Monday, June 10, 2013

13வது திருத்தச் சட்டதை நீர்த்துப்போக செய்யும் முயற்சியை எதிர்க்க வேண்டும்: பிரைடே போரம்

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah

13வது திருத்தச் சட்டதை நீர்த்துப்போக செய்யும் முயற்சியை எதிர்க்க வேண்டும்: பிரைடே போரம்


கடந்து வந்த பாதைகளில் இருந்து அரசு கற்றுக் கொள்ள வில்லையாயின் அது, சாபக்கேடே தவிர வேறில்லை.

பல்லின மக்கள் வாழும் நாட்டின் தேசிய பிரச்சினையைத் தீர்ப்பதில் தனிப்பட்ட விருப்புகளுக்கு இடமில்லை. இத்தகு போக்கால் இந்த நாடும், மக்களும் கொடுத்த விலையோ அளவிடற்கரியது.  

நாட்டுக்கு தற்போது தேவையானது, குள்ள நரித்தனமல்ல, கள்ளமில்லா இதய சுத்தியுடன் காரியமாற்றி, இந்நாட்டின் புரையோடிய புண்ணுக்கு மருந்திட்டு ஆற்றுவதே! 

அதனை விட்டு புலிகளைத் தோற்கடித்து விட்டதால் பிரச்சினை முடிந்து வி்ட்டது, யாம் எதனையும் செய்யலாம் என்ற மனநிலையில் செயற்படின், அது ஒரு ஆரோககியமான சூழலை இந்நாட்டில் ஏற்படுத்தாது.  மாறாக, கஷ்டப்பட்டு கட்டிய கூட்டை கட்டியவர்களே அழித்து விடுவதாக அமையும். 

இந்நிலை மருந்தால் மாற்றும் நிலையில் இருந்து, அறுவை சிகிச்சையில் கொண்டு போய் நிறுத்தும். அது காப்பாற்ற முடியாத நிலையாகவே இருக்கும். அரசு தீர்க்கமாக சிந்தித்து செயலாற்றாவிட்டால் நாடு இடுகாடாகும் நிலையே உருவாகும். அமைதி என்பது கடைச் சரக்காகிவிடும். 

No comments: