Wednesday, April 24, 2013

இலங்கை மனித உரிமை பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டுச் செல்லத் தேவையில்லையாம்



Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

இலங்கை மனித உரிமை பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டுச் செல்லத் தேவையில்லையாம்



இஸ்லாமிய நாடுகள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் சில முஸ்லிம் தலைவர்கள், மக்கள் யதார்த்தத்தை உணர வேண்டும். எவர் எக்கேடு கெட்டாலும் லெப்பைக்கு நாலு பணம் என்ற ரீதியில், முஸ்லிம் நாடுகள் தமது ராஜதந்திர செயற்பாடுகளை முன்னெடுப்பர் என்பதே உண்மை.  அதைவிட்டு இங்குள்ள முஸ்லிம்களுக்காக நடவடிக்கை எடுப்பார்கள் என்ற கனவுலகில் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் விடுபட வேண்டும். 

இதிலிருந்து, நமது வாழும் உரிமை எதனோடும் சம்பந்தப்படுத்திப் பெறப்படவோ, சலுகைகளின் அடிப்படையில் பெறப்படுவதாகவோ இருக்கக் கூடாது என்பது தெளிவாகின்றது. 

வடக்கிலிருந்து அப்பாவி முஸ்லிம்கள் காரணமின்றி அராஜகப் புலிகளால், வெற்றுக் கையினராக விரட்டி அடிக்கப்பட்டதை எத்தனை முஸ்லிம் நாடுகள் கண்டித்தன? அம்முஸ்லிம்களுக்கு எத்தனை நாடுகள் ஆதரவுக் கரம் நீட்டின? எத்தனை நாடுகள் அவர்கள் துன்பங்கள் களையப்பட வேண்டும் என்பதை அரசுக்கு வலியுறுத்தின? 

அவர்கள் 23ஆவது வருடமாகவும் “அகதி“ என்ற அந்தஸ்தில்லாத அகதிகளாக, IDP என்ற பெயரில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். தற்போது வடக்கில் தேர்தல் நடக்கவிருப்பதால், அம்முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதாகக் கூறி, அவர்கள் எவ்வித நட்ட ஈடுமின்றி நட்டாற்றில் விடப்படும் நிலையே அரங்கேற்றப்படுகின்றது. அல்லாஹ்தான் இந்த முஸ்லிம்களுக்கு வழிகாட்ட  வேண்டும்.  

இவர்களின் பத்தொன்பது வருடப் பொறுமை எப்படி புலிகளின் அழிவுக்கு வித்திட்டதோ, அப்படியே அவர்கள் உரிய முறையில் குடியேற்றப்படாமல் விடப்படுவதற்குப் பொறுப்பானவர்கள் அழிந்து போவார்கள் என்பதே உண்மை! 

இவர்களின் மீள் குடியேற்றம் நிரந்தரமாக அவர்கள் சீரான வாழ்வை மேற்கொள்ளும் விதமாக, உரிய நட்டஈட்டுடனும், மற்றும் ஏனைய உரிமைகளுடனும், கௌரவத்துடனும், எவரிலும் தங்கியிராத வகையில் வாழ்வதற்கான முறையில் நடைபெறல் வேண்டும். இன்றேல் அவர்கள் தற்போது எப்படி வாழ்கின்றார்களோஅப்படியே அவர்களை விட்டுவிடுவது மிகச் சிறப்பாக இருக்கும். 

அனைவரிடமும் வேண்டிக் கொள்வது. Please do not try to benefit out of others' distress. 

No comments: