்தால், அவசரகாலச் சட்டம் அமுலில் இருந்த அந்த வேளையில், உடனடியாக (Curfew order ) ஊரடங்குச் சட்டத்தையாவது போட்டி ருந்தால், முஸ்லிம்கள் அதனைச் சாட்டாக வைத்தாவது வெளியேறாமல் சாக்குப் போக்குக் கூறி, அங்கேயே இருந்திருக்கலாம்.
அடுத்த ஒரு நாள் அவகாசத்தில் புலிகள், படை யினரால் தீபத்தை விட்டே வெளியேற்றப்பட்டனர் என்பது இங்கு குறிப்பிடத் தக்கது. இந்த நகர்வின் போது உயிர்ச் சேதங்கள் கூட ஏற்பட்டிருக்க வில்லை என்பது சிந்திப்பதற்கு, உணர்வதற்கு தேவையானது.
இதிலிருந்து, அன்றைய முஸ்லிம்களின் வெளியேற்றம் அரசின் ஆசிர்வாதத் துடனேயே நடைபெற்றது என்பதும், இப்போது இவ்வரசில் அங்கம் வகிக்கும் சிலர், அப்போது அவ்வரசிலும் அங்க வகித்திருந்தனர் என்பதும், இவர்கள் யாரென்பதை விளங்கிக் கொள்ளப் போதுமானது
No comments:
Post a Comment