Sunday, June 9, 2013

மாகாண அதிகாரங்களும் முஸ்லிம் மக்களும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும்

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

மாகாண அதிகாரங்களும் முஸ்லிம் மக்களும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும்


பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்றொரு பழ மொழி உண்டு. அதனை ஞாபகப்படுத்துகின்றது  நாட்டின் தற்போதைய அரசியல் நகர்வுகள். 

தமிழர் பிரச்சினை அதிகாரப் பகிர்வின் அடிப்படையிலான தீர்வுக்கான பேச்சுவார்த்தை களும், அழைப்புக்களும், ஆலோசனைகளும், திட்டங்களும், தீர்வுகளும், 13 பிளஸ்  என்று பேசிக் கொண்டு நான்கு வருடங்களைக் கடத்திக்கொண்டிருந்த வேளையில், 13ஆவது தித்தச் சட்ட மூலத்தை ஒரு கருவியாகப் பாவித்து, மக்களையும் சமூக ஆர்வலர்களையும், நலன் விரும்பிகளையும் திகைப்படையச் செய்ததுடன், தீர்வு பற்றிய கருத்தியலில் இருந்து அவர்களை தடுமாறித் தடம்மாற வைத்து, 13ஆவது திருத்தச் சட்டத்தை மாற்றி விடாதீர்கள் என்ற புதிய பாதையில் திருப்பிவிட்டுள்ள மையை இராஜ தந்திரம் என்பதா, அரசியல் சாணக்கியம் என்பதா, நயவஞ்சகம் என்பதா! எ்ப்படியோ பிச்சை வேண்டாம் நாயைப்பிடி என்ற கதைதான் அரங்கேறுகிறது!

No comments: