Sunday, April 7, 2013

எனக்கு ஒரு சந்தேகம் !!


Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

எனக்கு ஒரு சந்தேகம் !!

வரலாற்று உண்மைகள் பற்றிக் கூறுமிடத்தில், யூகங்களோடு ஒட்டிய கருத்துக்கள் அல்ல முக்கியமானது. ஆய்வுகளே வேண்டற்பாலது.

சிதறிக் கிடக்கும் சில அரிய உண்மைகளான நாற்பது முழ நீளமுடைய இஸ்லாமிய இறைநேசர்களின் (அவ்லியா) கப்றுகள் எனப்படும் அடக்கஸ்தலங்கள் கடற்கரைப் பிரதேசங்களான மன்னராரின் தலைமன்னார், கீரி போன்ற கிராமங்களிலும், கிழக்கில் வெந்நீரூற்றுக்களின் அருகாமையில் அமைந்துள்ள மலைக்குன்று ஒன்றிலும், வடமேற்கில் அம்பகந்த கடற்கரையிலும், இன்னும் பல இடங்களிலும் காணப்படுவது, இலங்கை முஸ்லிம்களின் முன்னோர்கள், மனிதர் அறுபது அடி உயரமாக இருந்த காலங்களிலேயே இலங்கையில் வசித்திருக்கிறார்கள் என்பதற்கான மிகச் சிறந்த ஆதாரம்.

மேலும், குர்ஆன் கூறும் முதல் மனிதனான ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சுவனத்தில் இருந்து இறங்கிய இடம் இலங்கையின் அதியுயர்ந்த மலையான Adamspeak எனவும் தமிழரால் சிவ‌னொளிபாத மலை எனவும் சிங்களத்தில் ஸ்ரீபாத எனவும் மலையுச்சியில் காணப்படும் காலடிகள் ஏகதெய்வ வணக்கவாளரான ஆதம் காலத்தில் இருந்தே இந்நாட்டில் வாழ்ந்து வந்துள்ளனர் என்பதைப் பறைசாற்றுகின்றது. அவர்களின் வழிவந்தவர்களே தற்போதைய முஸ்லிம்கள். அந்த வகையில் பார்க்கும் போது, இலங்கையில் முஸ்லிம்களின் வரலாறு மனித தோற்றம் ஏற்பட்ட காலந்தொட்டே நடைபெற்றிருக்கின்றது என்பது மறுக்கவோ மறைக்கவோ, மறக்கவோ முடியா உண்மை.

இந்த உண்மைகளை அறிந்த முஸ்லிம்களான அராபியர் இலங்கைக்குப் பின்னர் வந்திருக்கின்றார்கள். அவர்களது வருகை கிபி 673இல் தொடங்கியதற்கான வரலாற்று ஆதாரங்கள் உண்டே.  மன்னார் மற்றும் இடங்களில் காணப்படும் மினரட் எனவும் மினாரா எனவும் அழைக்கப்படும் வெளிச்ச வீடுகளாகப் பாவிக்கப்படும் அழகிய நெடிய மாடங்கள் அவர்களாலேயே அமைக்கப்பட்டன என கலாநிதி சு.வித்தியானந்தன் அவர்கள் தமது “இஸ்லாமிய கலையும் பண்பும்“ என்ற கட்டுரையில் கூறியுள்ளார். அத்தோடு இஸ்லாமியரின் கப்பல்கள் இலங்கைத் துறைமுகங்களுக்கும், மேற்கிந்திய துறைமுகங்களுக்கும் அடிக்கடி வந்து போயிருக்கின்றன எனக் கூறியுள்ளார். இந்நிலை கிபி ஒன்தாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நிலவியதாகக் கூறுகிறார்.

மேலும், இலங்கைக்கு வந்த அராபியர் இங்கு வாழ்ந்த ஏக தெய்வக் கோட்பாட்டைப் பின்பற்றி வாழ்ந்த தமிழ்  பேசும் பெண்களை முடித்திருந்தமையால்தான் அவர்கள் தமிழைப் பேச வேண்டிய கட்டாய நிலையில், தம்மனைவியருக்கு அரபை கற்பித்துள்ளனர். குர்ஆனை அரபியில் ஓதி வந்த முஸ்லிம்களுக்கு அது இலகுவாக இருந்திருக்கும்.

அதனால் தொடர்பாடலுக்கான அவசியம் ஏற்பட்ட போது, அவர்கள் ஓர் புதிய உத்தியைக் கையாண்டுள்ளனர். அது தமிழை அரபியில் எழுதும். முறை. அதனை ஆங்கிலத்தில் நாம் Transliteration என்போம். அப்படி எழுதப்பட்ட பாஷையே இன்றும் நம் மத்தியில் காணப்படும் “அரபுத் தமிழ் “ என்ற மொழி.  ஆக இலங்கை முஸ்லிம்கள் வந்தேறு குடிகளல்லர் அவர்களது தோற்றம் மனித உற்பத்தியின் வரலாறோடு பின்னிப் பிணைந்தது.

No comments: