Sunday, June 16, 2013

முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு பாதை செப்பணிடவே வருகை தந்தனராம்

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

முஸ்லிம்கள் இந்த நாட்டிற்கு பாதை செப்பணிடவே வருகை தந்தனராம்

முஸ்லிம்கள் பற்றியும் அரசியல்வாதிகள் பற்றியும்  தேரர் கூறும் கருத்துக்கள், அவரது பண்பு தவறிய பதப் பிரயோகங்கள், அவரது சொந்த அவதூறும்,  அடிப்படையற்ற வரலாறு பற்றிய புழுகுகளும், முறையற்ற குற்றச் சாட்டுக்களும், மூர்க்கத்தனமான கூப்பாடும் அவரது முட்டாள்தனத்தையும் பசசைத் துவேஷத்தையும், மேடைக் கலாசாரத்தை பாழ்படுத்துவதும், அவர் பின்பற்றும் புத்த தர்மத்துக்கு இழுக்கையும், அணிந்திருக்கும் ஆடைக்கு அபகீர்த்தியையும் ஏற்படுத்துவன. 

மேலும் நாட்‌டில் நடைமுறையிலுள்ள யாப்பின் பகுதி ஒன்று செல்லாமல் ஆகிவிட்டதென்கின்றார். இது இந்நாட்டின் யாப்பை அவமதிப்பதாகும். எப்படி மதத்தை ஒருவன் மதிக்கின்றானோ அப்படி நாட்டின் யாப்பையும் மதிக்க வேண்டும். மதம் மனிதனால் மட்டும் மதிக்கப்படுவது, ஆனால், யாப்பு நாடால் மதிக்கப்படுவது மட்டுமல்ல, நாட்டையே ஆளுவது, நாட்டின் உயிர்நாடி போன்றது என்பதை தேரர் உணராவிடில் சம்பநதப்பட்டவர்கள் உணர்த்த வேண்டும். 

இனங்களுக்கிடையில் மதவிரோதப் பொய்யைக் கட்டவிழ்த்து விட்டு, தரமற்ற முறையில் விமர்னசனங்கள் செய்து கொண்டிருப்பதன் மூலம் நாட்டின் ‌அமைதிக்குப் பங்கம் விழைக்க முனைகின்றார். 

இவரது போக்கில் முஸ்லிம்களும் செல்ல முனைந்தால் இந்த நாடு பிணக்காடாகவே மாறும். ஆனால், அவர்கள் அறிவீனர் களைப் புறக்கணித்து விடுமாறு கூறியதற்கொப்பவும், பொய்யர்களுடன் தர்க்கம் செய்வது குழப்பத்தை மட்டுமே உண்டு பண்ணும் என்பதனாலும், ஒரு குழப்பக்காரரின் பேச்சுக்கு பதில் கொடுத்து முழு பௌத்தர்களின் மனதை நோக வைக்கக் கூடாது என்ற பெருமனதுடனும் உள்ளனர்

No comments: