Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah
Lankamuslim.org
One World One Ummah
தொண்டமான், ஹக்கீம் மற்றும் டக்ளஸ் தேவானந்தா ஆகியோரின் நிலைப்பாடு என்ன?
நாட்டின் இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மாற்றீடாகக் கொண்டு வரப்பட்டதே மாகாண சபைகள் சட்டம். அதிகாரப் பரவலாக்கத்தினால் நாடு பிரிந்து போவதைத் தவிர்பதற்காகத் தோற்றுவிக்கப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டமே போதாது என்ற நிலையில் 13 பிளஸ் பற்றிப் பேசிக்கொண்டிருந்து விட்டு, மாகாணசபைகளுக்கு யாப்பின் மூலம் கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்புக்கான உரிமையையும் பறிப்பது ஆபத்தானது மட்டுமல்ல நாட்டின் தலைவிதியை மாற்றியமைக்கப் போகிறதோ என்ற சந்தேகத்தை உருவாக்குகின்றது.
// 13 ஆம் திருத்தத்தை திருத்துவதற்கு இனிமேல் மாகாணசபைகளின் அனுமதி தேவையில்லை அல்லது சட்டமூலம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு பெரும் பான்மை மாகாணசபைகளின் ஒப்புதல்கள் இருந்தால் போதும் என்ற புதிய திருத்த சட்டமூல யோசனையை அரசாங்கம் சமர்பிக்க போகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார். //
மேற்கண்ட கூற்றின்படி, யாப்பு மூலம் கொடுக்கப்பட்ட மாகாணங்களுக்கான பாதுகாப்பு உரிமையை, தீர்மானிக்கும் அதிகாரத்தை, பெரும்பான்மை மாகாண சபைகள் வேண்டாமெனத் தீர்மானிக்கும் பண்பு ஏற்கப்படும் போது, யாப்பை மீறுவதாகின்றது.
இந்த யாப்பு மீறல் ஏற்கப்பட்டால், மேலும், மறுதலையாகவும், மறைமுகமாகவும், மாகாண சபைகள் ஐந்து இணைந்து இலங்கையின் யாப்பையே திருத்தலாம் என்ற பயங்கர நிலையை ஏற்படுத்தக் கூடிய பாரம்பரியம் ஒன்று உருவாக்கப்படுவதாகத் தெரிகிறது. இது மக்களின் சுயாதி பத்தியத்தையும், பாராளுமன்றின் அதிகாரத்தையும் கூட இல்லா தொழிப்பதாகாதா!
யாப்பின் திருத்தங்களுக்கு மக்களின் அனுமதி பெறப்பட வேண்டும. மூன்றில் இரண்டு இருக்கின்றது என்பதற்காக எதையும் செய்துவிட்டுப் போகலாம் என நினைப்பது மக்களுக்குச் செய்யும் துரோகமாகும். மேலும், அரசக்குத் தற்போது கிடைத்துள்ள மூன்றில் இரண்டு பலம் மக்களால் தேர்தல் ஒன்றின் மூலம் கொடுக்கப்பட்டுள்ளதல்ல என்பதை நன்கு ஞாபகத்தில் வைத்திருக்கு வேண்டும். இந்தப் பலம் இந்த நிமிடத்தில்கூட இழக்கப்படலாம்.
யாப்பு சம்பந்தமான விடயங்களாயின் மக்கள் அனுமதி பெறுவதே நேர்மையான அரசியல். அதற்காக Referendum அபிப்பிராய வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி மக்கள் அனுமதியைப்பெறல் அவசியம்.
No comments:
Post a Comment