Friday, April 12, 2013

முஸ்லிம் சமூகம் ஹலால் பற்றி பேசாமல் இருக்க முடியாது


Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah

முஸ்லிம் சமூகம் ஹலால் பற்றி பேசாமல் இருக்க முடியாது


ஹலால் என்ற சொல் உணவில் மட்டும் பெரிதும் பாவிக்கப்படுகின்றதுஆகுமான அனைத்தும் ஹலால் தான், குர்ஆனில் கூறியதை மட்டும் செய்வதும் ஹலால்தான். தவிர்க்க வேண்டியதைக் கூறியிருந்தால் அதனைத் தவிர்ப்பதும் ஹறாம் தான்

ஹலால் பின்பற்றப்படுவதற்கு ஹறாம் பற்றிய பூரண அறிவே வேண்டப் படுவது. இதனை எத்திவைத்தலே ஒவ்வொருவரினதும் கடமைஅதனைப் பின்பற்றுவதும் ஒவ்வொரு தனி நபரினதும் கடமை. அந்த வகையில் அல்லாஹ் கூறாதைச் செய்ய முற்படுவதும் ஹறாமையும் தாண்டி ஷிர்க் கிலும் தள்ளிவிடுகிறது.

42:21 - “ மார்க்கத்தில் அல்லாஹ் எதற்கு அனுமதி அளிக்கவில்லையோ, அதை அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கும் இணையாளர்கள் அவர் களுக்கு இருக்கிறார்களா? தீர்ப்பு பற்றிய வாக்கு இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக் காரர்கள் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.“

உணவைப் பொறுத்து, அல்லாஹ் தடுக்காத ஹலால் உண்பதை உலகில் எவராலும் தடுத்துவிட முடியாதுஅப்படியாயின் அனைவரும் ஹலால் அல்லாததான செத்ததையும், இரத்தத்தையும் (அதுவும் அறுக்காமல் கிடைக்காது) பன்றி இறைச்சியையும்தான் உட்கொள்ள வேண்டும்

மேலும், அல்லாஹ்வோ, நபிகளாரோ காட்டித்தராத ஒரு நடைமுறை யான, ஹலால் சான்றிதழ் வழங்கியதும், ஹலால் முத்திரை குத்திய பிழையான நடைமுறையும்தான் தடைக்குள்ளாகி உள்ளது. தவிர ஹலால் உணவோ, ஹலால் உணவு உண்பதோவல்ல. அல்லாஹ்வை யாரும் இயலாமலாக்கிட முடியாதுஅது மதகுருமார்களோ, முஸ்லிம் அறிஞர் களெனக் கூறுபவர்களாக இருந்தாலும் சரியே! அல்லாஹ் மிக நுடபமாக தனது காரியங்களைச் செயற்படுத்துபவன் என்பதை இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஹலால் முத்திரை குத்தும் நடவடிக்கை தொடருமாயின், அப்பாவி முஸ்லிம்கள் முத்திரை பார்த்து தமது உணவைத் தீர்மானிக்கும் பண்பு வளர்ந்து, ஹலால் முத்திரை குத்தப்படும் ஹறாமான உணவுகளையும அறியாமல் வாங்கி அருந்தும் அபாயம் உருவாகும். அடுத்து அல்லாஹ் கூறிய ஹஹாமைத் தவிர்த்தல் என்ற குற்றத்துக்கும் நிராகரிப்புக்கும் ஆளாவர். இறைசட்டம் புறக்கணிக்கப்பட்டு, மனித சட்டங்கள் அமுல் நடத்தப்படும் அபாயம். வழிகேடே!

2:168 மூலம் அனைத்தையும் உண்பதற்கு ஆகுமாக்கி, 2:172, 173, 5:3, 5:87, 5:88,6:119, 6:145,6:146,148, 16:114,115,116, 10:59 ஆகியவற்றின் மிகவும் விரிவாக தடை செய்யப்பட்டவைகளைக் கூறி, அவற்றுக்குக்கூட விதிவிலக்கு களையும் முன்வைத்து தனது கருணையை மனிதர் மீது முழுமையாக்கி வைத்துள்ளான். விதிவிலக்கு கூட அவனது கருணையின் பாற்பட்டது என்பதால், அவனது விதிவிலக்கை மக்கள் அனுபவிக்க எவரும், எதுவும் தடையாயிருப்பதும் ஓர் வரம்பு மீறலே, அவனது கருணை மனிதரைச் சென்றடைய தடையாயிருப்பதே, நிராகரிப்பே!

மேற்கண்ட அல்லாஹ்வின் வசனங்களை வைத்துதற்போது பொதி செய்யப்படும் உணவு வகைகளை முஸ்லிம்கள் கண்டறிய முடியாது என யாராவது கூற முற்படுவார்களாயின் அது நிராகரிப்பு மட்டுமல்ல, அல்லாஹ் இயலாமல் ஆகிவிட்ட பயங்கரத்தை உருவாக்கி அவனது கண்ணியத்தையே கேள்விக்குள்ளாக்கியதாக மாறிவிடுகிறது,

குர்ஆன் வழிகாட்டி என்பதும், அல்லாஹ் வழிகாட்டுபவன்,  பாதுகாவலன் என்பதும் மாறி, உலமாக்களும், ஹலால் முத்திரைகளும்தான் வழிகாட்டி,  பாதுகாவலர் என்றாகிவிடும்

No comments: