பெண்ணியம் புன்னியமல்ல, பெரும் புண்ணியம், உயர் கண்ணியம்.
ஆசியாவில் குறிப்பாக இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலேயே அதிக அளவில் பெண்ணியம் பற்றிப் பேசப்படு கின்றது. பெண்ணியம் பற்றிப் பேசுவதே பெருமை சேர்ப்பதாக வும், உயர் பண்பாகவும், தாராளத் தன்மையைக் காட்டுவதாகவும், கலாசார மேன்மை யைக் குறிப்ப தாகவும், கௌரவமாகவும், பெண்களுக்குக் கொடுக்கப்படும் மதிப்பாகவும், மரியாதையாகவும் போன்ற வகையில் சிந்திக்கப் படுகின்றன. எழுதப்படுகின்றன. பேசப்படுகின்றன. போராட்டங்கள், கோஷங்கள் என வளர்ந்து கொண்டே போகின்றன. பெண்ணியம் பற்றிப் பேச விழைபவர்கள் பெண்ணியத்திற்கான வரைவிலக்கணம், வரம்பு, பண்பு போன்றவற்றை அறியாதவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் வகையில், அவர்களது அனைத்துச் செயற்பாடுகளும் எதிர்த் திசையை நோக்கிச் சென்று கொண்டிருக் கின்றன.
பெண்கள் அக்காலத்தில் வெறும் போகப் பொருளாக, பிள்ளை பெறும் இயந் திரங்களாக பார்க்கப்பட்டு, பாவிக்கப்பட்டு வந்துள்ளமையைச் சரித்திரங்கள், அவை உண்மையோ பொய்யோ, கூறிக் கொண்டிருக்கின்றன. தசரதச் சக்கர வர்த்தி அறுபதாயிரம் பெண்டிரைத் தம் மனையாட்டிகளாகக் கொண்டிருந்த தையும், பாஞ்சாலியான திரௌபதை ஐவரைக் கணவராகக் கொண்டிருந்த தையும், தர்மர் அனைத்து சொத்துக்களையும் சூதில் இழந்த பின்னர், தம்பி மாரைப் பணயம் வைத்திடாமல், திரௌபதியைப் பந்தயம் வைத்துச் சூதாடித் தோற்றதையும், துரியோதனன் சபையில் தம்பி துச்சாதனனால் துகிலுரியப் பட்ட கேவலங்களையும், கணவர் இழந்ததும் மனைவியை உடன் கட்டை ஏற வைத்து உயிரோடு எரித்த கொடுமையையும், கும்பகர்ணனால் 'திட்டி யில் விடமன்ன கற்பின் செல்வி...' எனப் புகழப்பட்ட சீதையை,இராமர் தனது மனையாளாகவிருந்தும,; அவளது கற்பில் நம்பிக்கை வையாது, அவள் கற்பின் களங்கத்தைப் போக்க தீயிற் குதிக்க வைத்திருந்த அதர்மத்தையும், காதலித்தால் என்ற ஓரே காரணத்திற்காக மூக்கறுக்கப்பட்ட சூர்ப்பனகையை யும், தேவலோக அதிபதி இந்திரனின் சூழ்ச்சிக்கு இரையாக்கப்பட்டு களங்க முற்றிருந்த தன் மனைவி அகலியைக் கல்லாகச் சாபமிட்ட பரிதாபங்களும், கோயில்களில் வேதியர்களின் காம இச்சையைத் தணிப்பதற்காகவே பெண் குமர்கள், பட்டயம் கட்டப் பட்டு, தேவதாசிகளெனப் பெயரிடப்பட்டு அவர்தம் காமவேகத்தைத் தணித்து வந்தமையும், தகப்பனின் மனைவியர் பலரை ஓரே சமயத்தில், வரிசையாக வைத்து, பலகனியில் பாலியல் இன்பம் நுகர்ந் ததையும், தேவர்களே பெண்களை,- பிறர் மனைவிகளைக் கெடுத்ததையும்-, வானோரே மனித உருவி லான பெண்களில் கண் வைத்துக் காதல் கொண்ட தையும், கல்யாணம்கூட முடித்த கதைகளும் நாம் காவியங்களாகப் போற்றி மகிழ்வனவற்றில் காணப்படுபவையே. காம இச்சைகளைக் களைவதைக் களவியல் என்ற இலக்கணத்துள் வைத்துக் காவியங்கள் படைத்ததும் ஓர் வகையில் பெண்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியே.
கணவன் இறந்துவிட்டால் மனைவி அமங்கலமாகக் கருதப்பட்டதையும், பெண்களுக்கு ஏற்படும் மாத விலக்கை தீண்டத் தகாததாகக் கருதி, அந்நாட்களில் அப்பெண் வீட்டுக்கு வெளியே வாழ வேண்டி நிர்ப்பந்திக்கப் பட்டு இருந்ததையும், மாதவிலக்குக்கு என்ற அந்த இயற்கை உபாதைக்குக் கூட வீட்டுக்குத் தூரம் எனப் பெயர் வழங்கி, விலக்கி, வேதனை செய்ததை யும், சீதனக் கொடுமையால் கன்னிகளாக வாழ்ந்து மடிய வைத்த சோகங் களையும், சீதனம் தரவில்லை, அல்லது மேலும் கொண்டு வரவில்லை என்றெல்லாம் குற்றங்கள் சுமத்தி, கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டு, கொல்லப்பட்ட செய்திகளும், பெண்கள் பிறப்பதே அபசகுனம் எனக் கருதும் நிலையும்,அப்படிப் பிறந்து விட்டால் அதனை உயிரோடே புதைத்து உவகை கொண்டாடியதையும், நம் மத்தியில், வரலாறாகவும், வாய்வழியாகவும், பதிவுக ளாகவும், சமயக் கருத்துக்களாகவும், சமயக் கடப்பாடுகளாகவும் கட்டுப்பாடு களாகவும், மரபுகளாகவும், கலாசாரங்களாகவும் கருதப்பட்டு தடையற்று நடைமுறைப்படுத்தப் பட்டுள்ளன.
இவைகளில் அனேக மானவை வழக்கொழிந்துவிடினும் ஒரு சில குறிப்பாக, சீதனக் கொடுமை, பெண்கள் பிறப்பதே அபசகுனம் எனக் கருவிலே அழிப்ப தும் இன்னும் அழியா வரம் பெற்றவை போல் நம்மிடையே வழி வழியாய் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற அவலங்கள் என்பது கவலைக்குரியதும் கண்டனத்துக்கும் தண்டனைக்கும் உரியனவுமே. இவைகளைப் பெண் கொடுமை, பெண் அநீதி, பெண்வதை போன்ற வற்றுள் அடக்கிவிடலாம்.
இன்றுவரை நடைபெற்றுக் கொண்டிருக்கும் சீதனக் கொடுமைகளும், பெண் குழந்தை பிறப்பதே அபசகுனம் எனக் கருவிலே உயிரைக் கவர்வதும் பெண் களாலேயே கிரமமாகவே நடத்தி முடிக்கப்படும் அக்கிரமங்களே. மாமன் மருமகள் கொடுமை நடந்துள்ளதாக இதுவரை வரலாற்றுப் பதிவுகள் இல்லை யென்றே நினைக்கிறேன். அனைத்துப் பெண் கொடுமைகளும் மாமி மார்களாலேயே மேடையேற்றப் பட்டுக் கொண்டிருக்கின்றன என்பது உலக றிந்த இரகசியம்.
மேலும் பெண்களை வைத்து நடத்தப்படும் உடல் இச்சை யைத் தீர்க்கும் விடுதிகளும், கச்சை அவிழ்ப்பு நடனக் கச்சேரிகளும், புதிய மோஸ்தர் விழாக்களும், ஆடைக் குறைப்புகளும், அம்மணங்களும் கூடப் பெருமளவில் பெண்களால், பெண்களின் பூரண சம்மதத்துடன் நடத்தப்படுகின்றன. அரை குறை ஆடை களுடன், தம் அங்கங்களைக் காட்டித் தாமாகவே தம்மை விலை பேசும் காட்சி பட்டினத்து வீதிகளில் அன்றாடம் பெண்கள் நடத்தும் அவல நிகழ்வு. இவைகளைப் பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகக் குற்றம் சுமத்த முடியாது. ஆண்களில் ஒருவர்கூட இதனையொத்த இழிசெயல் செய்வதாக அவதானிக்கப் படவில்லை.
இப்படி நான் எழுதுவதால், அவ்வப்போது பெண்கள் மேல் வல்லுறவுகள் நடைபெறுவதும், அவர்கள் பல்வேறு வழிகளில், சில மூன்றாந்தர ஆண் களால் இம்சைக்குள்ளாக்கப்படுவதும் நடைபெறுவதில்லை என்பதல்ல. இவையும் இந்நாட்களில் சாதாரணமாகக் காணக்கூடிய காட்சிகளாகவே உள்ளன. இம்மாதிரி யான குற்றச் செயல்கள்கூட நடைபெற பெருமளவு வழிகளை ஏற்படுத்திக் கொடுப்பது பெண்களின் நடத்தைகளும், அவர்தம் ஆடை அணியும் முறைகளென்பதும் அறியப்பட்டுள்ளது.
அதிகமாக பெண்கள் இம்சைக்குள்ளாக்கப்படுவது போன்ற முறைப்பாடுகள் முஸ்லிமல்லாதோரிட மிருந்து மட்டுமே வருவது என்பது, ஆடையால் ஏற்படுத்தப்பட்ட அவலமே என்பதைத் தெளிவுபடுத்து கிறது. வல்லுறவு, சிறுமிகள் துஷ்பிரயோகம் போன்றவை எல்லாம்கூட முஸ்லிம் அல்லா தோர் மத்தியிலே நடப்பதற்குக் காரணம், அச்சமூகங்களின் வாழ்க்கை முறையிலுள்ள சீர்கேடே என்பது சொல்லாமல் தெரிவது. பெண்ணியம் பேசுவோர் மேற்கண்ட காரணங்களைக் கூறுவாராயின், அது பெண்ணியம் என்ற வார்த்தைக்கான வரைவிலக்கணத்துள் அடங்காது. மேலும், இக்குற் றங்களில் மிகச் சிலவற்றுக்கு மட்டுமே ஆண்கள் பொறுப்பாகின்றனர்.
மேலும், பெண்கள் ஆண்களுக்குச் சமமானவர்களெனக் கூறி, தமக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் எனக் கேட்பது எவ்வகையிலும் நியாயப் படுத்த முடியாததும் நடைமுறைச் சாத்தியமற்றதும். அது இயற்கை அமைப் புக்கு மாறானதும், பெண்களுக்கே துன்பத்தை வருவிப்பதும், நீண்ட காலப் போக்கில் அவர்களுக்குள்ள பாதுகாப்பு, மதிப்பு, மரியாதை, அந்தஸ்து, கௌரவம் அனைத்தையும் இழக்க வைப்ப தோடு, பெண்ணினத்திற்கு அழிவை நோக்கிய பயணமாகவும் அமைந்துவிடும். மட்டுமல்ல, மேலும் அது பெண்ணியம் என்ற கோட்பாட்டுள் சிறிதேனும் அமையாது, எதிர் மாறான போக்கையே கொண்டி ருக்கும். பெண்ணியம் என்ற அவர்தம் கருதுகோள் பெண்களில் வேறு ஏதோ ஓர் வகை தீய, கீழ்த்தர, துன்பந் தரும் பழக்கவழக்கங்களை, ஒழுக்கங்களை உண்டாக்கிவிடும். அத்தோடு, இயற் கைத் தன்மைக்கு மாறான, பெண்கள் படைக்கப்பட்ட நோக்கத்துக்கே வேறுபட்டதாகவும் அமையும், இன்னும், ஆறாவ தறிவு வழங்கப்படாத மிருகங்களின் வாழ்க்கை முறையை ஒத்த தன்மையை வெளிப்படுத்து வதான நிலையையே கொண்டுள்ளதாகவும் தெரிகிறது.
அனைத்தும் அவைகளுக்குரிய ஒழுங்கு முறைகளிலும், ஒழுக்க மேம்பாட் டையும் கொண்டிருக்கும். பசுமாட்டின் இயல்பை காளைமாட்டில் எதிர் பார்க்க முடியாது. அதுபோன்றே காளை மாட்டின் இயல்பும். பசு செய்யும் வேலையைக் காளை செய்வதில்லை. மனிதர் செய்விக்க முயல்வது மில்லை. கூட்டு வாழ்வை பசுக்கள் மட்டுமே செய்ய முடியும். காளைகளுக்கு உறவு முறை தெரிந்திருப்பதில்லை. அவை தமது எல்லையைத் தாண்ட என்றும் விழைவதுமில்லை. பெண் மயில் தோகை விரித்து ஆடவேண்டும் என யாராவது நினைப்பதுண்டா? ஆண் பறவைகள் தம் குஞ்சுகளுக்கு உணவூட்டுவதையோ, பறப்ப தற்குப் பழக்குவதையோ கண்டிருக்க முடியாது.
பெண்ணியம் என்பது பெண்ணின் இயல்பான, இயற்கை வழங்கியுள்ள தன்மைகளை, பண்புகளை, நடத் தைகளை, மென்மைகளை, சாந்தப் போக்கை, தாய்மையை, கருணையை, அன்பை, அரவணைப்பை, ஆதரிப்பை, கூடிவாழும் உறவு முறைகளை ஏற்படுத்தும் அமைப்பை உள்ளடக்கிய சிறந்த கலவை யாகவே இருக்க வேண்டும். ஒரு பொருளுக் கோ, படைப்புக்கோ அவற்றுக்கென இயற்கையான தனித் துவம் கொண்ட பண்புகள் இருக்கும். அவையே அவற்றின் குணாதிசயம்.அக்குணாதிசயங்கள் அவற்றின் ஒழுங்கு முறைகளாக இருக்கும். பெண்ணியம் பேசுவோர் எதிர் பார்ப்பது போல் மாறும் நிலைகள் ஏற்படு மாயின், அது இயற்கைத் தன்மை யை, இயல்பான போக்கை, அவற்றின் சீர்மையைக் குலைத்து, அதனால் பெறப்பட வேண்டிய விளைவை ஊறுபடுத்தி குழப்ப நிலையைத் தோற்று வித்துவிடும்.
பெண்களின் உடல், உள அமைப்பு முற்றாக ஆண்களில் நின்றும் வேறு பட்டது. அவர்கள் மென்மைத் தன்மையைக் கொண்டிருப்பது வீணான ஒன்றல்ல. அவர்களின் உடல் வளர்ச்சிப் போக்கும் நெகிழும் தன்மையும் கூட உயரிய காரணங்களுடன் கூடியதே. அவர்கள் அணுவையும் விடச் சிறிய திரவத்தை ஏற்று, அதனை மனித உருக்கொண்ட பெரிய அளவிலான படைப்பாக வெளியேற்ற வேண்டியவர்கள். அத்தோடு முடிந்து விடுவ தில்லை அவர்கள் கடமை. அக்குழவிக்குப் பால் புகட்ட வேண்டியும், வளர்த்து வாலிபனாக, நற்பிரஜையாக ஆக்க வேண்டிய பொறுப்பும் உள்ளது.
அவர்களது பாலையே இறைவன், உணவாகவும், ஒளடதமாகவும் ஆக்கி வைத்துள்ளமையை பெண்கள் உணர வேண்டும். இங்கிருந்தே உணவு தயாரிக்கும் அவர்களது கடமை தொடக்கி வைக்கப்படுகிறது. குடும்பப் பராமரிப்பு, வாழும் இடத்தைத் தன் பொறுப்பில் வைத்துக் கொள்வது, அதன் தூய்மை காப்பது, பாதுகாப்பைத் தருவது, சமூகத்தில் அதன் கௌரவத்தைப் பேணுவது, குடும்ப நிர்வாகத்தை நடத்துவது போன்ற எண்ணற்ற பொறுப்புக் கள் இயல்பாகவே சுமத்தப்பட்டவள்தான் பெண். அதனாலேயே அவர்க ளைச் சுமைதாங்கி எனவும்,பொறுமையின் சிகரம் எனவும்,பெருமைக்குரியவள் எனவும் கூறப்படுகிறது.
மேற்கண்ட காரணங்களால், அப்பெண், தன் உடலை, உள்ளுறுப்புக்களைத் தாக்கங்கங்களுக்கு உள்ளா காதவாறு பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதற் கேற்றவாறு தன் வாழ்வை அமைத்துக் கொள்ளல் வேண்டும். ஆண்களைப் போல் திரியும் நிலையை விரும்பக் கூடாது.
மனிதப் படைப்புகளில் மட்டுமே பெண்கள் அழகைக் கொண்டுள்ளனர். இதுவும் கவர்ச்சியை ஏற்படுத்து வதற்காகவே தரப்பட்ட இறை அருள் என்பதை மறந்து, அதைச் சந்தைப் படுத்தாது பார்த்துக் கொள்ளல் வேண்டும். அக்கவர்ச்சி கொடுக்கப்பட்ட நோக்கம் உயர்வானது. அதாவது ஆணைக் கவர்வதன் மூலம், பாலியல் தொடர்பைத் தூண்டி, படைக்கும் தொழிலில் ஈடுபடுத்துவது. இது இறை செயலை ஒத்தது. அத்தனை மேன்மை வாய்ந்த பண்பை பெண்ணியம் என்ற பிழையான கருதுகோளுடன் தொடர்புபடுத்திப் பார்க்கக்கூடாது. அது போன்றே பிற நடவடிக்கைகளும். அனைத்தும் பெண்கள் கைகளிலேயே தங்கி யுள்ளது. இதிலிருந்து பெண் தனது வாழ்வில் அதிக நேரத்தைத் தன் வீட்டிலேயே செலவழிக்கவும், குடும்ப வாழ்க்கையைக் குலைக்காது நடத்தவும் வேண்டிய பொறுப்புக்கு உள்ளக்கப்பட்டு உள்ளமை தெளிவாகிறது.
மேலும், அவள் படைக்கும் உடலமைப்பைப் கொண்டவளாகவிருப்பதால், அவளது மனம்போன போக்கில், முரனான வழிகளில் மேற்கொள்ளப்படும் நடத்தைகள், அவளுக்குப் பாதகமான நிலைகளை ஏற்படுத்தும். அதனால் அவள் அனைத்து வழிகளிலும் பாதிக்கப்படுவாள். அவளது படைப்புக்கள்கூட அவப்பெயருடன் சமூக அந்தஸ்தை இழந்து நிற்கும். இன்னும் அவளது இயற்கையமைப்பு, குறிப்பிட்ட கூடுதலான காலங்களில், தங்கி வாழும் நிலையை, பாதுகாப்பை, துணையை வேண்டி நிற்கிறது. கணவன் என்ற பெயரில் அவளுக்கு ஓர் ஆண் இராவிட்டால், அவளது கௌரவம், பாதுகாப்பு, இருப்பு, வாழ்வு போன்ற அனைத்தும் பாதிக்கப்பட்டு விடும்.
அதற்கடுத்தபடியாக அவள் பெற்ற மக்கள் அவளுக்கு ஊன்றுகோலா கவும், பாதுகாப்புக் கேடயங்களாகவும் ஆகா நிலையைச் சற்று சிந்தித்துப் பாருங் கள். இவ்வமைப்பு மாறு பட்டுவிடில் பெண் என்பவள் கிள்ளுக் கீரையாகும் சந்தர்ப்பங்களும் அதிகரித்துவிடும். அதனால் எள்ளி நகையாடும் நிலைக்கும் ஆளாகி விடுவாள். இவையெல்லாம் பெண்ணுக்கு இயற்கை அளித்துள்ள பாதுகாப்பு. வரப்பிரசாதம். இத்தகு அம்சங்களை தன்னகத்தே கொண்டவள் தான் பெண். அதுதான் பெண்ணியமே தவிர, தற்போது பெண்ணியம் என்ற பெயரில் எதிர்பார்க்கப்படும் தன்மைகளல்ல.
பெண்ணின் உடலமைப்பு, மனத்திடன், குணநலம், உடற்பலம் அனைத்தும் அவர்கள் தனித்து காரிய மாற்றும் தன்மை கொண்டனவல்ல என்பதை மேற்கண்டவற்றின் மூலம், மட்டுமல்ல சிறிது சிந்தித் தாலும் வெளியாகி விடும். படைத்தற்கு மட்டுமல்ல, அவளது இயல்பு வாழ்க்கைக்குக்கூட ஓர் ஆணின் அதாவது, தகப்பனின், சகோதரனின், கணவனின், மகனின், பேரன் களின் உதவி, பாதுகாப்பு தேவைப் படுகிறது. இது படைப்புத் தொழிலைச் செய்ய வேண்டியதால் மட்டும் கொடுக்கப்பட்டதாக இருக்க முடியாது. குடும்பச் சூழல், சமூக அமைப்பு, உறவு முறை, ஒருவரில் ஒருவர் தங்கி யிருத்தல் போன்ற இத்தியாதி காரணங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். பெண்களில் ஏற்படும் பின்னோக்கிய செயற்கை மாற்றங்கள் அனைத்தையும் நலிவுறச் செய்து உலகையே அழிவுப் பாதையில் கொண்டு சேர்த்துவிடும்.
நாகரிகம், பெண்ணியம், சமவுரிமை போன்றவற்றைப் பேசிக்கொண்டு மனம்போன போக்கில், தான் தோன்றிகளாகத் திரிய முற்பட்டால், அது குறுகிய காலத்துக்கு மட்டுமே சந்தோஷத்தைக் கொடுக்கக் கூடியதாக இருக்கும். அதன் பின்னர் சாக்கடை வாழ்க்கையாகி தேடுவாரற்ற குப்பை களாக மாறிவிடுவர் என்பதை மனத்திலிருத்திச் செயல்படல் பெண்களுக் கும், உலகுக்கும் அவர்கள் செய்யும் சேவையாக அமையும்.
- நிஹா –
No comments:
Post a Comment