Sunday, June 9, 2013

PJ யின் பிதற்றல்கள்:

PJ யின் பிதற்றல்கள்

அல்லாஹ் மனிதரில் பிரியம், அன்பு என்ற பண்பை வைத்துப் படைக்கவில்லை


என்னால் எதேச்சையாகவே PJ யின் இஸ்லாம் இனிய மார்க்கம் என்ற பெயரில் நடத்தப்படும் வினா-விடைகளைக் கேட்க நேருகின்ற போதெல் லாம் அவரது அறியாமையினால் ஏற்படுத்தப்படும் விபரீதங்களை அனர்த் தங்களை வழிகேடுகளை  கேட்க முடிகிறது. அப்படியான ஒரு காணொளி யால் அல்லாஹ்வுக்கும் நாயகமவர்களுக்கும் ஏற்படுத்தப்பட்டுள்ள அப கீர்த்தியை விளக்குவதே இக்கட்டுரை.

வினா: மனைவி தன் கணவனிடம் பிரியமில்லாமல் நடந்தால் பின்னால் மறுமையில தண்டனை உண்டா?
பதில்:காணொளிபார்க்க -       

உரை வரிவடிவமாக: ‘அதாவது ஒருவர் கணவன் மனைவியில் பிரியமில்லாமல் இருந்தால் அதுக்கு மறுமையில் தண்டனை உண்டா என்று கேக்கிறாங்கமொதல்ல எதுக்கு மறுமையில தண்டனை உண்டு என்று  சொன்னால் மனிதனுடைய சக்தியில் எது இருக்குதோ அதுல தப்பு செஞ்சாத்தான் தண்டனை இருக்கிறது.  ஓர் ஆள் மேல பிரியமா இருப்பதெல்லாம் மனித சக்திக்கு உட்பட்டது கிடையாது. இப்ப நம்மளே நாலு பிள்ளை பெறுவோம், ஒரு பிள்ளைய நல்லா விரும்புவோம். அதுவும் நம்ப பிள்ளைதான். ஒரு பிள்ளைய நஞ்சு மாதிரி வெறுப்போம். அதுவும் நம்ப பிள்ளைதான். ஏன் விரும்புறோம் என்பதுவும் நமக்குத் தெரியாது. ஏன் வெறுக்கிறோம் என்பதுவும் நமக்குத் தெரியாது. அல்லாஹ்வா என்ன செய்வான் அப்படி ஏற்படுத்துவான்.

ஒரு நூறு பேர் காலேஜில படிப்பாங்க. அந்த நூறு பேர்ல ரெண்டு பேர் மட்டும் நகமும் சதையுமாக இருப்பாங்க. ஏண்டா அதுலாந் தெரியாது. நாங்க உயிர்த் தோழர்கள் என்டுகிடுவாங்க. அப்ப மனசுக்குள்ள ஒரு பிரியத்தை ஏற்படுத்துதல் என்பது, நீங்களா நெனச்சி ஒருஆளைப்  பிரியப்படுங்க பாப்பம். அதுலாம் முடியவே முடியாது. நாம இன்ன ஆளை பிரியப்பட னும் அதுலாம் முடியாது. அதுவா அல்லாஹ்வா புரோகிராம் பண்ணி வைச்சாலே தவிர வரமுடியாது. அதனால ஒரு கணவன் மீது மனைவி முழுப்பிரியம் இல்லாவிட்டால், மனைவிமீது கணவன் முழுப் பிரியம் இல்லா விட்டால் அதுக்கு எந்த question உம் மார்க்கத்தில் கிடையாது.

ஏன் கிடையாது என்று விபரம் கேட்டால் நபிகள் நாயகம் ஸல் அவங்க வந்து மனைவிமார்கள்ல ஆயிஷா நாயகி அவர்களிடம் அதிகம் பிரியமாயிருப்பார்கள். எல்லா மனைவிமார்கள்லயும் ஆயிஷா நாயகியில அதிகம் அப்ப அல்லாஹ்ட்ட ஒரு துஆ செய் வார்கள். என்ன துஆ செய்வாங்க. இறைவா என் கைவசத் திலுள்ள விஷயங்களில் நான் சரியாக நடந்து கொள்கிறேன். எல்லாரையும் சமமாக நடத்திக் கொள்கிறேன். என் கைவசத்துக்கு அப்பாற்பட்ட விஷயம் இருக்குல பிரியம் கூட இருப்பது, அதுக்கு நீ என்னைப் பிடித்துடாதே. என் கையில இல்லை அது. ஏன்னா என்னை அறியாம ஆயிஷா மேல கூட பிரியமா இருக்கிறேன். அதற்கு நான் என்ன பண்ணுவேன்வெளியில் கொடுக்கல் வாங்கல் பண்ணுவது, வசதிகள் வாய்ப்புகளை ஏற்படுத்துவதில் எல்லாம் சமமாச் செஞ் சிருவோம். ஆனால் இந்த அன்பு ஏற்படுத்தலென்பது நம்ம கையில இல்லே எனப் புடிக்காதே அல்லாஹ் என துஆ செஞ்சுட்டாங்க. அவூங்களுக்கே அது முடியவில்லை என்று சொன்னா, எல்லார் மேலேயும் சமமாக அன்பு வைக்க முடியவில்லைண்டு சொன்னா உங்களுக்கு முடியுமா? எனக்கு முடியுமா? யாருக்காவது முடியுமா? யாருக்கும் முடியாது. அதனால் வந்து, கணவன் மீது உங்களுக்கு அன்பே வராவிட்டால்கூட ஆனா உங்களுக்கு குற்றம் வராது. எப்ப குற்றம் வரும்ம்ம்…   

அன்பு விஷயத்தை விட்டுட்டு, அன்பு இருக்குதோ இல்லையோ, கணவனுக்கிண்டு ஒரு  மனைவி சில கடமைகளைச் செய்யனும். அதை நீங்கள் கரெக்டா செய்யலாம். மனைவிக்கென்று கணவ னுக்குச் சில கடமைகளைச் செய்யனும். அதை நீங்கள் கரெட்டா செய்யனும். அத செஞ்சுட்டீங்கன்னா மனசால பெரிய காதல் பொங்கி வடியல்ல அப்படிண்டு அல்லாஹ் கேள்வி கேட்கமாட்டான். ஏன் அது நமது கன்ட்ரோலில் உள்ளது இல்லை. ஒங்க கைவசத்தில் அல்லாஹ் தராட்டி எப்படி ஒங்களக் கேட்பான்? உங்க கைவசத்தில அவனே தரல்ல. ஏன் செய்யல? எனக் கேட்டால் நீந்தான் செய்ய வைக்கலைன்னு முடிச்சுடலாமே கதையை! அதனால அது ஒரு question வராது. அன்பு செலுத்துற விஷயங்கள் வந்து வராது. ஆனா வந்து அன்பு வந்து உண்டாக்கவும் முடியும். யாரோ ஒரு ஆம்பிள யாரோ ஒரு பொம்பிள கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க வச்ச பிறகு பாத்தா அது ஒருவருக் கொருவர் நடந்து கொள்ளக் கூடிய விதங்களில் அன்பு என்ன செய்யும் அப்புடியும் உருவாகும். அது மாதிரி நாம முயற்சி செய்து என்ன பண்றது? பாடுபட வேண்டியதுதான். அப்படி இருந்தும் அன்பு வரலைனா குற்றமாகாது.’
1.  // மனிதனுடைய சக்தியில் எது இருக்குதோ அதுல தப்பு செஞ்சாத் தான் தண்டனை இருக்கிறது. // சக்திக்கு அப்பாற்பட்டதைச் செய்யும் படி கூறுபவனல்ல அல்லாஹ். மார்க்கத்தில் நிர்ப்பந்தம் இல்லை. கேள்விக்கு பதிலாக, இவ்வுதாரணம் தெரியப்படத் தேவை இல்லை. இதன்படி அன்பு செய்வது என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்றாகிறது. அறியாமையின் உச்சக்கட்டம் இது என்றால் மிகையாகாது.

2. // ஓர் ஆள் மேல பிரியமா இருப்பதெல்லாம் மனித சக்திக்கு உட் பட்டது கிடையாது.//  ஆதாரமற்ற கருத்து. விஷேடமாக குர்ஆனுக்கு மாற்றமானது. இறைவன் மனிதரில் இணைப்பை ஏற்படுத்தி உள் ளான். விஷேடமாக ஆண்-பெண் கவர்ச்சி இறைவனால் அமைக்கப் பட்டதே. அதனாலேயே ஆண்களையும் பெண்களையும் பார்வை களைத் தாழ்த்திக் கொள்ளுங்கள் என எச்சரித்துள்ளான். மேலும் கோத்திரங்களாகப் படைத்துள்ளான். பிறப்பின் மூலமாகவும், திரு மணத்தின் மூலமாகவும் உறவை ஏற்படுத்தி உள்ளான்.

உங்களுள் ஒருவருக்கு ஒருவர் பகைமை பாராட்டாதீர்கள். உறவி னரை ஓதுக்கி விடாதீர்கள்உங்கள் சொத்துக்களில் ஏழைகளுக்கும் பங்குண்டு. தருமம் செய்யுங்கள். ஒற்றுமை என்ற கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். ‘சீஎன்றுகூட உங்கள் பெற்றாரை ஏசாதீர்கள்வழிப்போக்கனுக்குக் கூட உதவக் கூறியுள்ளான். பாகப் பிரிவினையின் போது உறவினர், அநாதைகள்ஏழைகள் வருவார் களாயின் அதிலிருந்து அவர்களுக்கு வழங்குங்கள். அவர்களிடம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள்.

நீர் எழுபது முறை அவர்களுக்காக மன்னிப்புக் கோரினும் அல்லாஹ் அவர்களை மன்னிப்பதாக இல்லை. ஒரு மனைவி யுடைய இடத்தில் இன்னொருத்தியை நாடினால்... உங்களுக்கு உகப்பானதை -விருப்ப மானதை- அவன் வழியில் செலவிடாத வரை நன்மை பெற்றவர்களாக மாட்டீர்கள். நான் வழிகாட்டாதவருக்கு உம்மால் வழிகாட்டிட முடியாது. ஏன் உமது உயிரை மாய்க்கிறீர்இவை எல்லாம் அன்பு, பிரியம் செலுத்துவதால் ஏற்படுத்தப் படுவதுவே. அன்பு, பிரியம் செலுத்துவது மனித சக்திக்கு அப்பாற்பட்டதா?

நளினமாகப் பேசாதீர்கள் எவர் உள்ளத்தில் நோயுள்ளதோஇவ்வசனம் ஒரு பெண் மென்மையாக, நளினமாப் பேசுவதே கூட  ஆண்களின் மனதில் ஆசைகளை வளர்த்து விடும் என்று கூறுவது, அல்லாஹ் தானே மனிதரில் ஏற்படுத்தும் செயலுக்கு தடை விதித் திருக்கமாட்டான்அல்லது அல்லாஹ்வும் பிரியத்தை மனித மனத்தில் விதைப்பான் பெண்களும் விதைப்பார்கள் என்றாகி விடும். மேலும், ஒரு பெண் தன் கணவருக்குத் தெரியாமல் இன் னொருவனுடன் அன்பாக இருக்கிறாள் என்றாள், அது அல்லாஹ் ஏற்படுத்தியது, அன்பை அல்லாஹ்தான் அவள் மேல் போட்டான் என்றாகி விடுகிறது,  இவரின் கருத்துப்படி.  அன்பை அல்லாஹ் மனிதர்களில் வைத்துப் படைக்காமல் விட்ட பின்னர், எப்படி மனிதர்களைப் பகைமை பாராட்டாதீர்கள் என்பான். இவை அவன் கண்ணியத்தை, அவன் அறிவைக் கேள்விக்கு உட்படுத்துகிறது.

மேலும் விரும்பியதை அடைவீர்கள், விரும்பியவர்களுடன் இருப் பீர்கள் என்பதுவும் அவனது வாக்கே. நீங்கள் பிரியம் கொண்டுள்ள அனைத்தும் இவ்வுலக வாழ்வின் வேடிக்கையே. அல்லாஹ்வையும் மறுமை நாளையும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூருவோருக்கு…,  மற்றும்  நாயகத்தை  உயிரினும் மேலாக நேசிக்குமாறு கூறியிருப்பதிலும் நிரூபணமாகின்றது. எவருடைய உள்ளத்தில் நோயுள்ளதோ அவர் ஆசை (பிரியம் இல்லையா?) கொள்வர்நீர் கூறுவிராக! நீங்கள்  அல்லாஹ்வை நேசிப்பீர் களாயின் என்னைப் பின்பற்றுங்கள், என்பதெல்லாம் அன்பு, பிரியம் மனித சக்திக்கு உட்பட்டது கிடையாது என்பதை மறுதலிப்பனவே.

அத்தோடு இன்றைய தினம் எனது அருட் கொடையையும் உங்கள் மீது முழுமையாக்கிவிட்டேன்  என்பது  அன்பை பிரியத்தை தவிர்த்துக் கூறப்பட்டதா? இறைவனுடைய நாட்டமின்றி எதுவும் நடக்காது என்பது, அவனது சக்திக்கு அப்பால் நின்று யாரும் எதையும் செய்துவிட முடி யாது என்பதே தவிர இல்லை. அதாவது நீங்கள் விரும்பிய வழியில் செல்வதை அவன் தடுப்பவனாக இல்லை என்பதே. அவனது அறிவுக்கு உட்பட்டே அனைத்தும் நடக்கின்றன. ஒரு சமூகம் தன்னை  மாற்றாதவரை, அல்லாஹ் அவர்களில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்துவதில்லை என்பதும் அவனது வாக்கே.

இத்தா காலத்தில் திருமண எண்ணத்தை வெளிப்படுத்த வேண்டாமென் கிறான். திருமண எண்ணம் பிரியமின்றி, அன்பு இன்றி ஏற்படுவதா? அல்லாஹ்தான் பிரியத்தை ஏற்படுத்துவான் என்றால், தானே ஏற்படுத்தி விட்டு வெளியிட வேண்டாம் என்கிறானா? அல்லது காலம்  தெரியாது, அவனே அன்பைப் போட்டு  விட்டானா! இத்தா காலத்திலும் அன்பு, பிரியம், ஆசை போன்றவை ஏற்படத்தான் செய்யும் என்பதை அறிந்துள்ளதால் தானே  அதனை வெளிப்படுத்த வேண்டாம் எனக் கூறினான்இவரது கருத்து அல்லாஹ்வே முரண் பாடானவன் எனக் காட்டுகின்றது. அல்லாஹ்  மன்னிப்பானாக.

3. // ஏன் விரும்புறோம் என்பதுவும் நமக்குத் தெரியாது. ஏன் வெறுக் கிறோம் என்பதுவும் நமக்குத் தெரியாது. நாம் பெற்ற பிள்ளைகளில் ஒன்றை விரும்புவதற்கும் மற்றையதை வெறுப்பதற்கும் நமக்கு காரணம் தெரிவதில்லை// என்கிறார்.  எந்த பெற்றாரும்  தமது பிள்ளைகளின் செயல்களில் விருப்பு வெறுப்பைக் காட்டுவார்களே தவிரஅவருடைய பாஷையில், ஒரு பிள்ளையில் விருப்பையும் மறுபிள்ளையை நஞ்சாக வெறுப்பதும் கிடையாது.அப்படி  இருப்பின் 9:113 வசனம் இறக்கப்பட் டிருக்கத் தேவை இல்லை.

ஒரு நபிக்கோ, முஃமின்களுக்கோ இணைவைத்துக் கொண்டு இருப்பவர் களுக்காக அவர்கள் நெருங்கிய உறவினர்களாக இருந்தாலும்மன்னிப்புக் கோருவது ஆகுமானதல்லஇது அன்புபிரியம் காரண மாக மன்னிப்புக்கோரும் நடவடிக்கை நடைபெற்றதை தடுத்த சந்தர்ப்பமே. பிரியமற்றவர்களுக்காக அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்போருண்டா?

யாரோ சிலர் தமது அறியாமையால், விருப்பு, வெறுப்புக்கான காரணம் புரியவில்லை என்பவை அவர் தம் குறைபாடே தவிர அன்பை அல்லாஹ் மனிதரில் வைத்துப் படைக்க வில்லை என்ற முடிவுக்கான தகைமை கொண்டதல்ல.  இது பாரிய கொடுமையின்பாற்பட்டது. அது நாயகமே கூறியிருந்தாலும் கூட. அப்படிக் கூறுவது அவர்கள் பண்பல்ல. மேலும் அல்லாஹ் மனிதரை தன் சூரத்தில் படைத்துள்ளான் என்பதற்கு முரணா கின்றது, மனிதர்களில் அன்பை வைத்துப் படைக்கவில்லை என்பது. காரணம் அல்லாஹ் அளவற்ற அன்புடையவன், அவன் மனிதர்களில் அன்பு செலுத்துகிறான்

4. // அல்லாஹ்வா என்ன செய்வான் அப்படி ஏற்படுத்துவான்.// அவனின்றி அணுவும் அசைவதில்லை என்பது உண்மையே. அது இக்கருத்தை நிரூபிக்க ஏற்கப்பட முடியாதது. அவனது கட்டுப்பாட்டில் அனைத்தும் உளது என்பதைக் காட்டுவதே.  அதிகாரம் அனைத்தும் அவனுடையதே. அவனது சக்தி அனைத்தின் மீதும் உள்ளதேமுன்குறிப்பிட்ட வசனமே இதற்கும் பதில் கூறும்.

மேலும், நாயகம் ஸல் அவர்கள் ஒரு அந்தகரைக் கண்டு கடுகடுத்தார்கள் என்று அவர்களைக் கண்டித்ததைக் குர்ஆன் கூறிக் கொண்டிருக்கிறது. கடுகடுப்பு பிரியமற்ற நிலையில் வருவதே. இங்கு விருப்பு, பிரியம், அன்பு வைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு அல்லாஹ்விடம் இருந்ததைக் காணக் கூடியதாக இருக்கின்றது. தான் வைத்துப் படைக்காத ஒன்றைச் செய்யும்படி அல்லாஹ் கேட்கமாட்டான். அவ்வப்போது மனிதரில் அன்பை வைப்பான் என்ற PJ  யின் கருத்துப்படி, அல்லாஹ் நாயகத்தின் மேல் அன்பைப் போடாமல், அவர் கடுகடுத்தமைக்காகக் கண்டித்துள்ளதாகத் தெரிகின்றது. அபத்தம். அல்லாஹ் நம்மனைவரையும் மன்னிப்பானாக!

5. // நாம இன்ன ஆளை பிரியப்படனும் அதுலாம் முடியாது, அல்லாஹ் Programme பண்ணி வைத்திருந்தாலே தவிர.// மேற் கண்ட 9:113 வசனமே இதற்கும் பதில் கூறும். இது கீழ்நிலை மனித அறிவிற்குக் கூடப் பொருந்துமா என்பது? காரணம் அல்லாஹ் Programme பண்ணி வைத்திருக்க வில்லை.

மனித கலத்தில் அனைத்துப் பண்புகளும் முந்நூறு கோடி எழுத்துக் களைக் கொண்டு programme பண்ணி வைக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானம் கூறி இறைவனின் நுண்ணறிவைப் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கும் வேளையில்,  'குன்' என்றால் ஆகிவிடும் எனக் கூறி அண்ட சராசரத்தை ஆக்கியவன், அவ்வப்போது தான் மனிதரில் பிரியத்தை உண்டாக்குகிறான் எனக் கூறுவது, எதற்குள் அடங்கு கிறது. சுத்த அறியாமையின்பாற்பட்டதா? வேண்டுமென்றே நிரா கரிப்பதா? தான் எதைக்கூறினும் ஏற்க மக்கள் உள்ளார்கள் என்ற இறுமாப்பா? அல்லது அல்லாஹ்வால் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற அகங்காரமா?

6. // அதனால் கணவன் - மனைவி பரஸ்பரம் அன்பு செலுத்தாவிடில் கேள்வி கிடையாது.// முன்னைய அவரது பிழையான தகவல் அதாவது அல்லாஹ் அன்பை மனிதர்களிடம் வைத்துப் படைக்க வில்லை என்ற தகவல் இங்கு பிரயோகப்படுத்த முடியாதது. இவரது தீர்ப்பின்படி உலகில் யாரும் யார் மேலும் அன்பு செலுத்த வேண்டிய தில்லை. அதற்காக இறைவனது கேள்வியும் கிடையாது. அல்லாஹ் எவற்றுக்கெல்லாம் கேள்வி கேட்கமாட்டேனென இவருக்கு அறி வித்துள்ளானா? சொந்தக் கணவனிடமே அன்பு வைக்காமல் இருப்பது குற்றமற்றது, அதற்கு கேள்விகூட இறைவனால் மறுமையில் கேட்கப்பட மாட்டாது என்றால், உலகில் யாரும் யார் மேலும் அன்பு செலுத்தத் தேவையில்லை என்றாகி விடுகிறது. இதுதான் ஜைனுல்ஆபிதீனின் இஸ்லாமா? அன்றி இதுதான் (அல்லாஹ்வின்இஸ்லாமா?

7. // அன்பு செலுத்துவது என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது.// சுத்த அபத்தம். இக்கருத்தை இஸ்லாம் கூறுவதாகக் கூறுவது, இஸ்லாத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்துவது. அல்லாஹ்வின் மேல் பொய் கூறியது.

8. // மனித சக்திக்கு அப்பாற்பட்டவற்றிற்கு இறை கேள்வி இல்லை. தண்டனை இல்லை. // இங்கு அப்பிரச்சினைக்கு இடமே இல்லை. பொருத்த மற்ற இடம்அல்லாஹ் மனித சக்திக்கு அப்பாற்பட்டதைச் செய்யுமாறோ, கஷ்டமானதைச் செய்யுமாறோ பணிப்பதில்லை என்பதே அவன் நிலை.

9. //  நாயகம் ஸல் அவர்கள் மனைவிமார்களில் ஆயிஷா நாயகி அவர்களி டம் அதிக பிரியமாயிருப்பார்கள்.// இவரின் கருத்து, நாயகம் ஸல் அவர்கள் சிலரில் சாதாரண பிரியம் வைப்பவராகவும்சிலரில் அதிக அன்பு பிரியம் செலுத்துபவராகவும் இருந்துள்ளார்கள். இந்நிலை  PJ யின் கூற்றுக்கு நேர் மாறானது. விரோதமானது.

அவரது முன்னைய பிரியம் வைக்க முடியாது என்ற கூற்றை மறுதலித்த தாகிவிடும். மாறாக அல்லாஹ்வால், அன்பு, பிரியம் வைக்க முடியாதவர் களாக மனிதர் படைக்கப்பட்டிருந்தால் அந்தகரைக் கண்டு முகத்தைத் திருப்பியதற்கு நாயகம் ஸல் அவர்களைக் கண்டித்திருக்க மாட்டான். அவர் கூறுவது போல் அல்லாஹ் அன்பை நாயகம் ஸல் அவர்களிடம் உண்டாக்காமல் அவரைக் கண்டித்ததாக ஆகிவிடும். PJ யினது கூற்றுப்படி. அல்லாஹ் குற்றவாளியாகி விடுகிறான். அஸ்தஃபிருல்லாஹ்.

10. // என் கைவசத்துக்கு அப்பாற்பட்ட விஷயம் இருக்குல, பிரியம் கூட இருப்பது, அதுக்கு நீ என்னைப் பிடித்துடாதே, என் கையில இல்லை அது, ஏன்னா என்னை அறியாம ஆயிஷா மேல கூட பிரியமா இருக்கிறேன், நான் என்ன பண்ணுவேன் அதுக்குஎனப் பிரார்த்தித்து உள்ளார்கள் எனக் கூறுகிறார். //  முதலாவது அல்லாஹ் தனது மாமறையில் அனைத்தையும் நமக்கு கைவசப்படுத்தித் தந்துள்ளோம் எனக்கூறியிருப்பதை இது மறுத லிக்கிறது. சந்திரனைக்கூட நாயகம் பிளந்ததாக ஹதீஸ் உள்ளது. சந்திரன் பிளந்து விட்டது என குர்ஆன் ஷரீபும் கூறுகிறது. சந்திரன் பிளவுண்ட அடையாளம் இன்றும் காணப்படுவதை, கூகுள் ஏர்த்தில் காணக் கூடிய தாக உள்ளது.

அறிவில்லாத வணக்கத்தை இறைவன் ஏற்றுக் கொள்வ தில்லை. அறியா மல் செய்பவை தவறு  திருத்தப்பட வேண்டியது. உதாரணத்துக்காக இவர் எடுத்துக்கொண்ட இவரது ஹதீதே, இவருடைய கருத்துக்கு மாறான தன் மையில், நாயகம் பிரியம் செலுத்தியதைத் தெரிவிக்கிறது. மேலும் முன்னைய,அதிக பிரியமாயிருப்பார்கள்’ என்பது தனக்குத் தெரியாது தானாக நடக்கும் ஒரு செயலாக நாயகமவர்கள் கூறியதாக கூறுவது பிரியம் நபியவர்களில் இருக்கிறது என்ற கருத்துக்கு வலுவூட்டுகின்றது.

கைவசத்துக்கு அப்பாற்பட்ட விடயமாக மறுமையை மட்டுமே இறைவன் குறிப்பிட்டுள்ளான்கைவசத்துக்கு அப்பாற்பட்ட விடயத்தில் பிரியமாக இருப்பது என்பது ஆயிஷா நாயகியிடம் அதிக விருப்பம் கொண்டிருந்த தைக் குறிப்பிடுவதாகக் கூறின்,  அதிக அன்பு செலுத்துவதுதான் தனது கைவசத்தில் இல்லாதது. சாதாரண அன்பு தன் கைவசத்தில் உள்ளது என்றாகிறது. இது முன்பின் முரணான  ஒரு பிதற்றல் அல்லது உளறலாகத் தெரியவில்லையா? ஆயிஷா நாயகியிடம் அதிகளவு அன்பு கொண்டிருந்த மையைக் கூறுவதாயின்,  பிரியம் வைப்பதை இறைவன் மனிதனில் வைத்துப் படைக்கவில்லை என்ற PJ யினது கூற்று பொய்த்து விடும்.

பிரியம் வைப்பதை இறைவன் மனிதரில் ஏற்படுத்தியே உள்ளான்மேலும், அப்படி ஒரு மனைவியில் அதிக பிரியம் வைத்து இருந்ததாகக் கூறியிருப் பின்,  பல தார திருமணங்களில் கடைப்பிடிக்க வேண்டிய இறை சட்டத்தில், எல்லோரிடமும் நீதமாக நடந்து கொள்ளுங்கள் என்பதை மீறி,  நாயகம் அவர்கள் நடந்துள்ளதாகக் கருத வைக்கிறது. ஆதலின் இது உண்மையான ஹதீஸாக இருந்தால், குர்ஆனுக்கு முரண்பட்டிராது. குர்ஆனை நடை முறைப்படுத்திக் காட்டிய நாயகமவர்கள் குர்ஆனுக்கு முரண்பட்டிருக்க முடியுமா? நாயகம் வஹீ மூலம் தனக்கு அறிவிக்கப்பட்டதைத் தவிர பின் பற்றுவதில்லை என்ற இறை சாட்சியம் பொய்யாகி விடுமே! உண்மை யான ஹதீஸ்தான் என்றால், நாயகம் குறிப்பிட்டது, PJ யினது கருத்தான, அல்லாஹ் மனிதரில் அன்பை வைக்கவில்லை என்றாகிவிடும். நாயகத் தின் கைவசத்தில் அன்பு இல்லை என்ற கருத்தும் ஏற்க முடியாதது. காரணம் அவர்களே அகில உலகுக்கும் அருட் கொடையாக அனுப்பப்பட்ட வர்கள் என்பதே.

‘என்னை அறியாமல் பண்ணுகிறேன்’ எனக் கூறுமளவு நாயகம்  தன் நினைவில்லாத செயல்களில் ஈடுபடுபவரல்லர். தன்னிலை மறந்த நிலையில் செயற்படுவது இறை தூதரது தன்மைக்கு உரியதுமல்ல. தன்னை அறியாமல் சில வற்றைச் செய்யும் ஒருவருக்கு அல்லாஹ் குர்ஆனைக் கொடுத்திருக்க மாட்டான். தூதராகத் தேர்ந்திருக்க மாட்டான். அதனை நடைமுறைப்படுத்திக் காட்டும்படி பணித்திருக்க மாட்டான்அனைத்து வேதங்களையும் மெய்ப்படுத்தும் வேலையைச் செய்யக் கூறி யிருக்க மாட்டான். மேலாக அகில உலகுக்கும் அவர்களை அழகிய முன் மாதிரியாக அனுப்பியிருக்கமாட்டான். தன்னிலை மறந்திருப்பது வுளுவை முறித்து விடும் காரியங்களுள் ஒன்று என்பதும் கவனிக்கற்பாலது. நாயகத்தின் மேல் அபகீர்த்தியை ஏற்படுத்தும் முயற்சி

‘நான் என்ன செய்வது அதுக்கு’ , எனக் கேட்கும் பண்பு நாயகத்திடம் இல்லாதது. இருக்கவும் கூடாதது. இது மறுதலையாக இறைவனைக் குற்றம் பிடிக்கும் பண்பு. அதாவது  நீதான் ஆயிஷா மேல் அதிக பிரியத்தை ஏற்படுத்தினாய் என அல்லாஹ்மேல் பழியைப் போடுவது. நாயகமவர்கள் இறைவனைக் குற்றம் பிடிப்பவர்கள் அல்லர். அப்படியானவர் நபியாகவும், தூதரதாகவும், அகில உலகின் அருட் கொடையாகவும் அல்லாஹ்வால் அனுப்பப்பட்டிருக்க மாட்டார்கள்இந்த   PJ யின் கருத்து நிராகரிப்புக்கு வழிவகுக்கின்றது.

மேலும்இ  PJ யினது கருத்தினுள்ளேயே சுத்த முரண் பாடு காணப்படு கின்றது. என் கைவசத்தில் இல்லை  என்று கூறிவிட்டு என்னை அறியா மல் செய்கிறேன் என நாயகம் கூறியிருக்க முடியாது. தன்கைவசத்தில் அன்பு பிரியம் இல்லாமல் எப்படி மனைவியரில் அன்பு செலுத்த முடியும்? அன்றேல் கைவசத்தில் இல்லாத ஒன்றின் மேல் தான் அறியாமல் அன்பு செலுத்துவது என்பது எப்படி? ஓரே குழப்பம். இவை அனைத்துக்கும் மேல், மனிதன் குறைபாடானவன் என்ற அடிப்படையில், ஹதீஸ்படி,  நாயக மவர்கள்  ஆயிஷா நாயகியின் மேல் அதிக பிரியம் வைத்ததைத் தனது குறைபாடாகக் கொண்டு கூறியிருந்தால், குறைபாட்டை ஆதாரமாக்கி இறைவன் மனிதரில் பிரியம் செலுத்தும் குணம் ஒன்றை உருவாக்கி இருக்கவில்லை. இறைவனே அதனைச் செய்கிறான் என்ற முடிவுக்கு வரமுடியுமா? இது அல்லாஹ்வை அவனது பண்புக்கு ஏற்றவாறு மதிக்கு மாறு கூறிய அவனது ஏவலை ஏற்காத குற்றத்துக்கு ஆளாக்காதா? அல்லாஹ்வின் காரியங்களில் யாரும் பங்கேற்க முடியுமாஎதுவாயினும் தனது ஆதாரத்துக்காக  PJ எடுத்துக் கொண்ட ஹதீஸ் அவரது கருத்துக்கு நேரெதிரான உண்மைகளைக் கொண்டுள்ளது.

11. //அன்பு என்பது இறைவனால் நம்மில் உருவாக்கப்படுவது. // அப்படி யாயின்இ நாயகமவர்களை உயிரினும் மேலாக நேசிக்குமாறு அல்லாஹ் நமக்குக் கட்டளையிட்டிருக்க மாட்டான். அவனே அவ்வன்பை நமக்குள் உருவாக்கி இருப்பான். நம்மைப் பணிக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டி ராது. அல்லாஹ் முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்டவன்.

தான் கூறுவதை எதிர்க்க  யாருமில்லை என்ற மமதையில் அல்லாஹ் மேல் பொய் கூறுவ தாக அமைகிறது மேற்கண்ட பதில். இதனை மிகப் பெரும் அநியாயமாக இறைவன் அறிவித்துள்ளான். பொய் கூறுவோரின் முகம் மறுமையில் கறுத்துவிடும் எனவும் எச்சரித்துள்ளான். பொய் கூறு வோருக்குக் கேடுதான் என்பதும் அவனது சாபமே.

இவற்றுக்கு எல்லாம் மேலே மனிதரை தனது சூரத்தில் படைத்துள்ளேன் என அல்லாஹ்வே கூறியிருப்பதில் இருந்து,  றஹீம் அளவற்ற அன்புடைய வன் என்ற தனது பண்பை உள்ளடக்கியே மனிதனைப் படைத்துள்ளமை உறுதியாகின்றது. அதனால் அவ்வப்போது அவன் உருவாக்குவது இல்லை. மனிதர்கள் அவ்வப்போது அன்பை வெளிப்படுத்திக் கொள்கிறார;கள் அல்லது தடுத்துக் கொள்கிறார்கள். இவை இறை அறிவுக்கும் அதிகாரத் துக்கும் உட்பட்டே நடைபெறுகின்றன. அவ்வப்போது உருவாக்கும் வேலை மனிதனதுமனித செயலை அல்லாஹ் செய்வதாக கூற முடியாது. அவன் செய்யும் சில செயல்களை மனிதரைச் செய்யுமாறு பணித்துள்ளானே தவிர, மனதனைப் போன்று செய்வதில்லை. எப்பொரு ளும் அவனைப் போன்றில்லை என்பதன் மூலம் இதனை விளங்கிக் கொள்ளலாம்.

12. // அவனால் நமக்குத் தரப்படாத போது அவனால் கேள்வியும் கேட்கப்பட முடியாது.//  அவனால் அன்பு, பிரியம் செலுத்துவது என்ற பண்பு நமக்குத் தராப்படாதது என்று கூறுவதற்கு குர்ஆனிய ஆதாரமுண்டா? இப்படிக் கூறுவது மனோ இச்சையை தெய்வமாகக் கொண்ட செயலாஆதாரம் இல்லை என்றால், எண்ணத்தைத் தவிர அவர்கள் பின்பற்றுவதில்லை என்ற இறை கருத்துக்குள் அடங்குவதாகாதா? மேற்கண்ட பதில் மக்கள வையில் கூறப்பட்ட தென்பதால், தாங்களும் அறியாதவர்களாக இருந்து பிறரையும் வழி கெடுக்கின்றார்கள் என்ற இறை குற்றச்சாட்டுக்கு ஆளாக் காதா

மேற்கண்ட, தான் தராத விடயத்தில் அல்லாஹ்வால் கேள்வி கேட்கப்பட முடியாது என்ற  (PJ உடைய) உண்மையை , நாயகம் ஸல் அவர்கள்கூட அறிந்து வைத்திருக்கவில்லையோ! அதனால்தானோ இறைவனிடம் என் கைவசத்துக்கு அப்பாற்பட்ட விடயத்தில் பிரியம் கூட இருப்பதில் என் னைப் பிடித்து விடாதே என மன்றாடி உள்ளார்கள்? என்னே கொடுமை! இது அல்லாஹ் வையும் அவனது திருத்தூதரையம் அபகீர்த்திக்குள்ளாக்கும் முயற்சியல்லவா!

13.  // அன்பு இருக்குதோ இல்லையோ, கணவனுக்கிண்டு ஒரு  மனைவி சில கடமைகளைச் செய்யனும். அதை நீங்கள் கரெக்டா செய்யலாம். மனைவிக் கென்று கணவனுக்குச் சில கடமைகளைச் செய்யனும். அத செஞ்சுட்டீங்கன்னா மனசால பெரிய காதல் பொங்கி வடி யல்ல அப்படிண்டு அல்லாஹ் கேள்வி கேட்க மாட்டான். ஏன் அது நமது கன்ட்ரோலில் உள்ளது இல்லை. ஒங்க கைவசத்தில் அல்லாஹ் தராட்டி எப்படி ஒங்களக் கேட்பான்? உங்க கைவசத்தில அவனே தரல்ல. ஏன் செய்யல? எனக் கேட்டால் நீந்தான் செய்ய வைக்கலைன்னு முடிச்சுடலாமே கதையை! அதனால அது ஒரு question வராது. அன்பு செலுத்துற விஷயங்கள் வந்து வராது. ஆனா வந்து அன்பு வந்து உண்டாக்கவும் முடியும். யாரோ ஒரு ஆம்பிள யாரோ ஒரு பொம்பிள கல்யாணம் பண்ணி வைக்கிறாங்க வச்ச பிறகு பாத்தா அது ஒருவருக் கொருவர் நடந்து கொள்ளக் கூடிய விதங்களில் அன்பு என்ன செய்யும் அப்புடியும் உருவாகும். அது மாதிரி நாம முயற்சி செய்து என்ன பண்றது? பாடுபட வேண்டியதுதான். அப்படி இருந்தும் அன்பு வரலைனா குற்றமாகாது.’ //

மேற்கண்ட  அவரது உரையின் இறுதிப் பகுதி, முழுமையான முரண்பாடாகவும்மறுமை நாளில் அல்லாஹ் என்ன செய்வான் செய்ய மாட்டான் என்பதை எதிர்வு கூறுவதாகவும், மறுமையில் அல்லாஹ் கேள்வி கேடடால், மாறி, அல்லாஹ் வையே மனிதர் குற்றம் பிடிக்கும் வகையில் பதில் கூறுவதாகவும், மீண்டும், அன்பு வந்து உண்டாக்கவும் முடியும், அல்லது அன்பு வந்து தான் உருவாகவும் செய்யும் என்று கூறி உள்ளமை, அவரது முன்னைய கூற்றை அவரே மறுதலிப்ப தாகவும் அமைந்துள்ளது. அப்பந்திக்கு விளக்கம், பதில் எல்லாமே அப்பந்தியி லேயே உள்ளது. மொத்தத்தில் அறியாமையின், மனோஇச்சையின் வெளிப்பாடு!

 PJ யின் பதில், முற்று முழுதாக தனது எண்ணத்தை மட்டுமே கொண்டு கொடுக்கப்பட்டது. எவ்வித ஆதாரமுமற்றது. அடிப்படையில் பிழை யானது. இறை பண்புக்கு இழுக்கை ஏற்படுத்துவது. நாயகம் ஸல் அவர் களுக்குக் களங்கத்தை ஏற்படுத்துவது. அவர்களைக் குற்றவாளியாக்கு வது. இறைவன் முரண்பாடானானவன் என்ற கருத்தை ஏற்படுத்துவது. அன்பு செலுத்துவதைக்கூடத் தன் கட்டுப்பாட்டுள் வைத்துள்ளவன் அல்லாஹ் என எண்ண வைப்பது. தான் கொடுக்காத விடயத்துக்காக குற்றமும் பிடிப்பவன். அதனாலேயே நாயகமவர்கள் அவனிடம், அவன் கொடுக்காததாக PJ கூறியுள்ள அதே குற்றத்துக்காக மன்னிப்பைக் கோரி யுள்ளார்கள் என்ற அசிங்கத்துக்கு தூபமிட்டுள்ளது. குழப்பத்தை உண்டு பண்ணுவது. அப்பாவி மக்களை வழிகெடுப்பது. இப்படி இன்னும் அனேக குற்றங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. இது ஷைத்தானியச் செயல் அன்றி வேறென்னவாக இருக்க முடியும்!

இறுதியாக, தமிழக தௌஹீத் ஜமா அத் தலைவரான PJ என்ற பி.ஜைனுல் ஆபிதீன் அவர்களின் கூத்துப்படிஅன்பு, பிரியம் போன்ற வற்றை மனிதர் கடைப்பிடிக்காவிட்டால், அது குற்றமில்லை. காரணம் அது அவர்களில் அல்லாஹ் வைத்துப் படைக்காதது. அவன் விரும்பினால் அவ்வப்போது அவனால் போடப்படுவது. அதனால், அல்லாஹ் அதனைக் குற்றம் பிடிக்கவும் மாட்டான். அதற்கு கேள்வி கணக்கும் இல்லை. தண்டமனையும் இல்லை என்பதே! அல்ஹம்துலில்லாஹ்!

H.M.Nizam
Colombo 03.
2012.06.17

+94 718 156 970

No comments: