Tuesday, June 4, 2013

இன ரீதியாக பாடசாலைகளை உருவாக்கும் முறைக்கு முற்றுப்புள்ளியாம் !

Commented by nizamhm1944 on:

Lankamuslim.org
One World One Ummah



இன ரீதியாக பாடசாலைகளை உருவாக்கும் முறைக்கு முற்றுப்புள்ளியாம் !

// அதேவேளை, வடக்கு, கிழக்கு, மலையகப் பகுதிகளில் நிலவும் ஆசிரி யர் பற்றாக்குறைகளை தீர்க்கும் வகையில் ஆசிரிய நியமனங் களுக்கு உரிய தகைமை இல்லாதவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.//

மேறக்ண்ட, “ஆசிரிய நியமனங் களுக்கு உரிய தகைமை இல்லாதவர்களை ஆசிரிய உதவியாளர்களாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்“ என்ற கருத்து, வடக்கு, கிழக்கில் ஆசிரியராகத்  தகுதியானவர்கள் இல்லை என்ற கருத்தை வருவிக்கின்றது.

மேலும், தகுதியற்றோரை ஆசிரிய உதவியாளர்களாக நியமிப்பது, அப்பிள்ளைகளின் கல்வியைப் பாழடிப்பதாகவே அமையும். ஏற்கனவே நாட்டில் நடைபெற்ற அழிவுகளால் பாதிப்பட்டுள்ள அப்பாவிச் சிறார்களுக்கு, தரமற்ற ஆசிரியர்களை  நியமித்து கற்பிக்க முனைவது, மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதிப்பதைப் போன்றது ஆகும். அல்லது சட்டியில் இருந்து நெருப்புள் வீழ்த்தப்படுவதை ஒக்கும்.

மேலும், மொழி ரீதியான பாடசாலைகள் என்பது அத்தியாவசியமான ஒன்றே. ஒரு பாடசாலையில் கூட முமமொழிகளில் இயங்கும் பிரிவுகள் முன்பும் இயங்கின, தற்போதுகூட இயங்கி வருகின்றன.  இதில் உள்ள குறைபாடு என்னவெனில், தமிழ் மொழிப் பாடசாலைகளில் இயங்கிய சிங்களப் பிரிவுகள் மாற்றாந்தாய் மனப்பான்மையுடனும், அது போன்று சிங்கள மொழிப் பாடசாலைகளில் இயங்கிய தமிழ்மொழிப் பாடசாலைகள் புறக்கணிப்புக்கு ஆளாகி இருந்தமையும் நிர்வாகிகளினதும். அதிபர்களினதும் குறைமதியால், இனரீதியான சிந்தனையால் நடைபெற்றமையே! 

சில தமிழ்மொழி மூலப் பாடசாலைகளில் இருந்த சிங்களப் பிரிவுகள் யாருக்கும் தெரியாமல் இழுத்து மூடப்பட்டு, அங்கு பயின்ற அப்பாவி மாணவர் பாதிக்கப்பட்ட சம்பவங்களும் நடைபெறத்தான் செய்தன. இவை நிர்வாகச் சீர்கேடு. குறுகிய இனவாதம்.

ஆதலின் நிர்வாகச் சீர்கேடுகளை அகற்றி, அந்நிலையை மீண்டும் தோற்றுவித்தால், மாணவர்கள் நன்மை யடைவதுடன், இனங்களுக்கான நல்லெண்ணங்களும், நல்லுறவும்கூட வளரும். 

மேலும், கல்வியோடு அவரவர் கலாசாரம் பேணப்படுவதும் இன்றியமையாததே. பல்லின கலாசாரம் ஒரு பாடசாலையில் உருவாவதன் மூலம் மத சகிப்புத் தன்மை போன்றவையும் தானாகவே உருவாகும். 

நான் இது போன்ற ஒரு பாடசாலயில் 1950களில் படித்தமையால், இ்ன்றும், பௌத்த, கத்தோலிக்க,இந்து சமயத்தவர்களுடன் சகோதர வாஞ்சையுடன் உறவாட முடிகின்றது.  இது ஓர் வெற்றி கண்ட முறை. 

ஆதலால், புதிதாகக் குழப்பங்களை உருவாக்கும் முறைகளை அறிமுகப்படுத்துவதை விடுத்து, நடைமுறைப்படுத்தி வெற்றிகண்ட முறையைப் பின்பற்றுமாறு, அமைச்சரையும், அமைச்சரவையையும் வேண்டுகின்றோம். 

No comments: