Saturday, June 15, 2013

“பந்தாடப்படும் மாகாணசபை அதிகாரங்களை முன்நிறுத்தி முரண்படும் தமிழ்-முஸ்லிம் அரசியல்”

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

“பந்தாடப்படும் மாகாணசபை அதிகாரங்களை முன்நிறுத்தி முரண்படும் தமிழ்-முஸ்லிம் அரசியல்”


பார‌ாளுமன்றக் கதிரைகளை நிரப்புதல், அரசியல் அதிகாரங்கள் பெறுதல் போன்ற சுயநல கருத்தியலை விடுத்து சமூக நலனை முன்னிலைப்படுத்தும், இனங்களின் சுபிட்சத்தை, நல்லுறவை, அதன் மூலம் அவர்களுக்குரிய உரிமைகளை வென்றெடுக்கும் சிந்தனை தற்போதைய முஸ்லிம், தமிழ அரசியல்வாதிகளிடம் மிளிராதவரை சிறுபான்மையினரின் பிரச்‌சினைக்கு விடிவு என்பதே வரப்போவதில்லை.  

அப்படியொரு மாற்றத்தைத் தம்மில் ஏற்படுத்திக் கொள்ளும் பக்குவம் கொண்ட தமிழ் - முஸ்லிம் அரசியல் தலைவர்கள் நம்மத்தியில் இருப்பதாகவும் தெரியவில்லை அல்லது அப்பண்பு தம்மிடம் இருப்பதாக வெளிப்படுத்திக் கொள்ளவுமில்லை என்பதையும் அவர்தம் செயற்பாடுகள் பட்ம் போட்டுக் காட்டுகின்றன.

ஆதலால், தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இணைந்து தம்மில் தாமாகவே மாற்றங்களை ஏற்படுத்துவதுதான தக்க வழி எது என்பதை உணர்ந்து அவ்வழிவகைகளசை் சிந்தித்து செயல்படுத்த வேண்டும். உண்மையான சமூக ஆர்வலர்கள் இதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.  அதுவே தற்போதைக்கு அத்தியாவசியம் தேவைப்படுவது, பொதுப் பிரச்சினையை வென்றெடுப்பதற்கு தம்முள் காணப்படும் அபிப்பிராய பேதங்களை தீர்ப்பதும், தள்ளி வைப்பதும், விட்டுக் கொடுப்பதும் ஏற்கப்பட்ட நன்மை தரும் உண்மைகள். 

இந்த நாடும், சிறுபான்மைத் தமிழ், முஸ்லிம்களும் ஓர் அரசியல் தீர்வை வேண்டி நிற்கின்றார்கள். அது கௌரவமானதாகவும், பிரி‌வினையை ஏற்படுத்தாததாகவும், சமவுரிமையுடன், அவரவர் மதத்தை, மொழியை,  கலாசாரத்தை, பொருளாதார நடவடிக்கைகளை இடையூறின்றி, சுதந்திரமாக முன்னெடுத்து வாழத்தக்கதாகவும், நிலையானதாகவும் அமைய வேண்டும். 

No comments: