Friday, April 12, 2013

ஹலால் சான்றிதழ் இழுபறி நிலையை நீக்க முன்னணி பௌத்த தேரர்கள் முயறசி


Commented by nizamhm1944 on:
Lankamuslim.org

ஹலால் சான்றிதழ் இழுபறி நிலையை நீக்க                  முன்னணி பௌத்த தேரர்கள் முயறசி


// ஜம்மியத்துல் உலமா நாட்டுக்காக இந்தப் பணியைச் செய்தது. அவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதனை முஸ்லிம் சமூகம் அங்கீகரிக்க முடியாதென தூதுக்குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர் //

சட்ட ரீதியாக மட்டுமல்ல சமய ரீதியாகவும் அனுமதி இல்லை என்பதை மேற்கண்ட வாசகம் உறுதிப்படுத்துகிறது. அதாவது, அனுமதிக்கப்படாததான ஒரு செயலைச் செய்வது நாட்டினது சட்டத்துக்கும், மார்க்கத்தினது சட்டத்துக்கும் முரணானதே! 

யாருடையவோ இலாபங்களுக்காகவும், தேவைகளுக்காகவும் விடுக்கப்படும் வேண்டுகோள்களை நிறைவேற்றுவதற்காக குர்ஆன் அனுமதியாததைச் செய்ய முடியாது. இது இறைதண்டனையாகவும் இருக்கலாம்.

42:21 - “ மார்க்கத்தில் அல்லாஹ் எதற்கு அனுமதி அளிக்கவில்லையோ, அதை அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கும் இணையாளர்கள் அவர்களுக்கு இருக்கிறார்களா? தீர்ப்பு பற்றிய வாக்கு இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே தீர்ப்பளிக்கப்பட்டிருக்கும். நிச்சயமாக அநியாயக்காரர்கள் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.“

2:168 மூலம் அனைத்தையும் உண்பதற்கு ஆகுமாக்கி, 2:172, 173, 5:3, 5:87, 5:88,6:119, 6:145,6:146,148, 16:114,115,116, ஆகியவற்றின் மிகவும் விரிவாக தடை செய்யப்பட்டவைகளைக் கூறி, அவற்றுக்குக்கூட விதிவிலக்குகளையும் முன் வைத்து தனது கருணையை மனிதர் மீது முழுமையாக்கி வைத்துள்ளான். விதி விலக்கு கூட அவனது கருணையின் பாற்பட்டது என்பதால், அவனது விதி விலக்கை மக்கள் அனுபவிக்க எவரும், எதுவும் தடையாயிருப்பதும் ஓர் வரம்பு மீறலே,அவனது கருணை மனிதரைச் சென்றடைய தடையாயிருப்பதே,  நிராகரிப்பே!

அல்லாஹ்வின் வசனங்களை எத்திவைத்தல் மட்டுமே அனைவரினதும் கடமை, முஸ்லிம்களின் பாதுகாவலனும், நேர்வழி காட்டுபவனும் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை என்பதால், அவனுடைய கடமையுள் நாம் மூக்கை நுழையாது, அனுமதித்ததை மட்டுமே செய்வோம்.

ஹறாம் என்றால் எவை என்ற அறிவை மட்டும் மக்களுக்கு அறிவித்து விடுவது என்ற நமது கடமையை நாம் செய்வதே அல்லாஹ் நமக்கு அனுமதித்தது. இதற்கு மேல் செய்ய முற்படின் அது 42:21இல் கூறியதை நிராகரிப்பதாகும்.   ஏவலை ஏற்பதும். அதனை விடுவதும் தனி நபரைச் சார்ந்ததே, வேறு யாரும் அவர்களுக்குப் பொறுப்பாளர் இல்லை. மறுமையில் பதில் கூற வேண்டியோர் குற்றத்தைச் செய்தவர்களே தவிர அல்ல !

அச்சமூட்டி எச்சரிக்கை விடுப்பதைத் தவிர பொறுப்பெடுக்கும் வேலை நமக்கு அனுமதிக் கப்படவில்லை, ஏன் நபிகளாருக்கே அவ்வனுமதி கொடுக்கப்பட வில்லை என்பதால், அவ்வேலையைச் செய்ய முற்படுவது அனுமதியாததை செய்த குற்றத்தை, அல்லாஹ்வின் கூற்றில், “ஷிர்க்“ கை வருவிப்பதே!

No comments: