Wednesday, June 12, 2013

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 13 வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் ஆராய்கிறது !!

Commented by nizamhm1944:

Lankamuslim.org
One World One Ummah

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 13 வது திருத்தம் தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் ஆராய்கிறது !!


இன்று இந்த நாட்டுக்குத் தேவையானது, நாட்டை முப்பது வருட அழிவுக்குள் கொண்டு சென்ற தீர்க்கப்டாத சிறுபான்மைத் தமிழர் பிச்சினை எ்னபதை அனைவரும் நினைவிற் கொள்ள வேண்டும். நினைத்துப் பார்த்திராத வகையில், அஹிம்சை
 வழியில் நடத்தப்பட்டுக் கொண்டிருந்த தமிழர் போராட்டம், ஆயுதப் போராட்டமாக, உலகே வியக்கும் அளவில் மாறிய போது தமிழர்களிடம் எவ்வித வலுவும் காணப்பட வில்லை. ஆனால் தற்போதைய நிலை மிக மோசமான தாக்கததை உண்டு பண்ணும் அளவுக்கு சாதகமான ஒன்றாகவே உள்ளது

அதன் தொடர்பில் நடைபெற்று, பல்லாயிரம் உயிர்களைப் பலிகொடுத்து.  பொருளாதார அழிவுகளையும் சந்திக்க வைத்து, இன்று நாட்டின் பெயருக்குக்கூட களங்கத்தையும், பதுகாப்புக்கு அச்சறுத்தலையும் சர்வதேச மட்டத்திலும், ஐநா மனித உரிமைப் பேரரவயிலும் ஏற்படுத்திக் கொண்டிருப்பதற்குக் காரணமான யுத்தம் வெல்லப்பட்டு விட்டது எ்னபது தமிழர் பிரச்சினை தீர்க்கப்பட வில்லை என்பதையும், அது தீர்க்கப்பட வேண்டியது எ்னபதையும் ‌வலியுறுத்திக் கொண்டிருக் கின்றது.

ஆதலால், புலிகள் தோற்கடிக்கப்பட்டு ஆண்டுகள் நான்கு சென்ற பின்னர், கால் நூற்றாண்டுகளுக்கு மு்ன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தச் சட்டத்தில் எதனைக் குறைப்பது என கட்சிகள் கூடி கலந்தாலோசனை செய்து ‌கொண்டிருப்பது, பொருத்தமற்றதும், பிரச்சினையை மேலும் வளர்ப்பதும், நாட்டிற்கெதிராக ஏலவே சர்வதேுச மட்டத்தில் உருவாகியுள்ள இழுக்கையும், அவப் பெயரையும் உறுதி செய்வதாகவும் தெரிகின்றது.

அத்தோடு அரசியல்வாதிகள் இப்பிரச்ச‌ினையின் தாக்கத்தை உணராது, தமது விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதும். நாட்டின் அமைதி வாழ்வில் அக்கறையற்றிருப்பதையும் காட்டுவதாகவே நடுநிலையில் நின்று சிந்திப்போர் கருதுகின்றனர்.

ஆதலால், இந்நாட்டுக்கு இன்று தேவைப்படும் அமைதி வாழ்வைக் கொடுக்கும் வகையில் பக்கச்சார்பின்றி, விருப்பு வெறுப்புக்ளை ஓ‌ரங்கட்டிவிட்டு, இன,மத, மொழி, வர்க்க, குல பேதங்களை உதறித் தள்ளி சிறுபான்மைியனரும் இந்நாட்டுப் பிரஜைகளே, அவர்களும் கெளரவமான, சமத்துவமான வாழ்வை மேற்கொள்ளக் கூடியதான தீர்வுக்கான வழிகளில் சிந்தித்துச் செயலாற்றுவதே அறிவுடமையும், அத்தியாவசியமானதுமாகும். அல்லாத எவ்வித நடவடிககையும் நிரந்தரமானதாகவோ, நிலையானதாகவோ அமையாது. அது அவ்வப்போது நாட்டை அழிவுப் பாதையில் கொண்டு சேர்த்து விடும். 

No comments: