Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah
இஸ்லாத்துக்கு எதிரான செயல்பாடா ? சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் ஜனாதிபதி உறுதி மொழி
மலையைக் கல்லி எலியைப் பிடிப்பது என்றொரு பழமொழி நம்மத்தியில் உள்ளது. அதுதான் தற்போது நடை பெற்றுள்ளது.
இந்நாட்டில் அண்மைக் காலமாக முஸ்லிம்களுக்கு எதிராக இடம் பெற்ற அனைத்து அடாவடித்தனங்கள் சம்பந்தமாக முஸ்லிம் அரசியல் தலைமை களுக்கும் மாண்புமிகு ஜனாதிபதி அவர்களுக்கும் இடையில் நடைபெற்ற பேச்சு வார்ததையில் இறுதி முடிவு எட்டப்பட்டுள்ளது, அதாவது இனி முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறவுள்ள அடாவடித்தனங்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் எனபதே!
உண்மையில் அச்சத்தில், சந்தேகத்தில், விரக்தியில் மூழ்கியிருந்த முஸ்லிம்களுக்கு ஜனாதிபதி அவர்களின் உத்தரவாதம் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
இதிலிருந்து நாம் படிக்க வேண்டிய பாடம், சட்டத்தின் அடிப்படையில் ஆட்சி நடைபெறும் ஒரு நாட்டில், அந்நாட்டின் தலைவர் கூட சட்டத்தின் மூலமே தமது நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே! ஜனாதிபதியிடம் முறையிட்டாலும், அவரும் இறுதியாக சட்டத்தையே நாட வேண்டும்.
முஸ்லிம்கள் தவறிய விடயமான நடந்தவைகளுக்கு எதிரான சட்ட நடவடிக்கை, தற்போதைய பேச்சு வார்த்தையிலும் தவறவே விடப் பட்டுள்ளது. அதாவது இதுவரை நடைபெற்ற முஸ்லிம்களுக்கெதிரான குற்றச் செயல்கள் பற்றிய எதுவும் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை போன்றே இச்செய்தியில் இருந்து தெரியவருகிறது.
இது உய்த்துணரப்பட வேண்டிய விடயம். இதனை, 'நடைபெற்றவைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதில்லை' என்ற அங்கீகாரமாக நினைக்க வேண்டியிருப்பதில் தவறா எனவே வினவ வேண்டியுள்ளது.
No comments:
Post a Comment