Commented by nizamhm194 on:
Lankamuslim.org
One World One Ummah
முஸ்லிம் விரோத நடவடிக்கைகளும், சிங்கள பௌத்தர்களின் சனத்தொகை வீழ்ச்சியும்
// மிக நீண்ட காலமாகவே முஸ்லிம் மக்கள் மீது ஒருவித அவநம்பிக்கை இவர்களுக்கு இருந்து வந்துள்ளது. இதற்கு முஸ்லிம் சமூகத்தின் பக்கத்தில் இழைக்கப்பட்ட சில மேலோட்டமான தவறுகளும் காரணமாய் அமைந் துள்ளதை நாம் ஏற்றுக்கொள்ளவே வேண்டும். //
தங்களின் மேற்கண்ட கருத்தை ஆதரிப்பவன் நான். ஆயினும், இத்தவறில் முஸ்லிம் பொதுமக்களின் பங்களிப்பு மிக அற்பமானதே. உண்மையாகக் கூறப் போனால், இஸ்லாத்தில் பிரிவினைகளை ஏற்படுத்திக் கொண்டு, இயக்கங் களாக, தமக்குள் யார் பெரியவர், யார் கூறுவது சரி என்ற அடிப்படையில், தமது செயற்பாடுகளைப் பெரிதுபடுத்தி, தமக்குள் குழப்பங்களையும் செய்து கொண்டிருந்தவர்களின் பங்களிப்பே, சிங்கள பௌத்த மக்களில் ஒரு பிரிவினரின் கவன ஈர்ப்பை ஏற்படுத்தி, பிழையான கணிப்பீடு ஒன்றைச் செய்ய வைத்துள்ளது.
இன்னும், தாம் சலுகைகளைப் பெற்றுக் கொள்ளும் அடிப்படையில், முஸ்லிம் களின் பெயரைப் பயன்படுத்தி, தமது நலன்களைக் காத்தமையால், சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்ட எரிச்சலை, ஆத்திரத்தை ஊட்டும் தவறு களைச் செய்து கொண்டிருந்த அரசியல்வாதிகளும் காரணர்களே!
இறுதியாக, யாருடையவோ விருப்புக்களையும், இலாபங்களையும், நன்மை களையும் நிறைவேற்றி வைப்பதற்காக, இஸ்லாத்தின் பெயரால் தொடங்கப் பட்ட தவறும், சிங்களவர் மத்தியில் பாரிய தாக்கத்தை உருவாக்கக் கூடிய சாதனமாக பௌத்த கடும போக்காளர் களால் பாவிக்கப்பட வழிவகுத்துக் கொடுத்திருந்தது.
மேலும், இஸ்லாத்தில் அங்கீகரிக்கப்பட்ட அழைப்புப் பணியை, எத்தி வைத்தலை பிழையான முறையில் கையாண்டதனாலோ என்னவோ, முஸ்லிம்கள், பௌத்தர்களை மதமாற்றம் செய்கிறார்கள் என்ற சந்தேகத் தையும், அச்சத்தையும் சிங்கள பௌத்த கடும் போக்காளர்களிடம் ஏற்படுத்தி யுள்ளனர். அவற்றில் ஒன்றாக, யாரோ எங்கோ ஒருவர் மதமாறி யிருந்தால், அதனைப் பெரிதுபடுத்தி, அதனையே பெரும் விளம்பரமாகப் பாவிக்கத் தொடங்கியமை.
இஸ்லாத்தின் காவலர்களாகத் தங்களை வரிந்து கட்டிக்கொண்டு திரிந்தமை, அரபியரின் உடைகளை இங்கு அணியத் தொடங்கியமை, பெண்களின் முகத்திரை போன்ற பல விடயங்கள் இந்நிலைக்குக் காரணமாக அமைந் திருந்தன என்பதை நடுநிலையில் சிந்திப்போர் உணர்ந்து கொள்வர். இவற்றில் பெரும்பாலானவை குர்ஆனுக்கு மாற்றமானவை என்பது கசப்பான உண்மை. இவை இறை சோதனையாகக் கூட இருக்கலாம்.
No comments:
Post a Comment