Commented by nizamhm1944 on:
Lankamuslim.org
One World One Ummah\
Lankamuslim.org
One World One Ummah\
தேசிய பிரச்சினைக்கான தீர்வு ராஜபக்ஷ- சம்பந்தன் ஒப்பந்தமாக அமையக்கூடாது!
ஆரம்பத்திலேயே தீர்க்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டதனாலேயே, இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் பிரச்சினை ஆயுதப் போராக மாறி இ்நநாட்டையே அழிவின் விளி்பில் கொண்டு போய்விட்டது.
ஆயுதப் போராட்டம் முறியடிக்கப்பட்டாலும், தமிழர் பிரச்சினை முடிந்து விடவி்லலை. அது போரைப் போன்று முறியடிக்கப்பட முடியாதது. மாறாக பரந்த உள்ளத்துடன் சிறந்த முறையில் தீர்த்து வைக்கப்பட வேண்டியது.
தமிழர்களும் இந்நாட்டுப் பிரஜைகள், அவர்களுக்கும் கௌரவமாக, சம உரிமையுடன் வாழும் உரிமையுண்டு என்ற அடிப்படையிலான தீர்வொன்றைக் காண்பதற்கு உண்மையில் யாருடைய தயவும் தற்போது வேண்டியதில்லை. அது காலத்தின் கட்டாயம்
அப்படிக் கொடுக்கப்படுவது ஒரு யாப்பு ரீதியிலான உரிமைகளாக, தீர்வாக இருக்க வேண்டுமே தவிர, கிழித்து வீசப்படும் இருவருக்கிடையிலான ஒப்பந்தமல்ல. டட்லி - ..செல்வா, பண்டா - செல்வா ஒப்பந்தங்களுக்கு இந்நாட்டில் நடந்தது வரலாறாக, படிப்பினையாக உள்ளது.
நல்லெண்ணங்களுடன் உருவான அவ்விரு ஒப்பந்தங்களும், குறைமதியினரின் இனவிரோத , மதவிரோத செயற்பாடு களால் நிறைவேறாமற் போனமையின் தாக்கததை இந்நாட்டு மக்கள் 30 வருடங்களாக அனுபவித்து வி்ட்டனர். இதற்கு மேலும், இந்நாடு அப்படியொரு நிலையைத் தாங்கிக் கொள்ளாது.
ஆதலால், அனைவரும் நாட்டு நலனைக் கருத்திற் கொண்டு, நல்மனதுடன், இந்நாட்டு மக்கள அனைவரும் ஒரு தாய் பிள்ளைகளாக, ஒற்றுமையுடன், சிறப்பான வாழ்வை மேற்கொள்ளத தக்கதான ஓர் பொறிமுறையை இதய சுத்தியுடன் உருவாக்கி அதனை யாப்பாக வெளியிட வேண்டும். நடைமுறைப்படுத்த வேண்டும். மொத்தத்தில் சிறுபான்மையினரின் பிரச்சினை தீர்ந்து அவர்கள் சிறப்பாக வாழ்கின்றனர் என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
அரசியலுக்கு, இன, மத, மொழி வேறுபாடுகளுக்கு அப்பாலான தீர்வே நாடு தற்போது வேண்டி நிற்பது. எ்ககாரணங் கொண்டும் இது தட்டிக் கழக்கப்படுவது இந்நாட்டை மீண்டும் ஒரு இருண்ட யுகத்துள் தள்ளிவிடவே செய்யும்.
No comments:
Post a Comment