Wednesday, April 10, 2013

‘இந்த நாடு நம் அனைவருக்கும் சொந்தமானது’ - தம்மானந்த தேரர்



Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

‘இந்த நாடு நம் அனைவருக்கும் சொந்தமானது’   

- தம்மானந்த தேரர்


மதம் பின்பற்றப்படுவதற்காக, அமைதி வாழ்வை, ஆத்ம மேம்பாட்டை அடிநாதமாகக் கொண்டு, அனைவருடனும் சகஜீவன் வாழ்வை மேற்கொண்டு, இறைதிருப்தியைப் பெற்று, இம்மை, மறுமை இரண்‌டிலும் வெற்றி காண்ப‌தற்காகவே இறைவனால் அருளப்பட்டது.

அரசியல் யாப்பும் அனைவராலும், மதித்துக் காப்பாற்றப்படுவதன் மூலம் நல்லாட்சி செய்யப்பட்டு உலகை உய்விக்க வேண்டும். அதற்காகவே ஒவ்வொரு நாட்டிலும் யாப்பு யாக்கப்படுகின்றது.  நாட்டை ஆள முன்வந்துள்ள எத்தனை பேர் யாப்பில் என்னென்ன உண்டு என்பதை அறிந்து வைத்துள்ளனர்? யாப்பை அறிந்திருக்க வேண்டும் என்பதையாவது அறிந்தோர் எத்தனை பேர்? யாபபில் ஒர் பரீட்சை நடத்தினால்  உண்மை வெளி வரும்!

மதத்தைப் பின்பற்றுவோரால் உலகில் பிரச்சினைகள் உருவாகியதாக வரலாறு கிடையாது. பின்பற்ற வேண்டிய மதத்தைக் காப்பாற்றுவதற்காக உருவாகியவர்களாலேயே அனைத்துப் பிரச்சினைகளும் உலகில் நடந்தேறியுள்ளன.  மதம் பின்பற்றப்பட வேண்டியதே தவிர காப்பாற்றப்பட வேண்டியதல்ல. பின்பற்றுவதால் காப்பாற்றப்படுவது. பின்பற்றப்படாத மதம் தானாக அழிந்துவிடும். மதம் தனியாள் நலம் காண்பது.

மதம் பின்பற்றப்படுமானால் உலகில் சாந்தி, சமாதானம் மட்டுமே நிலவும்.  ஆதலால், மதபோதகர்களாக தம்மை வரித்துக் கொள்வோர், முதலில் தமது மதத்தைப் பின்பற்றுங்கள். மதத்தைக் காப்பாற்றமுனைந்தால் அது அழிவிற்கே வழிவகுக்கும். அதனால் பின்பற்றுங்கள் மதம் பாதுகாக்கப்படும். அத்தோடு உடலகின் அரைவாசிப் பிரச்சினைகள் தாமாக மறைந்துவிடும்.
யாப்பு மக்கள் நலம் சார்ந்தது.

மிகுதி ஆள்வதற்காகக் கச்சைகட்டிக் கொண்டு வெளிப்படுபவர்களால் தோற்றுவிக்கப்படுவது. அதனைத் தீர்க்க அவர்கள் தாம் ஆளப்பட வேண்டிய அரசியல் யாப்பை மதித்து, அதனைக் காப்பாற்ற முயற்சிப்பதில்லை. அதனை எப்படிப் பாவித்து தம் இலக்கை அடையலாம் என்ற வகையில் பின்பற்றப்படுகின்றன. காப்பாற்றும் வேலை நடந்திருந்தால் உலகு அமைதிப் பூங்காவாக மாறியிருக்கும். உலகின் மிகுதிப் பிரச்சினையும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து விடும். அதனால் யாப்பைக் காப்பாற்றுங்கள், சரியான பின்பற்றல் நடைபெறும்.  நாடும் மக்களும் நன்மை அடைவர். அது தோல்வி காணுமாயின் யாப்பில் பிழையுள்ளது. திருத்த முனையுங்கள். சரியான முறையில் பின்பற்றியும் நல்லது நடபதில்லை என அறிந்தால், வேறு மதங்களைப் பரீட்சியுங்கள். வழி கிடைக்கலாம். அல்லது வழி காட்டப்பலாம்.

மதம் பின் பற்றப்பட வேண்டியது. ஆனால் பின்பற்றப்படுவதில்லை. அரசியல் யாப்பு காப்பாற்றப்பட வேண்டியது, அது காப்பாற்றப்படுவதில்லை. முன்னையது பிழையான வழியில் காப்பாற்றும் வேலையைச் செய்ய முற்பட்டு குழப்பத்தை விளைக்கின்றது. பின்னையது, பிழையான வழியில் பின்பற்றப்பற்றப்பட்டு குழப்பத்தை விளைவிக்கின்றது.  இரண்டிலும் அழிவுதான் மிஞ்சுகிறது. எதிரும் புதிருமான இரு துறைகள் அழிவு என்ற வகையில் ஒற்றுமை காண்கின்றன.


No comments: